Archive for the ‘சூரி’ Category

அக்பர் ஜைனர்களுடன் உரையாடல்: அஹிம்சை, வியாபாரம் மற்றும் சமரசம்!

ஜூன் 19, 2015

அக்பர் ஜைனர்களுடன் உரையாடல்: அஹிம்சை, வியாபாரம் மற்றும் சமரசம்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (5)].

Acharya_Shri_Hirvijaysuri_received by Akbar in the court

Acharya_Shri_Hirvijaysuri_received by Akbar in the court

ஜைனதுறவிகளுக்கும், அக்பருக்கும் இடையில் ஏற்பட்ட உரையாடல்களும், சமஸ்கிருத சுலோகங்கள்நூல்கள் உருவாக்கமும்: அக்பருக்கும் ஸ்வேதம்பர ஜைனத் துறவிகளுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்புகள் விசித்திரமாக இருக்கிறது. அதிலும் குஜராத்தைச் சேர்ந்த தபா-கச்சா பிரிவு மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த காரதார-கச்சா பிரிவு ஸ்வேதம்பர ஜைனர்கள் நெருக்கமாக இருந்தனர். தீன்–இலாஹி விசயத்திலும் அவர்கள் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அக்பருக்கு ஜைன சுவடிகளைக் கொடுப்பது, சமஸ்கிருதத்தில் நூல்களை எழுதிக் கொடுப்பது என்று பல வேலைகளில் ஈடுப்பட்டிருந்தனர். அக்பரைப் பாராட்டி, போற்றி மற்றும் வாழ்த்திப் பாடிய ஜைனபுலவர்கள் பலர் இருந்தார்கள். ஒருவர் 128 சமஸ்கிருத சுலோகங்களில் அக்பரை வாழ்த்திப் பாடியுள்ளார்[1]. ஜைன முனி சித்தி சந்திர உபாத்தியாயா, “பானுசந்திர சரித்ர”, சாந்தி சந்திர என்பவர், “கிரிபாசார கோஷ்”, ஜெய் சோம் உபாத்தியாயா “கர்மசந்த் வம்ஸ பிரபந்த” போன்ற நூல்களை எழுதியுள்ளனர். பிகானேரைச் சேர்ந்த கரம்சந்த என்பவர்தாம் அக்பருக்கும் ஜைனமதத்தலைவர்களுக்கும் சந்திப்புகளை, தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்[2]. அக்பரவையில் இருந்த ஆறு பிரதான ஜைனத்துறவிகள்:

  1. ஹீரவிஜய சூரி (1578லிருந்து 1584 வரை).
  2. சாந்தி சந்திர (1578லிருந்து 1587 வரை).
  3. விஜயசேன சூரி (1578லிருந்து).
  4. பானுசந்திர உபாத்தியாய (1578லிருந்து 1605 வரை).
  5. சித்திசந்திர (1578லிருந்து).
  6. ஜீனசந்திர (1578லிருந்து).
Rai Sabha Chand worships at a shrine-Mughal-Jain dialogue

Rai Sabha Chand worships at a shrine-Mughal-Jain dialogue- Rajput depicted as Mughal

பத்ம சுந்திரர் என்பரிடத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஜைனச்சுவடிகளைப் பெற்றுக் கொண்டார். ஆனால், வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டார் என்று வின்சென்ட் ஸ்மித் குறிப்பிடுவது நோக்கத்தக்கது[3]. ஹீரவிஜய சூரி (1527-1596) என்ற ஜைனத்துறவியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்[4]. ஜீனசந்திர சூரி என்பவர் 1591ல் லாஹுருக்குச் சென்று, ஜைன கோவில்களை முகமதியர்கள் அழிப்பதலிருந்து காக்குமாறு வேண்டிக்கொண்டார். இருப்பினும், 1592ல் அரசவையில் ஜைனம், நாத்திகத்தை போதிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. அக்பருக்குப் பிறகும் அத்தகைய அரசப்புகழ்ச்சி கவிதைப்பாடும் தொழில் தொடர்ந்திருக்கிறது. ருத்ர கவி என்பவர் கண்கணம் அபுதுர் ரஹ்மான், அக்பருடைய மகன் தன்யால் மற்றும் ஜஹாங்கீருடைய மகன் குர்ரம் (ஷாஜஹான்) முதலியோரைப் புகழ்ந்து சமஸ்கிருதத்தில் பாடியுள்ளார். பனாரஸைச் சேர்ந்த ஒரு பண்டிதரும், இந்துக்களின் மீது திணிக்கப்பட்ட ஜெஸியா வரி நீக்கப்படும் என்ற ஆவலால், அவரைப் போற்றிப் பாடியுள்ளார். இது தவிர ஜோதிட, வானியல், மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து, பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

Mughal-Jain dialogue

Mughal-Jain dialogue

ஜைனவியாபாரிகளுக்கும், அரேபியமுகாலயர்களுக்கும் ஏற்பட்ட மோதல்கள்: ஜைனர்களின் அக்பருடனான தொடர்புகள் இவ்வாறு சமயரீதியில் இருந்தன, என்பதில்லாமல், பொருளாதார ரீதியில் இருந்தது என்பது பலவிசயங்களில் வெளிப்பட்டன. அரேபியா, இராக், இரான், ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் ஜைனவியாபாரிகள் அதிகமாக வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது பொருட்கள் அடங்கிய வண்டிகளை முகமதியர் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். இதனால், தங்களது பொருட்களை மற்றும் வியாபாரிகளைக் காத்துக் கொள்ள அவர்களும் பாதுகாப்பு-வீரர்களை அமைத்துக் கொண்டார்கள் என்பது உண்மை. முகமதிய எழுச்சி, அவர்களது பொருட்களின் போக்குவரத்துகளை பெருமளவில் பாதித்தது. வெள்ளையுடகளுடன், அரேபிய, பாரசீக மொழிகளைப் பேசிக்கொண்டு சமாளித்து வந்தாலும், உணவுமுறைகளில் அவர்கள் வெளிப்பட்டுவிடுவதால், முகமதியர்களுக்கும், அவர்களுக்கும் பலவிதங்களில் மோதல்கள் ஏற்பட்டன. அப்பொழுது, ராஜபுதன அரசர்கள், வீரர்கள் அவர்களுக்குத் துணையாக இருந்தனர். இருப்பினும், ஆசார ஜைனர்கள் பொருளாதார காரணங்களினால், மற்றவர்களுடன் தனித்திருக்க விரும்பினார்கள். 1582ல் இரண்டு கிருத்துவர்கள் முகமதிய கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்படுகின்றனர். இவ்விசயத்தில் ஜைன வணிகர்கள் அவர்களைக் காக்க ஆயிரம் பொன்களைக் கொடுக்க முன்வருகிறார்கள், ஆனால், அவர்கள் கொல்லப்படுகின்றனர்[5]. எனவே, ஒருவேளை ஜைனர்களும், கிருத்துவர்களும் (போர்ச்சுகீசிய வணிகர்கள் ஒன்றாக செயல்பட்டனரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இதனால் தான், அவர்கள் தனியாக அக்பருடன் பலவிதங்களில் பேரம் பேச ஆரம்பித்தார்கள். இதில் தான் சாம-தான-தண்ட-பேதங்களை உபயோகித்துப் பார்த்தார்கள். அதாவது சமஸ்கிருதத்தில் புகழ்ந்து பாடுவது, அரசவையில் அஹிம்சையை போதிப்பது, கடத்தி வைக்கப்பட்ட வியாபாரிகளை மீட்க பணம் கொடுப்பது, இல்லை தண்டிப்பது, என்று ஈடுபட்டனர். குறிப்பிட்ட ஜைனதுறவிகள் எல்லோருமே வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தாம், துறவுக்குப் பிறகும் அவர்களுக்கு வியாபாரங்கள் இருந்தன[6].

Mughals visiting Yogis - from Akbarnama

Mughals visiting Yogis – from Akbarnama

ஜைனர்கள் பல பணிகள், உத்தியோகங்கள், தொழில்களில் ஈடுபட்டது: ஜைனர்கள் பொதுவாகவே வணிகம் மற்றும் மதத்துடன் பின்னிப்பிணைந்தவர்கள். அதுபோலவே, ஜைனமதத்தலைவகள், முனிகள், துறவிகளும் வணிகம் மற்றும் மதத்துடன் பின்னிப்பிணைந்தவர்களாக இருந்துள்ளனர். வணிகர்கள், வீரர்கள் மற்றும் அரசர்கள் என்ற ஒன்றிற்கும் மேற்பட்ட அவதாரங்களில் ஜைனமுனிவர்கள் செயல்பட்டார்கள் என்று தெரிகிறது. வணிக-வீரர்கள், வீர-வணிகர்கள், வணிக-ஜைனர்கள், ஜைன-வணிகர்கள், ஜைனமுனி-வியாபாரிகள், வியாபார-ஜைன-முனிகள் என்பதெல்லாம் சர்வசகஜமாக இருந்தன[7]. முகமதிய ஆட்சியாளர்கள் தனித்தனியாக இருந்து கொண்டு, பல இடங்களில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தனர். ஜைனர்களோ பலபிரிவுகளில் பிரிந்து தத்தமது வியாபரங்களைக் காத்துக் கொள்ள முயன்றனர். இதனால், எல்லா இடங்களிலும் முகமதியர்-அல்லாத வியாபாரிகளுக்கு பெருத்த சேதம், நஷ்டம் முதலியவை ஏற்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்து என்ற நிலையில்லாமல் இருந்தது, இதனால், “காபிர்” என்ற ரீதியில் முகமதியர்கள் தாக்கி வந்ததில் நிலைமை மோசமாகியது[8]. ஜைனர்கள் அக்பருடன் அத்தகைய சம்பந்தங்களை வைத்துக் கொண்டிருந்தாலும், சுருக்கமாக சொல்வதானால், அக்பருடைய கொள்கைகள் ஜைனர்களை பொருளாதார, அரசியல், மற்றும் கலாச்சார ரீதிகளில் பெருமளவில் பாதித்தன[9].

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] Annemarie Schimmel, Burzine K. Waghmar, The Empire of the Great Mughals: History, Art and Culture, Chicago University Press, USA, p.238.

[2] Tej Ram Sharma, Historiography: A History of Historical Writing, Concept Publishing Company, New Delhi, 2005, p.87.

[3] Vincent Arthur Smith, The Jain Teachers of Akbar, Bhandarkar Oriental Research Institute, 1917, p.267.

[4]  Paul Dundas, The Jains , Library of Religious Beliefs and Practices, Second edition, Routledge (Taylor & Francis Group), London, 2002, 146-147

[5]  After many delays the persons so selected started on their long and arduous journey in the summer of 1582. The roads were everywhere infested with robbers, and Monserrate was often in danger of death by reason of Muslim hostility. It would take too much space to relate his adventures in detail. He arrived safely at Surat on August 5, 1582, and learned the painful news that two Christian young men had been executed there on the previous day. The local authorities had rejected an offer of a thousand gold pieces made by the Jain merchants as ransom for the lives of the victims.

Vincent A. Smith, Akbar, the great Mogul 1542-1605, Humphrey Milford, Oxford at the Clarendon Press, 1917, p.205.

[6]  Makrand Mehta, Indian Merchants and Entrepreneurs in Historical Perspective, Academic Foundation, New Delhi, 1991, pp.98-100.

[7] ஜைனமதத்திற்கு மாற்றியபோது, சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் தாம் பெருமளவில் பதம் மாறினர். அதனால், அவர்களது தங்களது குலதர்மத்தை அல்லது கடமைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். மேலும், இவையிரண்டும் குடும்பங்களில் வம்சாவளியாக தொடர்ந்து வந்தது.

[8] Michael Naylor Pearson, Merchants and Rulers in Gujarat: The Response to the Portuguese in the Sixteenth Century, University of California Press, USA, 1976,  pp.138-142.

[9]   Iqtidar Alam Khan, Akbar and his Age, Proceedings of the Seminar, Indian Council of Historical Research, New Delhi, 1992,   P.166.