Archive for the ‘சேட்டை’ Category

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? [1]  

செப்ரெம்பர் 11, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? [1]

Mudevi- Vikatan, Senthilkumar

மூதேவி பற்றிய சமீபத்தை விளக்கங்கள்: சமீபத்தில் மூதேவி பற்றி ஊடகங்களில் பிரச்சார ரீதியில் ஆதாரமில்லாத விளக்கங்களை சிலர் திட்டமிட்ட ரீதியில் அள்ளி வீசிக் கொண்டிருப்பது கவனிக்கப் பட்டது. ஆராய்ச்சி என்றோ, நம்பிக்கை என்றோ இல்லாமல்,

  • ஆரியர்-திராவிடர்,
  • பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதோர்,
  • தமிழ் பரபினை சிதைப்பது,
  • மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது,
  • பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை
  • பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச்செல்வாக்குடன் சைவம் ஒதுக்கிவிட்டது.
  • வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது.

என்று பலவாறு காட்டமாக, சரித்திர ஆதாரம் இல்லாத, இனவெறி [சரித்திர ரீதியில் கட்டுக்கதை என்று மெய்ப்பிக்கப் பட்ட பிறகும்[1]], மொழி அடிப்படைவாதம் [தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் தோன்றின போன்ற கருதுகோள்[2]] மற்றும் தீவிர சித்தாந்தங்களுடன் வி.இ.குகநாதன் என்பவர் எழுதியிருப்பதும், அத்தகைய கட்டுக்கதைகளை ஊடகங்களில் மற்றவரும் பரப்பி  வரும் போக்கைக் கண்டு, அதனை சரிபார்க்க வேண்டிய நிலையில், இவ்விசயம் ஆராயப் படுகிறது. இரா செல்வகுமார் கட்டுரை [அக்டோபர், 2017] விகடனில் வெளியாகியுள்ளது[3]. அது மற்ற இணைதளங்களிலும் போட்டுள்ளனர்.

V.e.Guganathan, Who is Mudevi- Iniyoru

வி..குகநாதன் எழுதியதன் குறிப்பிட்ட சொற்றோடர்கள் [ஏப்ரல், 2018]: மூதேவி = மூத்ததேவி = லக்ஷ்மி என்ற ரீதியில், ஆரியர், பார்ப்பனர் மூதேவியை மறைத்து, ஶ்ரீதேவியை தூக்கி விட்டனர் என்று கண்டு பிடித்துள்ளனர்[4]. இவ்வாறு முக்கியமான ஒரு தெய்வமாகவிருந்த மூத்ததேவி வழிபாடு பார்ப்பனப்படையெடுப்புடன் நிலைகுலைந்து போனது. பார்ப்பனர்கள் தமது வைதீக (இன்றைய இந்து) மதத்தைப் பரப்பும்போது தமது அக்கினி, இந்திரன், சோமன் போன்ற வேதகால கடவுள்களைப் பரப்ப முயன்று முதலில் தோல்வியுற்ற பின்பு பழங்குடிகளின் கடவுள்களை தமதாக்கினர்,” என்று வி.இ.குகநாதன்[5] கூறியுள்ளார்[6]. இவரது மற்ற கருத்துகள், “(வண்ணார்களின்)  வழிபாடாக மட்டுமே சுருக்கப்பட்டது.   பொதுவாகவே தமிழரின் மரபுகளைச் சிதைக்கவேண்டுமாயின் அவற்றை குறித்த ஒரு சாதிக்கு மட்டுமென ஒதுக்கிவிடடுப்  பின்னர் குறித்த சாதியினருடன் சேர்த்து அந்த மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை……… . பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச் செல்வாக்குடன் சைவம் மூத்ததேவியினை வண்ணாரிற்கு மட்டுமே ஒதுக்கிவிட, வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது. ……………… கோடை மழை பெய்யாதோ, கொடும்பாவி எரியாளோ,என்று பாடப்படும் பாடலில் குறிப்பிடப்படும்  பெண்பாலும், அங்கு எரிக்கப்படும் கொடும்பாவி உருவமும் மூத்ததேவியே.   பார்ப்பனத்தின் கெட்டித்தனமும், தமிழரின் முட்டாள்தனமும் இங்குதான் உள்ளது…………..” உதாரணத்திற்கு இவரது கட்டுரை எடுத்துக் காட்டப் படுகிறது. ஆரிய-திராவிட இனவாத கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாம் சரித்திர ரீதியில் பொய் என்று நிரூபிக்கப் பட்ட பிறகும், 2018ல் இவ்வாறு எழுதுவது, பொய் பிரச்சாரம் செய்வது தான் இதில் வெளிப்படுகிறது. மேலும் ஆதாரங்கள் கொடுக்காமல், பொதுவாக எழுதியுள்ள நிலையினையும் காணலாம்.

parasuram beheading Renuka Devi

முண்டதேவி, மூதேவி ஆகுமா?: முண்ட தேவி என்று ஒன்றுள்ளதே, அது கூட மூதேவி ஆகியிருக்கலாமே என்று ஆய்ந்து பார்க்கவில்லை. அதாவது தலையில்லாத தேவி முண்ட தேவி. ரேணுகா தேவியை பரசுசாமர் தலை கொய்த போது உண்டான முண்ட உருவம், தெய்வமாக வழிபட்ட நிலையும் உண்டு. ரேணுகா தேவி வழிபாடு தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ளது. வண்ணாந்துறைகள் எல்லாமே, ரேணுகா தேவி பெயரில் உள்ளன[7]. ஆனால், அதைக் கண்டுகொள்வதில்லை. மூதேவி போல, முண்டம், முண்ட, முண்டை……. போன்ற வார்த்தைகளும் தமிழில் கெட்ட வார்த்தைகள் தாம். இவர்கள் கொடுக்கும் சிறந்த விளக்கங்களின் படி ஏற்றுக் கொண்டால், இனி அவையெல்லாம் நல்ல வார்த்தைகள் ஆகி விடும். ஆக, சிறந்த பெண்களை இனி மூதேவி போல, முண்டம், முண்ட, முண்டை……என்றெல்லாம் பெருமையோடு கூப்பிடலாம் போல. அது போல சீரும்-சிறப்புமாக வாழ்க என்று வாழ்த்தலாம் போல! பெரியாரிஸவாதிகள் தலியறுப்பு விழா போல, இதற்கும் விழா நடத்தலாம். ஆக, இந்த விளக்கம் கொடுப்பவர்கள், இவற்றையும் ஏற்றுக் கொள்வார்களா? மூதேவிகளுக்கு கோவில் கட்டுவர்களா? பிரச்சினை என்னவென்றால் மூலங்களைப் படிக்காமல், அரைவேக்காட்டுத் தனமாக எழுதுவது தான். பிறகு “தமிழ்” என்று சொல்லி விட்டால், யாரும் கேட்கக் கூடாது, அதனை விமர்சித்தால், தவறை எடுத்துக் காட்டினால், “தமிழ் விரோதி, தமிழின விரோதி…” என்ற தூஷணங்கள் வரும்.

Jesta devi sculpture at Perangiyur, Villuppuram

2012ல் தவ்வை பற்றி வந்த கட்டுரைகள்: 2012 “தவ்வை” பற்றி இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. வரலாற்று.காம்.இல் உளளது[8], “வாழ்வியல் கோட்பாடுகளையும் சமுதாய ஒழுங்குகளையும் காட்சிப்படுத்தும் அரியதோர் இலக்கியமான திருக்குறளே தவ்வைத்தேவியை அறிமுகப்படுத்தும் காலத்தால் முற்பட்ட தமிழ் நூல் எனலாம். தவ்வை (167) என்றும் மாமுகடி (617) என்றும் வள்ளுவரால் சுட்டப்படும் இவ்வம்மை ஜேஷ்டை என்ற பெயரில் கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றுள்ளார். திருமகளின் தமக்கையாகக் கருதப்படும் இத்தேவிக்குச் சோழர் காலம் வரை செழிப்பான வழிபாடு இருந்தமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன,” என்று கலைக்கோவன் – நளினி குறிப்பிட்டு, பிறகு, தமிழகத்தில் உள்ள தவ்வை சிலைகள் பற்றி சுருக்கமாக விவரித்துள்ளனர்[9]. பிறகு ஜீன். 2012ல் வெளிவந்த ஹரிப்பிரியா ரங்கராஜன் கட்டுரையை பலர் எடுத்தண்டுள்ளதால், அக்கட்டுரை சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது[10]. இவ்விசயங்களும் ஏற்கெனவே பி.கே.அக்ரவாலா, ரிச்சர்ட் ப்ருபேகர், தாமஸ் கோபர்ன், எஸ்.கே. தாஸ்,  ஆர்.சி. தாரே, எஸ்.கே.தீக்ஷித், கார்னிலியா டம்மிட், எட்வொர்ட் டிம்காக், இந்திரா ஐயர் முதலியோர்  எடுத்துக் காட்டியுள்ளனர். வசதிற்காக, தமிழில் உள்ள அவரது கட்டுரை உபயோகப்படுத்தப் படுகிறது.

Tavvai, Karunilam, Chingleput

தூம்ரா தேவி, இருட்டில் தோன்றியவள், புகையை விழுங்கியவள்[11]: “தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு’ என்ற தினமலர் செய்தி, என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், “ஜேஷ்டா தேவி’ என்று அழைப்பர். “ஜேஷ்டா’ என்றால், முதல் என்று பொருள். தமிழில், “சேட்டை’ என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், “ஜேஷ்டா’ என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். “தூம்’ என்றால், “புகை’ என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும். அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்[12].

© வேதபிரகாஷ்

08-09-2018

Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

[1] ரோமிலா தாபர் போன்ற மார்க்ஸிய சரித்திராசிரியர்களே, ஆரிய இனம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டி 35 ஆண்டுகள் மேலாகி விட்டன. ஐ.நா அத்தகைய வார்த்தைப் பிரயோகம் கூடாது என்று 1950களிலேயே ஆணை பிறப்பித்துள்ளது.

[2] இதனை ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்வதில்லை.

[3] விகடன், தமிழர்களின் மூத்த தெய்வம்வளத்தின் மூல வடிவம்மூதேவி!, இரா செல்வகுமார், Posted Date : 16:47 (09/10/2017)Last updated : 16:47 (09/10/2017).

[4] வி.இ.குகநாதன், மூதேவி யார்?, இனியொரு-இணைதளம், 03-04-2018.

[5] யார் இந்த குகநாதன் என்று பார்த்தால், “இனியொரு” தளத்தில், “ஆண்டாள்-தெவிடியாள்-வைரமுத்து-சர்ச்சை” என்றது 15-01-2018 தேயிட்டது, இலங்கையில் இந்துத்துவா எனும் புதிய அபாயம் போன்றவை காணப்பட்டன. https://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/. தீவிர மாவோயிஸ்ட் சித்தாந்தி மற்றும் இந்துவிரோத மனப்பாங்கு வெளிப்படுகிறது.

[6] https://inioru.com/whos-is-muthevi/

[7] சென்னை, சைதாப்பேட்டை வண்ணான் துறைக்கு ரேணுகாதேவி பெர் இருப்பது, அங்கிருக்கும் கல்வெட்டு, இன்றும் எடுத்துக் காட்டுகிறது.

[8] ஆர்.கலைக்கோவன், எம். நளினி, தவ்வைத் தேவி, வரலாற்று.காம், இதழ்.86, பிப்ரவரி 15 – மார்ச் 17, 2012.

[9] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1096

[10] வி.துலாஞ்சனன், தமிழரும் தவ்வை வழிபாடும், தனது “உருவங்கள்” இணைதளத்தில், 11-5-2016.http://www.uvangal.com/Home/getPostView/1150

 

[11] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[12] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793