Posts Tagged ‘சங்க காலம்’

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

கி.மு., 1ம் நூற்றாண்டின் பொருட்கள் பழநி ஆற்றங்கரையில் கண்டுபிடிப்பு: உண்மைகளும், பொய்களும்!

ஓகஸ்ட் 18, 2010

கி.மு., 1ம் நூற்றாண்டின் பொருட்கள் பழநி ஆற்றங்கரையில் கண்டுபிடிப்பு: உண்மைகளும், பொய்களும்!

கி.மு., 1ம் நூற்றாண்டின் பொருட்கள் பழநி ஆற்றங்கரையில் கண்டுபிடிப்பு[1]: மானூர் அருகே கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட, வாழ்வியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூர் சண்முகநதி ஆற்றங்கரையில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தொப்பம்பட்டி தமிழாசிரியர் திருமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சுட்ட செம்மண்ணாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக நாராயணமூர்த்தி கூறியதாவது: முன்னதாக இப்பகுதி பழனித்துரை, சத்தரப்புக்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு சங்க காலத்திற்கு முந்தைய வாழ்வியல் பொருட்களான, முதுமக்கள் தாழி, சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. பானை, குடுவையில் சிறிய வாய் பகுதியும், அகன்ற கொள்ளளவு உள்ள நடுப்பகுதியுடன் காணப்படுகின்றன. இவற்றில் வரையப்பட்டுள்ள நெற்கதிர் உருவங்கள், தாழியின் அமைப்பு, துணைக் குடுவைகளின் அமைவு முறையின் மூலம் கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை. மேலும் 36 செ.மீ., நீளமும், 24 செ.மீ., அகலமும், எட்டு செ.மீ., தடிமனும் கொண்ட செங்கல்கள் கிடைத்துள்ளன. சில செங்கல்களில், அப்போதைய மனிதனின் கை விரல்களால் வரையப்பட்ட வரி போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவற்றின் நீள, அகல அளவுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆண்டை உறுதி செய்யலாம். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.

காலக்கணக்கீடுமுறையில் பின்தங்கியுள்ள தமிழக ஆராய்ச்சியாளர்கள்: காலக்கணக்கீடு என்றாலே, நமதவர்கள் குழப்ப ஆரம்பித்துவிடுவார்கள். இச்செய்தில்யிலேயே கீழ்கண்டவாறு அது வெளிப்படுகிறது:

  • 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சுட்ட செம்மண்ணாலான பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

பொதுவாக கூறப்பட்ட நிலை. இப்படி சொல்லவேண்டிய அவசியமேயில்லை.

  • இங்கு சங்க காலத்திற்கு முந்தைய வாழ்வியல் பொருட்களான, முதுமக்கள் தாழி, சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இப்படி சொல்வதே, வேடிக்கையாக, முன்னுக்கு முரணாக உள்ளது. முதலில் “சங்க காலம்” என்பதனை உறிதியாகக் குறிப்பிட்டு சொல்லவேண்டும். பிறகு, கிடைத்துள்ளவை எந்த அளவிற்கு, சங்க காலத்திற்கு முந்தைய து என்று எடுத்துக் கட்டவேண்டும்.

  • இவற்றில் வரையப்பட்டுள்ள நெற்கதிர் உருவங்கள், தாழியின் அமைப்பு, துணைக் குடுவைகளின் அமைவு முறையின் மூலம் கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளன.

ஒப்புமை முறையில் தோராயமாக காலத்தைக் குறிப்பிட்ட நிலை. இதில்கூட, நம்மவர்கள் இன்னும் “கி.மு-கி.பிக்களில்” உழல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, ஆராய்ச்சி நெறிமுறைகளைப் புதுப்பித்துக் கொண்டு, நவீன யுக்திகளை காலநிர்ணயத்திற்கு உபயோகிக்காமல், 100 வருடங்களுக்கு முந்தைய முறையைப் பின்பற்றுவது வேடிக்கையாக இருக்கிறது.

  • இவற்றின் நீள, அகல அளவுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆண்டை உறுதி செய்யலாம்.

அதாவது, இப்பொழுது சொல்லிய காலம் தோராயமானது, என்று சொன்னவரே ஒப்புக்கொண்ட நிலை. முதலில், சுட்ட மண்ணால் செய்யப்பட்டப் பொருட்களை, தனிப்பட்டமுறையில், சுதந்திரமாக கணக்கிட எந்த முறையுள்ளது என்பது பற்றி அறிந்திருக்கவேண்டும். பிறகு, மாதிரிகளை முறையோடு சேகரித்து, ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அனுப்பவேண்டும். அங்கிருந்து, தேதிகளை / காலத்தைக் கணக்கிட்ட விவரங்களைப் பெறவேண்டும். பிறகு தான் தேதியைப் பற்றியோ / காலத்தைப் பற்றியோ பேச முடியும்.

சில சாதாரண உண்மைகளைக்கூட சொல்ல மறுக்கும் ஆராய்ச்சியாளர்கள்: “மேலும் 36 செ.மீ., நீளமும், 24 செ.மீ., அகலமும், எட்டு செ.மீ., தடிமனும் கொண்ட செங்கல்கள் கிடைத்துள்ளன”, என்று சொல்லும் அவர்கள், ஏன் இது 4.5:3:1 என்ற விகிதத்தில் உள்ளது 4:2:1 என்ற சிந்துசமவெளி செங்கற்களின் அளவுகளினின்று மாறுபட்டுள்ளது என்று எடுத்துக் கட்டத் தயங்குவது அல்லது உண்மையினை மறைப்பது தெரிகிறது. “கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட, ………….. பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன”, என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டால் போதுமா? 4.5:3:1 என்ற விகிதத்தில் வைத்தால், கட்டடக்கலையில் / முறையில் என்ன சிறப்பு என்பதையெல்லாம் ஆராய வேண்டாமா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆஅரய்ய்சியாளர்களுக்கு என்றுமே உண்மையினை மறைக்கும் போக்கு இருக்கக்கூடாது. ஒரு அத்தாட்சி தனக்கு சாதகமாக இல்லை என்பதனால், அதன் முக்கியத்துவத்தை மறைப்பது, தவறான விளக்கம் அளிப்பது அல்லது அழித்துவிடும் வேலையும் கூடாது.

தமிழக சரித்திரத்தின் கால-அட்டவணை / கணக்கீடு: இதனை, இந்திய சரித்திரத்தினின்று தனியாக படிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. “சங்கம்” என்பது பற்றிய இரட்டைவேடங்கள் போட்டுக்கொண்டு, தமிழ் பண்டிதர்கள் (பெரும்புலவர்கள், கவிக்கோக்கள், சரித்திர ஆசிரியர்கள், தொல்துறை நிபுணர்கள், அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள், நாணவியல் திறமைசாலிகள், கல்வெட்டு முனைவர்கள், வரிவடிவ விற்பன்னர்கள்), இப்படி உணர்ச்சி ரீதியில் “சங்க காலத்திற்கு முந்தைய” என்றெல்லாம் சொல்வது சரித்திரஆராய்ச்சி நெறிமுறையாகாது. தமிழக சரித்திர நிகழ்வுகளை, இந்திய சரித்திர நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு, கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். இதில் மொழி, இனம், சாதி போன்றவற்றை மனங்களில் வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தால், எந்த முடிவும் கிடைக்காது. “குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு, அறைத்த மாவையே அறைத்துக்கொண்டு”, ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு, புகழ்ந்துகொண்டு, பட்டங்களைக் கொடுத்துக் கொண்டு சந்தோஷமாக, இருக்கவேண்டியதுதான். கல், மண், மரம், எலும்பு, உலோகம் முதலியவை எப்படி ஆராய்ச்சிக்கூடங்களில் தகுந்த உபகரணங்களினால் நுணுக்கமாக ஆராரயப்பட்டு, கதிர்வீச்சுகளுக்குட்படுத்தப்பட்டு, அவற்றின் உள்ளமைப்பு, வடிவமாற்றங்கள், முதலியவற்றை சோதனையிட்டு, முடிவுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, “கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி” என்று கூச்சலிட்டால், தேதி / காலம் கிடைக்காது!


[1] தினமலர், கி.மு., 1ம் நூற்றாண்டின் பொருட்கள் பழநி ஆற்றங்கரையில் கண்டுபிடிப்பு, ஆகஸ்ட் 16, 2010, http://www.dinamalar.com//News_Detail.asp?Id=63498&