Archive for the ‘காலக்கணக்கீட்டியல்’ Category

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

செப்ரெம்பர் 7, 2023

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

அலெக்சாந்தர் கட்டுக் கதையும், இந்திய சத்திரமும்: மூல சரித்திர ஆதாரங்களை ஆயும் பொழுது, அலெக்சாந்தர் என்ற நபர் இருந்ததே சந்தேகத்திற்கு எடுத்துச்சென்றது. இதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியர் கண்டறிந்தனர். அலெக்சாந்தர் 367-326 BCEல் “இந்தியாவின்” மீது படையெடுத்தான், வென்றான், அதிலிருந்து தான் “இந்தியாவின்” சரித்திரமே ஆரம்பிக்கிறது என்றெல்லாம் ஆங்கிலேயர் எழுதி வைக்க, அது பிரபலமாகி இன்னும் தொயடர்ந்து கற்பிக்கப் படுகிறது, இந்தியர் படித்து தேர்ச்சிப் பெற்று வருகின்றன. ஒரு சிலரே இந்த கட்டுக்கதையினை அவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. ஆனால், முதலில், அவர்களை “Revisionist historians” என்று முத்திரைக் குத்தி, தனிமைப் படுத்தப் பட்டனர்[2]. ஆனால், கட்டுக்கதைகளை தொடர்ந்து, “சரித்திரம்” என்று சொல்லிப் பரப்ப முடியாது. “சந்திரகுப்த” மற்றும் “அலெக்சாந்த” சொற்பிரயோகங்கள் பாரசீக, அரேபிய, உருது மொழிகளில் ஒரே மாதிரி இருப்பதை பலர் எடுத்து காட்டியும் இந்தியாவில் அதைப் பற்றிப் பேசப் படவில்லை. சரித்திராசிரியர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. 

A mosaic of Alexander at House of the Faun in Pompeii, Italy. | Unknown authorUnknown author, Public domain, via Wikimedia Commons

2022ல் அல்லெக்சாந்தர் கட்டுக்கதைகள் பற்றிய கண்காட்சி ஆங்கிலேய நூலகம், லண்டனில் நடந்தது[3]: அந்நிலையில் சென்ற ஆண்டு 2022, அக்டோபர் 21 முதல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம் “அலெக்சாண்டர் தி கிரேட்: தி மேக்கிங் ஆஃப் எ மித்” (Alexander the Great: The Making of a Myth) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது[4]. பொதுவாக அவனது கதைகளுக்கு ஆதாரமாக உள்ளதாகச் சொல்லப் படும் ஆதாரங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அலெக்சாண்டர்  356 BCE ஜூலையில் மாசிடோனின் அரசன் பிலிப் II மற்றும் மனைவி ஒலிம்பியாஸின் மகனாக, மாசிடோனின் தலைநகரான பெல்லாவில் (Pella) பிறந்தான். கிமு 330 BCE ஜூலை வாக்கில், அவன் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தான், 25 வயதில், ஆசியா மைனரின் ஆட்சியாளராகவும், எகிப்தின் பார்வோனாகவும், பாரசீகத்தின்  பேரரசன் டேரியஸ் III பின் ஆட்சியாளனாகவும் ஆனான். அதாவது, ஒரே நபர் மூன்று நாகரிகங்களின் தலைவனாக, கடவுளாகச் சித்தரிக்கப் பட்டதை எடுத்துக் காட்டப் படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அலெக்சாண்டர் ஒரு பேரரசை மேற்கில் கிரீஸிலிருந்து கிழக்கில் சிந்து நதிக்கு அப்பால் வரை உருவாக்கினான். 32 வயதில் பாபிலோனில் தனது மரணத்திற்கு முன், அவ்வாறு சாதித்ததாகச் சொல்லப் படுகிறது. .

A Christian Alexander described as ‘enemy of devils’ heads this amulet scroll in the Ethiopian Ge‘ez language. Ethiopia, 18th century?

இதுரோமாஞ்சன கட்டுக்கதைகள் தான், சரித்திரம் அல்லஎன்ற முன்னுரைஎச்சரிக்கை: எவ்வாறாயினும், இந்த கண்காட்சி வரலாற்றைப் பற்றியது அல்ல, ஆனால் 2,000 ஆண்டுகளாக நிலவி வரும் கட்டுக்ககதைகள், மற்றும் புராணக்கதைகளை வைத்து புனையப்பட்டுள்ளவற்றை ஆராய்வதற்கான அண்காட்சியாக அமைந்தது என்று மிகவும் எச்சரிக்கையாக அறிவித்துக் கொன்டனர். 25 நாடுகளில் இருந்து 21 மொழிகளில் உள்ள பொருட்களைக் கொண்டு, புனையப் பட்ட ஒரு உருவம் எப்படி பல நோக்கங்களுக்காக சரித்திரம் போல செயல்பட, சேவை செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது, இது உலகளாவிய “அலெக்ஸ்சாந்தர் கட்டுக்கதைகள்” (The Alexander Romance),  மூன்றாம் நூற்றாண்டில் CE முதலில் கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட அலெக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் ஆதாரமானவை. ஆனால், அவற்றை மறைக்க இந்த முன்னுரையும் கொடுக்கப் பட்டது.

Nahid, daughter of Philip of Macedon, is here married to the Persian emperor as part of a diplomatic alliance. Rejected on account of her bad breath, she was sent home, unknowingly pregnant, to Greece where she gave birth to a son, Alexander. This version of Alexander’s origins saw him, in Persian eyes, as the legitimate heir and successor to the throne. From the Darabnamah (Story of Darab), by Abu Tahir Muhammad Tarsusi, Mughal India, 1580–85 (British Library Or.4615, f. 129r)

வியாபாரமயமாக்கல் யுக்திகளில் கட்டுக்கதைகள் பரப்பப் படுதல்: அலெக்சாந்தரின் திரைப் படம் பலமுறை வெளிவந்துள்ளது. 2004ல் வெளிவந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சரித்திர ஆதாரமாக, கோடிகள் செலவழிக்கப் பட்டு எடுக்கப் பட்ட படம் சிலரால் எதிர்க்கப் படவும் செய்தது.  இதனால், நான்கு விதமான படப்பிரதிகள் உருவாக்கப் பட்டு விநியோகத்தில் வந்தன[5]. இருப்பினும்,கட்டுக் கதைகளையும் வியாபாரமாக்குவதில் சளைக்கவில்லை. அதிலும் பலர் இறங்கினர். ஆனால் புராணக்கதைகள் காவியக் கவிதை மற்றும் நாடகத்திலும், மேலும் சமீபத்தில் நாவல்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களிலும் பிரபலமாக்கப் பட்டது. இவை அனைத்தின் உதாரணங்களையும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Aristotle instructs a pupil in the Kitab na‘t al-hayawan (On the Characteristics of Animals). Baghdad?, about 1225 (British Library Or.2784, f. 96r)

கண்காட்சியில் வைக்கப் பட்ட ஆதாரங்கள்: ஏறக்குறைய 140 பொருட்களில், 86 பிரிட்டிஷ் நூலகத்தின் சேகரிப்பில் இருந்து வந்தவை. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சேகரிப்புகளில் இருந்து 37 கண்காட்சிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Alexander comforts the dying Darius and agrees to his final requests in Firdawsi’s Shahnamah (Book of Kings). According to one Persian tradition, Darius was in fact his half-brother. Isfahan?, Iran, 1604 (British Library IO Islamic 966, f. 335r)

குதிரையின் சமாதி, அதைப் பற்றிய கட்டுக்கதை: அலெக்சாண்டரின் புகழ்பெற்ற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிமுகத்திற்குப் பிறகு, A Conqueror in the Makeing அலெக்சாண்டரின் தோற்றத்தின் வெவ்வேறு பதிப்புகளும் ஆராயப் படுகிறது. , தத்துவஞானி அரிஸ்டாட்டில் மற்றும் அவரது விசுவாசமான போர்க்குதிரை புசெபாலஸ் முதலியவையும் இருந்தன. அது போரஸுடன் நடந்த போரில் கொல்லப் பட்டதாகவும், அங்கேயே சமாதி கட்டப் பட்டதாகவும் சரித்திரம் எழுதி வைக்கப் பட்டது. ஆனால், அதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவ்வாறு சரித்திரம் போர்வையில், அலெக்சாந்தர் கட்டுக்கதைகளை இந்திய சரித்திரத்தில் எழுதி வைத்தனர்.

In Kandahar, Alexander was persuaded by a beautiful priestess not to destroy the sacred statue. This copy of the twelfth-century poet Nizami’s Khamsah (Five Poems) was especially commissioned by the Mughal Emperor Akbar who had conquered Kandahar in 1595 while this manuscript was still being copied. The painting would have deliberately invited comparison between Akbar, famous for his religious tolerance, and Alexander. Artists: Mukund and La‘l, Lahore, 1593–95 (British Library Or.12208, ff. 317v–318r)

கிரேக்கர்களுக்கு பூகோள ரீதியில் இந்தியா தெரியாது: பகுதி மூன்று, ஒரு பேரரசை உருவாக்குதல், பெர்சியாவின் டேரியஸ் III மீது அலெக்சாண்டரின் வெற்றி மற்றும் இந்தியா மற்றும் சீனாவிற்கு மேலும் கிழக்கே மேற்கொண்டதாக விளக்கும் அவனது பயணங்களைனாக்கட்டுக்கதைகள் விவரிக்கிறது – ஆனால் அலெக்சாண்டர் இந்தியாவை அடைந்தார், என்று கதைகள் சொன்னாலும் சீனாவுக்கு செல்லவில்லை, என்று அக்கட்டுக்கதை பண்டிதர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவைப் பற்றிய அறிவே கிரேக்க பூகோள ஆசிரியர்களுக்குத் தெரியாது என்பது உண்மை. முதலில் கிரேக்க பூகோள ஆசிரியர்கள், சிந்துநதிக்கரைக்கு வந்ததும், உலகத்தின் எல்லைக்கு கடற்கரைக்கு வந்து விட்டோம் என்றனர். ஆனால், அதைத் தாண்டி ஒரு பெரிய நாடு, பேரரசு இருந்ததை அறிந்த அவன், அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன.

The wedding of Alexander and Darius’ daughter, Roxana. From Firdawsi’s Shahnamah (Book of Kings), Qazvin, Iran, about 1590–95 (British Library Add MS 27257, f. 326v)

அலெக்சாண்டரின் உறவுகள் பற்றிய விவரங்கள்: அலெக்சாந்தர் தனது தாயிடமே மையல் கொண்டதாக உள்ளது. ஒரு பகுதியில், அவரது வாழ்க்கையில் முக்கியமான நபர்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன: அவரது மனைவிகள், அவர் சந்தித்த சக்திவாய்ந்த பெண்கள், அவரது ஜெனரல் ஹெபஸ்டின் மற்றும் அலியான அடிமை பகோவாஸ், முதலியோர் காணப்படுகின்றனர். தவிர, அவன், ஒரு அலி என்றும் கதைகள் விவரிக்கின்றன. ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவன் என்று 2004-திரைப்படம் எடுத்துக் காட்டியதால், கிரேக்கர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், பாரசீக, கிரேக்க, எகிப்திய பாலியல் கதைகளில் இவையெல்லாம் சகஜம் என்பது, எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்[6]. ஆகவே தான், இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாக மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று தான், நான்குமுறை திரைப்படத்தை எடிடிங் செய்யப் பட்டு, சிடி/டிவிடி தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.

This Coptic fragment of the Alexander Romance describes Alexander setting off to explore the Land of Darkness. When a mysterious voice predicted his imminent death, he turned back bringing with him some objects he had gathered in the dark. These later turned out to be diamonds. Atripe, Upper Egypt, 14th century (British Library Or.3367/2)

அலெக்சாந்தர் சொர்க்கத்திற்குச் சென்றது: பிறகு, அலெக்சாந்தரின் பிரயாணங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கு அலெக்சாண்டர் மார்பில் முகங்கள், எக்காளங்கள், விசித்திரமான விலங்குகள் மற்றும் டிராகன்கள் போன்ற மக்கள் வசிக்கும் விசித்திரமான நிலங்களில் பயணித்ததாக சொல்லப் படுகிறது. இதெல்லாம் சிந்துபாத் கதைகள் போலவே இருக்கின்றன.. அவரது பயணம் அவரை பூமியின் முனைகளுக்கும், எல்லைகளுக்கும், மேலே உள்ள வானங்களுக்கும் கடலின் அடிப்பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது, எப்போதும் புதிய அனுபவங்களையும் அழியாமைக்கான திறவுகோலையும் தேடுகிறது. எங்கோ சொர்க்கத்தை அடைந்ததாகக் கூட கதைகள் சொல்கின்றன. இங்குதான், இந்திய நிர்வாண சாமியார்களுடன் போட்ட சண்டை, அலெக்சாந்தரை சபித்தது, அவர்களை அலெக்சாந்தர் கொன்றது போன்ற விவரங்களும் காணப் படுகின்றன.

அலெக்சாந்தர் கட்டுக்கதைமுடிவு: இறுதிப் பகுதி, ‘பிரயாணத்தின் இறுதி” அலெக்சாண்டர் பாபிலோனுக்குத் திரும்புவதையும், அவரது அடுத்தடுத்த மரணத்தின் மர்மத்தையும் விவரிக்கிறது. அவரது உடல் ஒரு அற்புதமான வண்டியில் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இறுதியில் அது அலெக்ஸாண்டிரியாவில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறை இப்போது தொலைந்துவிட்டது, அதாவது கண்டுபிடிக்க முடியவில்லையாம், ஆனால் அவரது இறுதி ஓய்வு பெற்ற இடம், உடல் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் இடம் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டது.  உண்மையில் ஆள் இருந்தால், உடல் இருந்திருக்கும், உடல் இருந்திருந்தால், புதைக்கப் பட்டிருக்கும், புதைக்கப் பட்டிருந்தால் கல்லறை இருந்திருக்கும், இருப்பினும், 2300 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பிடிக்க முடியாது[7]. ஆகவே, கட்டுக்கதை மீது கட்டுக்கதைகள், இட்டுக் கட்டி வளர்த்துக் கொண்டிருக்கலாமே தவிர, உண்மையில் எதுவும் கிடைக்காது[8].

© வேதபிரகாஷ்

07-09-2023.


[1] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, https://www.hinduwebsite.com/history/alexander.asp

[2] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and His Influence on India,

https://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] The Scroll, How Alexander become ‘the Great’? A new exhibition explores the making of a myth did, Ursula Sims-Williams, Sep 26, 2022 · 07:30 pm

[4] https://scroll.in/article/1033628/how-did-alexander-become-the-great-a-new-exhibition-explores-the-making-of-a-myth

[5] Four versions of the film exist, the initial theatrical cut and three home video director’s cuts: the “Director’s Cut” in 2005, the “Final Cut” in 2007, and the “Ultimate Cut” in 2014. The two earlier DVD versions of Alexander (“director’s cut” version and the theatrical version) sold over 3.5 million copies in the United States.[5] Oliver Stone’s third version, Alexander Revisited: The Final Cut (2007), sold nearly a million copies and became one of the highest-selling catalog items from Warner Bros (as of 2012).

[6] அதாவது அத்தகைய நாடுகளில் சரித்திரம், கலாச்சாரம், நாகரிகம் பற்றி படிப்பவர்களுக்குத் தெரிந்த விசயம் ஆகும்.

[7] வேதபிரகாஷ், கடவுளின் மகன் யார்முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?, செப்டம்பர் 10, 2016.

[8] https://indianhistoriography.wordpress.com/2016/09/10/who-is-son-of-god-zeus-jesus-christ-muruga-vinayaka-who/

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப் பட்டது

ஏப்ரல் 26, 2023

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது

2,532-வது ஜெயந்தி பற்றிய செய்தி வெளியீடு: பொதுவாக ஶ்ரீசங்கர ஜெயந்தி, ஆதிசங்கரர் ஜெயந்தி பற்றியெல்லாம் ஊடகங்கள் கண்டு கொள்ளாது. அது எதுவோ பார்ப்பனர்களின் சமாச்சாரம், அதிலும் காஞ்சி மடம் என்றால்,”அவாள் சமாசாரம்” என்ற ரீதியில் அப்படியே ஒதுக்கி விடுவர். சுமார் 70 ஆண்டுகளாக நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால், 2023ல் இது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. இது விழிப்புணர்வா, இந்துத்துவத்தின் தாக்கமா, செக்யூலரிஸமா என்று இனிமேல் தான் தெரியவரும். தினகரன் போன்ற நாளிதழ்களும் “கொண்டாடப் பட்டது” என்ற செய்திக்குப் பதிலாக ஆதிசங்கரர் பற்றிய சரித்திரத்தைக் கொடுத்து, “தொடரும்” என்று போட்டிருக்கிறது. அதாவது, மற்ற நாளிதழ்கள் செய்தி வெளியிடும் பொழுது, நாமும் எதையாவது போடுவோம் என்ற ரீதியில் போட்டுள்ளது. இப்பொழுது கூட, “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சில வகுப்பினர் அதிசங்கரரைத் தாக்கி வருகின்றனர். பிராமண / பார்ப்பன எதிர்ப்பு அதிலும் வேலை செய்கிறது. சித்தாந்தம், தத்துவம், தர்க்கம் என்று சொல்லிக் கொண்டும் குழப்பங்களை, புரட்டுகளை மற்றும் தூஷணங்களில் ஈடுபட்டு வருவதும் இருக்கிறது. அந்நிலையில் தான் செய்தி வருகிறது. இதைப் பற்றி விமர்சனம் இது வரை காணப் படவில்லை. ஒருவேளை இனி வரக்கூடும்.

மடங்களை உண்டாக்கியது: தென்னிந்தியாவில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம், கிழக்கில் கோவர்த்தவன பீடம் என நான்கு விதமான அத்வைத பீடங்களை நிறுவிய ஆதி சங்கரர் பல அற்புதமான நூல்களையும் நமக்கு தந்துள்ளார்[1]. இவ்விசயத்தில் சிருங்கேரி மற்றும் காஞ்சி மடங்கள் வேறு படும். காஞ்சி மடம் என்பதே இல்லை என்று வாதிடும் சிருங்கேரி மடம். குறிப்பாக மற்றமடங்கள் 509-477 BCE தேதியை பின்பற்றி வௌம் பொழுது,788-820 CE ஆற்ரிக் கொண்டது சிருங்கேரி மடம்…..ஆதிசங்கரர் சுப்ரஹ்மண்ய புஜங்கம், செளந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மாத்ருகா பஞ்சகம் போன்ற பல நூல்களை அருளி உள்ளார். இதில் சுப்ரஹ்மண்ய புஜங்கம், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது, அம்பிகையின் அருளை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அம்பாளின் கருணையையும் சொல்வது செளந்தர்ய லஹரி[2], என்று சமயம் விவரிக்கிறது. புதிய தலைமுறை, அவரது சரித்திரத்தைக் குறிப்பிட்டு[3], “தொடரும்” என்று வெளியிட்டுள்ளது[4].

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது: அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா 25-04-2032 அன்று இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் கொண்டாடப்பட்டது[5]. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்[6]. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர் (509-477 BCE). 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில் சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார். இவரது 2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது[7]. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் குறித்த வேத செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் இவரது ஜெயந்தி விழா அமைந்துள்ளது[8].

இந்தியாவில், நேபாளத்தில் கொண்டாடப் பட்டது: இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபாள், வாராணசி, அசாம் – காமாக்யா, ராணிபூல், சிக்கிம், பூரி, புது டெல்லி, பஞ்சாப், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆதிசங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியன நடைபெற்றன. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ஆதிசங்கரருக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்தார். முன்னதாக ஆச்சாரியரின் உற்சவ மூர்த்தி கபிலேஸ்வர சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு நேற்று நடைபெற்ற விழாவுக்கு தலைமை தாங்கினார். ஆதிசங்கரர் பிறந்தநண்பகல் வேளையில் சங்கர விஜயத்தின் பாடல்கள் பாடப்பட்டன[9]. காஞ்சி மடத்தின் பாடசாலைகளில் குருகுல முறை மூலம் நான்கு வேதங்களைப் பயின்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஸ்ரீ விஜயேந்திரர் வழங்கினார்[10].

திருப்பதி நிகழ்ச்சியில் ஸ்ரீவிஜயேந்திரர் பேசியதாவது: “சனாதன தர்மத்தை, அத்வைத தத்துவத்தை நமக்கு போதித்தவர் ஆதிசங்கரர். அவரது போதனைகள் தேசிய ஒருமைப்பாட்டை மட்டுமல்லாது முழு உலகத்தையும் ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டுள்ளன. அவர் தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அவரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம் சமூக நலனுக்காக நாடு முழுவதும் கலாச்சாரம், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் பல சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,” என்றார். நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் நிர்வாகிகள், வேத பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

அமைதியாக கடந்துவிடும் நிகழ்ச்சி: இதுகுறித்து சங்கர மடத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘ஆதிசங்கரரின் 2532-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது[11]. இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வேதபண்டிதர்கள், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையிலும், புனேயை சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிக்கிமிலும் கூடி உள்ளனர். ஆதிசங்கரர் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்’ என்றனர்[12]. தினகரனுக்கு இதைப் பற்றி செய்தி வெளியிட விருப்பம் இல்லை போலும்[13]. இருப்பினும், “ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!” என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது[14]. இதுவரை சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் கூட்டம் என்றெல்லாம் விமர்சிக்கவில்லை. 788-820 CE தேதியிருக்க, 509-477 BCE தேதியைவைத்து எப்படி 2532வது பிறந்த நாள் என்று கணக்கிடலாம் என்றும் கேட்கவில்லை. இது மாற்றமா, அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டமா என்று கவனிக்க வேண்டும்….

© வேதபிரகாஷ்

26-4-2023


[1] சமயம்.காம், ஆதி சங்கரர் ஜெயந்தி 2023 : இந்து மதத்தை நெறிப்படுத்திய ஜகத்குருவின் அவதார தினத்தில் என்ன செய்ய வேண்டும்?, Authored by Mohana Priya | Samayam Tamil | Updated: 24 Apr 2023, 9:55 pm.

[2] https://tamil.samayam.com/religion/hinduism/adi-sankarar-jayanthi-2023-date-significance-of-this-day/articleshow/99738949.cms

[3] புதிய தலைமுறை, இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஆன்மிக தத்துவ ஞானி!ஆதிசங்கரர் அவதரித்த தினம் இன்று.. Jayashree A, Published on : , 25 Apr, 2023, 4:12 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/spiritual/indian-philosopher-adi-shankara-birthday-today

[5] தமிழ்.இந்து, நாடு முழுவதும் காஞ்சி சங்கர மடத்தின் கிளைகளில் ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா, செய்திப்பிரிவு, Published : 26 Apr 2023 05:12 AM, Last Updated : 26 Apr 2023 05:12 AM.

[6] https://www.hindutamil.in/news/spirituals/981806-adi-shankarar-2-532nd-jayanti-celebrations-at-kanchi-sankara-math-branches-across-the-country.html

[7] தினமலர், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா ஸ்ரீமடங்களில் கோலாகலம், Added : ஏப் 25, 2023 23:53 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3304006

[9] தினமலர், ஆதிசங்கரர் 2532வது ஜெயந்தி ராமேஸ்வரத்தில் யாக பூஜை, Added : ஏப் 25, 2023 22:46 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3303812

[11] மாலைமலர், 2,532-வது ஆண்டு ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு, By Maalaimalar, 25 ஏப்ரல் 2023 2:00 PM

[12] https://www.maalaimalar.com/news/state/2532th-adi-shankara-jayanti-celebration-organized-by-kanchi-sankara-mutt-across-the-country-601122

[13] தினகரன், ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!, ஆதி சங்கரர் ஜெயந்தி, April 25, 2023, 12:20 pm, 25-4-2023.

[14] https://www.dinakaran.com/adishankar_advaitadharisanam_adishankarjayanti/

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

கலந்து கொண்ட சிலரின் கருத்துகள்: வரலாறை உலகறிய செய்யவேண்டும்: முத்துப்பாண்டி, புத்தக விற்பனையாளர், மதுரை ஆராய்ச்சி மையம்: வரலாற்று ஆய்வு மாணவர்கள் கள்,பேராசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக இம்மாநாடு திகழ்கிறது.எங்களிடம் ரூ.80 முதல் ரூ.2500 வரை புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. முதல் முறையாக திண்டுக்கல்லில் விற்பனை நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்களுக்கு மவுசு: உதயகுமார் மதுரை கல்வெட்டுஆய்வாளர்: கி.மு.6ம் நுாற்றாண்டில் எழுத்து முறையில் உள்ள புத்தகங்கள் இங்கே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 தினங்கள் மாநாடு நடப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள பேராசிரியர்கள் அதிகமானோர் பங்கேற்பதால் புத்தகங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது: ராஜவர்மன், வரலாற்று பேராசிரியர், பழநி: தென் இந்தியாவில் முதன் முறையாக இம்மாநாடு நடக்கிறது. அதிக ஆர்வமாக மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டுள்ளனர் .வரலாற்றுக்கு ஜி.டி.என்.கல்லுாரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மக்களுக்கு வரலாற்றை கற்றுகொடுக்க வேண்டும். 4 வகையில் பிரித்து கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அறிஞர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவியல் படித்தவர்களும் ஆர்வம்: முருகேஸ்வரி, பேராசிரியை, திண்டுக்கல்: கேரளாவிலிருந்து அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் கலாசாராத்தை அறிய அவர்களும் ஆர்வமாக உள்ளனர். இம்மாநாட்டின் மூலம் வரலாற்று அறிஞர்கள் தொடர்பு பெருகும். அறிவியல் படித்தவர்களும் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம்: செல்லப்பாண்டி, பேராசிரியர், அருப்புக்கோட்டை: வரலாற்றின் பாரம்பரியத்தை மாணவர்களின் மத்தியில் புகுத்தவேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகளை அதிகம் நடத்துவதன் மூலம் வரலாற்றிஞர்களின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

புதிதாக கற்றுகொள்வோம்” ரகசனா, வரலாற்று மாணவி, கேரளா: கேரளாவிலிருந்து 20க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளோம். வரலாறு போற்றப்படக்கூடிய விஷயம். கலாசாரத்தை அறிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். புதிதாக வரலாறு குறித்து கற்றுகொள்வோம்.

நல்லதொரு வாய்ப்பு: சிவாங்கி, பேராசிரியர், பஞ்சாப்: இதுபோன்ற வரலாற்று மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு இது முதல் அனுபவம்மிக ஆர்வமாக உள்ளது. தென்னிந்திய மன்னர்களை அறிவது மிக அபூர்வம். ஒவ்வொரு படைப்புகளும் என்னை வியப்படைய செய்கிறது.வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது: இஷா டம்டா, பேராசிரியர், பஞ்சாப்: இவ்வளவு அதிகமான வரலாற்று அறிஞர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மாநாடுகளை ஆண்டு முழுவதும் நடத்தினால் நன்மை பயக்கும்.

பிறகு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களிடம் உரையாடி, விசயங்களை அறிந்த போது, இவர்கள் எல்லோரும் (மேலே கருத்து சொன்னவர்கள்) முழு உண்மை அறியாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிந்தது.

ஆய்வுக்கட்டுரைகளின் தராதரம் முதலியன: நிறைவாக புதியத் தலைவர், சுப்பராயலு பேசும் பொழுது, “நான் ஒவ்வொரு அறையாகச் சென்று, 20-30 நிமிடங்கள் உட்கார்ந்து, ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும், அறையில் இருந்து கேட்பவர்களுக்கும்;  நிர்வகிக்கும் தலைவருக்கும் ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்தது. அறையில் இருந்து கேட்பவர்கள், ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்காமல், கவனிக்காமல் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல, நிர்வகிக்கும் தலைவரைச் சுற்றி ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. யாரும் எந்த கேள்வியையும் கேட்கவில்லை, உரையாடல் இல்லை. படித்துமுடித்தவுடன், சான்றிதழை வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுரைகளின் தரமும் நன்றாக இல்லை…..இந்நிலை மாறவேண்டும். ஆராய்ச்சித் திறன் வளரவேண்டும்………..சரித்திரம் படிப்பவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்பதில்லை. இஞ்சினியரிங் படித்தவர்களுக்கும் சரியான, முறையான வேலைக் கிடைப்ப்தில்லை. குறைந்த சம்பளத்திற்கு, சம்பந்தம் இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். எனவே, தமது திறமையை உயர்த்திக் கொண்டால் தான் முன்னேறமுடியும்….,.” என்றெல்லாம் நிலைமையை எடுத்துக் காட்டினார். இதனை நிர்வாகிகள் மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாட்டு பிரச்சினைகள்: 40வது மாநாட்டிலேயே (சிதம்பரம்) உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: என்றெல்லாம் குறிப்பிட்டப் பட்டது[1]. 41வது மாநாட்டிலோ, அதைவிட படுமோசமாக உணவு இருந்தது. நிர்வாகிகள் ஒன்றையும் கற்றுக் கொண்டதாக, வருத்தப் பட்டதாக, மாறியதாகத் தெரியவில்லை. “History repeats” என்பது போல அதை விட மோசமாக நடந்துள்ளது. மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். என்று கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டனர். அதாவது, சுமார் ரூ 32 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் 800, இரண்டாம் நாள் 1200 மற்றும் மூன்றாம் நாள் 1600 என்று பதிவுசெய்யப் பட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. அப்படியென்றால், உடனடியாக அறிந்து சரிசெய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இதிலிருந்தே, அவர்கள் வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.  ஒரு முறை தெரியவில்லை, எதிர்பார்க்கவில்லை, அதனால், அப்படி நடந்து விட்டது என்றால் சரி ஆனால், திரும்ப-திரும்ப மூன்று வேளையும் அப்படியே நடக்கின்றது-நடந்தது என்றால் என்னத்தைச்சொல்வது. முடியவில்லை என்றால் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. உணவு, மிக சாதாரணமாக இருந்தது, தினம் தயிர்சாதம் என்று மோர்சாதத்தை விட மோசமாக, வெறும் சாதம் கொடுக்கப் பட்டது.

உணவு இல்லை, கொடுத்ததும் தரமாக இல்லை: ஒரே ஒரு உணவு வகைதான் மூன்று வேளைகளுக்கும் கொடுக்கப் பட்டது. தயிரே காணப் படாத தயிர்சாதம், உப்புமா, இட்லி, ஊத்தப்பம், சாம்பார்-சாதம் என்று அவையே பரிமாறப் பட்டது. முதல் நாளிலிருந்தே, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இட்லி புளிப்பாக, ஒல்லியாக தட்டையாக இருந்தது, சட்னி இல்லை, சாம்பார் குறைவாகவே ஊற்றப் பட்டது. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர்.  உணவுப் பெறுவதற்குக் கூட நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களின் தலைகளுக்கு மேலாக தட்டுகளைக் நீட்டிக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காலியான பாத்திரங்கள் முன்பாக நின்று கொண்டு மற்றவர்கள் தவித்தனர். அருகில் எந்த ஒட்டலும் இல்லை, இதனால், பலர் தத்தம் தகுமிடங்களுக்குச் சென்று, அருகில் கிடைப்பதை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது. அவர்களால் முடியவில்லை என்றால், இவ்வாறு ஆயிரக் கணக்கில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம், மர்மம், அதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. கோவில்களில் கூட கொடுக்கும் பிரசாதம் நன்றாக இருக்கும்.

பொறுப்புள்ளவர்கள் நிலைமையை மாற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற சரித்திர ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதலியோர் தனியாக ஒரு சங்கத்தை வைத்து நடத்திக் கொள்ளலாம். ஆனால், சரித்திரம் பயிலும் மாணவ-மாணவியரை இணைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கலாம், பதிப்பிக்கலாம் என்ற ஒரே தூண்டுதல், கவர்ச்சி மற்றும் தேவையை வைத்துக் கொண்டு, அவர்களை வரவழைத்து, உறுப்பினர்கள் ஆக்கி, சான்றிதழ் கொடுக்கிறேன், ஆய்வுக் கோவை புத்தகத்தில் வெளியிடுகிறோம் என்ற ஆசையைக் காட்டி கூட்டத்தைச் சேர்க்கின்றனர். ஆங்கிலம் தெரியாமல், பார்த்துப் படிக்கக் கூட முடியாமல்……………….தவிக்கும் மாணவ-மாணவியர் கட்டுரை வாசிப்பது விசித்திரமாக, திகைப்பாக, வருத்தமாக இருக்கிறது. சுப்பராயலு இதனை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டி விட்டார். இவ்வாறு படிப்பு, ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திறன், சரித்திர வரைவியல் முறை, என்று செல்லாமல், சந்தர்ப்பவாதம் மற்றும் இதர காரணங்களை வைத்துக் கொன்டு அடத்தப் படும், இத்தகைய கூட்டங்களுக்கு நாளடைவில் வரவேர்பு குறைந்து விடும். சரித்திரம், சரித்திர பாடம் மீதுள்ள மரியாதையும், மதிப்பும், ஆர்வமும், ஏன் முக்கியத்துவமும் போய் விடும். எனவே, பொறுப்புள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

29-08-2022


[1] வேதபிரகாஷ், தென்னிந்தியவரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!, பிப்ரவரி 2, 2020.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College – G.T.Narayanaswamy Naidu): ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்[1].  இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது[2]. அதாவது 58 வருடம் பழமையான கல்லூரி. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைவுபெற்றது. இது ஒரு தெலுங்கு மொழி சிறுபான்மையினர் கல்லூரியாகும். 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. இக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது. திண்டுக்கல்லின் சவுந்தராஜா மில்ஸ் பி லிமிடெட் அறக்கட்டளையால் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு கடந்த இரண்டு நாள்களாக (27-08-2022, 28-08-2022) நடைபெற்று வந்தது. 27-08-2022 அன்று திண்டுக்கல் கலெக்டர், எஸ். விசாகன் I.A.S துவக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் “ஏதோ அல்லது எதிர்பாராத காரணங்களுக்காக” வரவில்லை. இதனால், முன்னாள், அழகப்பாப் பல்கலைக் கழக துணைவேந்தர், என்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சரித்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விலாக்கிப் பேசினார். பிறகு, காங்கிரஸின் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டு, மரியாதை செய்யப் பட்டது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், சரித்திரவரைவியல் மற்றும் கடல்சார் படிப்பியல் முதலியப் பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. பெரும்பாலான கட்டுரைகள், உப்பு-சப்பில்லாமல், அரைத்த மாவையே அரைத்த விசயங்களாக இருந்தது. இணைதளத்தில் 40 வருட ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு கிடைக்கப் பெறுகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தாலே, எவ்வாறு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய வரலாற்று மாநாடுநிறைவு நாள் விழா: அதன் நிறைவு விழா 29-08-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா். மைப்பாளர்கள் 1600 என்று குறிப்பிட்டனர். மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தெலுங்கு பல்கலை கழக முன்னாள் முதன்மையா் சென்னா ரெட்டி பேசியதாவது[3]: “இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்றெல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.…………………..இளம் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் தொன்மையையும் கண்டறிந்து புதுமையுடன் மெருகேற்ற வேண்டும். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னிந்திய வரலாற்றுப் பேரவை சார்பில் 40 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக மாநாடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன. வரலாற்று மாணவா்கள்,தொல்லியல், கல்வெட்டுத்துறை போன்ற அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு தங்களை தயார் செய்ய வேண்டும்,” என்றார்[4]. இதில், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாச்சார வரலாறு மற்றும் கடல்சார் வரலாறு தொடா்பான 1210 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு தேர்தலும் பிரச்சினைகளும்: மாநாட்டின் நிறைவாக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை நிர்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. பிரச்சாரத் துண்டுகள், நோட்டீஸுகள் விநியோகிக்கப் பட்டன. இருவர் டிஜிட்டல் பேனரைக் கூட கட்டி வைத்திருந்தார். ஓட்டுப் போட பிரச்சாரம், முதலியவை அதிகமாகவே நடைப் பெற்றன. ஊடகக்காரர்களுக்கு தெரிவிக்கப் பட்டதாவது – அதில், கா்நாடகப் பல்கலை. பேராசிரியா் சந்திரசேகா் தலைவராகவும், சாத்தூா் எஸ்ஆா்என்எம் கல்லூரி முதல்வா் கணேஷ்ரோம் பொதுச் செயலராகவும், ஜிடிஎன் கல்லூரி முதல்வா் பொருளாளராகவும், கோழிக்கோடு பல்கலை. பேராசிரியா் சிவதாசன் பதிப்பாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 2 துணைத் தலைவா்கள், ஒரு இணைச் செயலா் மற்றும் 15 நிர்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா், என்று “தினமணி” முடித்துள்ளது. ஆனால், அந்த தேர்வு / தேர்தல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, தேர்தல் முறையாக நடத்தப் படவில்லை, மற்றும் தேர்தல் நடத்திய பொறுப்பாளர்களே, குறிப்பிட்ட போட்டியிட்ட நபர்களுக்கு சார்பாக வாக்களிக்க பிரச்சாரம் செய்தனர் மற்றும் கள்ளத்தனமாக ஓட்டுப் போட்டனர் என்றெல்லாம் தெரிவித்தனர். மெத்தப் படித்த பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டனர் என்பது வியப்பாக இருக்கிறது.

28-08-2022 ஞாயிற்றுக் கிழமை நிறைவு விழா: இன்றைய மக்களின் வாழ்க்கையும் புதிய கண்டுபிடிப்புகளும் நாளைய சந்ததியினருக்கு வரலாறாக மாறுகிறது. பண்டைய தமிழர்களின் நாகரீகம், கலசாரம், வாழ்க்கை முறை, பண்பாடு உள்ளிட்டவற்றை பிற்காலத்தினர் அறிந்துகொள்ள வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் வரலாறு. வரலாறு இல்லையென்றால் தமிழகத்தை ஆண்ட வீர மன்னர்கள், உலகம் போற்றும் சிற்பங்கள் பற்றி அறியாமலேயே போயிருப்போம். இன்றளவிலும் தொல்லியல் துறையினர் தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தி முற்கால தமிழர்கள் வழிபட்ட கடவுள் சிலைகள், பயன்படுத்திய பொருட்களை கண்டறிகின்றனர். கண்டறியும் பொருட்களை வைத்து காலத்தை அறிகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயில், சித்தன்ன வாசல் சிற்பம், மாமல்லபுரம் உள்ளிட்டவை வரலாற்றை எடுத்துரைக்கும் பீடமாக இன்றும் திகழ்கிறது. படிப்பிலும் வரலாற்றை படிக்க வரலாற்று துறை உள்ளது. அதிலும் மாணவர்கள் ஆர்வமாக படித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அத்தகைய வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் தென் இந்திய வரலாற்று பேரவை மாநாடு கல்லுாரி சேர்மன் ரத்தினம் தலைமையில் மூன்று நாள் நடந்து வருகிறது[5]., என்று தினமலர் முடித்து, கலந்து கொண்ட சிலரின் கருத்துகள் பின்வருமாறு[6] என்று  வெலியிட்டுள்ளது:

© வேதபிரகாஷ்

29-08-2022


[1]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF

[2] https://dindigul.nic.in/ta/public-utility/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமணி, தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு, By DIN  |   Published On : 28th August 2022 10:52 PM  |   Last Updated : 28th August 2022 10:52 PM  .

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2022/aug/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1210-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3906392.html

[5] தினமலர், வரலாற்றை சிறப்பித்த பேரவை மாநாடு, Added : ஆக 27, 2022  05:19 ; Added : ஆக 27, 2022  05:19.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3109293

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

Karunanidhi changed Tamil News year Thuglak

1969லிருந்து 2008 வரை தைக்காகக் குதிக்கவில்லை:  1969லிருந்து 2008 வரை திராவிட கட்சிகளுக்கு, திராவிடத்துவ வாதிகளுக்கு, இந்த “புத்தாண்டு” உணர்வு இல்லாமல் போனது வியப்பாக இருந்தது. ஆட்சியில் திராவிட கட்சியினர் தான் இருந்தனர். அண்ணாதுரைக்குப் பின்னர், கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். நடுவில் எம்.ஜி.ஆர் ஆண்டாலும், இவரது தாக்கம் அலாதியானது. ஆகவே, மறுபடி-மறுபடி ஆட்சிக்கு வந்த் போது, சுலபமாக, தைமாதத்தில் தான், புத்தாண்டு வருகின்றனது என்று அடித்து சொல்லிருக்கலாம். சுலபமாக மாற்றி இருக்கலாம். ஆனால், சாதாரணன், சௌமியன் என்று கவிதை பாடிக் கொண்டிருந்த போது மறந்து விட்டனரோ, அல்லது கம்பரசத்தில் மூழ்கி மயங்கி விட்டனரோ என்று தெரியவில்லை. மார்பங்களில் மச்சங்கள் பார்த்து, நாடாவை அவிழ்க்கவா என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்ததால், இதெல்லாம் பெரிதாகப் படவில்லை போலும்.

Karunanidhi enjoys 60 cycle yeas in 1970- Murasoli

14.04.1970 அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்த கவியரங்கம்[1]: இச்செய்தி முரசொலியில் வந்துள்ளது, “14.04.1970 அன்று நடந்த சாதரண ஆண்டு சித்திரைத் திருநாள் கவியரங்கம். அங்கு கவி பாடுகிறார். அதில் என்ன நுணுக்கமெல்லாம் வந்து விழுகிறது பாருங்கள். தமிழ் வருடம் என்று அவர்கள் சொல்லுகிற 60 ஆண்டுச் சுழற்சியில். சௌமிய என்ற பெயருடைய ஒரு ஆண்டு அதற்கு அடுத்த ஆண்டின் பெயர் சாதாரண ஆண்டு அண்ணா பிறந்த 1909ம் ஆண்டு சௌமிய ஆண்டு. அதனால் சௌமியன் என்ற புனை பெயரிலும் அண்ணா எழுதி வந்தார். அதையெல் லாம் நான்கு வரிகளுக்குள் அடக்கி விடுகிறார் கலைஞர். கவி வரிகளைக் கவனியுங்கள், “சித்திரைத் திங்களிலே சிரிக்கின்ற செழுமை கண்டோம் பெருமை கொண்டோம் சௌமியதான் சென்ற ஆண்டு நம் சௌமியனைத் தமிழுக்குத் தந்த ஆண்டு சௌமியாவை அண்ணனுமே புனைப் பெயராய்ப் பூண்டு சுவை சொட்டக் கதை குவித்துப் போனார்மாண்டு சௌமிய மறைந்து சாதாரண வந்தது போல அந்த சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன், என்கிறார்”. அந்த நாரதர்-நாரதி பெற்ற 60 அசிங்க சுழற்சி வருடங்களை வெறுத்திருந்தால், இக்கவிதை வந்திருக்குமோ?

Why Karunanidhi changed Tamil News year - news cutting-1

கருணாநிதி 28-01-2008 அன்று கொண்டு வந்த சட்டத்தை, ஜெயலலிதா, 23-08-2011 அன்று மாற்றினார் பழையபடி வைத்தார்: நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது[2]. அதற்கான மசோதாவினை இன்று செவ்வாய்க் கிழமை சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது[3]. விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்திருந்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

Why Karunanidhi changed Tamil News year - news cutting-2

முதல்வர் ஜெயலலிதா விளக்கம் [ஏப்ரல் 2012]: சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 13, 2012 அன்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்[4]. சென்னை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 13, 2012 அன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன”.

Tiruppananthal supported Jeyalalita April, 2012

இலக்கிய ஆதாரங்கள்: ஜெயலலிதா தொடர்ந்தார், “சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வாஎன்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், “பன்னாயிரத்தில்பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “திண்ணிலை, மருப்பின் ஆடுதலைஎன்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது”.

Jayalalita responded to Karunanidhi April 2012. DM

கருணாநிதியே ஏற்பு: ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, “சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, “தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்

Karunanidhi responded to Jayalalita 2012.DM

விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.

Karunanidhi responded to Jayalalita 2012
விளம்பர உத்தி:  ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது”, என்றார்[5]. சென்ற வருடமே இதற்கான மசோதா கொண்டு வந்து, நிறைவேற்றி சட்டமாக்கினர்.

© வேதபிரகாஷ்

14-04-2020

Narada myth used for time reckoning

Narada myth used for time reckoning

[1] முரசொலி 75 சிறப்பிதழ், https://www.murasoli.in/details.php?news_id=1385

[2] பிபிசி.தமிழ், தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்‘- ஜெ.23 ஆகஸ்ட் 2011

https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[3] https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[4] தினமலர், தமிழ் புத்தாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா பதிலடி: கருணாநிதிக்கு கேள்வி, Updated : ஏப் 15, 2012 00:17 | Added : ஏப் 13, 2012 23:20

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=447682&Print=1

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

பிப்ரவரி 6, 2020

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!

SIHC leaflet by AU

தென்னிந்திய வரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவு மற்றும் வரலாற்று துறை சார்பில் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் (South Indian History Congress) 40-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது[1]. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாள் மாநாடாக நடைபெற்றது. ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து அதிகமாக சங்க-உறுப்பினர்கள் வந்திருந்தனர்[2]. 30-01-2020 அன்று மதியமே வர ஆரம்பித்து வீட்டனர். அவர்கள், வண்டிகள் மூலம், அண்ணாமலைப் பல்கலை வளாகத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டனர். உறுப்பினர்கள் ரூ.2000/- செலுத்தியப் பிறகு, அவர்களுக்கு, விருந்தினர் இல்லம், பெண்கள் ஹாஸ்டல் என்று பல இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். மாநாட்டிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார்[3]. கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் பந்தோபாத்யாயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அவர் அச்சடித்த தனது கட்டுரையைப் பார்த்துப் படித்தார், எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ராஜன், மற்றும் உள்ளூர் காரியதரியான சங்கரி பங்கேற்கின்றனர்.

SIHC Dinakaran cutting

சிந்துசமவெளி நாகரிகத்தவர் தான் இந்தியர், ஆரிய படையெடுப்பு இல்லை: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றி பேசுகையில், இந்த பேரவை 1980ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு தேசிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது. இந்த பேரவையின் மூலம் வரலாற்றின் முக்கியதுவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை எளிய முறையில் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரலாறும், அறிவியலும் இணைந்து பல்வேறு ஆராய்சிகளை செய்து வெற்றியாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மரபணு ஆராய்ச்சியை எடுத்துக் காட்டினார். அதன் மூலம், ஆரியபடையெடுப்பு என்பது இல்லை என்றும், இந்தியா முழுவதும் பரவி இருக்கும் மக்கள் ஒரே மரபு மூலத்தைக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டினார்[4]. ராகிகர்ஹி அகழ்வாய்வு இதனை மெய்ப்பிக்கிறது[5]. இந்த மாநாட்டில் இளம் வரலாற்று ஆராட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் வரலாற்றை உள்வாங்கி படிக்கவேண்டும், என்றெல்லாம் கூறி முடித்தார்.

Dinamalar cutting SIHC
1300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[6]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தென்னிந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடந்தது. தென்னிந்திய பண்பாட்டு மற்றும் வரலாற்று சின்னங்களை எதிர்கால நலன் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நிறைவு பெறுகிறது மாநாட்டின் நிறைவு நாளில் பெங்களுரில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் இயக்குனர் அருண் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்[7]. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜன். அண்ணாமலை பல்கலைகழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர் சங்கரி ஆகியோர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இருப்பினும், சில பிரச்சினைகள் இருந்தது தெரிய வந்தது.

SIHC Nakkeran photo
பல்துறை ஆராய்ச்சி சரித்திரத்திற்குத் தேவை: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் நம் நாட்டின் வரலாறுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும், புராதான சின்னங்களை பாதுகாக்கும் வகையில் வரலாற்று ஆய்வாளர்கள் நடுநிலையுடன் வரலாறுகளை எழுதவேண்டும் என கேட்டுகொண்டர். அறிவியலும், வரலாறும் இணைந்து பல்வேறு வெற்றிகளை பெற்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளது. வரலாற்று ஆய்வுகளுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதிகளை ஒதுக்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். தற்போது வரலாற்று பாடத்தை பொருளியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டமேற்படிப்பு என அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பொழுது சரித்திர பாடம் மற்றும் படிப்புத் துறை பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை போன்ற நிதர்சன காரணங்களினால், தவிர்க்கப் படுகின்றது.

SIHC, Sivadasan photo-4
வரலாற்று படத்துறையின் முக்கியத்துவம், போக்கு மாறி வருவது: மாணவர்கள் வரலாறுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி கற்பிக்கும் வகையில் இந்த மாநாடு மூலம் வலியுறுத்தப்படுகிறது[8]. மேலும் கலாச்சாரம் குறித்த வரலாற்று ஆய்வுகளை நவீன கால வரலாறு இளம் வரலாற்றாய்வாளர்கள் எழுதவேண்டும். வரலாற்றை மாணவர்கள் படித்தால் மட்டுமே மனதை பக்குவப்படுத்த முடியும் எனவே வரலாற்றை படித்து நம் வாழ்வியல் முறையை அறிந்து நாட்டின் வளர்ச்சி மாணவர்கள் பங்காற்றவேண்டும் என்று கூறினார்[9]. இவருடன் காரைகுடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் உடன் இருந்தார்[10]. இவ்வாறெல்லாம் சொன்னால் கூட, இவர்களிடையே ஒற்றுமை இல்லை. இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுஒபதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்ற்ல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.

SIHC, Sivadasan photo-3

மதசார்பற்ற மற்றும் விஞ்ஞான ரீதியிலான சரித்திரம்: வரலாறு சைன்டிபிக் மற்றும் [scientific] செக்யூலார் [secular] அதாவது, விஞ்ஞான பூர்வமாக மற்றும் மதசார்பற்ற நிலையில் எழுதப் பட வேண்டும் என்று 40 ஆண்டுகளாக சொல்லி வந்தாலும், சரித்திர ஆசிரியர்களே பல்வித சித்தாந்தங்கள், அரசியல் மற்றும் மதம்-ஜாதி முதலியவற்றால் பிரிந்து கிடக்கின்றனர்.  1992ல் ராமஜன்ம பூமி பிரச்சினையில் சரித்திர ஆசிரியர்கள் வெளிப்படையாகவே மோதிக் கொண்டார்கள். அப்பிரச்சினை நீதிமன்றங்களுக்கு சென்ற போதும், பாரபட்சமாக சாட்சி சொன்னதால், நீதிமன்றம் கண்டித்தது. இங்கும் மஸ்தான் மற்றும் பஸ்லித்தில் என்ற இருவர் அப்பட்டமாக முஸ்லிம் ஆதரவாக, மற்ற விசயங்களை மறைத்து, இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்கு அரசைக் கண்டித்து கட்டுரைகள் படித்தது, மதரீதியிலான போக்காகத் தெரிந்தது. மெத்தப் படித்த அவர்களே அத்தகைய உணர்ச்சி பூர்வமான கட்டுரைகள் வாசித்தது, முறையாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாநாட்டின் செயல்பாட்டில் அது தீர்மானங்கள் முன்வைப்பது, விவாதிப்பது மற்றும் நிறைவேற்றுவது மூலம் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது. பிறகு, இவர்களால் எப்படி சார்பற்ற சரித்திரம் எழுத முடியும்?

SIHC, Sivadasan photo

உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200/1300[11]க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதாவது, ரூ 26 லட்சம் வசூலாகி உள்ளது. இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. ஆனால், இருப்பிடம் மற்றும் உணவு சரியாக இல்லை என்று வெளிமாநில உறுப்பினர்கள் சொல்லிடிருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் சுடுநீர் வரவில்லை. அனைத்துலக மாணவர் விருந்தினர் தங்குமிடத்தில் சுத்தமாக வரவில்லை. குறிப்பாக உணவு, மிக சாதாரணமாக இருந்தது, இட்லி கெட்டியாக இருந்தது, தேங்காய் சட்னி இல்லை. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர். குறிப்பாக வெளிமாநிலத்தவர் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். மேலும், ஆய்வுக் கட்டுரை வாசிக்கும் அறைகள் அங்கும் இங்குமாக தூரமான இடங்களில் அமைத்திருந்தனர். வாகன வசதியும் செய்து தரப்படவில்லை. சிறப்பு, நினைவு சொற்பொழிவுகள், ஹை-டெக் ஹாலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, ஆனால், அது தங்குமிடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருந்தது. இதனால், 20-30-40 பேர்களே கலந்து கொண்டனர்.

SIHC, Sivadasan photo-2

தரமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு: இங்கு கூட முதல் நாள் முழுவதும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு, சால்வை போத்திக் கொள்ளவே செலவழித்துள்ளனர். ஆய்வுகட்டுரைகளைப் படிப்பதில் ஆர்வம் இல்லை. ஏனோ-தானோ என்று தான் செய்துள்ளனர். பண்டோபாத்யாயா பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பதால், அவர்கள் கலந்து கொள்வதாகத் தெரிகிறதுதாய்வுக் கட்டுரைகள் “கட்-அன்டு-பேஸ்ட்” விட மோசமாக இருக்கின்றன. அடிப்படை கேள்விகள் கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாமல், ஆய்வு கட்டுரை வாசிப்பவர்கள் முழிக்கின்றனர். ஆனால், சான்றிதழை வாங்கிக் கொண்டு செல்லத்தான் துடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு கேரளத்தவர் 10 கட்டுரைகளை வாசிக்கின்றனர். அவை அரைத்த மாவையே அரைக்கும் போக்கில் உள்லன. தான் படித்தால் போதும் என்ற நிலையில், அடுத்தவர் வாசிப்பதைக் கேட்காமலேயே சென்று விடுகின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிப்பதிலும் முறைகேடுகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பிறகு, எப்படி ஆராய்ச்சித்தன்மையின் மேன்மை ஓங்கும்?

© வேதபிரகாஷ்

06-02-2020

SIHC, Sivadasan photo-5

[1] நக்கீரன், தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் நாற்பதாவது ஆண்டு மாநாடு, காளிதாஸ், Published on 31/01/2020 (16:53) | Edited on 31/01/2020 (17:05)

[2] முன்னர் மஹாராஷ்ட்ரா மற்றும் ஒரிஸா மாநிலங்களிலிருந்தும் வந்தனர், இபோழுது 1990களுக்குப் பிறகு வருவதில்லை.

[3] http://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/south-indian-historical-council-40th-annual-conference

[4] Times of India, DNA analysis of Rakhigarhi remains challenges Aryan invasion theory, TNN | Updated: Sep 7, 2019, 16:36 IST.

[5]  http://timesofindia.indiatimes.com/india/dna-analysis-of-rakhigarhi-remains-challenges-aryan-invasion-theory/articleshow/71018198.cms

[6] SIHC காரியதரிசி பிறகு சொன்னதாகத் தெரிகிறது.

[7]  அருணி என்று இருக்க வேண்டும், நமது தமிழ் நிருபர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.

[8] தினமணி, பல்கலை.யில் வரலாற்றுத் துறை மாநாடு நாளை தொடக்கம், By DIN | Published on : 29th January 2020 11:30 PM |

[9] http://dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/jan/29/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3343922.html

[10] தினமலர், தென்னிந்திய வரலாற்று பேரவையின் மாநாடு, Added : ஜன 30, 2020 23:21

http://dinamalar.com/news_detail.asp?id=2469584

[11] SIHC காரியதரிசி சிவதாசன் பிறகு சொன்னதாகத் தெரிகிறது.

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

Ellora cave saptamatrika sculptures

சப்தபாதருடன் இணைப்பது: ஜெயமோகன் கண்டது, “இரவு அவளுக்கான நேரம் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார், அண்ணாமலையார் சதகத்தை[1] ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார். இந்தியாவெங்கும் இருந்த வழிபாட்டுமுறை மெல்ல சமணத்துக்குள் நுழைந்து சமண தத்துவ மையத்தின் அங்கீகாரம் இல்லாத ஒரு சிறுவழிபாடாக நீடித்தது. சமணம் அழிந்தபின் சாக்த மதத்துக்குள் நுழைந்தது. பின்னர் சக்திவழிபாட்டில் கரைந்து தன் தனித்தன்மையை இழந்தது. இருந்தாலும், கேரளத்தில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக ஏழன்னையர் உள்ளனர்”. ஜெயமோகன் குறிப்பிட்ட அபிதான சிந்தாமணி, சிங்காரவேலர் முதலியாரால், 1910ல் தொகுத்து வெளியிடப்பட்டது[2]. அண்ணாமலையார் சதகம், திருச்சிற்றம்பல நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. அதையும் முதலியார் குறிப்பிட்டார் என்கிறார் ஜெயமோகன். இதிலிருந்து, இவரும் மூலங்களைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், அவரது கருத்தும் அவ்வாறே சுருங்கி விடுகிறது.

Chronology important for studying Mudevi in Tamilnadu

செத்த பாடையும், புதிய கதைகளும்: சமஸ்கிருதத்தை, “செத்த பாடை” என்பர், ஆனால், அதை வைத்து தான், இவர்கள் கதை பேசுவர். அதாவது சமஸ்கிருத நூல் ஆதாரங்களை வைத்து தான், இவர்கள் தமிழின் தொன்மை முதலியவற்றைப் பற்றி பேசுவர். சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். 16-18ம் நூற்றாண்டுகளில் உண்டான கதைகளை வைத்து எல்லாவ்வற்றையும் இணைக்கப்படுகிறது. தமிழில் மூத்த தேவி என்ற பெயரானது வழங்கப்பெற்று, அது மருவி மூதேவி என்று அழைக்கப்படுகிறது. தவ்வை காக்கை கொடியினையும், கழுதை வாகனத்தையும் உடையவர். இதற்கான ஆதாரங்கள் பதம புராணம், லிங்க புராணம் முதலியவற்றில் காணப்படுகின்றன. தமிழில் கம்ப ராமாயணத்தில் பாற்கடை கடையும் போது தோன்றுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. கைகளில் துடைப்பம் கொண்டுள்ளார். சில சிலைகளில் தவ்வை தனித்தும், மற்ற சிலைகளில் தன்னுடைய மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் உள்ளார். மாந்திக்குப் பதிலாக தவ்வையின் மாமியார் சாயாதேவியும் சில சிலைகளில் இருக்கிறார். வடக்கில் மூத்த சகோதரி / ஜேஸ்டா தேவி வழிபாடு  300 BCE லேயே இருந்துள்ளது, ஆனால், தென்னகத்தில் 7-8 CE நூற்றாண்டுகளில் பிரபலமானாலும், 10ம் நூற்றாண்டிலேயே மறைந்து விடுகிறது[3]. ஆகவே தமிழகத்த்தில் எப்பொழுது உண்டானது என்பதனை காலரீதியில் எடுத்துக் காட்ட வேண்டும். இந்த 1300 ஆண்டுகள் இடைவெளி ஏன் என்றதும் நோக்கத் தக்கது.

Child grabbing Hriti, GAndhara

தவ்வை வழிபாடுதமிழ் எழுத்தாளர்கள் விளக்கும் விதம்: தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆனால் எவ்வளவு காலம் என்று சொல்ல மாட்டார்கள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார். பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார்[4]. ஆனால், பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.

Tavvai, Kumbakonam, Tanjore

 

ஆரியதிராவிட இனரீதியிலான ஆராய்ச்சிகள், சித்தாந்தம் முடிவைத் தருமா?: பல்லவர் காலம் 275-897 CE ஆகும், அப்படியென்றால், இக்காலகட்ட்த்தில் இருந்த தவ்வையும்,தமிழர்களின் தவ்வையும் ஒன்றா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் / திராவிட எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் சித்தாந்திகள் பல்லவர், சோழர் முதலியோரை, ஆரியர், வந்தேறிகள், பார்ப்பனர் கைக்கூலி……என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர். பிறகு,  அவர்களது வழிபாட்டை ஏன் குறிப்பிடவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. பல்லவர்களின் குலதெய்வம், தமிர்களின் / திராவிடர்களின் மூத்த தெய்வமாக எப்படி, எப்பொழுது, ஏன் மாறியது என்று சொல்ல முடியுமா? சரித்திர ஆதாரங்கள் பிற்காலத்தைக் காட்டும் போது, முற்காலத்தில் தொன்மையினை எடுத்துச் செல்வது எவ்வாறு? மேலும், மூலங்களுக்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து, விளக்கங்களைப் பெற்று, எல்லாமே தமிழ் என்றால் என்ன ஆராய்ச்சி? ஆரியர்-திராவிடர் என்று கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வதால், உண்மையான தீர்வகளும் கிடைக்காது, முடிவுகளும் கிடைக்காது.

Tavvai, Karunilam, Chingleput
மூதேவிக்கு உள்ள கோயில்கள்: தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாமில், கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. மூதேவி தனிழர்களது தெய்வம் என்றாலும், தமிழகத்தில், தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை[5]. தவ்வை தனியாகவோ, மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. அதனால் எண்ணிக்கையும் சொல்லமுடியாது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார். ஆமாம், சில இடங்களில்! நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது[6]. திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.

Tavvai, Kattupputtur

மூதேவி ஆராய்ச்சியில் கீழ்காணும் காலநிலையை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்:

  1. சங்ககாலம்500 / 300 BCE முதல் 100 / 300 CE வரை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருங்கற்காலம் c.1000 BCEலிருந்து தொடர்கிறது.
  2. பல்லவர்காலத்திற்கு முன்பு [275-897 CE] முழு அளவில் சிற்பங்கள், கோவில்கள் முதலியவை தமிழக்த்தில் இல்லை.
  3. ஆக முதல் நூற்றாண்டுகளில், களப்பிரர்களால், இருந்த கொவில்கள் எதையேனும் அவர்களால் அழிக்கப் பட்டனவா என்று ஆராயவேண்டும். அவர்கள் ஜைனர்கள் எனும்போது, தமிழகத்தின் சரித்திரம் தனியாகப் பார்க்க னுடியாது,
  4. சோழர்காலத்தில் முழுமையான கோவில்கள் கணப்படுகின்றன. ஆகம சாத்திரங்களின் படி, பிரகாரங்கள், மூர்த்திகள் / விக்கிரங்கள் அமைக்கப் படுகின்றன.
  5. விஜயாலய, நாயக்கர் காலங்களில், கோவில் கட்டிடக்கலை சிறப்புற்று, எல்லா கோவில்களும் புதுப்பிக்கப் பட்டன, புனர் நிர்மாணம் செய்யப் பட்டன.

மூதேவி ஒரு அனுக்கிரக தேவதை, இப்படி சொன்னாலும், விடுவார்களா, தமிழ் ஆராய்ச்சியாளர்கள்? இதோ, இதையும் படியுங்கள்.

© வேதபிரகாஷ்

08-09-2018

Tavvai, Kattupputtur.with varahi

[1] சதகம் – நூறு பாடல்கள் கொண்ட இலக்கிய தோற்றம் 18-20 நூற்றாண்டுகளில் உண்டானது. காசுக்காக, தமிழ் பண்டிதர்கள், பலவித நபர்கள் பெயரில் சதகங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி உருவக்கினார்கள். ரப்பிச்சதகம், அப்துல்றகுமானிற்றகீம்சதகம், இயேசுநாதர்சதகம், என்றெல்லாம் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] ஆக 19-20ம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்டதை வைத்து, ஜெயமோகன் போற்றோர் எழுதியதை, சரித்திர ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக் கொள்ள முடியாது.

[3] Jyestha appears in the Hindu tradition, as early as 300 BCE. Her worship was at its peak in South India in the 7th-8th century CE, but by the 10th century, her popularity waned pushing her into oblivion.https://en.wikipedia.org/wiki/Jyestha_(goddess)

[4]ஆனால், வடக்கில் அதற்கு முன்பே இருக்கிறது. ஆகவே, ஆரியர் அல்லது திராவிடர் யார் மூலம், இவ்வழிபாடு தமிழகத்தில் புகுந்தது என்பதனை தமிழ் எழுத்தாளர்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.இல்லையெனில், அத்தகைய இனவாகக் கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு, காலம் தள்லிக் கொண்டிருந்தால், வரலாற்று அசிரியர்கள் மதிக்க மாட்டார்கள், இப்படியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.

[5] அப்படியென்றால், ஏனில்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும், “தமிழரது மூத்தத் தெய்வம்” என்றால், அகழ்வாய்வு, சரித்திர ஆதாரங்களும் இருக்க வேண்டும். வார்த்தைகளினால், எழுத்துகளினால் இருந்தால் போதாது. யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

[6] கருதப்படுகிறது என்றாலும், அதற்கு முந்தைய சிற்ப-வரலாற்று ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைசரித்திர எழுதப்படும் முறை (1)

வேதபிரகாஷ்

No history without sources, evidence, proof

No history without sources, evidence, proof

இதிகாசம்” – “இது இப்படி நடந்தது: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான்,  “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார்.

ஆகவே, இப்படி –

  • நடந்துள்ளது,
  • நடந்திருக்கக் கூடும்,
  • நடந்திருக்க வேண்டும்

என்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்

  1. பார்ப்பவர் (the persond who sees the historical event),
  2. சொல்பவர் (the personal who narrates the historical event),
  3. கேட்பவர் (the person who listerns to the historical event),
  4. எழுதுபவர் (the person who actually writes the historical event)

முதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது.

How Mahabharat written- Vidur told Dridhrastra

How Mahabharat written- Vidur told Dridhrastra

மூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம் எழுதப்படாது [मूल लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.

How Mahabharat written

How Mahabharat written

சரித்திரத்தின் தந்தைகளும், தாத்தாக்களும்: ஐரோப்பியர்களுக்கு தமக்குச் சொந்தமாக இருப்பது மிகவும் குறைவே, ஏனெனில், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நாடுகளாக உருவான நிலையில் ஒவ்வொரு சமய, தத்துவ, சமூக, பொருளாதார காரணிகளுக்கு  வெவ்வேறான பழமையான நாகரிகங்களிலிருந்து பெற வேண்டியதாகியது. பைபிளை சார்ந்து பொதுவாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எழுதி வந்ததால், –

  • மதத்திற்கு, மத்தியத்தரைகடல் பகுதி,
  • தத்துவத்திற்கு கிரேக்கம்,
  • வானவியலுக்கு பாபிலோனியா,
  • கணிதத்திற்கு அசிரியா,
  • காலக்கணக்கீடுத் தொன்மைக்கு எகிப்து

என்று பலவிடங்களிலிருந்து பெற்று, பைபிள் காலக்கணக்கீடு (Biblical chronology) என்பதனை உருவாக்கினர். அதை வைத்துக் கொண்டு சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலும் கிரேக்க-ரோமானிய மூலங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால், வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியன அவற்றைச் சான்றதாகவே இருக்கும். கிரேக்க நூற்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், அதற்கு அதிகாரம், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளப் படும் தன்மை என்பவற்றை மனத்தில் கொண்டு “ஹெரோடோடஸ் சரித்திரத்தின் தந்தை” (Herodotus is the Father of History) என்று சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் ஹெரோடோடஸ் ஒன்றும் இப்பொழுதுள்ள  சரித்திரம் போன்று எழுதிவிடவில்லை.

Herodotus and his history

Herodotus and his history

ஹெரோடோடஸ் சரித்திரம் ஒன்றும் சரித்திரம் இல்லை: ஹெரோடோடஸின் புத்தகத்தைப் படித்தால், அவருடைய உலகத்தின் ஞானம் மற்றும் இந்தியாவின் அறிவு முதலியவற்றைக் காட்டும் மாதிரி வரைப்படம் முதலியவற்றை அறிந்து கொள்லலாம்.குறிப்பாக இந்தியா, இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும் போது,

  • அவர்களுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்கள்,
  • நான்கு கைகள் இருந்தன,
  • உடைகள் அப்படியே மரங்களில் காய்த்துத் தொங்கின,
  • எறும்புகள் நாய் உருவில் பெரியதாக இருந்தன,
  • அவை பூமிக்கடியில் சென்று தங்கப்பொடியை அள்ளிக் கொண்டு வந்தன

என்றெல்லாம் எழுதியுள்ளதாக, அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் சரித்துவத்துவம் (Historicity) என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ “சிந்துபாத்” மற்றும் “ஆயிரத்தொரு இரவுகள்” கதைகளில் வரும் விஷயங்களைப் போல் உள்ளது. பிறகு எப்படி, ஹெரோடோடஸ் “சரித்திரத்தின் தந்தை” என்றாகிறார் என்று தெரியவில்லை!

Indians according to Herodotus and his history on India

Indians according to Herodotus and his history on India

கிரேக்க சரித்திரம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது: இந்தியா எப்படி இருக்கும் என்று தெரியாது, இந்தியர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறியாது, இந்தியர்களின் தன்மயினையும் புரியாது ஹெரோடோடஸ் எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த நிகழ்ச்சியிலிருந்து தான் இந்திய சரித்திரமே ஆரம்பிக்கிறது என்ற முடிவுசெய்த, ஆதாரமில்லாத சருதுகோளின் மீது ஆதாரமாக இந்திய சரித்திரம் எழுதப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், சமகாலத்தைய இலக்கியச் சான்றுகளை (contemporary literary evidences) நோக்கும் போது, இந்திய புராணங்கள் “சரித்திரப் புத்தகங்களை”ப் போன்றுள்ளன. ஆகவே, எங்களிடத்தில் “தாத்தாக்கள்” இல்லையென்றாலும், “தந்தைகள்” இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்ள அவ்வாறு கூறிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இந்திய புராணங்கள் பற்றி கேவலமாக “அவை மாயை (myth), மாயாஜாலக் கதைகள் (fables), கட்டுக் கதைகள் (legends)” எழுதி வைத்தார்கள். ஆனால், வம்சாவளிகள் (geneologies), ராஜப்பரம்பரைகள் (royal dynasties), வரிசைக்கிரம ஆட்சியாளர்கள் (successive rulers), அவர்களது ஆட்சியின் காலம் (period of reign), முதலிய விவரங்களைப் புராணங்களிலிருந்து தான் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் புராணங்கள் இல்லாமலிருந்தால், வில்லியம் ஜோன்ஸ் (William Jones), ஜான் பைத்புல் பிளீட் (John Faithful Fleet), வின்சென்ட் ஸ்மித் (Vincent Smith) முதலியோரால் இந்திய சரித்திரமே எழுதியிருக்க முடியாது.

Herodotus and his history on India

Herodotus and his history on India

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] “தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.

[2] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.

[3] Conquerer and conquered, victor and defeated, ruler and ruled and such concepts were involved in writing their histories. And thus, they never recorded their defeats or the victories of their opponents.

[4] History is not what had been written or being written or would be written, but, it is actually what had happened in the past.

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

ஏப்ரல் 30, 2012

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

293வது பட்டத்தில் நித்யானந்தா வருகிறார் என்றால், 292 மடாதிபதிகள் இருந்துள்ளனர்கள் என்றாகிறது.

மடங்களில் மடாதிபதிகள் இருந்தத்தை பல்வேறு விதமாகக் குறித்து வைத்துள்ளனர். “குரு பரம்பரை” என்று நூல்கள் உள்ளன. மடங்களில் அவர்களின் சிலைகளே வடிக்கப் பட்டிருக்கும். இறந்தவுடன், மடத்தின் வளகத்தினுள்ளேயே புதைக்கப் படுவதால், சமாதிகளில் சில குறிப்புகள் இருக்கும்.

ஏனெனில், தொடர்ந்து 40-80 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர்களும் உண்டு, பட்டமேற்று சில நாட்களிலேயே காலமாகிவிடுபவர்களும் உண்டு. அதனால், பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் ஒரு மடாதிபதி / அரசன் ஆட்சிகாலத்தை சுமார் 10 அல்லது 20 வருடங்கள் என்று கொண்டு கணக்கிடுவர்.

ஆகவே, ஒவ்வொருவர் 10 / 20 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தனர் என்று கொண்டால், மொத்த மடாதிபதிகளின் காலம் 293 x 20 = 5860 அல்லது 293 x 10 = 2910 வருடங்கள் என்றாக இருக்க வேண்டும்.

அதாவது 5860 – 2910 YBP (Years Before Present) வருடங்களுக்கு முன்பு அம்மடம் ஸ்தாபித்ததாக ஆகிறது. சராசரியாக எடுத்துக் கொண்டால் கூட 4300 வருடங்கள் ஆகிறது. ஆகையால் தான் 2500 வருடம் தொன்மையானது என்று மடாதிபதி கூறுகிறார் போலிருக்கிறது.

மடத்தில் அப்படி இருந்த 292 மடாதிபதிகளின் கால அட்டவணை இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அத்தாட்சியாக இருக்கும்.