Posts Tagged ‘சரித்திர வரைவியல்’

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

கலந்து கொண்ட சிலரின் கருத்துகள்: வரலாறை உலகறிய செய்யவேண்டும்: முத்துப்பாண்டி, புத்தக விற்பனையாளர், மதுரை ஆராய்ச்சி மையம்: வரலாற்று ஆய்வு மாணவர்கள் கள்,பேராசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக இம்மாநாடு திகழ்கிறது.எங்களிடம் ரூ.80 முதல் ரூ.2500 வரை புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. முதல் முறையாக திண்டுக்கல்லில் விற்பனை நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்களுக்கு மவுசு: உதயகுமார் மதுரை கல்வெட்டுஆய்வாளர்: கி.மு.6ம் நுாற்றாண்டில் எழுத்து முறையில் உள்ள புத்தகங்கள் இங்கே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 தினங்கள் மாநாடு நடப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள பேராசிரியர்கள் அதிகமானோர் பங்கேற்பதால் புத்தகங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது: ராஜவர்மன், வரலாற்று பேராசிரியர், பழநி: தென் இந்தியாவில் முதன் முறையாக இம்மாநாடு நடக்கிறது. அதிக ஆர்வமாக மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டுள்ளனர் .வரலாற்றுக்கு ஜி.டி.என்.கல்லுாரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மக்களுக்கு வரலாற்றை கற்றுகொடுக்க வேண்டும். 4 வகையில் பிரித்து கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அறிஞர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவியல் படித்தவர்களும் ஆர்வம்: முருகேஸ்வரி, பேராசிரியை, திண்டுக்கல்: கேரளாவிலிருந்து அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் கலாசாராத்தை அறிய அவர்களும் ஆர்வமாக உள்ளனர். இம்மாநாட்டின் மூலம் வரலாற்று அறிஞர்கள் தொடர்பு பெருகும். அறிவியல் படித்தவர்களும் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம்: செல்லப்பாண்டி, பேராசிரியர், அருப்புக்கோட்டை: வரலாற்றின் பாரம்பரியத்தை மாணவர்களின் மத்தியில் புகுத்தவேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகளை அதிகம் நடத்துவதன் மூலம் வரலாற்றிஞர்களின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

புதிதாக கற்றுகொள்வோம்” ரகசனா, வரலாற்று மாணவி, கேரளா: கேரளாவிலிருந்து 20க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளோம். வரலாறு போற்றப்படக்கூடிய விஷயம். கலாசாரத்தை அறிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். புதிதாக வரலாறு குறித்து கற்றுகொள்வோம்.

நல்லதொரு வாய்ப்பு: சிவாங்கி, பேராசிரியர், பஞ்சாப்: இதுபோன்ற வரலாற்று மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு இது முதல் அனுபவம்மிக ஆர்வமாக உள்ளது. தென்னிந்திய மன்னர்களை அறிவது மிக அபூர்வம். ஒவ்வொரு படைப்புகளும் என்னை வியப்படைய செய்கிறது.வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது: இஷா டம்டா, பேராசிரியர், பஞ்சாப்: இவ்வளவு அதிகமான வரலாற்று அறிஞர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மாநாடுகளை ஆண்டு முழுவதும் நடத்தினால் நன்மை பயக்கும்.

பிறகு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களிடம் உரையாடி, விசயங்களை அறிந்த போது, இவர்கள் எல்லோரும் (மேலே கருத்து சொன்னவர்கள்) முழு உண்மை அறியாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிந்தது.

ஆய்வுக்கட்டுரைகளின் தராதரம் முதலியன: நிறைவாக புதியத் தலைவர், சுப்பராயலு பேசும் பொழுது, “நான் ஒவ்வொரு அறையாகச் சென்று, 20-30 நிமிடங்கள் உட்கார்ந்து, ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும், அறையில் இருந்து கேட்பவர்களுக்கும்;  நிர்வகிக்கும் தலைவருக்கும் ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்தது. அறையில் இருந்து கேட்பவர்கள், ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்காமல், கவனிக்காமல் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல, நிர்வகிக்கும் தலைவரைச் சுற்றி ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. யாரும் எந்த கேள்வியையும் கேட்கவில்லை, உரையாடல் இல்லை. படித்துமுடித்தவுடன், சான்றிதழை வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுரைகளின் தரமும் நன்றாக இல்லை…..இந்நிலை மாறவேண்டும். ஆராய்ச்சித் திறன் வளரவேண்டும்………..சரித்திரம் படிப்பவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்பதில்லை. இஞ்சினியரிங் படித்தவர்களுக்கும் சரியான, முறையான வேலைக் கிடைப்ப்தில்லை. குறைந்த சம்பளத்திற்கு, சம்பந்தம் இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். எனவே, தமது திறமையை உயர்த்திக் கொண்டால் தான் முன்னேறமுடியும்….,.” என்றெல்லாம் நிலைமையை எடுத்துக் காட்டினார். இதனை நிர்வாகிகள் மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாட்டு பிரச்சினைகள்: 40வது மாநாட்டிலேயே (சிதம்பரம்) உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: என்றெல்லாம் குறிப்பிட்டப் பட்டது[1]. 41வது மாநாட்டிலோ, அதைவிட படுமோசமாக உணவு இருந்தது. நிர்வாகிகள் ஒன்றையும் கற்றுக் கொண்டதாக, வருத்தப் பட்டதாக, மாறியதாகத் தெரியவில்லை. “History repeats” என்பது போல அதை விட மோசமாக நடந்துள்ளது. மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். என்று கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டனர். அதாவது, சுமார் ரூ 32 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் 800, இரண்டாம் நாள் 1200 மற்றும் மூன்றாம் நாள் 1600 என்று பதிவுசெய்யப் பட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. அப்படியென்றால், உடனடியாக அறிந்து சரிசெய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இதிலிருந்தே, அவர்கள் வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.  ஒரு முறை தெரியவில்லை, எதிர்பார்க்கவில்லை, அதனால், அப்படி நடந்து விட்டது என்றால் சரி ஆனால், திரும்ப-திரும்ப மூன்று வேளையும் அப்படியே நடக்கின்றது-நடந்தது என்றால் என்னத்தைச்சொல்வது. முடியவில்லை என்றால் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. உணவு, மிக சாதாரணமாக இருந்தது, தினம் தயிர்சாதம் என்று மோர்சாதத்தை விட மோசமாக, வெறும் சாதம் கொடுக்கப் பட்டது.

உணவு இல்லை, கொடுத்ததும் தரமாக இல்லை: ஒரே ஒரு உணவு வகைதான் மூன்று வேளைகளுக்கும் கொடுக்கப் பட்டது. தயிரே காணப் படாத தயிர்சாதம், உப்புமா, இட்லி, ஊத்தப்பம், சாம்பார்-சாதம் என்று அவையே பரிமாறப் பட்டது. முதல் நாளிலிருந்தே, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இட்லி புளிப்பாக, ஒல்லியாக தட்டையாக இருந்தது, சட்னி இல்லை, சாம்பார் குறைவாகவே ஊற்றப் பட்டது. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர்.  உணவுப் பெறுவதற்குக் கூட நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களின் தலைகளுக்கு மேலாக தட்டுகளைக் நீட்டிக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காலியான பாத்திரங்கள் முன்பாக நின்று கொண்டு மற்றவர்கள் தவித்தனர். அருகில் எந்த ஒட்டலும் இல்லை, இதனால், பலர் தத்தம் தகுமிடங்களுக்குச் சென்று, அருகில் கிடைப்பதை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது. அவர்களால் முடியவில்லை என்றால், இவ்வாறு ஆயிரக் கணக்கில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம், மர்மம், அதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. கோவில்களில் கூட கொடுக்கும் பிரசாதம் நன்றாக இருக்கும்.

பொறுப்புள்ளவர்கள் நிலைமையை மாற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற சரித்திர ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதலியோர் தனியாக ஒரு சங்கத்தை வைத்து நடத்திக் கொள்ளலாம். ஆனால், சரித்திரம் பயிலும் மாணவ-மாணவியரை இணைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கலாம், பதிப்பிக்கலாம் என்ற ஒரே தூண்டுதல், கவர்ச்சி மற்றும் தேவையை வைத்துக் கொண்டு, அவர்களை வரவழைத்து, உறுப்பினர்கள் ஆக்கி, சான்றிதழ் கொடுக்கிறேன், ஆய்வுக் கோவை புத்தகத்தில் வெளியிடுகிறோம் என்ற ஆசையைக் காட்டி கூட்டத்தைச் சேர்க்கின்றனர். ஆங்கிலம் தெரியாமல், பார்த்துப் படிக்கக் கூட முடியாமல்……………….தவிக்கும் மாணவ-மாணவியர் கட்டுரை வாசிப்பது விசித்திரமாக, திகைப்பாக, வருத்தமாக இருக்கிறது. சுப்பராயலு இதனை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டி விட்டார். இவ்வாறு படிப்பு, ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திறன், சரித்திர வரைவியல் முறை, என்று செல்லாமல், சந்தர்ப்பவாதம் மற்றும் இதர காரணங்களை வைத்துக் கொன்டு அடத்தப் படும், இத்தகைய கூட்டங்களுக்கு நாளடைவில் வரவேர்பு குறைந்து விடும். சரித்திரம், சரித்திர பாடம் மீதுள்ள மரியாதையும், மதிப்பும், ஆர்வமும், ஏன் முக்கியத்துவமும் போய் விடும். எனவே, பொறுப்புள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

29-08-2022


[1] வேதபிரகாஷ், தென்னிந்தியவரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!, பிப்ரவரி 2, 2020.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1)

ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College – G.T.Narayanaswamy Naidu): ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்[1].  இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது[2]. அதாவது 58 வருடம் பழமையான கல்லூரி. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைவுபெற்றது. இது ஒரு தெலுங்கு மொழி சிறுபான்மையினர் கல்லூரியாகும். 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. இக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது. திண்டுக்கல்லின் சவுந்தராஜா மில்ஸ் பி லிமிடெட் அறக்கட்டளையால் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு கடந்த இரண்டு நாள்களாக (27-08-2022, 28-08-2022) நடைபெற்று வந்தது. 27-08-2022 அன்று திண்டுக்கல் கலெக்டர், எஸ். விசாகன் I.A.S துவக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் “ஏதோ அல்லது எதிர்பாராத காரணங்களுக்காக” வரவில்லை. இதனால், முன்னாள், அழகப்பாப் பல்கலைக் கழக துணைவேந்தர், என்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சரித்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விலாக்கிப் பேசினார். பிறகு, காங்கிரஸின் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டு, மரியாதை செய்யப் பட்டது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், சரித்திரவரைவியல் மற்றும் கடல்சார் படிப்பியல் முதலியப் பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. பெரும்பாலான கட்டுரைகள், உப்பு-சப்பில்லாமல், அரைத்த மாவையே அரைத்த விசயங்களாக இருந்தது. இணைதளத்தில் 40 வருட ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு கிடைக்கப் பெறுகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தாலே, எவ்வாறு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய வரலாற்று மாநாடுநிறைவு நாள் விழா: அதன் நிறைவு விழா 29-08-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா். மைப்பாளர்கள் 1600 என்று குறிப்பிட்டனர். மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தெலுங்கு பல்கலை கழக முன்னாள் முதன்மையா் சென்னா ரெட்டி பேசியதாவது[3]: “இந்திய வரலற்றுப் பேரவை [IHC]யில், தென்னிந்தியர்களுக்கு உகந்த முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை, ஓரங்கட்டப் படுகிறார்கள் என்று தான், இந்த தென்னிந்திய வரலாற்று பேரவை [SIHC], உண்டாக்கப் பட்டது. பிறகு, தமிழ்நாட்டு  வரலாற்று பேரவை [TNHC], உருவானது. கேரள [KHC], கர்நாடகா [KHC], ஒரிஸா [OHC], மஹாராஷ்ட்ரா [MHC], பஞ்சாப் [PHC],ஆந்திரா [APHC], தெலிங்கானா [THC], என்றெல்லாம் மாநிலத்திற்கு ஒன்று உருவாகியுள்ளது. இதனால், இந்திய சரித்திரம், மாநில ரீதியில் எழுதப் பட்டு வருகிறது.…………………..இளம் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் தொன்மையையும் கண்டறிந்து புதுமையுடன் மெருகேற்ற வேண்டும். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னிந்திய வரலாற்றுப் பேரவை சார்பில் 40 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக மாநாடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன. வரலாற்று மாணவா்கள்,தொல்லியல், கல்வெட்டுத்துறை போன்ற அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு தங்களை தயார் செய்ய வேண்டும்,” என்றார்[4]. இதில், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாச்சார வரலாறு மற்றும் கடல்சார் வரலாறு தொடா்பான 1210 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு தேர்தலும் பிரச்சினைகளும்: மாநாட்டின் நிறைவாக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை நிர்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. பிரச்சாரத் துண்டுகள், நோட்டீஸுகள் விநியோகிக்கப் பட்டன. இருவர் டிஜிட்டல் பேனரைக் கூட கட்டி வைத்திருந்தார். ஓட்டுப் போட பிரச்சாரம், முதலியவை அதிகமாகவே நடைப் பெற்றன. ஊடகக்காரர்களுக்கு தெரிவிக்கப் பட்டதாவது – அதில், கா்நாடகப் பல்கலை. பேராசிரியா் சந்திரசேகா் தலைவராகவும், சாத்தூா் எஸ்ஆா்என்எம் கல்லூரி முதல்வா் கணேஷ்ரோம் பொதுச் செயலராகவும், ஜிடிஎன் கல்லூரி முதல்வா் பொருளாளராகவும், கோழிக்கோடு பல்கலை. பேராசிரியா் சிவதாசன் பதிப்பாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 2 துணைத் தலைவா்கள், ஒரு இணைச் செயலா் மற்றும் 15 நிர்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா், என்று “தினமணி” முடித்துள்ளது. ஆனால், அந்த தேர்வு / தேர்தல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, தேர்தல் முறையாக நடத்தப் படவில்லை, மற்றும் தேர்தல் நடத்திய பொறுப்பாளர்களே, குறிப்பிட்ட போட்டியிட்ட நபர்களுக்கு சார்பாக வாக்களிக்க பிரச்சாரம் செய்தனர் மற்றும் கள்ளத்தனமாக ஓட்டுப் போட்டனர் என்றெல்லாம் தெரிவித்தனர். மெத்தப் படித்த பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டனர் என்பது வியப்பாக இருக்கிறது.

28-08-2022 ஞாயிற்றுக் கிழமை நிறைவு விழா: இன்றைய மக்களின் வாழ்க்கையும் புதிய கண்டுபிடிப்புகளும் நாளைய சந்ததியினருக்கு வரலாறாக மாறுகிறது. பண்டைய தமிழர்களின் நாகரீகம், கலசாரம், வாழ்க்கை முறை, பண்பாடு உள்ளிட்டவற்றை பிற்காலத்தினர் அறிந்துகொள்ள வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் வரலாறு. வரலாறு இல்லையென்றால் தமிழகத்தை ஆண்ட வீர மன்னர்கள், உலகம் போற்றும் சிற்பங்கள் பற்றி அறியாமலேயே போயிருப்போம். இன்றளவிலும் தொல்லியல் துறையினர் தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தி முற்கால தமிழர்கள் வழிபட்ட கடவுள் சிலைகள், பயன்படுத்திய பொருட்களை கண்டறிகின்றனர். கண்டறியும் பொருட்களை வைத்து காலத்தை அறிகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயில், சித்தன்ன வாசல் சிற்பம், மாமல்லபுரம் உள்ளிட்டவை வரலாற்றை எடுத்துரைக்கும் பீடமாக இன்றும் திகழ்கிறது. படிப்பிலும் வரலாற்றை படிக்க வரலாற்று துறை உள்ளது. அதிலும் மாணவர்கள் ஆர்வமாக படித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அத்தகைய வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் தென் இந்திய வரலாற்று பேரவை மாநாடு கல்லுாரி சேர்மன் ரத்தினம் தலைமையில் மூன்று நாள் நடந்து வருகிறது[5]., என்று தினமலர் முடித்து, கலந்து கொண்ட சிலரின் கருத்துகள் பின்வருமாறு[6] என்று  வெலியிட்டுள்ளது:

© வேதபிரகாஷ்

29-08-2022


[1]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF

[2] https://dindigul.nic.in/ta/public-utility/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமணி, தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு, By DIN  |   Published On : 28th August 2022 10:52 PM  |   Last Updated : 28th August 2022 10:52 PM  .

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2022/aug/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1210-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3906392.html

[5] தினமலர், வரலாற்றை சிறப்பித்த பேரவை மாநாடு, Added : ஆக 27, 2022  05:19 ; Added : ஆக 27, 2022  05:19.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3109293

சரித்திரம் / வரலாறு, சரித்திர வரைவியல், சரித்திர வரைவியல் சித்தாந்தம், பாடதிட்டம், புதுப்பிக்கும் முறை – வலது சாரிகளால் என்ன சாதிக்கப் பட்டுள்ளது?

செப்ரெம்பர் 18, 2020

சரித்திரம் / வரலாறு, சரித்திர வரைவியல், சரித்திர வரைவியல் சித்தாந்தம், பாடதிட்டம், புதுப்பிக்கும் முறை – வலது சாரிகளால் என்ன சாதிக்கப் பட்டுள்ளது?

 

இந்திய வராலாற்றுப் பேரவையில் வலதுசாரிகளின் செயலற்றத் தன்மை: இந்திய வராலாற்றுப் பேரவை / இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress), கடந்த 79  ஆண்டுகளாக செயல் பட்டு வருகின்றது. தலைசிறந்த இந்திய மற்றும் அயல்நாட்டு சரித்திராசியர்களும் இதில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படிப்பது, சிறப்பு சொற்பொழிவுகள் அளிப்பது என்று நடந்து வருகிறது. இதில் வலதுசாரிகளின் பங்கு மிகக்குறைவே. பேராசிரியர் குரோவர் [Prof. B.R. Grover[1] (1923-2001)] இருந்த வரையில், பொதுக்குழுக் கூட்டங்களில் (General Body Meeting), கம்யூனிஸ-முகமதிய சரித்திராசிரியர்களின் (Marxist-Mohammedan) ஆதிக்கம், பொறுப்பற்ற முறையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது, தனது நிலை மறந்து, அரசு, அரசாட்சி, நிர்வாகம் முதலியவற்றில் ஏதோ அதிகாரம் இருப்பது போல, ஆணைகள் இடுவது போன்றவற்றை எடுத்துக் காட்டி, கேள்விகள் கேட்டு முறைப்படுத்தி வந்தார். இதைக் கண்டு பொறுமிய இடதுசாரி சரித்திராசிரியர்கள் அமர்தியா சென் (Amartya Sen) போன்றோரை வைத்து விமர்சித்தனர்[2]. ஆனால், குரோவர் அவருக்குத் தகுந்த பதில் அளித்தார். அவர் 2001ல் காலமானப் பிறகு, அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. கே.எல். டூடேஜா மற்றும் கபில்குமார் சில கூட்டங்கைளில் கேள்விகள் கேட்டு வந்தார்கள், பிறகு அடங்கி விட்டார்கள். ஒப்புக்காக, தென்னிந்தியாவிலிருந்து, ஒன்று அல்லது இரண்டு பொதுக்குழு உறுப்பினர்களை (executive members) சேர்த்துக் கொண்டு, ஹிட்லரை விட மோசமாக நிர்வாகித்து வந்தனர்[3]. இனி அகரெமிக்ஸ் / அறிவுசார்ந்த கல்விமுறை, சரித்திர ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரை தேர்ந்தெடுப்பு, பதிப்பு என்றெல்லாம் வரும் போது, அவர்களது பாரபட்சத்தை தாராளாமாகப் பார்க்கலாம்.

 

இந்திய வரலாறு பிரிக்கப் படும் முறையும், பாரபட்சமும்: இந்த அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் (அடதுசாரி வகையறாக்கள்) மற்றும் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்தி வருவது தெரிந்த விசயமே.

ஆரம்பகாலங்களில்,

  1. பழங்கால இந்தியா (Ancient India)
  2. இடைக்கால இந்தியா (Medieval India)
  3. நவீன இந்தியா (Modern India)

என்றுதான், மூன்று பிரிவுகளாகப் பரிக்கப் பட்டு ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப் பட்டு வந்தன. பிறகு அகழ்வாய்வு சேர்க்கப் பட்டது.  “இந்தியா அல்லாத மற்ற நாடுகள்” என்றும் சேக்கப் பட்டது.

  1. பழங்கால இந்தியா
  2. இடைக்கால இந்தியா
  3. நவீன இந்தியா
  4. அகழ்வாய்வு (Archaeology)
  5. இந்தியா அல்லாத மற்ற நாடுகள் (Countries other than India).

இப்பொழுது, இப்படி உள்ளது:

  1. பழங்கால இந்தியா
  2. இடைக்கால இந்தியா
  3. நவீன இந்தியா
  4. இந்தியா அல்லாத மற்ற நாடுகள்.
  5. அகழ்வாய்வு.
  6. இக்கால இந்தியா (Contemporary India)

என்றுள்ளது. பழங்கால இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சரிசெய்ய, இவ்வாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. ஆக, மறுபடியும், “பழங்கால இந்தியா” ஒதுக்கப் பட்டுள்ளது. அப்படியே, ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களது, தொகுப்பில் வெளியிடும் பொழுது, அவை, பழங்கால இந்திய நிலையை விமர்சிக்கும் போக்கில் தான் உள்ளது.

இடது-வலது சரித்திராசிரியர்களின் திறமை, அதிகாரம் மற்றும் ஒற்றுமை: ரோமிலா தாபர், சதீஸ் சந்திரா, இர்பான் ஹபீப், ஶ்ரீமாலி, பருன் டே என்று இந்த மர்க்சிஸ்ட்-முகமதிய வரலாற்றாசிரியர்கள் தான் கோலோச்சி வந்தனர். அதனால், அவர்களது கட்டுரைகள், எழுத்துகள் பெரும்பாலும் புத்தகங்களில், பாடப் புத்தகங்களில், பாடதிட்டங்களில் இருந்து வந்தன, வந்துள்ளன, வருகின்றன. அவர்களுக்கு இணையாக, வலதுசாரி சரித்திராசிரியர்கள் ஆதிக்கத்தைப் பெறவில்லை. பி.பி. லால், பி.ஆர்.குரோவர், அஜய் மித்ர சாஸ்திரி, எஸ்.ஆர்.ராவ், கே.வி.ராமன், போன்ற தலைசிறந்த சரித்திராசிரியர்கள்-அகழ்வாய்வு நிபுணர்கள் இருந்தும், அவர்கள் மதிக்கப் படவில்லை. எந்த மாநாட்டிற்கும் வரவேற்கப் படவில்லை[4]. ஒதுக்கப் பட்டனர். இப்பொழுது, இந்துத்துவ வாதிகள் அதனை தமக்குள்ளேயே செய்து வருகின்றனர். அதாவது, அவர்களுக்கு இருக்கும் திட்டம், தொலைநோக்குப் பார்வை, திறமை முதலியவை இந்துத்துவ வாதிகளுக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ், சித்தாந்தம் என்றெல்லாம் பேசி வந்தாலும், இவர்களைப் போன்ற நிபுணத்துவம், கல்வி-திறமை, ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றல், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தல் முதலியவை முடியவில்லை.

வலதுசாரி (Rightist), மத்திய வகைக்களின் (Centric / neutral) சமரசம், மௌனம் முதலியன: பேராசிரியர் குரோவர் காலமானப் பிறகு, இவர்களுக்கு குளிர் விட்டுப் போயிற்று. பாரதீய இதிஹாஸ சங்கலன சமிதி சார்பில், ஶ்ரீராம்சாதே (Sri Ramsathe) என்பவர் இருக்கும் வரை, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் நடக்கும் டிசம்பர் 28, 29 மற்றும் 30 தேதிகளுக்கு முன்னதாக, டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தேசிய சரித்திர மாநாடு நடத்தப் பட்டு வந்தது. அதாவது, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் மாநாட்டிற்கு வருபவர்கள் போக்குவரத்து செலவு இல்லாமல், இதில் பங்குக் கொண்டு, முடித வரை, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸில் எப்படி ஆய்வுக் கட்டுரை படிப்பது, கேள்விகள் கேட்டால் எதிர்கொள்வது, எதிர்சித்தாந்திகளை எதிர்கொள்வது, பொதுக்குழுவில் சேர தேர்தலில் நிற்பது என்று பலவித முக்கியமான விசயங்களும் பேசப் பட்டன. ஆனால், அவருக்குப் பிறகு, அது நின்று விட்டது[5]. முன்னரே குறிப்பிட்டபடி, வலதுசாரி சித்தாந்த சரித்திராசிரியர்கள், முகமூடிகளை அணிந்து கொண்டு, பெரும்பாலும், மார்க்சிஸ்ட் (இடதுசாரி வகையறாக்கள்) மற்றும் முகமதியர் கூட்டங்களோடு சேர்ந்து, சமரசம் செய்துக் கொண்டு, அனுசரித்துச் செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில், அப்பொழுது தான், அவர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும். பொதுக்குழு உறுப்பினர் பதவி கிடைக்கும், இல்லையென்றால், யாரும் சீண்ட மாட்டார்கள். இந்நிலையில், சமூக ஊடகங்களில், மற்ற இடங்களில் வீராப்புக் காட்டும், சுயபிரகடன சரித்திராசிரியர்கள், இந்துத்துவ சரித்திரப் பண்டிதர்கள், மற்ற வலதுசாரி வகையறாக்கள், குண்டு சட்டியில் அல்லது அவர்களுடைய வட்டங்களில் குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

2014 முதல் ஒன்றும் நடக்கவில்லை: முன்னர் வாஜ்பாயி ஆட்சி காலத்திலும் (1999-2004), இப்பொழுது மோடி ஆட்சி காலத்திலும் (2014-2020), இவ்வவிசயங்களில் ஒன்றும் நடக்கவில்லை. ஆட்சி-அதிகாரம் இருந்தும், UGC, NCERT, IHC, ICCSR, IPS போன்றவற்றில் தலைவர், உறுப்பினர் என்று பொறுப்புகளைக் கேட்டு வாங்கிக் கொண்டாலும், அவர்கள் தங்களது நிலைகளை உயர்த்திக் கொண்டார்களேத் தவிர, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸின் எதேச்சாதிகாரத்தை உடைக்க முடியவில்லை. அத்தகைய வலதுசாரி உறுப்பினர்களை வைத்துக் கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. மாநாட்டிற்கு வருவதும் இல்லை, ஆய்வுக் கட்டுரைகள் படிப்பதும் இல்லை, வலடுசாரி சிந்தனைக் கொண்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளூம் போது அவர்களுக்கு உதவுவதும் இல்லை. சரித்திர பாடத்திட்டமும் மாற்றப் படவில்லை. உச்சநீதி மன்றம், “இந்துத்துவ தீர்ப்பு”  என விமர்சிக்கப் படும் தீர்ப்பு வந்த பிறகும், ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில், மற்ற இடங்களில், எல்லாமே இந்தியா தான் என்று பிரசாரம் செய்கிறார்கள். இதை அவர்கள் தான் பார்த்து, படித்து, கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

16-09-2020


[1] B. R. Grover was an Indian historian specialising in medieval Indian history.He was a professor of history at the Jamia Millia Islamia University.

He served as the Director of Indian Council of Historical Research (ICHR) for 11 years and was appointed as its Chairman in 1999 on a three-year term.

He died of a heart attack in 2001 while serving as the Chairman of the ICHR.

Five volumes of Collected Works of Professor B. R. Grover have been published posthumously by Books for All.

[2] India Today, Nobel laureate Amartya Sen versus ICHR chairman B.R. Grover, January 15, 2001, ISSUE DATE: January 15, 2001UPDATED: November 19, 2012 17:46 IST.

https://www.indiatoday.in/magazine/indiascope/vis-a-vis/story/20010115-nobel-laureate-amartya-sen-versus-ichr-chairman-b.r.-grover-776804-2001-01-15

[3] That is why some historians broke away and started SIHC. South Indian History Congress was started on 2nd December 1978 by Prof. K.K.Pillay as first President and Prof. K.Rajayyan as founder General Secretary at the School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai – 625021,. It was registered under the Societies Act at Madurai in 1979 with Reg.No.32/1979. The Central Office of the Congress is established at School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai. The first inaugural conference of this Congress was held at Madurai Kamaraj University Campus in February 1980.

[4]  Many unknown, less qualified and even asst.professors without PhD and such other persons were nominated for the sectional presidents, just because, of the ideology followed. If one goes through the names, the fact could be easily found out.

[5]  இப்பொழுது இருக்கும் ஆட்கள் அகம்பாவம், ஆணவம், பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்ற தோரணைகளுடன் இருந்து, செயல்பட்டு, இருக்கும் ஆராய்ச்சியாளர்களையும் இழ்வு படுத்தி வருகின்றனர். பெயர்களை சொல்ல வேண்டிய அவசியல் இல்லை, ஏனெனில், கடந்த 40 ஆண்டுகளில் அவர்களால் எந்த ஆராய்ச்சியும் வெளிப்படவில்லை.