Posts Tagged ‘சரித்திர ஆதாரம்’

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

கலந்து கொண்ட சிலரின் கருத்துகள்: வரலாறை உலகறிய செய்யவேண்டும்: முத்துப்பாண்டி, புத்தக விற்பனையாளர், மதுரை ஆராய்ச்சி மையம்: வரலாற்று ஆய்வு மாணவர்கள் கள்,பேராசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக இம்மாநாடு திகழ்கிறது.எங்களிடம் ரூ.80 முதல் ரூ.2500 வரை புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. முதல் முறையாக திண்டுக்கல்லில் விற்பனை நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்களுக்கு மவுசு: உதயகுமார் மதுரை கல்வெட்டுஆய்வாளர்: கி.மு.6ம் நுாற்றாண்டில் எழுத்து முறையில் உள்ள புத்தகங்கள் இங்கே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 தினங்கள் மாநாடு நடப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள பேராசிரியர்கள் அதிகமானோர் பங்கேற்பதால் புத்தகங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது: ராஜவர்மன், வரலாற்று பேராசிரியர், பழநி: தென் இந்தியாவில் முதன் முறையாக இம்மாநாடு நடக்கிறது. அதிக ஆர்வமாக மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டுள்ளனர் .வரலாற்றுக்கு ஜி.டி.என்.கல்லுாரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மக்களுக்கு வரலாற்றை கற்றுகொடுக்க வேண்டும். 4 வகையில் பிரித்து கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அறிஞர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவியல் படித்தவர்களும் ஆர்வம்: முருகேஸ்வரி, பேராசிரியை, திண்டுக்கல்: கேரளாவிலிருந்து அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் கலாசாராத்தை அறிய அவர்களும் ஆர்வமாக உள்ளனர். இம்மாநாட்டின் மூலம் வரலாற்று அறிஞர்கள் தொடர்பு பெருகும். அறிவியல் படித்தவர்களும் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம்: செல்லப்பாண்டி, பேராசிரியர், அருப்புக்கோட்டை: வரலாற்றின் பாரம்பரியத்தை மாணவர்களின் மத்தியில் புகுத்தவேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகளை அதிகம் நடத்துவதன் மூலம் வரலாற்றிஞர்களின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

புதிதாக கற்றுகொள்வோம்” ரகசனா, வரலாற்று மாணவி, கேரளா: கேரளாவிலிருந்து 20க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளோம். வரலாறு போற்றப்படக்கூடிய விஷயம். கலாசாரத்தை அறிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். புதிதாக வரலாறு குறித்து கற்றுகொள்வோம்.

நல்லதொரு வாய்ப்பு: சிவாங்கி, பேராசிரியர், பஞ்சாப்: இதுபோன்ற வரலாற்று மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு இது முதல் அனுபவம்மிக ஆர்வமாக உள்ளது. தென்னிந்திய மன்னர்களை அறிவது மிக அபூர்வம். ஒவ்வொரு படைப்புகளும் என்னை வியப்படைய செய்கிறது.வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது: இஷா டம்டா, பேராசிரியர், பஞ்சாப்: இவ்வளவு அதிகமான வரலாற்று அறிஞர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மாநாடுகளை ஆண்டு முழுவதும் நடத்தினால் நன்மை பயக்கும்.

பிறகு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களிடம் உரையாடி, விசயங்களை அறிந்த போது, இவர்கள் எல்லோரும் (மேலே கருத்து சொன்னவர்கள்) முழு உண்மை அறியாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிந்தது.

ஆய்வுக்கட்டுரைகளின் தராதரம் முதலியன: நிறைவாக புதியத் தலைவர், சுப்பராயலு பேசும் பொழுது, “நான் ஒவ்வொரு அறையாகச் சென்று, 20-30 நிமிடங்கள் உட்கார்ந்து, ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும், அறையில் இருந்து கேட்பவர்களுக்கும்;  நிர்வகிக்கும் தலைவருக்கும் ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்தது. அறையில் இருந்து கேட்பவர்கள், ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்காமல், கவனிக்காமல் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல, நிர்வகிக்கும் தலைவரைச் சுற்றி ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. யாரும் எந்த கேள்வியையும் கேட்கவில்லை, உரையாடல் இல்லை. படித்துமுடித்தவுடன், சான்றிதழை வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுரைகளின் தரமும் நன்றாக இல்லை…..இந்நிலை மாறவேண்டும். ஆராய்ச்சித் திறன் வளரவேண்டும்………..சரித்திரம் படிப்பவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்பதில்லை. இஞ்சினியரிங் படித்தவர்களுக்கும் சரியான, முறையான வேலைக் கிடைப்ப்தில்லை. குறைந்த சம்பளத்திற்கு, சம்பந்தம் இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். எனவே, தமது திறமையை உயர்த்திக் கொண்டால் தான் முன்னேறமுடியும்….,.” என்றெல்லாம் நிலைமையை எடுத்துக் காட்டினார். இதனை நிர்வாகிகள் மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாட்டு பிரச்சினைகள்: 40வது மாநாட்டிலேயே (சிதம்பரம்) உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: என்றெல்லாம் குறிப்பிட்டப் பட்டது[1]. 41வது மாநாட்டிலோ, அதைவிட படுமோசமாக உணவு இருந்தது. நிர்வாகிகள் ஒன்றையும் கற்றுக் கொண்டதாக, வருத்தப் பட்டதாக, மாறியதாகத் தெரியவில்லை. “History repeats” என்பது போல அதை விட மோசமாக நடந்துள்ளது. மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். என்று கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டனர். அதாவது, சுமார் ரூ 32 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் 800, இரண்டாம் நாள் 1200 மற்றும் மூன்றாம் நாள் 1600 என்று பதிவுசெய்யப் பட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. அப்படியென்றால், உடனடியாக அறிந்து சரிசெய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இதிலிருந்தே, அவர்கள் வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.  ஒரு முறை தெரியவில்லை, எதிர்பார்க்கவில்லை, அதனால், அப்படி நடந்து விட்டது என்றால் சரி ஆனால், திரும்ப-திரும்ப மூன்று வேளையும் அப்படியே நடக்கின்றது-நடந்தது என்றால் என்னத்தைச்சொல்வது. முடியவில்லை என்றால் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. உணவு, மிக சாதாரணமாக இருந்தது, தினம் தயிர்சாதம் என்று மோர்சாதத்தை விட மோசமாக, வெறும் சாதம் கொடுக்கப் பட்டது.

உணவு இல்லை, கொடுத்ததும் தரமாக இல்லை: ஒரே ஒரு உணவு வகைதான் மூன்று வேளைகளுக்கும் கொடுக்கப் பட்டது. தயிரே காணப் படாத தயிர்சாதம், உப்புமா, இட்லி, ஊத்தப்பம், சாம்பார்-சாதம் என்று அவையே பரிமாறப் பட்டது. முதல் நாளிலிருந்தே, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இட்லி புளிப்பாக, ஒல்லியாக தட்டையாக இருந்தது, சட்னி இல்லை, சாம்பார் குறைவாகவே ஊற்றப் பட்டது. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர்.  உணவுப் பெறுவதற்குக் கூட நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களின் தலைகளுக்கு மேலாக தட்டுகளைக் நீட்டிக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காலியான பாத்திரங்கள் முன்பாக நின்று கொண்டு மற்றவர்கள் தவித்தனர். அருகில் எந்த ஒட்டலும் இல்லை, இதனால், பலர் தத்தம் தகுமிடங்களுக்குச் சென்று, அருகில் கிடைப்பதை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது. அவர்களால் முடியவில்லை என்றால், இவ்வாறு ஆயிரக் கணக்கில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம், மர்மம், அதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. கோவில்களில் கூட கொடுக்கும் பிரசாதம் நன்றாக இருக்கும்.

பொறுப்புள்ளவர்கள் நிலைமையை மாற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற சரித்திர ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதலியோர் தனியாக ஒரு சங்கத்தை வைத்து நடத்திக் கொள்ளலாம். ஆனால், சரித்திரம் பயிலும் மாணவ-மாணவியரை இணைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கலாம், பதிப்பிக்கலாம் என்ற ஒரே தூண்டுதல், கவர்ச்சி மற்றும் தேவையை வைத்துக் கொண்டு, அவர்களை வரவழைத்து, உறுப்பினர்கள் ஆக்கி, சான்றிதழ் கொடுக்கிறேன், ஆய்வுக் கோவை புத்தகத்தில் வெளியிடுகிறோம் என்ற ஆசையைக் காட்டி கூட்டத்தைச் சேர்க்கின்றனர். ஆங்கிலம் தெரியாமல், பார்த்துப் படிக்கக் கூட முடியாமல்……………….தவிக்கும் மாணவ-மாணவியர் கட்டுரை வாசிப்பது விசித்திரமாக, திகைப்பாக, வருத்தமாக இருக்கிறது. சுப்பராயலு இதனை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டி விட்டார். இவ்வாறு படிப்பு, ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திறன், சரித்திர வரைவியல் முறை, என்று செல்லாமல், சந்தர்ப்பவாதம் மற்றும் இதர காரணங்களை வைத்துக் கொன்டு அடத்தப் படும், இத்தகைய கூட்டங்களுக்கு நாளடைவில் வரவேர்பு குறைந்து விடும். சரித்திரம், சரித்திர பாடம் மீதுள்ள மரியாதையும், மதிப்பும், ஆர்வமும், ஏன் முக்கியத்துவமும் போய் விடும். எனவே, பொறுப்புள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

29-08-2022


[1] வேதபிரகாஷ், தென்னிந்தியவரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!, பிப்ரவரி 2, 2020.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College – G.T.Narayanaswamy Naidu): ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்[1].  இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது[2]. அதாவது 58 வருடம் பழமையான கல்லூரி. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைவுபெற்றது. இது ஒரு தெலுங்கு மொழி சிறுபான்மையினர் கல்லூரியாகும். 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. இக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது. திண்டுக்கல்லின் சவுந்தராஜா மில்ஸ் பி லிமிடெட் அறக்கட்டளையால் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு கடந்த இரண்டு நாள்களாக (27-08-2022, 28-08-2022) நடைபெற்று வந்தது. 27-08-2022 அன்று திண்டுக்கல் கலெக்டர், எஸ். விசாகன் I.A.S துவக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் “ஏதோ அல்லது எதிர்பாராத காரணங்களுக்காக” வரவில்லை. இதனால், முன்னாள், அழகப்பாப் பல்கலைக் கழக துணைவேந்தர், என்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சரித்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விலாக்கிப் பேசினார். பிறகு, காங்கிரஸின் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டு, மரியாதை செய்யப் பட்டது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், சரித்திரவரைவியல் மற்றும் கடல்சார் படிப்பியல் முதலியப் பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. பெரும்பாலான கட்டுரைகள், உப்பு-சப்பில்லாமல், அரைத்த மாவையே அரைத்த விசயங்களாக இருந்தது. இணைதளத்தில் 40 வருட ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு கிடைக்கப் பெறுகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தாலே, எவ்வாறு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய வரலாற்று மாநாடுநிறைவு நாள் விழா: அதன் நிறைவு விழா 29-08-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா். மைப்பாளர்கள் 1600 என்று குறிப்பிட்டனர். மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தெலுங்கு பல்கலை கழக முன்னாள் முதன்மையா் சென்னா ரெட்டி பேசியதாவது[3]: “இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்றெல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.…………………..இளம் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் தொன்மையையும் கண்டறிந்து புதுமையுடன் மெருகேற்ற வேண்டும். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னிந்திய வரலாற்றுப் பேரவை சார்பில் 40 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக மாநாடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன. வரலாற்று மாணவா்கள்,தொல்லியல், கல்வெட்டுத்துறை போன்ற அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு தங்களை தயார் செய்ய வேண்டும்,” என்றார்[4]. இதில், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாச்சார வரலாறு மற்றும் கடல்சார் வரலாறு தொடா்பான 1210 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு தேர்தலும் பிரச்சினைகளும்: மாநாட்டின் நிறைவாக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை நிர்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. பிரச்சாரத் துண்டுகள், நோட்டீஸுகள் விநியோகிக்கப் பட்டன. இருவர் டிஜிட்டல் பேனரைக் கூட கட்டி வைத்திருந்தார். ஓட்டுப் போட பிரச்சாரம், முதலியவை அதிகமாகவே நடைப் பெற்றன. ஊடகக்காரர்களுக்கு தெரிவிக்கப் பட்டதாவது – அதில், கா்நாடகப் பல்கலை. பேராசிரியா் சந்திரசேகா் தலைவராகவும், சாத்தூா் எஸ்ஆா்என்எம் கல்லூரி முதல்வா் கணேஷ்ரோம் பொதுச் செயலராகவும், ஜிடிஎன் கல்லூரி முதல்வா் பொருளாளராகவும், கோழிக்கோடு பல்கலை. பேராசிரியா் சிவதாசன் பதிப்பாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 2 துணைத் தலைவா்கள், ஒரு இணைச் செயலா் மற்றும் 15 நிர்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா், என்று “தினமணி” முடித்துள்ளது. ஆனால், அந்த தேர்வு / தேர்தல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, தேர்தல் முறையாக நடத்தப் படவில்லை, மற்றும் தேர்தல் நடத்திய பொறுப்பாளர்களே, குறிப்பிட்ட போட்டியிட்ட நபர்களுக்கு சார்பாக வாக்களிக்க பிரச்சாரம் செய்தனர் மற்றும் கள்ளத்தனமாக ஓட்டுப் போட்டனர் என்றெல்லாம் தெரிவித்தனர். மெத்தப் படித்த பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டனர் என்பது வியப்பாக இருக்கிறது.

28-08-2022 ஞாயிற்றுக் கிழமை நிறைவு விழா: இன்றைய மக்களின் வாழ்க்கையும் புதிய கண்டுபிடிப்புகளும் நாளைய சந்ததியினருக்கு வரலாறாக மாறுகிறது. பண்டைய தமிழர்களின் நாகரீகம், கலசாரம், வாழ்க்கை முறை, பண்பாடு உள்ளிட்டவற்றை பிற்காலத்தினர் அறிந்துகொள்ள வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் வரலாறு. வரலாறு இல்லையென்றால் தமிழகத்தை ஆண்ட வீர மன்னர்கள், உலகம் போற்றும் சிற்பங்கள் பற்றி அறியாமலேயே போயிருப்போம். இன்றளவிலும் தொல்லியல் துறையினர் தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தி முற்கால தமிழர்கள் வழிபட்ட கடவுள் சிலைகள், பயன்படுத்திய பொருட்களை கண்டறிகின்றனர். கண்டறியும் பொருட்களை வைத்து காலத்தை அறிகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயில், சித்தன்ன வாசல் சிற்பம், மாமல்லபுரம் உள்ளிட்டவை வரலாற்றை எடுத்துரைக்கும் பீடமாக இன்றும் திகழ்கிறது. படிப்பிலும் வரலாற்றை படிக்க வரலாற்று துறை உள்ளது. அதிலும் மாணவர்கள் ஆர்வமாக படித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அத்தகைய வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் தென் இந்திய வரலாற்று பேரவை மாநாடு கல்லுாரி சேர்மன் ரத்தினம் தலைமையில் மூன்று நாள் நடந்து வருகிறது[5]., என்று தினமலர் முடித்து, கலந்து கொண்ட சிலரின் கருத்துகள் பின்வருமாறு[6] என்று  வெலியிட்டுள்ளது:

© வேதபிரகாஷ்

29-08-2022


[1]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF

[2] https://dindigul.nic.in/ta/public-utility/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமணி, தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு, By DIN  |   Published On : 28th August 2022 10:52 PM  |   Last Updated : 28th August 2022 10:52 PM  .

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2022/aug/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1210-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3906392.html

[5] தினமலர், வரலாற்றை சிறப்பித்த பேரவை மாநாடு, Added : ஆக 27, 2022  05:19 ; Added : ஆக 27, 2022  05:19.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3109293

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

பிப்ரவரி 6, 2020

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

SIHC leaflet by AU

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவு மற்றும் வரலாற்று துறை சார்பில் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் (South Indian History Congress) 40-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது[1]. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாள் மாநாடாக நடைபெற்றது. ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து அதிகமாக சங்க-உறுப்பினர்கள் வந்திருந்தனர்[2]. 30-01-2020 அன்று மதியமே வர ஆரம்பித்து வீட்டனர். அவர்கள், வண்டிகள் மூலம், அண்ணாமலைப் பல்கலை வளாகத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டனர். உறுப்பினர்கள் ரூ.2000/- செலுத்தியப் பிறகு, அவர்களுக்கு, விருந்தினர் இல்லம், பெண்கள் ஹாஸ்டல் என்று பல இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். மாநாட்டிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார்[3]. கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் பந்தோபாத்யாயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அவர் அச்சடித்த தனது கட்டுரையைப் பார்த்துப் படித்தார், எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ராஜன், மற்றும் உள்ளூர் காரியதரியான சங்கரி பங்கேற்கின்றனர்.

SIHC Dinakaran cutting

சிந்துசமவெளி நாகரிகத்தவர் தான் இந்தியர், ஆரிய படையெடுப்பு இல்லை: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றி பேசுகையில், இந்த பேரவை 1980ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு தேசிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது. இந்த பேரவையின் மூலம் வரலாற்றின் முக்கியதுவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை எளிய முறையில் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரலாறும், அறிவியலும் இணைந்து பல்வேறு ஆராய்சிகளை செய்து வெற்றியாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மரபணு ஆராய்ச்சியை எடுத்துக் காட்டினார். அதன் மூலம், ஆரியபடையெடுப்பு என்பது இல்லை என்றும், இந்தியா முழுவதும் பரவி இருக்கும் மக்கள் ஒரே மரபு மூலத்தைக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டினார்[4]. ராகிகர்ஹி அகழ்வாய்வு இதனை மெய்ப்பிக்கிறது[5]. இந்த மாநாட்டில் இளம் வரலாற்று ஆராட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் வரலாற்றை உள்வாங்கி படிக்கவேண்டும், என்றெல்லாம் கூறி முடித்தார்.

Dinamalar cutting SIHC
1300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[6]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தென்னிந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடந்தது. தென்னிந்திய பண்பாட்டு மற்றும் வரலாற்று சின்னங்களை எதிர்கால நலன் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நிறைவு பெறுகிறது மாநாட்டின் நிறைவு நாளில் பெங்களுரில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் இயக்குனர் அருண் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்[7]. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜன். அண்ணாமலை பல்கலைகழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர் சங்கரி ஆகியோர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இருப்பினும், சில பிரச்சினைகள் இருந்தது தெரிய வந்தது.

SIHC Nakkeran photo
பல்துறை ஆராய்ச்சி சரித்திரத்திற்குத் தேவை: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் நம் நாட்டின் வரலாறுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும், புராதான சின்னங்களை பாதுகாக்கும் வகையில் வரலாற்று ஆய்வாளர்கள் நடுநிலையுடன் வரலாறுகளை எழுதவேண்டும் என கேட்டுகொண்டர். அறிவியலும், வரலாறும் இணைந்து பல்வேறு வெற்றிகளை பெற்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளது. வரலாற்று ஆய்வுகளுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதிகளை ஒதுக்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். தற்போது வரலாற்று பாடத்தை பொருளியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டமேற்படிப்பு என அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பொழுது சரித்திர பாடம் மற்றும் படிப்புத் துறை பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை போன்ற நிதர்சன காரணங்களினால், தவிர்க்கப் படுகின்றது.

SIHC, Sivadasan photo-4
வரலாற்று படத்துறையின் முக்கியத்துவம், போக்கு மாறி வருவது: மாணவர்கள் வரலாறுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி கற்பிக்கும் வகையில் இந்த மாநாடு மூலம் வலியுறுத்தப்படுகிறது[8]. மேலும் கலாச்சாரம் குறித்த வரலாற்று ஆய்வுகளை நவீன கால வரலாறு இளம் வரலாற்றாய்வாளர்கள் எழுதவேண்டும். வரலாற்றை மாணவர்கள் படித்தால் மட்டுமே மனதை பக்குவப்படுத்த முடியும் எனவே வரலாற்றை படித்து நம் வாழ்வியல் முறையை அறிந்து நாட்டின் வளர்ச்சி மாணவர்கள் பங்காற்றவேண்டும் என்று கூறினார்[9]. இவருடன் காரைகுடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் உடன் இருந்தார்[10]. இவ்வாறெல்லாம் சொன்னால் கூட, இவர்களிடையே ஒற்றுமை இல்லை. இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுஒபதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்ற்ல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.

SIHC, Sivadasan photo-3

மதசார்பற்ற மற்றும் விஞ்ஞான ரீதியிலான சரித்திரம்: வரலாறு சைன்டிபிக் மற்றும் [scientific] செக்யூலார் [secular] அதாவது, விஞ்ஞான பூர்வமாக மற்றும் மதசார்பற்ற நிலையில் எழுதப் பட வேண்டும் என்று 40 ஆண்டுகளாக சொல்லி வந்தாலும், சரித்திர ஆசிரியர்களே பல்வித சித்தாந்தங்கள், அரசியல் மற்றும் மதம்-ஜாதி முதலியவற்றால் பிரிந்து கிடக்கின்றனர்.  1992ல் ராமஜன்ம பூமி பிரச்சினையில் சரித்திர ஆசிரியர்கள் வெளிப்படையாகவே மோதிக் கொண்டார்கள். அப்பிரச்சினை நீதிமன்றங்களுக்கு சென்ற போதும், பாரபட்சமாக சாட்சி சொன்னதால், நீதிமன்றம் கண்டித்தது. இங்கும் மஸ்தான் மற்றும் பஸ்லித்தில் என்ற இருவர் அப்பட்டமாக முஸ்லிம் ஆதரவாக, மற்ற விசயங்களை மறைத்து, இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்கு அரசைக் கண்டித்து கட்டுரைகள் படித்தது, மதரீதியிலான போக்காகத் தெரிந்தது. மெத்தப் படித்த அவர்களே அத்தகைய உணர்ச்சி பூர்வமான கட்டுரைகள் வாசித்தது, முறையாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாநாட்டின் செயல்பாட்டில் அது தீர்மானங்கள் முன்வைப்பது, விவாதிப்பது மற்றும் நிறைவேற்றுவது மூலம் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது. பிறகு, இவர்களால் எப்படி சார்பற்ற சரித்திரம் எழுத முடியும்?

SIHC, Sivadasan photo

உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[11]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதாவது, ரூ 26 லட்சம் வசூலாகி உள்ளது. இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. ஆனால், இருப்பிடம் மற்றும் உணவு சரியாக இல்லை என்று வெளிமாநில உறுப்பினர்கள் சொல்லிடிருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் சுடுநீர் வரவில்லை. அனைத்துலக மாணவர் விருந்தினர் தங்குமிடத்தில் சுத்தமாக வரவில்லை. குறிப்பாக உணவு, மிக சாதாரணமாக இருந்தது, இட்லி கெட்டியாக இருந்தது, தேங்காய் சட்னி இல்லை. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர். குறிப்பாக வெளிமாநிலத்தவர் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். மேலும், ஆய்வுக் கட்டுரை வாசிக்கும் அறைகள் அங்கும் இங்குமாக தூரமான இடங்களில் அமைத்திருந்தனர். வாகன வசதியும் செய்து தரப்படவில்லை. சிறப்பு, நினைவு சொற்பொழிவுகள், ஹை-டெக் ஹாலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, ஆனால், அது தங்குமிடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருந்தது. இதனால், 20-30-40 பேர்களே கலந்து கொண்டனர்.

SIHC, Sivadasan photo-2

தரமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு: இங்கு கூட முதல் நாள் முழுவதும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு, சால்வை போத்திக் கொள்ளவே செலவழித்துள்ளனர். ஆய்வுகட்டுரைகளைப் படிப்பதில் ஆர்வம் இல்லை. ஏனோ-தானோ என்று தான் செய்துள்ளனர். பண்டோபாத்யாயா பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பதால், அவர்கள் கலந்து கொள்வதாகத் தெரிகிறதுதாய்வுக் கட்டுரைகள் “கட்-அன்டு-பேஸ்ட்” விட மோசமாக இருக்கின்றன. அடிப்படை கேள்விகள் கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாமல், ஆய்வு கட்டுரை வாசிப்பவர்கள் முழிக்கின்றனர். ஆனால், சான்றிதழை வாங்கிக் கொண்டு செல்லத்தான் துடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு கேரளத்தவர் 10 கட்டுரைகளை வாசிக்கின்றனர். அவை அரைத்த மாவையே அரைக்கும் போக்கில் உள்லன. தான் படித்தால் போதும் என்ற நிலையில், அடுத்தவர் வாசிப்பதைக் கேட்காமலேயே சென்று விடுகின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிப்பதிலும் முறைகேடுகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பிறகு, எப்படி ஆராய்ச்சித்தன்மையின் மேன்மை ஓங்கும்?

© வேதபிரகாஷ்

06-02-2020

SIHC, Sivadasan photo-5

[1] நக்கீரன், தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் நாற்பதாவது ஆண்டு மாநாடு, காளிதாஸ், Published on 31/01/2020 (16:53) | Edited on 31/01/2020 (17:05)

[2] முன்னர் மஹாராஷ்ட்ரா மற்றும் ஒரிஸா மாநிலங்களிலிருந்தும் வந்தனர், இபோழுது 1990களுக்குப் பிறகு வருவதில்லை.

[3] http://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/south-indian-historical-council-40th-annual-conference

[4] Times of India, DNA analysis of Rakhigarhi remains challenges Aryan invasion theory, TNN | Updated: Sep 7, 2019, 16:36 IST.

[5]  http://timesofindia.indiatimes.com/india/dna-analysis-of-rakhigarhi-remains-challenges-aryan-invasion-theory/articleshow/71018198.cms

[6] SIHC காரியதரிசி பிறகு சொன்னதாகத் தெரிகிறது.

[7]  அருணி என்று இருக்க வேண்டும், நமது தமிழ் நிருபர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.

[8] தினமணி, பல்கலை.யில் வரலாற்றுத் துறை மாநாடு நாளை தொடக்கம், By DIN | Published on : 29th January 2020 11:30 PM |

[9] http://dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/jan/29/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3343922.html

[10] தினமலர், தென்னிந்திய வரலாற்று பேரவையின் மாநாடு, Added : ஜன 30, 2020 23:21

http://dinamalar.com/news_detail.asp?id=2469584

[11] SIHC காரியதரிசி சிவதாசன் பிறகு சொன்னதாகத் தெரிகிறது.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

சுன்னி வக்ஃப் போர்டின் சாட்சிகள் – பிரபல சரித்திர பேராசிரியர்கள்!

ஒக்ரோபர் 1, 2010

சுன்னி வக்ஃப் போர்டின் சாட்சிகள் – பிரபல சரித்திர பேராசிரியர்கள்!

பிரபல சரித்திர ஆசிரியர்கள் சுன்னி முஸ்லீம்களின் சார்பாக அல்லது இந்துக்களுக்கு எதிராக சாட்சிகள் ஆக முடியுமா? முடியும் என்று கீழ்கண்டவர்கள் சேர்ந்துள்ளார்கள். செக்யூலார் என்ற போர்வையில் ஒருதலைப் படமாக, இவர்கள் சேர்ந்துள்ளது, சரித்திரத்துறைக்கேக் கேடாகும்.”Their Eminences”, who are quoted as witnesses for the Sunni Waqf Board in the courts dealing with the Ayodhya – Babri Masjid case:

(a) – Witness No. 63 – R.S. Sharma – ஆர்.எஸ். சர்மா

(b) – Witness No. 64 – Suraj Bhan – சூரஜ் பான்

(c) – Witness No. 65 – D.N. Jha – டி. என். ஜா

(d) – Witness No. 66 – Romila Thapar – ரோமிலா தாபர்

(e) – Witness No. 70 – Irfan Habib – இர்ஃபான் ஹபீப்

(f) – Witness No. 72 – B.N. Pandey – பி. என். பாண்டே

(g) – Witness No. 95 – K.M. Shrimali – கே. எம். ஸ்ரீமாலி

(h) – Witness No. 99 – Satish Chandra – சதீஸ் சந்திரா.

(i) – Witness No. 102 – Gyanendra Pandey – கியானேந்திர பாண்டே

ஆனால் துரதிருஷ்டமாக, இந்த பேராசிரியர்கள் எல்லாம் பொய் சொல்லி வந்தது, மிகவும் கேவலமாக இருந்தது.

இதோ எதிர்பார்த்தபடியே, வந்துவிட்டார், ரோமிலா தாபர்!

Published: October 2, 2010 00:41 IST | Updated: October 2, 2010

 இந்தனை சாட்சிகள் இருந்தும், வசதிகள் பணப்போக்குவரத்துகள் இருந்தும் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை ஆதலால், உதவாக்கரை தீர்ப்பு என்று சொல்லும் வரைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இவர்கள் எல்லோரும் மதிப்பிற்குரிய, பிரபலமான, புகழ்மிக்க, ………….சரித்திர ஆசிரியகள்!

00:44 IST October 2, 2010The verdict on Ayodhya: a historian’s perspectiveRomila Thapar

ROMILA THAPAR: We cannot change the past to justify the politics of the present. Photo: S S Kumar

The Hindu ROMILA THAPAR: We cannot change the past to justify the politics of the present. Photo: S S Kumar

It has annulled respect for history and seeks to replace it with religious faith.

The verdict is a political judgment and reflects a decision which could as well have been taken by the state years ago. Its focus is on the possession of land and the building a new temple to replace the destroyed mosque. The problem was entangled in contemporary politics involving religious identities but also claimed to be based on historical evidence. This latter aspect has been invoked but subsequently set aside in the judgment.The court has declared that a particular spot is where a divine or semi-divine person was born and where a new temple is to be built to commemorate the birth. This is in response to an appeal by Hindu faith and belief. Given the absence of evidence in support of the claim, such a verdict is not what one expects from a court of law. Hindus deeply revere Rama as a deity but can this support a legal decision on claims to a birth-place, possession of land and the deliberate destruction of a major historical monument to assist in acquiring the land?The verdict claims that there was a temple of the 12th Century AD at the site which was destroyed to build the mosque — hence the legitimacy of building a new temple.The excavations of the Archaeological Survey of India (ASI) and its readings have been fully accepted even though these have been strongly disputed by other archaeologists and historians. Since this is a matter of professional expertise on which there was a sharp difference of opinion the categorical acceptance of the one point of view, and that too in a simplistic manner, does little to build confidence in the verdict. One judge stated that he did not delve into the historical aspect since he was not a historian but went to say that history and archaeology were not absolutely essential to decide these suits! Yet what are at issue are the historicity of the claims and the historical structures of the past one millennium.A mosque built almost 500 years ago and which was part of our cultural heritage was destroyed wilfully by a mob urged on by a political leadership. There is no mention in the summary of the verdict that this act of wanton destruction, and a crime against our heritage, should be condemned. The new temple will have its sanctum — the presumed birthplace of Rama — in the area of the debris of the mosque. Whereas the destruction of the supposed temple is condemned and becomes the justification for building a new temple, the destruction of the mosque is not, perhaps by placing it conveniently outside the purview of the case.Has created a precedentThe verdict has created a precedent in the court of law that land can be claimed by declaring it to be the birthplace of a divine or semi-divine being worshipped by a group that defines itself as a community. There will now be many such janmasthans wherever appropriate property can be found or a required dispute manufactured. Since the deliberate destruction of historical monuments has not been condemned what is to stop people from continuing to destroy others? The legislation of 1993 against changing the status of places of worship has been, as we have seen in recent years, quite ineffective.What happened in history, happened. It cannot be changed. But we can learn to understand what happened in its fuller context and strive to look at it on the basis of reliable evidence. We cannot change the past to justify the politics of the present. The verdict has annulled respect for history and seeks to replace history with religious faith. True reconciliation can only come when there is confidence that the law in this country bases itself not just on faith and belief, but on evidence.(Romila Thapar is a distinguished historian of Early India.)

அயோத்தி: வரலாற்றை செல்லாக் காசாக்கிய தீர்ப்பு

டாக்டர் ரொமிலா தாப்பர்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அரசியல் ரீதியானதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு எடுத்த முடிவைத்தான் இது பிரதிபலிக்கிறது. நிலம் யாருக்கு சொந்தமானது மற்றும் தகர்க்கப்பட்ட மசூதியின் இடத்தில் புதிய கோவிலைக் கட்டுவது ஆகிய இரண்டின் மீதுதான் இந்தத் தீர்ப்பு கவனம் செலுத்தியுள்ளது. மத அடையாளங்களை தற்கால அரசியலோடு பொருத்திப் பார்க்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

ஆனால் இது வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் சித்திரிக்கப்படுகிறது. இது இந்த வழக்கில் இணைக்கப்பட்டாலும், தீர்ப்பின் போது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. கடவுள்கள் பிறந்ததாகக் கருதப்படும் குறிப்பிட்ட இடத்தில் அந்தக் கடவுளின் நினைவாகக் கோவில் எழுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித் துள்ளது. இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் எழுந்த கோரிக்கையை ஏற்றே இதைத் தெரிவித் துள்ளது.

எந்தவித ஆதாரமும் அந்தக் கோரிக் கைக்கு இல்லாத நிலையில், சட்டத்தை நிலை நாட்டும் நீதிமன்றத்திடமிருந்து இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ராமரைக் கடவுளாக இந்துக்கள் வழிபடுகிறார்கள். ஆனால், அவர் பிறந்த இடம், நிலத்திற்கான உரிமை மற்றும் இந்த இடத்தை கையகப்படுத்திக் கொள்ள பெரிய வரலாற்றுச் சின்னத்தைத் தகர்ப்பது ஆகியவற்றிற்கு இந்த நம்பிக்கை உதவ முடியுமா? மசூதியைக் கட்டுவதற்காக 12-ஆம் நூற்றாண்டில் அங்கிருந்த கோவில் தகர்க்கப்பட்டதாக தீர்ப்பு கூறுகிறது. இதனால் புதிய கோவில் கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார்கள்.

தேசியத் தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அதன் அறிக்கைகள் அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இந்த ஆய்வு மற்றும் அறிக்கைகள்மீது அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்கள் ஆகியோர் ஏராளமான மறுப்புகளைத் தெரிவித்துள்ளனர். நிபுணத்துவம் தேவைப்படும் இந்த விஷயத்தில், அதிலும் பல நிபுணர்கள் கேள்விக் குறியாக்கிய ஆய்வ றிக்கையை, ஒருதரப்புக் கருத்தை அதுவும் அப்படியே ஏற்றுக் கொள்வது தீர்ப்பின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவவில்லை.

தான் ஒரு வரலாற்றாய்வாளர் இல்லை என்பதால் வரலாற்று ரீதியான அம்சத்தை அலசிப் பார்க்கவில்லை என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல வரலாறு மற்றும் தொல் பொருள் ஆய்வு ஆகிய இரண் டும் அவசியம் (!) என்று தெரிவித்துள்ளார். இவர் இப்படிச் சொன்னாலும் வரலாற்று ரீதியான கோரிக்கைகள் மற்றும் கடந்த ஆயிரம் ஆண் டுகளாக இருக்கும் வரலாற்றுக் கட்டடங்கள்தான் சர்ச்சைக் குரியதாக உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட மசூதி, இத்தனைக்கும் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்த மசூதி, ஒரு அரசியல் தலைமையின் தூண்டுதலின்பேரில் தகர்த்தெறியப்பட்டது.

இந்த ஒழுக்கங்கெட்ட அழிவுச்செயல் மற்றும் நமது பாரம்பரியத்திற்கு எதிரான குற்றம் கண்டிக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. கட்டப்படவிருக்கும் புதிய கோவிலின் கருவறை மசூதி இருந்த இடத்தில் இருக்கும். இருந்ததாகக் கருதப் படும் கோவில் தகர்க்கப்பட்டது கண்டனத்துக் குள்ளாகியுள்ளது. இது தான் புதிய கோவிலை நியாயப்படுத்துகிறது. ஆனால் மசூதியைத் தகர்த்ததற்கு கண்டனம் எழவில்லை. வழக்கிற்குள் இந்த அம்சம் வராமல் வசதியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

தவறான முன்னுதாரணம்

ஒரு சமூகம் என்று கூறிக் கொண்டு, தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறிவிப்பு செய்யக்கூடிய முன்னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இனி ஏராளமான அவதரித்த இடங்கள் என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டுமென்றே வரலாற்று ரீதியான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என்றால், மற்ற சின்னங்களை அழிப்பதை எப்படித் தடுக்க முடியும்? வழிபாட்டுத் தலங்களின் அந்தஸ்தை மாற்றுவதற்கு எதிரான 1993-ஆம் ஆண்டு மசோதா பலனளிக்கவில்லை என்பதை நாம் கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்.

வரலாற்றில் எது நடந்ததோ, அது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் முழுமையான தன்மையிலிருந்து அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நம்பத் தகுந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைப் பார்க்க முனையலாம். தற்போதைய அரசியலுக்காக கடந்த காலத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. வர லாற்றுக்குள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக் காசாக்கி விட்டது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது. வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் சட்டம் இயங்கும் என்று நம்பும் போது தான் உண்மையான சமாதானம் வரும்.

(கட்டுரையாளர்: பண்டைக்கால இந்தியா குறித்த பிரபல வரலாற்றாய்வாளர்)

தமிழில் : ஹரி  (நன்றி: தீக்கதிர் 3.10.2010)