Posts Tagged ‘தன்னாட்சி கல்லூரி’

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College – G.T.Narayanaswamy Naidu): ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்[1].  இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது[2]. அதாவது 58 வருடம் பழமையான கல்லூரி. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைவுபெற்றது. இது ஒரு தெலுங்கு மொழி சிறுபான்மையினர் கல்லூரியாகும். 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. இக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது. திண்டுக்கல்லின் சவுந்தராஜா மில்ஸ் பி லிமிடெட் அறக்கட்டளையால் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு கடந்த இரண்டு நாள்களாக (27-08-2022, 28-08-2022) நடைபெற்று வந்தது. 27-08-2022 அன்று திண்டுக்கல் கலெக்டர், எஸ். விசாகன் I.A.S துவக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் “ஏதோ அல்லது எதிர்பாராத காரணங்களுக்காக” வரவில்லை. இதனால், முன்னாள், அழகப்பாப் பல்கலைக் கழக துணைவேந்தர், என்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சரித்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விலாக்கிப் பேசினார். பிறகு, காங்கிரஸின் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டு, மரியாதை செய்யப் பட்டது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், சரித்திரவரைவியல் மற்றும் கடல்சார் படிப்பியல் முதலியப் பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. பெரும்பாலான கட்டுரைகள், உப்பு-சப்பில்லாமல், அரைத்த மாவையே அரைத்த விசயங்களாக இருந்தது. இணைதளத்தில் 40 வருட ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு கிடைக்கப் பெறுகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தாலே, எவ்வாறு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய வரலாற்று மாநாடுநிறைவு நாள் விழா: அதன் நிறைவு விழா 29-08-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா். மைப்பாளர்கள் 1600 என்று குறிப்பிட்டனர். மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தெலுங்கு பல்கலை கழக முன்னாள் முதன்மையா் சென்னா ரெட்டி பேசியதாவது[3]: “இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்றெல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.…………………..இளம் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் தொன்மையையும் கண்டறிந்து புதுமையுடன் மெருகேற்ற வேண்டும். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னிந்திய வரலாற்றுப் பேரவை சார்பில் 40 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக மாநாடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன. வரலாற்று மாணவா்கள்,தொல்லியல், கல்வெட்டுத்துறை போன்ற அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு தங்களை தயார் செய்ய வேண்டும்,” என்றார்[4]. இதில், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாச்சார வரலாறு மற்றும் கடல்சார் வரலாறு தொடா்பான 1210 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு தேர்தலும் பிரச்சினைகளும்: மாநாட்டின் நிறைவாக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை நிர்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. பிரச்சாரத் துண்டுகள், நோட்டீஸுகள் விநியோகிக்கப் பட்டன. இருவர் டிஜிட்டல் பேனரைக் கூட கட்டி வைத்திருந்தார். ஓட்டுப் போட பிரச்சாரம், முதலியவை அதிகமாகவே நடைப் பெற்றன. ஊடகக்காரர்களுக்கு தெரிவிக்கப் பட்டதாவது – அதில், கா்நாடகப் பல்கலை. பேராசிரியா் சந்திரசேகா் தலைவராகவும், சாத்தூா் எஸ்ஆா்என்எம் கல்லூரி முதல்வா் கணேஷ்ரோம் பொதுச் செயலராகவும், ஜிடிஎன் கல்லூரி முதல்வா் பொருளாளராகவும், கோழிக்கோடு பல்கலை. பேராசிரியா் சிவதாசன் பதிப்பாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 2 துணைத் தலைவா்கள், ஒரு இணைச் செயலா் மற்றும் 15 நிர்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா், என்று “தினமணி” முடித்துள்ளது. ஆனால், அந்த தேர்வு / தேர்தல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, தேர்தல் முறையாக நடத்தப் படவில்லை, மற்றும் தேர்தல் நடத்திய பொறுப்பாளர்களே, குறிப்பிட்ட போட்டியிட்ட நபர்களுக்கு சார்பாக வாக்களிக்க பிரச்சாரம் செய்தனர் மற்றும் கள்ளத்தனமாக ஓட்டுப் போட்டனர் என்றெல்லாம் தெரிவித்தனர். மெத்தப் படித்த பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டனர் என்பது வியப்பாக இருக்கிறது.

28-08-2022 ஞாயிற்றுக் கிழமை நிறைவு விழா: இன்றைய மக்களின் வாழ்க்கையும் புதிய கண்டுபிடிப்புகளும் நாளைய சந்ததியினருக்கு வரலாறாக மாறுகிறது. பண்டைய தமிழர்களின் நாகரீகம், கலசாரம், வாழ்க்கை முறை, பண்பாடு உள்ளிட்டவற்றை பிற்காலத்தினர் அறிந்துகொள்ள வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் வரலாறு. வரலாறு இல்லையென்றால் தமிழகத்தை ஆண்ட வீர மன்னர்கள், உலகம் போற்றும் சிற்பங்கள் பற்றி அறியாமலேயே போயிருப்போம். இன்றளவிலும் தொல்லியல் துறையினர் தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தி முற்கால தமிழர்கள் வழிபட்ட கடவுள் சிலைகள், பயன்படுத்திய பொருட்களை கண்டறிகின்றனர். கண்டறியும் பொருட்களை வைத்து காலத்தை அறிகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயில், சித்தன்ன வாசல் சிற்பம், மாமல்லபுரம் உள்ளிட்டவை வரலாற்றை எடுத்துரைக்கும் பீடமாக இன்றும் திகழ்கிறது. படிப்பிலும் வரலாற்றை படிக்க வரலாற்று துறை உள்ளது. அதிலும் மாணவர்கள் ஆர்வமாக படித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அத்தகைய வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் தென் இந்திய வரலாற்று பேரவை மாநாடு கல்லுாரி சேர்மன் ரத்தினம் தலைமையில் மூன்று நாள் நடந்து வருகிறது[5]., என்று தினமலர் முடித்து, கலந்து கொண்ட சிலரின் கருத்துகள் பின்வருமாறு[6] என்று  வெலியிட்டுள்ளது:

© வேதபிரகாஷ்

29-08-2022


[1]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF

[2] https://dindigul.nic.in/ta/public-utility/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமணி, தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு, By DIN  |   Published On : 28th August 2022 10:52 PM  |   Last Updated : 28th August 2022 10:52 PM  .

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2022/aug/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1210-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3906392.html

[5] தினமலர், வரலாற்றை சிறப்பித்த பேரவை மாநாடு, Added : ஆக 27, 2022  05:19 ; Added : ஆக 27, 2022  05:19.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3109293