Posts Tagged ‘ஆதாரம்’

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

பிப்ரவரி 6, 2020

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

SIHC leaflet by AU

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவு மற்றும் வரலாற்று துறை சார்பில் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் (South Indian History Congress) 40-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது[1]. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாள் மாநாடாக நடைபெற்றது. ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து அதிகமாக சங்க-உறுப்பினர்கள் வந்திருந்தனர்[2]. 30-01-2020 அன்று மதியமே வர ஆரம்பித்து வீட்டனர். அவர்கள், வண்டிகள் மூலம், அண்ணாமலைப் பல்கலை வளாகத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டனர். உறுப்பினர்கள் ரூ.2000/- செலுத்தியப் பிறகு, அவர்களுக்கு, விருந்தினர் இல்லம், பெண்கள் ஹாஸ்டல் என்று பல இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். மாநாட்டிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார்[3]. கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் பந்தோபாத்யாயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அவர் அச்சடித்த தனது கட்டுரையைப் பார்த்துப் படித்தார், எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ராஜன், மற்றும் உள்ளூர் காரியதரியான சங்கரி பங்கேற்கின்றனர்.

SIHC Dinakaran cutting

சிந்துசமவெளி நாகரிகத்தவர் தான் இந்தியர், ஆரிய படையெடுப்பு இல்லை: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றி பேசுகையில், இந்த பேரவை 1980ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு தேசிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது. இந்த பேரவையின் மூலம் வரலாற்றின் முக்கியதுவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை எளிய முறையில் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரலாறும், அறிவியலும் இணைந்து பல்வேறு ஆராய்சிகளை செய்து வெற்றியாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மரபணு ஆராய்ச்சியை எடுத்துக் காட்டினார். அதன் மூலம், ஆரியபடையெடுப்பு என்பது இல்லை என்றும், இந்தியா முழுவதும் பரவி இருக்கும் மக்கள் ஒரே மரபு மூலத்தைக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டினார்[4]. ராகிகர்ஹி அகழ்வாய்வு இதனை மெய்ப்பிக்கிறது[5]. இந்த மாநாட்டில் இளம் வரலாற்று ஆராட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் வரலாற்றை உள்வாங்கி படிக்கவேண்டும், என்றெல்லாம் கூறி முடித்தார்.

Dinamalar cutting SIHC
1300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[6]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தென்னிந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடந்தது. தென்னிந்திய பண்பாட்டு மற்றும் வரலாற்று சின்னங்களை எதிர்கால நலன் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நிறைவு பெறுகிறது மாநாட்டின் நிறைவு நாளில் பெங்களுரில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் இயக்குனர் அருண் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்[7]. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜன். அண்ணாமலை பல்கலைகழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர் சங்கரி ஆகியோர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இருப்பினும், சில பிரச்சினைகள் இருந்தது தெரிய வந்தது.

SIHC Nakkeran photo
பல்துறை ஆராய்ச்சி சரித்திரத்திற்குத் தேவை: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் நம் நாட்டின் வரலாறுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும், புராதான சின்னங்களை பாதுகாக்கும் வகையில் வரலாற்று ஆய்வாளர்கள் நடுநிலையுடன் வரலாறுகளை எழுதவேண்டும் என கேட்டுகொண்டர். அறிவியலும், வரலாறும் இணைந்து பல்வேறு வெற்றிகளை பெற்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளது. வரலாற்று ஆய்வுகளுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதிகளை ஒதுக்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். தற்போது வரலாற்று பாடத்தை பொருளியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டமேற்படிப்பு என அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பொழுது சரித்திர பாடம் மற்றும் படிப்புத் துறை பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை போன்ற நிதர்சன காரணங்களினால், தவிர்க்கப் படுகின்றது.

SIHC, Sivadasan photo-4
வரலாற்று படத்துறையின் முக்கியத்துவம், போக்கு மாறி வருவது: மாணவர்கள் வரலாறுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி கற்பிக்கும் வகையில் இந்த மாநாடு மூலம் வலியுறுத்தப்படுகிறது[8]. மேலும் கலாச்சாரம் குறித்த வரலாற்று ஆய்வுகளை நவீன கால வரலாறு இளம் வரலாற்றாய்வாளர்கள் எழுதவேண்டும். வரலாற்றை மாணவர்கள் படித்தால் மட்டுமே மனதை பக்குவப்படுத்த முடியும் எனவே வரலாற்றை படித்து நம் வாழ்வியல் முறையை அறிந்து நாட்டின் வளர்ச்சி மாணவர்கள் பங்காற்றவேண்டும் என்று கூறினார்[9]. இவருடன் காரைகுடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் உடன் இருந்தார்[10]. இவ்வாறெல்லாம் சொன்னால் கூட, இவர்களிடையே ஒற்றுமை இல்லை. இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுஒபதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்ற்ல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.

SIHC, Sivadasan photo-3

மதசார்பற்ற மற்றும் விஞ்ஞான ரீதியிலான சரித்திரம்: வரலாறு சைன்டிபிக் மற்றும் [scientific] செக்யூலார் [secular] அதாவது, விஞ்ஞான பூர்வமாக மற்றும் மதசார்பற்ற நிலையில் எழுதப் பட வேண்டும் என்று 40 ஆண்டுகளாக சொல்லி வந்தாலும், சரித்திர ஆசிரியர்களே பல்வித சித்தாந்தங்கள், அரசியல் மற்றும் மதம்-ஜாதி முதலியவற்றால் பிரிந்து கிடக்கின்றனர்.  1992ல் ராமஜன்ம பூமி பிரச்சினையில் சரித்திர ஆசிரியர்கள் வெளிப்படையாகவே மோதிக் கொண்டார்கள். அப்பிரச்சினை நீதிமன்றங்களுக்கு சென்ற போதும், பாரபட்சமாக சாட்சி சொன்னதால், நீதிமன்றம் கண்டித்தது. இங்கும் மஸ்தான் மற்றும் பஸ்லித்தில் என்ற இருவர் அப்பட்டமாக முஸ்லிம் ஆதரவாக, மற்ற விசயங்களை மறைத்து, இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்கு அரசைக் கண்டித்து கட்டுரைகள் படித்தது, மதரீதியிலான போக்காகத் தெரிந்தது. மெத்தப் படித்த அவர்களே அத்தகைய உணர்ச்சி பூர்வமான கட்டுரைகள் வாசித்தது, முறையாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாநாட்டின் செயல்பாட்டில் அது தீர்மானங்கள் முன்வைப்பது, விவாதிப்பது மற்றும் நிறைவேற்றுவது மூலம் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது. பிறகு, இவர்களால் எப்படி சார்பற்ற சரித்திரம் எழுத முடியும்?

SIHC, Sivadasan photo

உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[11]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதாவது, ரூ 26 லட்சம் வசூலாகி உள்ளது. இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. ஆனால், இருப்பிடம் மற்றும் உணவு சரியாக இல்லை என்று வெளிமாநில உறுப்பினர்கள் சொல்லிடிருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் சுடுநீர் வரவில்லை. அனைத்துலக மாணவர் விருந்தினர் தங்குமிடத்தில் சுத்தமாக வரவில்லை. குறிப்பாக உணவு, மிக சாதாரணமாக இருந்தது, இட்லி கெட்டியாக இருந்தது, தேங்காய் சட்னி இல்லை. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர். குறிப்பாக வெளிமாநிலத்தவர் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். மேலும், ஆய்வுக் கட்டுரை வாசிக்கும் அறைகள் அங்கும் இங்குமாக தூரமான இடங்களில் அமைத்திருந்தனர். வாகன வசதியும் செய்து தரப்படவில்லை. சிறப்பு, நினைவு சொற்பொழிவுகள், ஹை-டெக் ஹாலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, ஆனால், அது தங்குமிடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருந்தது. இதனால், 20-30-40 பேர்களே கலந்து கொண்டனர்.

SIHC, Sivadasan photo-2

தரமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு: இங்கு கூட முதல் நாள் முழுவதும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு, சால்வை போத்திக் கொள்ளவே செலவழித்துள்ளனர். ஆய்வுகட்டுரைகளைப் படிப்பதில் ஆர்வம் இல்லை. ஏனோ-தானோ என்று தான் செய்துள்ளனர். பண்டோபாத்யாயா பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பதால், அவர்கள் கலந்து கொள்வதாகத் தெரிகிறதுதாய்வுக் கட்டுரைகள் “கட்-அன்டு-பேஸ்ட்” விட மோசமாக இருக்கின்றன. அடிப்படை கேள்விகள் கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாமல், ஆய்வு கட்டுரை வாசிப்பவர்கள் முழிக்கின்றனர். ஆனால், சான்றிதழை வாங்கிக் கொண்டு செல்லத்தான் துடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு கேரளத்தவர் 10 கட்டுரைகளை வாசிக்கின்றனர். அவை அரைத்த மாவையே அரைக்கும் போக்கில் உள்லன. தான் படித்தால் போதும் என்ற நிலையில், அடுத்தவர் வாசிப்பதைக் கேட்காமலேயே சென்று விடுகின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிப்பதிலும் முறைகேடுகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பிறகு, எப்படி ஆராய்ச்சித்தன்மையின் மேன்மை ஓங்கும்?

© வேதபிரகாஷ்

06-02-2020

SIHC, Sivadasan photo-5

[1] நக்கீரன், தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் நாற்பதாவது ஆண்டு மாநாடு, காளிதாஸ், Published on 31/01/2020 (16:53) | Edited on 31/01/2020 (17:05)

[2] முன்னர் மஹாராஷ்ட்ரா மற்றும் ஒரிஸா மாநிலங்களிலிருந்தும் வந்தனர், இபோழுது 1990களுக்குப் பிறகு வருவதில்லை.

[3] http://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/south-indian-historical-council-40th-annual-conference

[4] Times of India, DNA analysis of Rakhigarhi remains challenges Aryan invasion theory, TNN | Updated: Sep 7, 2019, 16:36 IST.

[5]  http://timesofindia.indiatimes.com/india/dna-analysis-of-rakhigarhi-remains-challenges-aryan-invasion-theory/articleshow/71018198.cms

[6] SIHC காரியதரிசி பிறகு சொன்னதாகத் தெரிகிறது.

[7]  அருணி என்று இருக்க வேண்டும், நமது தமிழ் நிருபர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.

[8] தினமணி, பல்கலை.யில் வரலாற்றுத் துறை மாநாடு நாளை தொடக்கம், By DIN | Published on : 29th January 2020 11:30 PM |

[9] http://dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/jan/29/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3343922.html

[10] தினமலர், தென்னிந்திய வரலாற்று பேரவையின் மாநாடு, Added : ஜன 30, 2020 23:21

http://dinamalar.com/news_detail.asp?id=2469584

[11] SIHC காரியதரிசி சிவதாசன் பிறகு சொன்னதாகத் தெரிகிறது.