Posts Tagged ‘கலியுகம்’

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – திராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள் (3)

மார்ச் 21, 2016

 

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைதிராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள் (3)

வேதபிரகாஷ்

திராவிட சித்தாந்தம், சரித்திரவரைவியலை மாற்றியது

திராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள்: திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்த பிறகு, அதன் சித்தாந்திகள், சித்தாந்தத் தாக்கத்தில் உருவானவர்கள், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, சரித்திரத் துறைகளில் பதவிக்கு வந்தவர்கள் முதலியோர்களால் எழுதப் பட்ட புத்தகங்கள் சித்தாந்த சார்புடையதாக இருந்தன. ஆதாரங்களை விட, உணர்ச்சிகளுக்கு அதிக மதிப்பு அளிக்கப் பட்டது. மூலங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை விட “கல்தோன்றி மண் தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக் குடி தமிழ்குடி” என்ற கொள்கைதான் திராவிட வரலாற்று வரைவியலில் கடைப்பிடிக்கப்பட்டது. சித்தாந்த ரீதியில் மறைமலை அடிகள் போன்றவர்கள் கூட சைவத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்ற நிலையில், வேத-புராணங்களை விமர்சித்து எழுதினார். அதனால், இது திராவிட சித்தாந்திகளுக்கு ஏற்புடையதாக இருந்தது. கடவுள் இல்லை என்று மறுத்தவர்களும், இத்தகைய கடவுள் ஏற்கும் உரையாசிரியர்களும் சேர்ந்து கொண்டு குழப்பவாத புத்தகங்களை எழுதினர். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதை விட்டு, புதிதாக ஒன்றையும் கண்டுபிடித்து காட்டிவிடவில்லை[1].

Kumarikandam - myth making in Tamil

ஆரியதிராவிட கருதுகோளை எதிர்க்கும் குமரிக்கண்டம் கருதுகோள்: தமிழ் மொழி தொன்மையானது என்பதனை எடுத்துக் காட்டுவதற்கு பல புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆரிய-திராவிட இனவாத சித்தாந்தங்களில் மிக்க நம்பிக்கைக் கொண்டவர்களே, தமிழரின் தாயகம் இப்பொழுதைய தமிழகத்திற்குத் தெற்கே இருக்க வேண்டும் என்று நம்ப ஆரம்பித்தனர். அதாவது, ஆரியர்கள், சிந்துசமவெளியிலிருந்து திராவிடர்களை 2250-1950 BCE காலத்தில் விரட்டியெடித்ததை மறக்கும் வகையில் இச்சித்தாந்தம் இருக்கிறது. சிந்துசமவெளி குறியீடுகள் தமிழ் தான் என்று வாதாடும் எவரும், ஏன் சங்க இலக்கியங்கள் அங்கு தோன்றாமல், இப்பொழுதைய தமிழகத்தில் தோன்றியது என்பதை விளக்கவில்லை. மேலும், தங்களது இலக்கியத்தில், தென்னிந்திய பூகோள இடங்களைக் குறிப்பிடுகிறார்களே தவிர சிந்துசமவெளி பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் தான் “குமரிக்கண்டம்” கருதுகொள் உருவாக்கப்பட்டது. கருதுகோளை மெய்பிக்கும் வகையில் ஆதாரங்களை சேர்கவில்லை. “குமரிக் கண்டம்” அவர்களின் கருத்துச் செரிமைக்கு, எண்ண ஊற்றிற்கு, சிந்தனை மகிழ்விற்கு எல்லைகளைக் கடந்து இன்றும் ஆளுமை செய்து வருகிறது. இதைத் தவிர, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, போன்றோரது பேச்சுகள்-எழுத்துகள் புத்தகங்களாக வெளியிடப்படுகின்றன. அவற்றில் சித்தாந்தத்துடன் அரசியலும் கலந்துள்ளது. ஆனால், சரித்திராசிரியர்கள், இந்த சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. சரித்திரமற்ற இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டே அத்தகைய புத்தகங்கள் அதிகமாகி உருகின்றன. அதனால், இத்தகைய சரித்திரப் புத்தகங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை சதாசிவப் பண்டாரத்தார் தரத்திற்கு இருப்பதாகக் கருதப்படவில்லை.

Iraiyanar Agapporul - mentions about Three Sangams, chronology etc

இறையனார் அகப்பொருள்காலக்கணக்கீடு: இடைக்காலத்தில் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய ஆசிரியர், காலக்கணக்கீடு முறையைப் பின்பற்றி, தமிழகத்தின் தொன்மையை, மூன்று சங்கங்கள் இருந்ததை,  பாண்டியர்களின் வம்சாவளியோடு இணைத்து சில தகவல்களை தந்துள்ளார்[2]. உண்மையில், இப்பொழுதைய குமரிக்கண்டம் சித்தாந்தம், கருதுகோள், புனையப்பட இதுதான் ஆதாரமாக இருந்துள்ளது. உரையாசிரியர், நிச்சயமாக அக்காலத்தில் வழக்கிலிருந்த கலியப்த / கலிசகாப்த / கலியுக காலக்கணக்கீட்டு முறையைப் பின்பற்றி அத்தகைய ஆண்டுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சரியாகக் குறிப்பிடாதலால், 1:2:3:4 என்ற விகிதங்கள் ஒத்துவராமல் இருக்கின்றன. கலியுக காலக்கணக்கீட்டின் படி, இப்பொழுதைய உலகம் தோன்றி முறையே கிரேத, த்ரேத, துவாரப மற்றும் கலி என்ற யுகங்களில் முறையே 1,08,000, 2,16,000, 3,24,000 மற்றும் 4,32,000 ஆண்டுகள் இருக்கும்.

சங்கம் புலவர்களின் எண்ணிக்கை முக்கியமான புலவர்கள் காலம் பாண்டிய மன்னன்
ஆரம்பம் முடிவு
முதல் 4449 549 4440 காய்ச்சினவழுதி கடுங்கோன்
இரண்டு 3705 59 3700 வெண்தேர்செழியன் முடத்திருமாறன்
மூன்று 449 49 1850 / 1950 முடத்திருமாறன் உக்கிரப்பெருவழுதி

வருடங்கள் இருந்த கணக்கு பலவிதமாக பரிசோதித்துப் பார்க்கும்போது, 1:2:3:4 விகிதத்தை அடையாமல், மூன்றாக குறுக்கிவிட்டதால், கணக்கில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கிறது:

வருடங்கள் பெருக்குத்தொகை 37ன் பெருக்கு 360ன் பெருக்கு தெய்வீக வருடங்கள் ஜோதி

வட்டத்தின்படி

1850 1 x 2 x 5 x 5 x 37 37 x 50 360 x 5.138 1200 + 650 1480 x 1.25
3700 1 x 2 x 2  x 5 x 5  x 37 37 x 100 360 x 10.278 2400 + 1300 1480 x 2.5
4440 1 x 2 x 2  x 5 x 6 x 37 37 x 120 360 x 12.33 3600 + 840 1480 x 3

இன்று சங்ககாலம் என்பது 300 BCE – 300 CE அல்லது 500 BCE – 500 CE என்று கொள்ளப்படுகிறது. இதன்படி, பின்னோக்கிக் கணக்கிட்டால், ஒவ்வொரு சங்கம் இருந்த காலம் இவ்வாறுப் பெறப்படும்:

300B CE 300 CE 500 BCE 500 CE ஒவ்வொரு கடல்கோளிற்கும் இடையே 1000 ஆண்டுகள் மீள்வதற்கு என்று எடுத்துக் கொண்டால்
  300 BCE

1850

2150 BCE

3700

5850 BCE

4440

10,290 BCE

– 300 +

1850

1550 +

3700

5250 +

4440

9690 BCE

  500 +

1850

2350 +

3700

6050 +

444o

10,490 BCE

 500

1850

1350 BCE

3700

5050

4440

9490 BCE

 

   300 BCE

1800

2150

1000

3150

3700

8850

1000

7850

4440

12,290 BCE

   500 BCE

1800

2350

1000

3350

3700

7050

1000

8050

4440

12,490 BCE

இவையெல்லாம் “குமரிக் கண்டம்” சித்தாந்திகளுக்கு மகிழ்சியளிப்பதாக இருக்கும். ஆனால், அந்த ஆசிரியர் சரியான கணக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை ஓலைச்சுவடியில் நகலை எழுதும் போது எண்களில் ஏதாவது ஒரு தவறாஇச் செய்திருக்கலாம். இருப்பினும், ஏதோ ஒரு காலக்கணக்கீட்டைப் பின்பற்றவேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெளிவாகிறது. மேலும், இன்றைய நிலையில், வானியல், கணிதம் முதலியவற்றையும் சரித்திரத்திற்க்கு உபயோகப் படுத்த வேண்டியுள்ளது.

the paradox of scientific history

பார்ப்பன ஆதரவுஎதிர்ப்புப் போலித்தனம்: இதிலும், திராவிட சித்தாந்திகளின், இரட்டை வேடங்கள் வெளிப்படுகின்றன. ஒருபக்கம், யாரோ ஒரு பார்ப்பனர் “நக்கீரர்” என்ற பெயரில், இந்த கதையைக் கட்டி நுழைத்து விட்டான் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பெருந்தேவனாரும் குற்றஞ்சாட்டப்படுகிறார், அதாவது, அவர்தாம் கடவுள் வாழ்த்தை எழுதி சேர்த்து விட்டார் என்று. இல்லையென்றால், சங்க நூற்கள் எல்லாமே கடவுள்-மறுப்பு நூற்கள் ஆகிவிடும் போன்ற திரிபு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். மறுபக்கமோ, அதே காலக்கணக்கீட்டை வைத்துக் கொண்டு “கல்தோன்றி மண் தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக் குடி தமிழ்குடி”, குமரிக் கண்டத்தில் தான், முதல் மனிதனே தோன்றினான் என்றும் பேசி, எழுதி வருகின்றனர். ஆனால், சரித்திராசிரியர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், இன்றும் இது திராவிட சித்தாந்திகளால் ஆதரிக்கப் பட்டு வருகிறது, புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், சரித்திரப் புத்தகங்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரோமிலா தாபர் போன்ற மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள், இராமாயணத்தை விமர்சிக்கும் போது, இவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள், அதே நேரத்தில் ஆரிய இனவாதம், குமரிக்கண்டம் முதலியவை சரித்திர ஆதாரமற்றவை என்று அவர் எடுத்துக் காட்டியதை மறைக்கவே விரும்புகின்றனர். இந்நிலையில் தான், ஐராவதம் மகாதேவன் போன்றோரின் ஆய்வுக்கட்டுரைகள் முரண்படுகின்றன.

date-of-thiruvalluvar-400-500-ce

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] கா. அப்பாதுரை சொன்னதைத் தான், இன்றும் சொல்லி வருகின்றனர். முன்பு கோடுகளினால் போட்டப் படத்தை, இன்று வண்ணங்களுடன், கணினி உதவியுடன், மாற்றி வெலியிடுகிறார்களே தவிர புதியதாக ஒன்றையும் செய்துவிடவில்லை.

[2] K. V. Ramakrishna Rao, Iraiyanar Agapporul Chronology – Myth or Reality?, a paper presented at the 8th annual session of the Taminadu History Congress held at Madras University on 13th and 14th 2001.

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

ஏப்ரல் 30, 2012

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

293வது பட்டத்தில் நித்யானந்தா வருகிறார் என்றால், 292 மடாதிபதிகள் இருந்துள்ளனர்கள் என்றாகிறது.

மடங்களில் மடாதிபதிகள் இருந்தத்தை பல்வேறு விதமாகக் குறித்து வைத்துள்ளனர். “குரு பரம்பரை” என்று நூல்கள் உள்ளன. மடங்களில் அவர்களின் சிலைகளே வடிக்கப் பட்டிருக்கும். இறந்தவுடன், மடத்தின் வளகத்தினுள்ளேயே புதைக்கப் படுவதால், சமாதிகளில் சில குறிப்புகள் இருக்கும்.

ஏனெனில், தொடர்ந்து 40-80 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர்களும் உண்டு, பட்டமேற்று சில நாட்களிலேயே காலமாகிவிடுபவர்களும் உண்டு. அதனால், பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் ஒரு மடாதிபதி / அரசன் ஆட்சிகாலத்தை சுமார் 10 அல்லது 20 வருடங்கள் என்று கொண்டு கணக்கிடுவர்.

ஆகவே, ஒவ்வொருவர் 10 / 20 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தனர் என்று கொண்டால், மொத்த மடாதிபதிகளின் காலம் 293 x 20 = 5860 அல்லது 293 x 10 = 2910 வருடங்கள் என்றாக இருக்க வேண்டும்.

அதாவது 5860 – 2910 YBP (Years Before Present) வருடங்களுக்கு முன்பு அம்மடம் ஸ்தாபித்ததாக ஆகிறது. சராசரியாக எடுத்துக் கொண்டால் கூட 4300 வருடங்கள் ஆகிறது. ஆகையால் தான் 2500 வருடம் தொன்மையானது என்று மடாதிபதி கூறுகிறார் போலிருக்கிறது.

மடத்தில் அப்படி இருந்த 292 மடாதிபதிகளின் கால அட்டவணை இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அத்தாட்சியாக இருக்கும்.