Posts Tagged ‘வின்சென்ட் ஸ்மித்’

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைசரித்திர எழுதப்படும் முறை (1)

வேதபிரகாஷ்

No history without sources, evidence, proof

No history without sources, evidence, proof

இதிகாசம்” – “இது இப்படி நடந்தது: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான்,  “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார்.

ஆகவே, இப்படி –

  • நடந்துள்ளது,
  • நடந்திருக்கக் கூடும்,
  • நடந்திருக்க வேண்டும்

என்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்

  1. பார்ப்பவர் (the persond who sees the historical event),
  2. சொல்பவர் (the personal who narrates the historical event),
  3. கேட்பவர் (the person who listerns to the historical event),
  4. எழுதுபவர் (the person who actually writes the historical event)

முதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது.

How Mahabharat written- Vidur told Dridhrastra

How Mahabharat written- Vidur told Dridhrastra

மூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம் எழுதப்படாது [मूल लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.

How Mahabharat written

How Mahabharat written

சரித்திரத்தின் தந்தைகளும், தாத்தாக்களும்: ஐரோப்பியர்களுக்கு தமக்குச் சொந்தமாக இருப்பது மிகவும் குறைவே, ஏனெனில், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நாடுகளாக உருவான நிலையில் ஒவ்வொரு சமய, தத்துவ, சமூக, பொருளாதார காரணிகளுக்கு  வெவ்வேறான பழமையான நாகரிகங்களிலிருந்து பெற வேண்டியதாகியது. பைபிளை சார்ந்து பொதுவாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எழுதி வந்ததால், –

  • மதத்திற்கு, மத்தியத்தரைகடல் பகுதி,
  • தத்துவத்திற்கு கிரேக்கம்,
  • வானவியலுக்கு பாபிலோனியா,
  • கணிதத்திற்கு அசிரியா,
  • காலக்கணக்கீடுத் தொன்மைக்கு எகிப்து

என்று பலவிடங்களிலிருந்து பெற்று, பைபிள் காலக்கணக்கீடு (Biblical chronology) என்பதனை உருவாக்கினர். அதை வைத்துக் கொண்டு சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலும் கிரேக்க-ரோமானிய மூலங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால், வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியன அவற்றைச் சான்றதாகவே இருக்கும். கிரேக்க நூற்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், அதற்கு அதிகாரம், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளப் படும் தன்மை என்பவற்றை மனத்தில் கொண்டு “ஹெரோடோடஸ் சரித்திரத்தின் தந்தை” (Herodotus is the Father of History) என்று சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் ஹெரோடோடஸ் ஒன்றும் இப்பொழுதுள்ள  சரித்திரம் போன்று எழுதிவிடவில்லை.

Herodotus and his history

Herodotus and his history

ஹெரோடோடஸ் சரித்திரம் ஒன்றும் சரித்திரம் இல்லை: ஹெரோடோடஸின் புத்தகத்தைப் படித்தால், அவருடைய உலகத்தின் ஞானம் மற்றும் இந்தியாவின் அறிவு முதலியவற்றைக் காட்டும் மாதிரி வரைப்படம் முதலியவற்றை அறிந்து கொள்லலாம்.குறிப்பாக இந்தியா, இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும் போது,

  • அவர்களுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்கள்,
  • நான்கு கைகள் இருந்தன,
  • உடைகள் அப்படியே மரங்களில் காய்த்துத் தொங்கின,
  • எறும்புகள் நாய் உருவில் பெரியதாக இருந்தன,
  • அவை பூமிக்கடியில் சென்று தங்கப்பொடியை அள்ளிக் கொண்டு வந்தன

என்றெல்லாம் எழுதியுள்ளதாக, அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் சரித்துவத்துவம் (Historicity) என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ “சிந்துபாத்” மற்றும் “ஆயிரத்தொரு இரவுகள்” கதைகளில் வரும் விஷயங்களைப் போல் உள்ளது. பிறகு எப்படி, ஹெரோடோடஸ் “சரித்திரத்தின் தந்தை” என்றாகிறார் என்று தெரியவில்லை!

Indians according to Herodotus and his history on India

Indians according to Herodotus and his history on India

கிரேக்க சரித்திரம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது: இந்தியா எப்படி இருக்கும் என்று தெரியாது, இந்தியர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறியாது, இந்தியர்களின் தன்மயினையும் புரியாது ஹெரோடோடஸ் எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த நிகழ்ச்சியிலிருந்து தான் இந்திய சரித்திரமே ஆரம்பிக்கிறது என்ற முடிவுசெய்த, ஆதாரமில்லாத சருதுகோளின் மீது ஆதாரமாக இந்திய சரித்திரம் எழுதப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், சமகாலத்தைய இலக்கியச் சான்றுகளை (contemporary literary evidences) நோக்கும் போது, இந்திய புராணங்கள் “சரித்திரப் புத்தகங்களை”ப் போன்றுள்ளன. ஆகவே, எங்களிடத்தில் “தாத்தாக்கள்” இல்லையென்றாலும், “தந்தைகள்” இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்ள அவ்வாறு கூறிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இந்திய புராணங்கள் பற்றி கேவலமாக “அவை மாயை (myth), மாயாஜாலக் கதைகள் (fables), கட்டுக் கதைகள் (legends)” எழுதி வைத்தார்கள். ஆனால், வம்சாவளிகள் (geneologies), ராஜப்பரம்பரைகள் (royal dynasties), வரிசைக்கிரம ஆட்சியாளர்கள் (successive rulers), அவர்களது ஆட்சியின் காலம் (period of reign), முதலிய விவரங்களைப் புராணங்களிலிருந்து தான் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் புராணங்கள் இல்லாமலிருந்தால், வில்லியம் ஜோன்ஸ் (William Jones), ஜான் பைத்புல் பிளீட் (John Faithful Fleet), வின்சென்ட் ஸ்மித் (Vincent Smith) முதலியோரால் இந்திய சரித்திரமே எழுதியிருக்க முடியாது.

Herodotus and his history on India

Herodotus and his history on India

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] “தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.

[2] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.

[3] Conquerer and conquered, victor and defeated, ruler and ruled and such concepts were involved in writing their histories. And thus, they never recorded their defeats or the victories of their opponents.

[4] History is not what had been written or being written or would be written, but, it is actually what had happened in the past.