Posts Tagged ‘அத்தாட்சி’

அரேபிய நபாத்தியர்கள் யானை சிற்பங்கள் வடித்தது எப்படி, மலைக்கடவுள்-சந்திர பெண்கடவுளை வணங்கியது எப்படி?

செப்ரெம்பர் 15, 2016

அரேபிய நபாத்தியர்கள் யானை சிற்பங்கள் வடித்தது எப்படி, மலைக்கடவுள்சந்திர பெண்கடவுளை வணங்கியது எப்படி?

arabia-jordan-iraq-iran-india-location

பழங்கால நாகரிகங்களுக்கும் அரேபியாவுக்கும் உள்ள தொடர்புகள்: அரேபிய தீபகற்பம் வடக்கில் ஜோர்டான், இஸ்ரேல், லெபனான், சிரியா, இராக் முதலிய நாடுளும், கிழக்கில் இரான், பாரசீக வளைகுடா, ஓமான் நபாதியர், முதலிய நாடுளும், தெற்கில் யாமன் மற்றும் மேற்கில் எகிப்து, சூடான், எரித்ரியா முதலிய நாடுளும் சூழ்ந்துள்ளன. சிரியாவிற்கு மேலாக துருக்கி இருக்கிறது. இதன் கிழக்கில் கிரீஸ் மற்றும் கிழக்கில் இரான் இருக்கின்றன. இப்பகுதிகளில் தான் பழங்கால நாகரிகங்கள் சிறந்து விளங்கின. அப்பொழுது, இந்நாகரிகங்களுக்கு இடையே தொடர்புகள் இருந்துள்ளன. ஆனால், புதிய நாகரிகங்கள் தோன்றி, சுமார் 500 BCE வாக்கில், கிரீஸ், பாரசீகம் இந்தியா, சைனா போன்ற நாகரிகங்கள் சிறப்புடன் இருந்ததாக பேசப்படுகிறது. இருப்பினும், கிரேக்க நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு, நாகரிக சந்திப்புகள் விளக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு முன்பும், மக்கள் பலவழிகளில் தொடர்பில் இருந்தனர். இதுவரை, கிரேக்க-ரோம கலாச்சாரங்கள் மற்றும் இந்திய கலாச்சாரங்களில் யானையுடன் இருந்த விவரங்கள் விளக்கப்பட்டன. கிருத்துவ மற்றும் முகமதிய நாகரங்களில் இடைக்காலத்தில் இருந்த யானையின் கலாச்சாரம் எடுத்துக் காட்டப்பட்டது, இனி, அரேபிய கலாச்சாரத்தில், யானை வந்தது எப்படி என்று பார்த்தோம். இனி, மற்ற அரேபிய பகுதிகளைக் கவனிப்போம்.

%e0%ae%b9%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%85-%e0%ae%9aஇந்தியசீன நாகரிகங்கள் தொடர்ந்து இருந்து வருவது: 3102 BCE வாக்கில், மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, இந்நாகரிகங்கள் மறைய ஆரம்பித்தன. யுத்தத்தில் பங்குகொண்ட அரசர்கள், படைகள் முதலியன அவரர்வர் வந்த நாடுகளுக்குத் திருமொஇச் சென்றனர். யுத்தத்தில் உறவினர்களாக, நண்பர்களாக, நெருங்கியவர்களாக இருந்தாலும், ஒருவரையொருவர் எதித்துப் போரியட்டதால், பகைமை பாராட்ட வேண்டிய  நிலையும் ஏற்பட்டது. இதனால், ஒரே நாட்டினர், குடும்பத்தினர், பிரிவினர், பிரிந்து தனுத்தனியாகினர். 2250-1950 BCE வரை சிந்து சமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்து, திடீரென்று மறைந்து விட்டது. 1450 BCE வாக்கில் எகிப்திய, ஹிட்டைட், மிட்டானி, அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களால் சூழப்பட்டிருந்தன.  அவைகளும் மறைய ஆரம்பித்தன. இக்காலத்தைய பகோஸ்கோய் [Bogozkay inscription (c.1450 BCE)[1]] என்ற இடத்தில் இருந்த மக்கள் பக்கம் உள்ளூர் கடவுளர் மற்றும் இந்தரசீல், மித்திரசீல், வருணசீல், நசாத்தியா என்று மற்ற கடவுளர்களையும் வணங்கி வந்ததாக, அங்கு கிடைத்த கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது[2]. அதற்கு பிறகு, பழைய நாகரிகங்கள் மறைந்து, புதிய உருவில் உருமாறின. சுமார் 500 BCEவாக்கில் அவை கோலோச்சின. உண்மையில் சைனா-இந்திய நாகரிகங்கள் உலகில் தொடர்ந்து இருந்து வருகின்றன.  எகிப்திய, ஹிட்டைட், மிட்டானி, அசிரிய, பாபிலோனிய நாகரிகங்கள் மறைந்து விட்டாலும், இந்த இரண்டு நாகரிகங்கள் வாழும் நாகரிகங்களான உள்ளன.

dushara-lord-of-the-mountain-also-transliterated-as-dusaresநபாதியர் யார்அவர்களது மூலம் மர்மமாக, தெரியாமல் இருக்கிறது: அந-பாதியர் [الأنباط‎‎ al-ʾAnbā ] அரேபியர்கள் தாம். அவர்கள் அரேபியாவின் வடபகுதி மற்றும் கிரேக்க-இத்தாலி நாடுகளிலும் முதல் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்து வந்தனர். யூப்ரடீஸ் நதிமுதல் செங்கடல் வரை பரவியிருந்தனர். வியாபாரிகளாக இருந்த அவர்கள், பாலைவனங்களில் தங்குமிடங்களை நிர்வகித்து வந்தனர். கிரேக்க-ரோமானியர்கள் கிழக்குப் பக்கம் [இராக், இரான், ஆப்கானிஸ்தான், இந்தியா] செல்ல வேண்டுமானால், இவர்களது ராஜ்ஜியம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.ஆதேபோல, அரேபியர் தெற்கிலிருந்து, வடமேற்காக செல்ல வேண்டுமானால், இவர்களைக் கடந்து தான் செல்லவேண்டும். நபாதியர், பெதுவின் மக்களைப் போன்று, நாடோடிகளாக வந்த மக்கள், ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. அரேபியாவின் தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்த அரேபியர் என்றும் சொல்லப்படுகிறது. கற்பூரம், சாம்பிராணி, போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் யானை தந்தம் முதலியவற்றில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

nabataean-goddess-atargatis-northern-syriaதுஸ்ஹாரா மற்றும் அல்உஜ்ஜா கடவுளர்கள்: நபாத்தியர்கள் பலவித கடவுளர்களை வழிபட்டு வந்தாலும், துஸ்ஹாரா [Dushara] மற்றும் அல்-உஜ்ஜா [al-‘Uzzá] கடவுளர்களை வழிபட்டு வந்தது தெரிகிறது. துஷாரா [الشرى‎‎, “Lord of the Mountain” என்றால் “மலையின் கடவுள்” என்று பொருள்.  துஷாரா துசாரெஸ், ஜீயஸ், டையோனிசியஸ் போன்ற கடவுளர்களுடனும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது[3]. இதனால், அது இந்திய கடவுள் சிவனை ஒத்துள்ளது. அல்-உஜ்ஜா [Al-‘Uzzá (Arabic: العزى‎‎] இஸ்லாத்திற்கு முன்னர் அரேபியர் வணங்கி வந்த அல்-லத் மற்றும் அல்-மனத் என்று மூன்று பெண் தெய்வங்களில் ஒன்றாகும். கிரேக்க தெய்வம் ஹைரானியா, வீனஸ் [Aphrodite Ourania (Roman Venus Caelestis)] போன்ற தேவதைகளுடன் ஒப்புமைப்படுத்தப் படுகிறது. மெக்காவில் அல்-தைஃப் என்ற இடத்தில் இருக்கும் சதுரப்பெட்டக வடிவில் இருக்கும் உருவம் இத்தெய்வம் தான். குரானிலும் [Qur’an Sura 53:19] இவைப்பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளன. இத்தாலியிலும் இக்கடவுளின் உருவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் முதல் நூற்றாண்டுகளில் அப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற தெய்வமாக இருந்தது தெரிகிறது.

elephant-rock-near-el-bared-natural-stone-sculpture-little-the-capital-city-of-the-nabataeans-rock-cityகல்-நகரம், கல்லால் ஆன நகரம், மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் “பெட்ரா”:  நபாத்தியர் தூண்கள், கற்பாறைகள், முதலியவற்றில் கடவுள் இருந்ததாக நம்பினர். மலயுச்சிகளை அப்படியே கடவுள் உருவத்தில் செதுக்கி அர்பணித்து, கடவுளாகவே பாவித்து வழிபட்டனர். மலைகளைக் குடைந்து கட்டிடங்களையே உருவாக்கியத் தன்மைதான் “பெட்ரா” கல்-நகரம், கல்லால் ஆன நகரம் என்ற பெயரையே கொடுத்தது. 168 BCE முதல் 106 CE வரை ஆண்ட நபாத்திய அரசர்கள் இதை உருவாக்கியுள்ளனர். பெட்ரா என்ற இடத்தில் ஒரு பழைய நகரம் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்தன. பெரிய தூண்களால் ஆன மண்டபங்கள், குடவரை மாளிகைகள், கோவில்கள், இடிந்த நிலையில் காணப்பட்டன. நீண்ட தூண்களின் அமைப்பில் கிரேக்க-ரோமானிய தாக்கம் தெரிகிறது. பல இடங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்ட நிலையும் காணப்படுகிறது. சில சிற்பங்களைப் பார்க்கும் போது, இந்திய தாக்கமும் நன்றாகவே தெரிகிறது.

nabataean-elephants-pillarபெட்ராவில் காணப்படும் சில சிற்பங்கள், இந்தியத் தாக்கத்தைக் காட்டுகின்றது: பெட்ராவில் காணப்படும் சிலைகள், சிற்பங்கள் முதலியற்றை வைத்து, இந்துமத தாக்கத்தை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. கிராம் ஹாங்காக்[5], பிபுதேவ மிஸ்ரா[6] இவர்களின் தளங்களில் அத்தகைய விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்நாகரிகம், ரோமானியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்டதாலும், பிறகு இஸ்லாமியர் பலவற்றை அழித்து விட்டதாலும், இருக்கின்ற சிலைகள், சிற்பங்கள் முதலியற்றை வைத்து தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஆனால், இஸ்லாத்திற்கு முந்தைய கவிதைகள், கதைகள் மற்றும் இதர எழுத்துகள், இஸ்லாத்திற்கு பிறகு குரான், ஹதீஸ், ஷரீயத் மற்றும் எஞ்சியுள்ள கவிதைகள், கதைகள், இதர எழுத்துகள் மற்றும் சித்திரங்கள் முதலியவற்றை வைத்து, தொடர்புகளை ஆராய்ச்சி செய்யலாம். நபாத்தியரின் அட்ராகாடிஸ் [Atragatis] என்ற பிரதான தேவதை பொறித்த பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இதைப் பார்க்கும் போதே, இந்திய பெண்தெய்வத்தின் தொடர்பை கண்டு கொள்ளலாம். டைகி [Tyche] என்ற தேவதையின் சிற்பமும் அவ்வாறே உள்ளது. வலது பக்கத்தில் பிறை மற்றும் இடது பக்கத்தில் சூலம், வேல், அம்பு போன்றவை காணப்படுகின்றன. மேலும், சுற்றி 12 ராசிகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன[7].  ஆனால், அவற்றில் வழக்கமான கிரமமுறையில் இல்லை.

baetyl-depicted-with-a-lunar-crescent-on-the-topகற்களால் ஆன நீளுருண்டை வடிவங்கள் முதலியன: பேடெல் [Baetyl] எனப்படுகின்ற பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட சிற்பங்கள் போன்றுள்ளது. பேடெல், பெத்-ஏல் [Beatyl, Beth-El, house of god, Bethelhem] போன்ற சொற்கள் “கடவுளின் வீடு”, தெய்வம் உறையுல் இல், கோவில் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. யுரேனஸின் மகனின் பெயரே பெடேலுஸ் என்றுள்ளது. இக்கற்கள் தாமாக உண்டானவை மற்றும் வானத்திலிருந்து விழுந்த எரிகற்கள் என்றும் உள்ளன. தெய்வத்தன்மைக் கொண்ட கற்கள் என்பதால், அவற்றிற்கு சக்தி உள்ளது என்றும் மக்கள் நம்பினார்கள்[8]. பெட்ராவைப் பொறுத்தவரையில் அங்கிருக்கும் கல்வெட்டுகள், அல்-உஜ்ஜா தான் கடவுள் என்று குறிப்பிட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டு, இது போஸ்ராவில் உள்ள அல்-லத் என்று குறிப்பிடுகிறது[9].  அதாவது படிப்படியாக, அசிரிய, பாபிலோனிய, ரோமானிய, இஸ்லாமிய நாகரிகங்களின் தாக்கம் தெரிகிறது. இவையெல்லாம் மேலாக இருந்தாலும், உள்ளே, மலைகளில், மலைப்பாறைகளில், குடவரை கட்டிடக்களில், சிற்பக்களில், சுமண் சிற்பங்களில், பழங்கால இந்தியாவின் தாக்கம் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2016

petra-snake-mountain-another-view-an-elephant-god

[1] Boğazkale is a district of Çorum Province in the Black Sea region of Turkey. It is located at 87 km from the city of Çorum. The population of the town is about 1,500. The mayor is Osman Tangazoğlu (AKP). Formerly known as Boğazköy or Boghazköy,

[2] Fournet, Arnaud, and Allan R. Bomhard. The Indo-European Elements in Hurrian, in” La Garenne Colombes/Charleston (2010).

[3] Patrich, Joseph. Was Dionysos, the wine-god, venerated by the Nabataeans?ARAM Periodical 17 (2005): 95-113.

[4] http://www.viewzone.com/petra.html

[5] Bibhu Dev Misra, Petra, Jordan – Is it an ancient Shiva Temple complex?, https://grahamhancock.com/dmisrab4/

[6] Bibhu Dev Misra, Olmec Yogis with Hindu beliefs: Did they migrate from ancient China?, http://www.bibhudevmisra.com/

[7] Belmonte, Juan Antonio. “Petra revisited: New clues for the Nabataean cultic calendar.” European Society for Astronomy in Culture: 9.

[8] The term “baityl/baetyl/betyl” derives from the Greek ßanUAla. Philo of Byblos (FGrHist 790 F 2,23) in the second century A.D. explains that ßatTUAta were invented by the god Ouranos when he managed to create AlBot EJ.1\jfUXOt, meaning animated stones, which fell from the heavens and possessed magical power.

[9]  The worship of Allat in an Arabian tradition which is also found in the Hawran (CIS II no. 185; the reading °m / “Ihy”, “the mother of the gods,” is not accepted by all scholars; cf. further the votive niche of Allat-Atargatis [Daiman 1908: no. 149, fig. 681 with features of the mother goddess; cf. Krone 1992: 339-42). AI-cUzza seems to be the great mother goddess in Petraean mythology as reflected in a late source (Epiphanius of Salamis, Panarion 51, 22, 9-/1; cf. Cook 1940: 912-16). The related figurines of a goddess and a child among the Nabataean terracottas (I. Parlasca 1997: 127-28, figs. 139-40) may be taken as an earlier indication for this tradition.

அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது!

செப்ரெம்பர் 13, 2016

அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது!

vinayaka-jesus-muhhamad

உலக மதங்களை ஒப்பீடு செய்தல், சம்பந்தப்படுத்துதல்: உலகமதங்களை ஒப்பீடு [Study of comparison of religions / Comparative religion] செய்து ஆராய்ந்தால், பலவுண்மைகள் புலப்படும். இந்துமதத்தை மற்றவர்கள் – கிருத்துவர்கள், முகமதியர்கள், நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், ஏன் இந்துவிரோதிகள் ஆராய்ச்சி செய்துள்ளதைப் போன்று, இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், சாதாரண இந்துக்கள் கூட ஆராய்ச்சி செய்ததில்லை. மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன சொன்னார்களோ, எழுதி வைத்தார்களோ அவற்றை வைத்தே, இன்றும் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்துக்களின் பலவீனமாகி விட்டது. மேலும், தன்னைப் பற்றியே படித்துத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்ற “முட்டாள் இந்துக்கள்”, மற்றவர்களைப் பற்றியும் படித்து-தெரிந்து கொள்வதில்லை.

parvati-mary-khadija

இயற்கை மதம் மற்றும் தெய்வீக மதம் உருவானது: மக்களிடையே நம்பிக்கை இருந்தாலும், மதம் திடீரென்று வந்து விடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இயற்கை மற்றும் மக்களுக்கு இடையில் நடந்த போராட்டங்களிலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சதிகள் மற்றும் மக்களுக்கு இடையில் நடந்த சந்திப்புகளிலும், ஏற்பட்ட மோதல்கள், வெற்றிகள், பிறகு அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை முதலிய அனுபவங்கள், காலம்-காலமாக நடந்து கொண்டிருந்த போது, ஒரு நிலையில், நிலைநிறுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருப்பது கண்டபோது, அவை நம்பிக்கைகள் ஆகின. மக்களிடையே அவை பரவி, இயற்கையோடு இயைந்த முறையில் காணும் போது, அவற்றை தனக்கும் மேலாக இருக்கின்ற அந்த சக்திகளை தெய்வங்களாக ஆக்கி [Deification of natural forces] வழிபட ஆரம்பித்தான். இத்தகைய விளக்கங்கள் புரியாதபோது, கடவுள், தெய்வம், முதலியவை உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

abraham-sacrifises-isaac-god-stops-ram-substituted

ஒரே மூலம் மற்றும் ஒன்றிற்கு மேலான மூலங்களிலிருந்து தோன்றியவை என்ற கோட்பாடுகள்[1]: எப்படி, இயற்கையில், நிலப்பரப்பு, நீர்பரப்பு, மலைகள், நதிகள், முதலியவை மாறுபட்டுள்ளனவோ, அங்கங்கிருந்த மக்களும் மாறிய நிலையில் அவற்றை சின்னங்களாக மாற்றும் போதும், தெய்வத்தன்மை கொண்டது போல பாவித்து உருவங்களாக மாற்றியபோதும் [Deification], அவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டன. மக்கள் தானாகவே படைக்கப்பட்டனர் என்ற சித்தாந்தம் படி நோக்கினும் ஒரே மூலத்திலிருந்து பிறந்வர்கள் [monogenous] மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட மூலங்கள் [heterogenus] மூலம் பிறந்தவர்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது[2]. தானாகவே பிறந்தது-தோன்றியது [autogenous] போன்ற சித்தாந்தங்களும் உண்டாக்கப்பட்டன. அவ்வாறே மற்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

abraham-sacrifises-ismeil-god-stops-ram-substituted

ஆண்-தெய்வம், பெண்-தெய்வம், தெவ்வீகக் குடும்பங்கள் உருவானது:  தெய்வீகமாக்கப்பட்ட சின்னங்கள் இயற்கை சக்திகளாக [natural forces] – ஊழி, புயல், வெள்ளம், தீப்பிடித்தல், நிலச்சரிவுகள், பூகம்பம் ஏற்படுதல் – இருந்தன. மிருகங்களும் [animals] மனிதனை வெற்றிக் கொண்டபோது தெய்வங்களாகின [deification of animals]. மனிதர்களுக்குள்ளேயே ஒரு மனிதன் – ஆண் அல்லது பெண் [man / woman] மற்றவர்களைவிட அதிக சக்திகளைக் கொண்டிருக்கும் போது அந்த ஆண் அல்லது பெண் தெய்வமாக்கப் பட்டாள் [deification of man and woman]. இவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட ஆண்-பெண் கடவுளர்களுக்கு தெய்வீக குடும்பமும் [divine family] மேற்படுத்தப் பட்டது. மனிதர்கள் தத்தமது வம்சாவளி கூறுகள் [hereditary] மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை [environmental]  காரணைகளால் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றனர். அதனால் அவர்கள் அப்படியே ஒரெ அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட உருவங்கள் அல்லது உருவ நகல்கள் [identical copies] போன்றிருக்க மாட்டார்கள். அதனால், அவர்களால் பாவிக்கப்பட்ட கடவுளர்களும் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதை முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், எல்லாவற்றிற்கு மூலகாரணமாக [archytype] ஒன்றிருக்க வேண்டும் என்ற சித்தாந்தமும் உருவானது.

abraham-sacrifises-ismeil-god-stops-ram-substituted

பிறப்பு-இறப்பு, பிராயசித்தம்-பலி, பலியிடுதல்-உயிர்ப்பித்தல்: மனிதனை இறைவன் மண்ணிலிருந்து உருவாக்கினான், அம்மனிதனின் விலா எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கினான் என்று யூத, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் கூறுகின்றன. ஆகவே, ஒரேமூலத்திலிருந்து, ஒரே கடவுளிருந்து பிறந்தவர்கள் சகோதர-சகோதரி ஆவர். இருப்பினும், அவர்கள் புணர்ந்து மக்களை உருவாக்கினர். அதாவது, கடவுளின் ஆணையை மீறியதால், சபிக்கப்பட்டு அவ்வாறு மாறினர். அத்தகைய பாவத்தைச் செய்ததால், பிராயச்சித்தமாக இறைவனுக்கு பலி கொடுக்க வேண்டும் என்ற முறை ஏற்படுத்தப் பட்டது. இயற்கையில், பூமியை உழுது, விதை போட்டு, பயிரிட்டு, விளைச்சல் ஏற்பட்டு, அறுவடை செய்யும் போதும், தலைப்பிள்ளையை பலிகொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆகவே, அப்பன்-பிள்ளைகளில் இப்பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது.

abraham-sacrifice-isaac

அப்பன் பிள்லையை பலியிடும் பழக்கத்தில் பிள்ளைக்குப் பதிலாக மிருகம் வந்தது: ஆதாம், ஜெஹோவாவின் ஆணையை மீறிய போது, பிராயசித்தம் எதுவும் செய்யவில்லை. அதற்குத்தான், ஏசுகிறிஸ்து பலியானார் என்றனர். யூதர்களோ எதிர்பார்க்கப்பட்ட நபி இன்றும் வரவில்லை என்று பலியிட்டுக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முகமதியர்களோ அப்ரஹாம், தன் மகன் ஐசக்கையே பலியிட துணிந்தபோது, கடவுள் தடுத்து ஆட்கொண்டதால், மகனுக்கு பதிலான ஒரு விலங்கை பலியிடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. மகனை பலியிட அம்மா, அம்மன், தாய் மறுத்ததாலோ, இல்லை அப்பா, அப்பன், தந்தை ஒப்புக்கொள்ளாதலாலோ, மகனுக்குப் பதிலாக மிருகம் என்று மற்றப்பட்டதொ என்பதும் நோக்கத்தக்கடு. அந்த விலங்கும் எந்த விலங்கு என்று சொல்லப்படாதலால், இடத்திற்கு இடம் மாறி வருகிறது. ஓட்டகம், ஆடு, மாடு, கோழி என்றுள்ளது. ஐசக் யானையை ஏன் பலியிடவில்லை என்று யாரும் கேட்கவில்லை. அந்நிலையில் தான் ஒரு யானையை பலியிட்ட அப்பனின் கதை வருகிறது.

universal-elephant-birth-of-elephant-god-bhisnupur-temple-1694-ce

யானைப்பலி, யானை உயிர்ப்பித்தல் கதைகளின் பின்னணி: சிவன் பார்வதி யானை உருவத்தில் புணர்ந்து பிள்ளையார் உருவான கதை இப்பொழுது எல்லோருக்கும், மிக நன்றாகவே தெரிந்திருப்பதால், அதனை மறுபடியும் விளக்க வேண்டாம். ஆதாம்-ஏவாள் கூட அவ்வாறே யானை உருவத்தில் புணர்ந்து ஒன்றல்ல, இரண்டு பிள்ளைகளைப் பெற்றுள்ளனர். சிவன் பார்வதி ஆணையின் படி தடுத்த விநாயகரைக் கொன்றார். பலியிட்டார். யானைக்குப் பிறந்தது, யானையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், பலியான பிள்ளையை உயிர்த்தெழ செய்யும் போது, ஆண்டவர் யனைத்தலை வைத்து உயிப்பித்தார் என்றுள்ளது. அதாவது, இறந்து புதைக்கும் போது ஒரு உடல் இருக்கும், இறுதி தீர்ப்பு நாளன்று உயிப்பொத்து எழும் போது, வேறு உடல் இருக்கும் என்பதை குறிக்கிறது போலும். ஆதாமும், ஏவாள் காரணத்தால் தான் கடவுளிடம் கோபத்தைப் பெற்று, பாவியாகிறான். அவர்களுக்குப் பிறந்த கைன் மற்றும் ஆபெல் பிள்ளைகளிடம் ஆண்டவர் பலி கேட்கிறார். இருவரும் பலி கொடுக்கின்றனர். ஆனால், ஆபெல் கொடுத்த பலியை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். இதனால், கோபமுற்ற கைன், ஆபெலைக் கொல்கிறான். அதாவது, மூத்தப் பிள்ளை, இளையப் பிள்ளையை, ஆண்டவருக்கு பலியிடுகிறான். இவற்றையெல்லாம் ஆதாம் பிள்ளை தடுக்கவில்லை.

siva-kiiling-elephant

அப்ரஹாம் ஏன் யானையை பலியிடவில்லை?: ஆண்டவர் / அல்லா / கர்த்தர் / ஜேஹோவா, அப்ரஹாம் / இப்ராஹிம் அப்பனிடம், பிள்ளையை பலி கேட்டபோது, அப்பன் பிள்ளையை பலியிட முயன்றான். ஆண்டவர் அவனது அபரீதமான பக்தியை மெச்சி, பிள்லைக்குப் பதிலாக மிருகத்தைப் பலியிடச் சொன்னபோது, யானையை பலியிடவில்லை. அங்கு யானைகள் கிடைப்பதாக இருந்தால், யானையை பலியிட்டிருக்கலாம். பிறகு யானைப்படை, காபாவை அழிக்க வரும் என்பதால், தீர்க்கதரிசனத்துடன் யானையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. ஏனெனில், பிறகு, யானை காபாவைத் தாக்கவில்லை. மொஹம்மது பிறக்கப் போகின்ற இடம் என்பதால் நின்று விட்டன. பிறகு, யானை வருடத்தில் மொஹம்மது அவதாரம் செய்கிறார். தீர்க்கதரிசனத்தால், இவற்றையெல்லாம் முன்னரே அப்ரஹாம் அறிந்ததால், பிள்ளையை விட்டுவிட்டது போல, யானையையும் விட்டுவிட்டனர் போலும்.

siva-beheading-ganesha-and-resurrects

கடவுளின் ஒரே மகன், அறிவுள்ளபுத்திசாலியானசிறந்த மகன் தான் பலிக்கு விஷேசமானவன்: பலிகேட்கப்பட்ட பிள்ளை ஐசக்கா அல்லது இஸ்மாயிலா என்ற கேள்வி எழுகின்றது. யூத-கிருத்துவ மரபு படி, அப்ரஹாமின் ஒரே மகன் தான் பலிக்குக் கேட்கப்பட்டான்[3]. குரானில் [ Qur’ân – from verse 37:99 to verse 37:109] அந்த பிள்ளையின் பெயர் குறிப்பிடப்படவில்லை[4]. ஆண்டவர், மிகவும் அறிவாளி, சிறந்த-குணாவானான மகனைத் தான் பலியாகக் கேட்டார். பிறகு இன்னொரு வரியில் சிறந்த மகன் ஐசக் [37:112] என்றுதான் வருகிறது. இருப்பினும், ஹதீஸ் மற்ற இலக்கிய ஆதாரக்களை வைத்து, அந்த பிள்ளை இஸ்மாயில் என்று தான் தீர்மானம் செய்யப்பட்டது[5]. ஏனெனில், ஐசக் சத்தியப்பிரமாணமாகக் கொடுக்கப்பட்ட பிள்ளை[6], 90 வயதில் அதிசயமாகப் பிறந்த பிள்ளை[7], ஐசக்கின் பிள்ளைகள் தான் அப்ரஹாமின் பூமிக்கு சொந்தக்காரர்கள்[8] என்று தீர்மானிக்கப்பட்டது. அதனால், அந்த அதிசயக் குழந்தைக் காக்கப்படவேண்டும், என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகியது. கைநாபெல் கதை போல, இஸ்மாயில்-ஐசக் கதை உள்ளது. நல்ல பிள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இக்கதையே யூதமதத்திற்கு முந்தையது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

siva-abraham-ibrahim-kiiling-son

உண்மைகள் அறிய படிக்க வேண்டும், உள்ள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்: இக்கதைகளை எல்லாம் படித்துப் பார்த்தால், அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது முதலிவ விவகாரங்கள் நன்றாகவே புரியும். இப்பொழுது ஐசிஸ் ஆதாரங்களை அழித்து வருகின்றது. முன்னர் முகமதியர், கிருத்துவர், யூதர் முதலியோரும், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இடருப்பவற்றை அழித்து அல்லது மாற்றித்தான் வந்துள்ளார்கள். இருப்பினும், கடந்த 300 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் உண்மைகளை எழுதி வைத்திருப்பதால், அவை மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு உபயோகமாக இருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, இந்திய கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் முதலில் இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான், அவர்கள் இந்துக்களை விமர்சிக்க மாட்டார்கள். நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள் வகையறாக்கள் 100% உண்மைகளை சொல்ல-எழுத வேண்டும். அரைகுறை, அரைவேக்காட்டுத்தனமான வாத-விவாதங்கள் உபயோகப்படாது.

© வேதபிரகாஷ்

13-09-2016

vishnu-killing-and-saving-elephant

[1] Frazer, James George, The Golden Bow: A study in magic and religion, 1929.

[2] Lévi-Strauss, Claude, The structural study of mythThe Journal of American Folklore 68.270 (1955): 428-444.

[3] Jews and Christians say that the sacrificed was Isaac -“Abraham’s only son”, whereas according to the Islamic tradition the sacrificed is Ishmael. (Genesis 22:1-2, R.S.V.). (Hebrews 11:17, R.S.V.). (James 2:21, R.S.V.).

http://www.islamic-awareness.org/Quran/Contrad/MusTrad/sacrifice.html

[4] Sherwood, Yvonne. Binding–Unbinding: Divided Responses of Judaism, Christianity, and Islam to the “Sacrifice” of Abraham’s Beloved Son, Journal of the American Academy of Religion 72.4 (2004): 821-861.

[5] Firestone, Reuven. Abraham’s son as the intended sacrifice (Al-dhabīh, Qur’ān 37: 99–113): Issues in Qur’ānic exegesis, Journal of Semitic Studies 34.1 (1989): 95-131.

[6] Isaac was the only promised child of Abraham, a fact which the Quran agrees with (cf. Genesis 17:15-21; Surah 11:69-73, 37:112-113, 51:24-30). Ishmael was never a promised child.

[7] Isaac was conceived miraculously to a barren mother and a very aged father, with the Quran likewise agreeing (cf. Genesis 17:15-17, 18:9-15, 21:1-7; Galatians 4:28-29; Surah 11:69-73, 51:24-30). Ishmael was conceived normally without the need of any miraculous intervention.

[8] God promised that it would be Isaac’s descendants who would inherit the land given to Abraham. (Genesis 13:14-18, 15:18-21, 28:13-14). Ishmael had no part in the inheritance and promise given to Isaac through Abraham.

 

காபாவை யானைப்படை தாக்க மறுத்தது ஏன்? – காபாவில் பிள்ளையார் விக்கிரகம் இருந்ததா? – யானை வருடத்தில் மொஹம்மது நபி பிறந்த விஷேசம் என்ன?

செப்ரெம்பர் 11, 2016

காபாவை யானைப்படை தாக்க மறுத்தது ஏன்? – காபாவில் பிள்ளையார் விக்கிரகம் இருந்ததா? – யானை வருடத்தில் மொஹம்மது நபி பிறந்த விஷேசம் என்ன?

people-of-elephant-quaran

மூக்கு பிளவுபட்டவன் யானைப்படை வைத்திருந்தான்: யானைக்கும், அரேபியாவுக்கும், குறிப்பாக இஸ்லாத்திற்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று பார்ப்போம்.  மொஹம்மதுக்கு முன்னர் அரேபியாவில் இஸ்லாம் இல்லை. அப்ரஹா அல்-ஆஸ்ரம் [Abraha Al-Ashram] என்ற அபிசினிய கவர்னர், தெற்கு அரேபியாவை ஆண்டு வந்தான். அப்ரஹா என்றால் பிரகாசமான முகம் கொண்டவர் என்று பொருள். ஆனால், அரேபியர் அவனை அல்-ஆஸ்ரம் என்று அழைத்தனர், அதாவது, மூக்கு பிளவு பட்டவன் என்று கிண்டலாக அழைத்தனர். அதாவது, ஒரு தடவை யானைகளைப் பிடிக்கச் சென்றபோது, அவ்வாறு மூக்கு பிளந்ததால் அப்படி அழைக்கப்பட்டான் எனப்படுகிறது. ஒருவேளை, அவன் முகமே பிள்ளையார் மாதிரி, பிளவுபட்ட மூக்குடன், துதிக்கைப் போல காணப்பட்டதால் அப்படி அழைக்கப்பட்டான் போலும்! கிரேக்கர் யானை தொப்பி, கிரீடம் எல்லாம் வைத்துக் கொண்டனர் என்று முன்னர் எடுத்துக் கட்டப்பட்டது. எப்படியாகிலும், அப்பெயர் யானையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.  அவனது பெயர் இபின் அல்-சபாஹ் மற்றும் அபு யக்ஷும் [Ibn al-Sabbāh and as Abū Yaksūm] என்றும் குறிப்பிடப் படுகிறது. இவர்கள் எல்லோருமே “யானை மனிதர்கள்” [“People of the Elephant”] என்றே அழைக்கப்பட்டனர். யாமனின் அரசனாகவும் இருக்கக்கூடும் எனப்படுகிறது.

elephants-attacking-kabaஅல்காபா அல்யமானியா மற்றும் காபா கோவில்களிடையே போட்டி: அரேபியா மொஹம்மது மற்றும் இஸ்லாத்திற்கு முன்னர் யூதர், கிருத்துவர், பௌத்தர், இந்துக்கள் என்று பலர் இருந்தனர். அவர்களுடைய கோவில்களும் விக்கிரகங்களும் இருந்தன. அவர்களு கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வருவது வழக்கம். மக்கள் அதிகமாக குறிப்பிட்ட கோவிலுக்கு வந்து சென்றால், அதற்கு பாதுகாப்பு கிடைக்கிறது, மேலும், சுற்றியுள்ள மக்கள் சம்பந்தப்பட்ட வியாபாரத்தினால் திர்ப்தியாகவும் வாழலாம். அதனால், அப்ரஹா ஒரு கோவிலைக் கட்டி அங்கு அரேபியர்களை வழிபாடு செய்யச் சொன்னான். காபாவுக்கு செல்லும் கூட்டத்தை இங்கே வர முயற்சி செய்தான். அல்-காபா அல்-யமானியா [al-kaba al-yamaniyya] எனப்பட்ட அக்கோவிலில் இருந்த விக்கிரகம் அல்-கல்ஸா [al-Khalasa] என்றைழைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் காபத்துல்லாவைத் தவிர வேறெங்கிலும் வழிபட மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அது மட்டுமல்லாது, வட அரேபியா பிரிவினரான கினானா மக்கள் அதைத் தாக்கினர். இதனால் அப்ரஹா காபாவை அழிக்கத் திட்டமிட்டான். அதன்படி, யானை, குதிரை மற்றும் காலாட்படைகளுடன் காபாவைத் தாக்கப் புறப்பட்டான்.  போகும் போது, அபு ரிகால் என்பவன் அல்-முகம்மாஸ் என்ற இறந்து விட்டதால், அங்கேயே புதைக்கப்பட்டான். இதுதான், இப்பொழுதுக் அரேபியர் கற்களால் அடித்து வருகின்றனர். மேலும், யானைகளும் அதற்கு மேல் நகர மறுத்தன.

moon-and-sun-deities-surmounted-by-the-eagleமெக்காவில் யானை விக்கிரகம் இருந்ததா?: ஆனால், யானை சம்பந்தப்பட்ட இருவகையான கதைகள் சொல்லப்படுகின்றன. யானை உருவத்தில் ஒரு விக்கிரகத்தை மெக்காவில் வைக்கப்படுவதாகவும், அதை அழிக்க அபிசீனிய படை சென்றதாகவும், யானைகள் அதைப் பார்த்து [யானை விக்கிரகத்தைப் பார்த்து?] நகர மறுத்ததாக ஒரு கதை கூறுகிறது. அபிசீனிய படையே அந்த யானை விக்கிரகத்தை அங்கு வைக்கச் சென்றதாகவும் உள்ளது[1]. அபிசீனிய மன்னன் கிருத்துவன் எனும்போது, அவன், யானை விக்கிரகம் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று நோக்கத்தக்கது. இல்லை விநாயகர் விக்கிரகம் வைக்கப்படும் அளவுக்கு அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றதாக இருந்ததா என்றும் நோக்கத்தக்கது. இன்னொரு கதையின் படி, குரேசி வணிகர்கள், அபிசீனியாவுக்கு வந்து, ஒரு சர்ச்சில் தங்கியிருந்து, சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நெருப்பு வளர்ந்து, அது சர்ச்சையே எரித்து விட்டதால், பழி வாங்கும் பொருட்டு காபாவைத் தாக்க வந்தான் என்றுள்ளது[2]. எது எப்படியாகிலும், குரானிலேயே இந்த சம்பவம் “யானைகளால் காபா தாக்கப்பட்டது” பதிவு செய்யப்பட்டுள்ளது.

how-kaba-was-saved-by-the-birds-and-elephants-refused-to-attackகாபாவை யானைகள் மதித்தது, ஆனால், பறவைகள் அபிசீனிய படையத் துரத்தியது: அப்பொழுது அப்துல் முத்தாலிப் இபின் ஹாஸிம் [‘Abdul Muttalib Ibn Hashim] என்பவர் காபாவுக்குப் பொறுப்பாக இருந்தார். குரேசிப் பிரிவைச் செர்ர்ந்த இவர் மொஹம்மது நபியின் தாத்தா ஆவர். குரேசிகளால் அப்ராஹாவின் படையை எதிர்க்க முடியாதலால், அருகிலுள்ள மலைப்பகுதிக்குச் சென்று விட்டனர். அபிசீனிய சைனியம் முன்னேறி, காபாவைத் தாக்க, யானைப்படையுடன் வந்தது. மெக்காவில் இருந்த அந்த கோவிலானது “பாகன்”களுடையது [Pagan], அதாவது, முன்னர் இருந்த கிழக்கத்தைய நாகரிக மக்களின் கோவில் ஆகும். அவ்விடம், மொஹம்மது நபி பிறந்த இடமானதால், யானைகள் காபாவைத் தாக்க மறுத்தன. பாகன் எவ்வளவு தூண்டியும் யானைகள் கேட்கவில்லை. அபிசீனியர் திகைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பறவைகளின் கூட்டம் வானத்தில் வந்தன. அவை கற்களை, அபிசீனிய படையின் மீது பொழிய ஆரம்பித்தன. இதனால், அபிசீனிய படை பின்வாங்க நேர்ந்தது. இப்படியாக காபா தாக்குதல் முடிவடைந்தன.  இந்த யானை தாக்குதல் மூலம் குரேசிபிரிவினருக்கு வியாபாரம் நன்றாக பெருகியது என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது[3].

mohammed-born-in-the-elephant-year-570-ce-near-kabaயானை வருடத்தில் பிறந்த மொஹம்மது நபி: அமீனாவின் வீட்டிற்கு, தேவதைகள் வந்தன. அமீனாவின் கனவில் மொஹம்மது நபி, அவருக்குப் பிறப்பார் என்று அறிவித்தன. “மொஹம்மது” என்றால் மிகவும் போற்றப்படுபவர் என்று பொருள். குழந்தை பிறந்தது. தேவதைகள் சீலைகளால் மறைக்கின்றன. “ஓது” என்ற சடங்கை குழந்தை செய்கிறது. தேவதைகள் அக்குழந்தைக்கு உதவுகின்றன.. யானை” வருடம் [The Year of the Elephant , Arabic: عام الفيل‎, ʿĀmu l-Fīl) என்றா வருடத்தில் தான், மொஹம்மது நபி பிறந்தாராம்[4]! அதனால், இஸ்லாமிய மத வரலாற்றில், இந்த ஆண்டு முக்கியமாகிறது. பிளேக் / சின்னம்மை போன்ற கொடிய வியாதி 570ல் பரவியிருந்தாலும், கடவுளின் அருளால் தாய்-சேய் தப்பித்துக் கொண்டன என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது[5]. ஆனால் இத்தகைய விளக்கத்தை வில்லியம் மியூர் போன்றவர் முன்னரே 1878லேயே கொடுத்துள்ளனர்[6]. மேலும், அப்ரஹா வட-ஆப்பிரிக்க வகை [the North African elephant (Loxodonta africana pharaoensis)] யானையைத் தான் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்.அவ்வகை மறைந்து விட்டது[7].

idols-at-mecca-kabaமெக்காவில்காபாவில் இருந்த விக்கிரங்கள்: மெக்காவில் உள்ள காபத்துல்லா எனப்படுகின்ற காபா கோவில், முன்னர் ஒரு சிவன் கோவிலாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அங்கு 360 விக்கிரங்கள் இருந்தன, அவை வானியல் ரீதியில் அமைக்கப்பட்டிருந்தன என்று எடுத்துக் காட்டுகின்றனர்[8]. குறிப்பாக வானத்திலிருந்து விழும் எரிகற்களை வைத்து வழிபாடு செய்து வந்தனர்[9]. ஆனால், கிடைத்துள்ள அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா போன்ற “அல்லாவின் குழந்தைகள்-பெண்கள்”, மற்ற தேவதைகளின் உருவங்கள் இந்திய மூலங்களைக் காட்டுகின்றன[10]. சித்திரங்களில் வரையப்பட்டுள்ள விக்கிரகங்கள் தெளிவாக இந்திய விக்கிரங்கள் என்பதை காட்டுகின்றன. ஒருவேளை சிவலிங்கம் அங்கிருந்திருந்தால், யானைகள் அக்கோவிலை தாக்காமல் இருந்திருக்கும். அல்லது யானை பாகன்கள் இந்தியர்களாக இருந்தால், அவர்களும் மறுத்திருப்பார்கள். அதனால் தான், மேற்குறிப்பிட்ட கதைகளில், பாகன் யானையிடத்தில் அது கடவுளின் இடம் என்று காதில் கூறியதாகவும், யானை தாக்க மறுத்ததாகவும் உள்ளது.  எது எப்படியிருப்பினும், அபிசீனொய அரசன் இங்கு ஒரு விநாயக விக்கிரகத்தை வைக்க வந்தான் என்ற குறிப்பு கவனத்திற்கு முக்கியமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

11-09-2016

more-goddesses-at-petra-arabia

[1] The first was initiated by the Yemeni Abraha b. al-Ashram; he dispatched his son Abū Yaksūm—who is called al-Yamānī al-Sabashī (“the Abyssinian Yemeni”)—with an army and an elephant, in order to make the elephant an idol in place of the Ka’ba, which they planned to destroy. The elephant refused to advance on the Ka’ba, and the army eventually retreated.

Turner, John P. Arabia in the middle of the sixth century CE According to Muslim sources, he attacked Mecca with the “People of the Elephant” in about 570 CE The name “Abraha” is said in Muslim.” Studies 3: 796-831.

[2] The second attack was attempted a year or two later. Some Quraysh traders went to Abyssinia and camped in a Christian church not far from the beach. They roasted meat and left the fi re burning, and

the church went up in fl ames. The Negus was enraged and set out with his army and elephant toward Mecca. He was accompanied by “kings” of Kinda (an originally South Arabian tribal group), among them Abū Yaksūm al-Kindī and Abraha b. al-Sabbā al-Kindī. The defeat of the army came when birds attacked it, pelting it with stones (Muqātil b. Sulaymān, 4:847–54; see also de Prémare, 311–25).

[3] Mousavi, Rahim. New look to Mecca and Qoraish from the death of Qosay-ibn-Kallab to emergence of Islam. (2013).

[4] The Year of the Elephant , (Arabic: عام الفيل‎, ʿĀmu l-Fīl) is the name in Islamic history for the year approximately equating to 570 CE. According to Islamic tradition, it was in this year that Muhammad was born.

[5] Marr, John S., Elias J. Hubbard, and John T. Cathey. “The Year of the Elephant.” (2015).

[6] Muir, William. The life of Mahomet: from original sources. Smith, Elder, 1878.

[7] The elephant that Abraha rode was probably the North African elephant (Loxodonta africana pharaoensis)—now extinct, which had been used by the Carthaginians centuries before.

Marr, John S., Elias J. Hubbard, and John T. Cathey. “The Year of the Elephant.” (2015).

[8] Farrington, Oliver C. “The worship and folk-lore of meteorites.” The Journal of American Folklore 13.50 (1900): 199-208.

[9] Newton, Hubert A. “The worship of meteorites.” American Journal of Science13 (1897): 1-14.

[10] http://sakina.wikidot.com/arabian-deities

கிறிஸ்தவ விநாயக புராணம்: ஆதாம்-ஏவாள் யானைகள் புனைந்து பிள்ளையார் பிறந்தது, ஏசு யானையாக வந்து விழுந்த ஆதாம் யானையைக் காப்பாற்றியது!

செப்ரெம்பர் 11, 2016

கிறிஸ்தவ விநாயக புராணம்: ஆதாம்-ஏவாள் யானைகள் புனைந்து பிள்ளையார் பிறந்தது, ஏசு யானையாக வந்து விழுந்த ஆதாம் யானையைக் காப்பாற்றியது!

adam-eve-begetting-a-child

அழுக்கும், பாவமும், தூசும், மலமும்: பார்வதி அழுக்கை வைத்து பிள்ளையாரை உருவாக்கினார் என்று இந்து-விரோத கோஷ்டிகள் கிண்டலடித்து வருகின்றன[1]. ஆனால், கிருத்துவப் புராணங்களிலேயே அத்தகைய கதைகள் உள்ளதை அவர்கள் அறியாதது வேடிக்கையான விசயமே. பைபிளைப் பொறுத்த வரையில், உலகத்தில் ஆதாம்-ஏவாள் மூலம் பிறந்தவர்கள் எல்லோருமே பாவிகள், அந்த நிரந்த பாவத்தை இரண்டாவது ஆதாம் எனப்படுகின்ற ஏசுகிறிஸ்து தான் தனது ரத்தத்தின் மூலம் போக்குவார். ஆகவே, பாவத்தையும், பிறப்பு-இறப்புகளையும் ஒன்றாகவே பாவிக்கப்பட்டுள்ளன. பைபிளில் இப்படியுள்ளது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” – II கொரியந்தியர் (5:21). “தூசியை உதறிவிட்டு எழுந்திரு…….” என்று தூசியையும், பாவத்தையும் ஒப்பிட்டு இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறது[2]. ஏசுவை பாவமாக்கினார், பாவ ஸ்வருபமாக்கினார் என்றால் என்ன அர்த்தம் என்று கிறிஸ்தவர்களோ, இந்த கிண்டலடிக்கும் கோஷ்டிகளோ படிப்பதும் இல்லை, படித்தாலும், புரிந்து கொள்வதில்லை.

adam-eve-begetting-a-child-mss

முதல் ஆதாமின் பாவமூட்டையும், இரண்டாம் ஆதாமின் ரத்தக் களறியும்:  ஜேஹோவா மண்ணிலிருந்து ஆதாம்-ஏவாள் ஜோடி மனிதர்களை உண்டாக்கினார் என்று முன்னரே எடுத்துக் காட்டப்பட்டது. அந்த மண் என்ன நல்ல மண்ணா, அழுக்கு மண்ணா என்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை, ஆனால் அந்த தூசித்திரட்டிலிருந்து தான் உருவானார்கள். குழந்தை பெற ஆதாமுக்கு ஏவாள் தேவைப்பட்டாள், ஆனால், ஜேஹோவாவுக்கு மண் தான் தேவைப்பட்டது. அந்த மண் தான் பெண்ணாகியது. அந்த மண்ணிலிருந்து மனிதன் பிறந்தான். ஆனால், அந்த கடவுளின் ஆணையை மீறி ஆதாம் பாவம் செய்தான். அந்த பாவமூட்டை, அழுக்கு மூட்டை, அழுக்கிலிருந்து பிறந்தவனால் உண்டாக்கப்பட்ட அழுக்கு மூட்டையை, பின்னால் வந்ததாகச் சொல்லப்படும், ஏசு பாவத்தின் உருவமாக, அந்த அழுக்கு மூட்டையை சுமந்தது. அவன் செய்த பாவத்தை, இவன் நீக்குவான் என்றார்கள், அதாவது முதல் ஆதாம் செய்த பாவத்தை, இரண்டாம் ஆதாம் தன்னுடைய ரத்தத்தினால் போக்குவான் என்று எழுதி வைத்தனர். இத்தகைய பலி எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், அதாமின் மகன் கைன், ஏபலைக் கொன்றதில் வருகிறது. இக்கதைக்கு முன்னோடியாக, அப்ரஹாம்-ஐசக் கதையுள்ளது.

abraham-sacrifice-isaac

பிள்ளையை பலி கொடுப்பது: ஜேஹோவா, அப்ரஹாமை தன்னுடைய ஒரே மகனான ஐசக்கை தனக்கு பலி கொடு என்று ஆணையிடுவதாக பைபிள் [Genesis 22:1-20] கூறுகிறது. குரானும், இக்கதையை விளக்குகிறது. பக்ரீத் என்ற பண்டிகையை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அக்காலத்தில் அறுவடைக்கு முன்னர், பயிர் நன்றாக விளைந்தால், தலைப்பிள்ளையை பலிகொடுப்பதாக வேண்டிக் கொள்வர். அத்தகைய பழக்கம் ஐரோப்பியர்களுக்கு இருந்தது. அதன்படியே பலியும் கொடுப்பர். அந்த பழக்கம் தான் யூதர், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் போன்றவர்களிடையே தொடர்ந்து வந்தது. பிறகு, அதனை தத்தம் மதத்திற்கு ஏற்றமுறையில் மாற்றிக் கொண்டார்கள். ரத்தத்தினால் தான் பாவம் போகும் என்ற நம்பிக்கையை பலி மூலம் பின்பற்ற வைத்தனர். மகன் மரிக்கும் போது, அவதிப் படுவதை, மற்றவர்களும் அவதிப்படவே, தம்மை வருத்திக் கொள்ளும் சடங்குளைப் புகுத்தினர். இறந்தால் தான், இறுதி தீர்ப்பு நாளின் போது, உயிர் பெற்றெழும்போது, கடவுள் தீர்ப்பளிப்பார் என்பதால், எப்படியாவது இறக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பக்தர்களிடையே உருவாகிறது. இல்லை உருவாக்கி வருகிறார்கள். அதைத்தான் ஜிஹாதிகள் பின்பற்றி வருகிறார்கள். இதனுடன் “தியாகத்துவம்” என்ற தத்துவம் இணைக்கப்படுகிறது. அதாவது, இவ்வாறு தியாகம் செய்து இறப்பது, தியாகி நிலை அடைவது தியாகத்துவம் பெறுவது புண்ணிய செயலாகும் என்று இறையியல் ரீதியில் நியாயப்படுத்துவது, தீவிர பக்தர்களைத் தயாராக்குவது முதலியனவும் அப்புண்ணிய செயல்முறை வழியாக்கப்பட்டது.

raising-the-fallen-elephant

பிள்ளையை முதலில் பலி கொடுப்பது, பிறகு உயிர்ப்பித்தது: அப்ரஹாம்-ஐசக் விசயத்தில் பிள்ளைக்கு பதிலாக விலங்கு வைக்கப்பட்டது. கைன்–ஆபெல் கதையில், கைன் கொடுத்த பலியை ஜேஹோவா ஒப்புக்கொள்ளாமல், ஆபெல் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதால், கைன் அவனைக் கொல்கிறான்.ஆனால், ஆதாம் இன்னும் பாவமூட்டை அதிகமாக சுமக்கிறான். கடவுள் பலிகொண்டபோது, ஆதாம் தடுத்தானா-இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், பலிகொடுத்தது, கொலையுண்டது சொல்லப்படுகிறது. இக்கதை சிவன், பிள்ளையார் தன்னைத் தடுத்தபோது, கொல்வதையும், பிறகு உயிர்பித்ததையும் ஒத்திருக்கிறது. ஆதாமின் பிள்ளைகள் கைன் [Cain] மற்றும் ஆபெல் [Abel], ஆனால் கைன், தனது சகோதரன் ஆபெலைக் கொல்கிறான். ஆதாம் பாவம் செய்தது போல, பிள்ளையும் பாவம் செய்கிறான்[3]. கைன் முதலில் பிறந்த மகன், ஆபெல் முதலில் இறந்த மகன் என்ற நிலையைப் பெறுகிறார்கள். இறப்பது-உயிப்பிப்பது, இறப்பு-பிறப்பு, உயிர்த்தெழுதல் [dying-and-rising, death-rebirth, or resurrection deity] போன்றவை இப்பிள்ளைகள் கதைகளில் இருப்பதை காணலாம். இவையெல்லாம் யூத-கிருத்துவ மதங்களில் நம்பிக்கைகளாக இருக்கின்றன[4].

Vinayaka-Jesus-Muhhamad.jpg

விழுந்த மனிதன், யானை, பிள்ளையார், ஏசு ஒப்புமைகள்: பிசியோலோகஸ் [Physiologus] என்ற லத்தீன் புராணத்தில் இக்கதை உள்ளது[5]. அவை லத்தீன் பாடல்களாக உள்ளதால் பிறகு மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன[6]. லத்தீன் கிருத்துவர்களுக்கு தேவபாஷை, பூஜை-மந்திரக்கள் எல்லாமே அம்மொழியில் தான் இருக்கும். பாவம், மனிதன் விழுதல்-எழுந்திருத்தல், பிறத்தல்-சாதல் முதலியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு கிருத்துவனும் பிசியோலோகஸ் போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். விழுந்த மனிதன் பற்றிய விளக்கங்கள் அதிகமாகவே இருக்கின்றன[7]. இவையெல்லாம் ஐரோப்பாவில் முன்னால் வாழ்ந்த மக்களின் புராணக் கதைகள் ஆகும்[8]. ஆதாம்-ஏவாள் ஒரு யானை ஜோடிக்கு ஒப்புமைப்படுத்தப்படுகிறது. கனி உண்பதற்கு முன் வரை, இருவருக்கும் எப்படி உடலுறவு கொள்வது என்பது தெரியாது. ஆனால், கனியுண்ட பிறகு, இரண்டு யானைகள் எப்படி சுகிக்குமோ, அதுபோல இருவரும் உடலுறவு கொண்டனர். கைனைப் பெற்றெடுத்தனர். யானைகள் பெற்றெடுத்ததால் அதுவும் யானையாகத்தான் இருக்க வேண்டும். பிள்ளையர் / குழந்தை யானை இப்படித்தான் பிறந்தார்.

parvati-mary-khadija

கீழே விழுந்த யானையைத் தூக்கிவிட்ட யானை கதை: இப்படியாக ஆதாம் என்ற யானை பாவப்பட்டு கீழே விழுந்தது. எழுந்திருக்க முடியவில்லை. அப்பொழுது 12 யானைகள் வந்தன. மோசஸ் வந்து முயன்றார். அவற்றாலும் எழுப்ப முடியவில்லை. கடைசியாக ஆன்மீக மற்றும் புனித யானை [ஏசு கிருஸ்து] வந்தது, மண் மீது விழுந்தவனை எழுப்பியது. அவர் எல்லோரையும் விட [கிறிஸ்து மற்றும் புதிய ஆதாம்] மிகப்பெரியவர்-உயர்ந்தவர், அனைவருக்கும் அடிமையானார். ஏனெனில், அவர் தம்மையே பணிவுடன் தாழ்த்திக் கொண்டார்[9]. அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டு, அனைவரையும் காப்பாற்றினார்[10]. மண் மீது விழுந்த மனிதன் [fallen man] என்ற தத்துவம் கிருத்துவயியலில் விளக்கப்படுகிறது. ஆதாம் ஒரு பெரிய பாவத்தை செய்ததால், கீழே விழுந்தான். ஏசுவும் பாவத்தை சுமந்ததால், கீழே விழுந்தார், அதாவது மரித்தார். ஆனால், விழுந்த யானை எழுவதற்கு சிரமமாக இருக்கும் போது, ஏசு உயிர்த்தெழுந்தார். இதையெல்லாம் படிக்காத, தெரிந்து கொள்ளாத இந்தியர்கள், குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்கள் தாம், பிள்ளையார் கதைகளை அவதூறாக பேசியும், எழுதியும் வருகிறார்கள். எனவே, அத்தகையோர், இப்புராணங்களை முதலில் படிக்க வேண்டும்

© வேதபிரகாஷ்

11-09-2016

raising-the-fallen-elephant

[1]  நாத்திக, பெரியாரிஸ, கிறிஸ்தவ, முகமதிய கோஷ்டிகள் இதை எடுத்துக் காட்டி கிண்டலடித்தாலும், தம்முடைய தோரா, பைபிள், குரான் மற்றும் இதர நூல்களில் உள்ளதை படிக்காமல் இருப்பது, அவர்களது பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது.

[2]  ஏசையா.52.2 – Shake yourself from the dust; arise, and sit down, O Jerusalem: loose yourself from the bands of your neck, O captive daughter of Zion.

[3] Brockman, Bennett A. “Heroic” and “Christian” in Genesis A the Evidence of the Cain and Abel EpisodeModern Language Quarterly 35.2 (1974): 115-128.

[4] Levenson, Jon D. The death and resurrection of the beloved son: The transformation of child sacrifice in Judaism and Christianity. Yale University Press, 1995.

[5] Alan Wood Rendell, Physiologus – Ametrical Bestiary of Twelve chapters of Bishop Theobald, John & Edward Bumpus Ltd, London, 1928, pp.89-92.

Moses in truth was not able to lift him, nor in like manner other prophets. These therefore together began to trumpet, that is, to pour out their inspired utterances to God. And at length in answer to their prayers, came one small Elephant, namely, Christ Jesus, small, that is, the most humble of all, and lifted up that man. Since He redeemed him by His own death in the punishment of the cross. Also just as by the smoke made by the hair of the Elephant, snakes and other venomous animals are driven away, so by the perfume of the sweet word of God, all vices fly from the heart, nor does any cause of danger, that is, death, come near to him who rightly hears the word of God and firmly keeps it.

[6] Armistead, Mary Allyson. The middle English physiologus: a critical translation and commentary. Diss. Virginia Polytechnic Institute, 2001.

[7] Wesley, John. “God’s love to fallen man.” The Sermons of John Wesley.

[8] Robert M. Grant , Early Christians and Animals, Routledge, 1999, p.70.

[9] Mark.10.44-45 –  and whoever would be first among you must be slave of all. For even the Son of Man came not to be served but to serve, and vto give his life as a ransom for many.”

[10] Philippians 2-7: Instead, he gave up his divine privileges; he took the humble position of a slave and was born as a human being. When he appeared in human form… Ephesians 6.13.

கடவுளின் மகன் யார் – முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?

செப்ரெம்பர் 10, 2016

கடவுளின் மகன் யார் – முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?

reaching-end-of-the-world

அலெக்சாந்தரும் இந்தியாவும்: “இந்தியா” பற்றி பூகோள ரீதியில் கிரேக்கர்களுக்கு சரியாகத் தெரியாது. பாரசீகத்தைத் தாண்டியதும் “இந்தியா” உள்ளது என்று அவர்கள் நினைத்தனர். பாரசீகத்தவரோ, “இந்தியா” தனது நாட்டின் பகுதி(சத்ரப்)யாகக் கூறிக் கொண்டது. அதனால், பாரசீகத்தைத் தாண்டியதும், “இந்தியாவுக்கு வந்து விட்டதாக அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அங்கு தான், யானைப்படையுடன் இரு இந்திய மன்னனை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யானைப்படையைப் பார்த்ததும் திகைத்து விட்ட கிரேக்கப்படை, அதனை எதிர்கொள்வது எப்படி என்று திட்டம் போட்டதாம். அத்தகைய கதையின் படி, கிரேக்கப்படை கொள்ளையடித்த உலோக விக்கிரங்கள், கவசங்கள் முதலிவற்றை நெருப்பிலிட்டு, சிகப்பு நிறத்தில் சூடேறும் அளவிற்கு செய்து, ஒரு பதிற்சுவர் போல, யானைப்படை முன்பு வைத்தனராம். போரஸ் தனது யானைப்படையை அனுப்பியபோது, யானைகள் வேகமாக சென்று அவை எதிரிகளுடைய் காலாட்படை வீரர்கள் என்று கருதி, அவற்றை முட்டி மோதி தள்ளியதாம். ஆனால், அத்தகைய தாக்குதலில், மதகுகள் சூட்டில் பாதிக்கப்பட்டதால், பிறகு, வீரர்கள் மீது பாய்ந்து சென்று தாக்கத் தயங்கினவாம்[1]. இத்தகைய கதைகள், இந்திய யானைகளைக் கண்டு கிரேக்கப் படை பயந்ததைதான் காட்டுகிறது.

greeks-and-indians-alexander-encounter-with-indian-king

அலெக்சாந்தர் தோற்று திரும்பிய விவரம்: உண்மையில், யானைகளைக் கண்ட கிரேக்கக் குதிரைகளும், வீரர்களும் மிரண்டு போய், பின்வாங்கி ஓட ஆரம்பித்து விட்டன. இந்திய அரசன் ஏவிய ஈட்டி அலெக்சாந்தரைக் குத்த, அவன் குதிரையோடு கீழே விழுந்தான். அக்குதிரை அங்கேயே செத்தது. அலெக்சாந்தரே பலமாக காயமடைந்தான், ரத்தப்போக்குடன் கீழே கிடந்த அவனை, படையினர் தூக்கிச் சென்றனர். புறமுதுகிட்ட கிரேக்கப்படையினை தாக்காமல், இந்திய படை சென்று விட்டது. அதிக ரத்தம் வெளியேறியதால், போகும் வழியிலேயே, அலெக்சாந்தர் இறந்தான் என்று கதைகள் கூறுகின்றன. 2004ல் வெளிவந்த திரைப்படம், இவற்றை தத்ரூபமாகக் காட்டுகின்றன.  ஆனால், மேற்கத்தைய முறையில், தோற்றவனை, வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்றவனை தோற்றவனாகவும் மாற்றி எழுதி வைப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால், இந்திய அரசன் தோற்றான், ஆனால், அவன் ராஜ்ஜியம் அவனுக்கே திரும்பக் கொடுக்கப்பட்டது. ஆனால், வென்றவன், தன் நாட்டிற்கு செல்லாமலேயே இறக்கிறான். அவன் இறந்த உண்மையினை மறைக்க, விஷத்தால் இறந்தான், நோயினால் / எய்ட்ஸ் இறந்தான், இன்றளவும் பல கதைகளைக் கட்டி வந்துள்ளனர்.

alexander-on-horse-attacking-indian-king-on-elephant-clear

அலெக்சாந்தர் கட்டுக்கதைகள் கூறும் மாயாஜாலக் கதைகள்: அலெக்சாந்தருக்கு  “இந்தியா” பற்றி தெரியாது, “இந்தியாவுக்கு” வரவில்லை, வரும் வழியில், ஒரு “இந்திய” அரசனோடு போரிட்டு தோற்று, திரும்பி சென்றான். போகும் வழியில் இறந்தான் என்று அலெக்சாந்தர் கட்டுக்கதைகள் [Alexander Romance] கூறுகின்றன[2].  சியோடோ காளிஸ்தனிஸ் [Pseudo-Callisthenes] என்றும் அழைக்கப்படும் இக்கட்டுக்கதைகள் முன்றாம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை பலமொழிகளில் எழுதப்பட்டவை. ஜேகப் புக்கார்ட் என்ற வல்லுனர், எப்படி கிரேக்க பூலோகவியல் வல்லுனர்கள் தமக்கு “இந்தியாவைப்” பற்றி தெரியாமல் இருந்தாலும், இந்தியாவை அடைந்து விட்டோம் என்று பொய்யாக மலைகள், நதிகள் முதலியவற்றைக் காட்டினர்[3]. ஆனால், சிந்து நதிக்குப் பிறகு, ஒரு பெரிய நாடு இருப்பதை அறிந்ததும் பயந்து விட்டான். அதனால், பின் வாங்க நேர்ந்தது.

deification-of-alexander

யானையைக் கண்டு பயந்த அலெக்சாந்தருக்கு, யானை கிரீடம் வைக்கப்பட்டு கடவுளாக்கப்பட்டது: எது எப்படியாகிலும், யானைக்கண்டு பயந்த யானை, அலெக்சாந்தருக்கு கிரீடம் ஆகியது. அதனை பெருமையாக நாணயங்களிலஙுள்ளன என்று எடுத்துக் காட்டுகிறார்கள். பிறகு இந்தோ-கிரேக்க அரசர்களும் அதேபோல கிரிடங்களை வைத்துக் கொண்டனர், ஆனால், அவர்கள் எல்லோரும் கடவுளின் மைந்தர்களாகக் கருதப்படவில்லை. முதலில் அலெக்சாந்தர்-ஸ்கந்தர்-கந்தன் முருகன் தான் என்றனர்[4]. அதில் கூட அலெக்சாந்தர் கட்டுக்கதை திணிக்கப்பட்டது[5]. சிவனும், டையோனிசஸும் ஒப்புமைப்படுத்தப்பட்டனர்[6]. கிரேக்க சிவன் அவனது மகன்கள் எல்லோருமே நிர்வாணமாகத்தான் இருந்தனர், அச்சிலைகளும் அப்படித்தான் உள்ளன. ஆனால், என்ன இப்படி இருக்கிறார்களே என்றும் கேட்கவில்லை. முருகன் மாநாடுகளை நடத்தி, அத்தகைய கட்டுக்கதைகள் ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. டைனோசிசுக்கு ஏகப்பட்ட குழந்தைகள், அதிலும், தெய்வீக மற்றும் மனித குழந்தைகள் என்று பட்டியல் இட்டுள்ளனர்[7]. இத்தனை குழந்தைகள் பிறந்த கதைகளையும் எவரும் கேட்பதில்லை. நல்லவேளை, சிவன் – பார்வதிக்கு இரண்டு குழந்தைகள் தாம். அந்த இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டுதான், இன்று கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், மற்றவர்கள் கலாட்டா செய்து வருகின்றனர்.

god-created-from-earth

மண்ணிலிருந்து, அழுக்கிலிருந்து குழந்தை பிறக்குமா?: கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கடவுள் மண்ணிலிருந்து தான் மனிதனைப் படைத்தார் என்கின்றனர்[8]. எப்படி மண்ணிலிருந்து குழந்தை பிறந்தது என்று எந்த அறிவாளியோ-பிரகஸ்பதியோ இதுவரை கேட்கவில்லை. மண்ணிலிருந்து குழந்தை பிறக்குமா, மண்ணிலேயே ஆண்-பெண் என்றெல்லாம் இருந்து, புணர்ந்து, குழந்தை பிறந்ததா என்று பகுத்தறிவு கேட்கவில்லை. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடவுள் மண்ணிலிருந்து மனிதனை செய்தார் என்றால் நம்புகின்றனர். ஆதம்-ஏவாள் அப்படி மண்ணால் தான் படைக்கப்பட்டனர். பிரம்மா தான் படைத்த சரஸ்வதிவை மனைவியாக்கிக் கொண்டாரே என்று பகுத்தறிவுகள் கேட்கின்றன. ஆனால், ஆதாம் எப்படி ஏவாளை புணர்ந்தான், பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர் என்று கேட்பதில்லை, பிறகு, கடவுளின் பிள்ளை, பிள்ளையார் தான் என்றனர்[9]. ஆனால், இப்பொழுதோ, பிள்ளையாரை அசிங்கப்படுத்துகின்றனர். அவனைக் கடவுளாக்கும் போது ஜீயஸ் என்றும், கடவுளின் மைந்தன் என்றும் கதைகட்டினர்[10]. உலகத்தை வென்றவன் என்ற ரீதியிலும் வர்ணித்தனர்[11].

hannibal-myth-against-indian-king-with-elephants

கிரேக்கர்களும், யானைகளும், யானைப்படையும்: சந்திரகுப்தர் அலெக்சாந்தர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்ற “சத்ரப்புகளை” மீட்க போராடியபோது, அலெக்சாந்தரின் பிரதிநிதி செலுகஸ் நிகேடார் [Seleucus Nicator 305-303 BCE] என்பவன் அங்கு இருந்ததாகவும், போரில் சமரசம் செய்து கொண்ட போது, இவன் தன் மகளை சந்திரகுப்தனுக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், 500 யானைகளை நிகேடாருக்கு சந்திரகுப்தன் கொடுத்ததாகவும் கிரேக்கக் கதைகள் சொல்கின்றன. பிறகு அலெக்சாந்தரின் ஆட்களே தங்களுக்குள் இப்சஸ் [The Battle of Ipsus] என்ற இடத்தில் சண்டை போட்டுக் கொண்டபோது, இந்த யானைகள் உபயோகப்படுத்தப் பட்டதாகக் கதைகள் கூறுகின்றன. யானைகள் அறியாத, யானைப்படை நடத்தத் தெரியாத கிரேக்கர்கள் யானைகளை வைத்து போரிட்டார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. போரஸ் தோற்றான் சமரசம் செய்து கொண்டான், செலுகஸ் தோற்றான் சமரசம் செய்து கொண்டான், போன்றவையும் கதைபோலத்தான் உள்ளது. நிச்சயமாக இந்த யானை விவகாரம், அவர்களது கட்டுக்கதையினை வெளிப்படுத்துகிறது. இந்தோ-கிரேக்க அரசர்கள் யானை கிரீடத்தை அணிந்திருப்பதிலும் ஒன்று வியப்பில்லை, ஏனெனில், இந்தியர்கள் யானையை மதித்தனர்.

greek-shiva-and-hs-son

யானைகள் இல்லாத காலத்தில் யானைப்படையுடன் கிரேக்கர்கள் எப்படி போரிட்டனர்?: ஹன்னிபால் [Hannibal (247 – between 183 and 181 BCE] என்ற கார்த்தேஜின் தளபதி மற்றும் ரோமானிய கார்னிலியஸ் ஸ்கிபியோ [Publius Cornelius Scipio Africanus] என்பவனுக்கும் இடையே ஜமா [The Battle of Zama] என்ற இடத்தில் 17 நாட்கள் யுத்தம் நடந்ததாம். ஹன்னிபால் தன்னுடைய படையில் யானைகளையும் வைத்திருந்தானாம்! எப்படி அவனுக்கு யானைகள் கிடைத்தன, அவற்றை எப்படி நதிகளைக் கடந்து, மலைகளைக் கடந்து அழைத்துச் சென்றான் என்பதெல்லாம் புதிராக உள்ளன. இருப்பினும், அத்தகையக் கட்டுக்கதைகளை சரித்திரம் போன்று சொல்லப்பட்டுள்ளன.இங்கு, யானையின் தாக்கத்தை தான் நாம் கவனிக்க வேண்டும்[12]. யானைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரவிய விஞ்ஞான கண்டுபிடுப்புகளின் விவரங்களை மறைத்து, மறந்து, மறுத்து எந்த விவாதமும் செய்ய முடியாது. மேலும், யானையின் உருவகம் வன்முறையிலிருந்து தெய்வீகத்திற்கு மாற்றிய நிலையை பிற்காலக் கட்டுக்கதைகள் மூலம் அறியலாம்.

© வேதபிரகாஷ்

10-09-2016

mysterious-death-of-alexander

[1] According to legends that grew up around the figure of Alexander, he devised another brilliant plan to deflect the ranks of living tanks. As they story goes, Alexander piled up all the bronze statues and armor that he had taken as booty during his conquests so far and heated them over a fire until they were red-hot. (In reality, the Greeks brought very little booty with them over the Khyber Pass.) Then he set up the statues and shields like a wall in front of the elephants. When Porus sent forth his elephants, they made straight for the heated statues, taking them for enemy soldiers. As the beasts smashed into the statues, “their muzzles were badly burnt” and they refused to continue the attack.

http://erenow.com/ancient/greek-fire-poison-arrows-scorpion-bombs/9.html

[2] http://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] Jacob Burckhardt, History of Greek Culture, Constable Publishers, London

[4] N. Gopala Pillai, Skanda: The Alexander Romance in India, AIOC, 1937, (Trivandrum: Government Press, 1937), Vol. IX, pp. 955-977.

[5] http://murugan.org/events/2001_synopses/rao-1.htm

[6] Alain Danielou, Shiva and Dionysus, trans. K.F. Hurry (New York: Inner Traditions International,1982, p. 91-98.

[7] http://www.theoi.com/Olympios/DionysosFamily.html

[8] Lincoln, Bruce. “The Indo-European myth of creation.” History of Religions, 15.2 (1975): 121-145.

[9] Worthington, Ian. Alexander the Great: Man and God. Routledge, 2014.

[10] Balsdon, John Percy VD. The’Divinity’of AlexanderHistoria: Zeitschrift fur Alte Geschichte (1950): 363-388.

[11] Fredricksmeyer, Ernst A. Alexander, Zeus Ammon, and the conquest of Asia,  Transactions of the American Philological Association (1974-) 121 (1991): 199-214.

[12] Though, archaeologists, researchers and Students of ancient climate and ecology have tried, but none has yet come up with a satisfactory answer: Where did Hannibal get the elephants for his heroic march across the Alps to attack the homeland of the Romans? Yet, such myths are preserved against the Indian King, who actually confronted Alexander with elephant army!

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டது – விநாயகர் வழிபாடு தோன்றியது எப்படி?

செப்ரெம்பர் 10, 2016

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டதுவிநாயகர் வழிபாடு தோன்றியது எப்படி?

asian-and-african-elephants

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்: யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டது முதலியவற்றைப் பற்றி ஆராயும் போது, பல வியப்பான, உபயோகமான மற்றும் சரித்திரபூர்வமான விசயங்கள் கிடைத்தன. யானைகளின் தோற்றத்தைப் பற்றி ஆராய்பவர்கள் ஆப்பிரிக்க [Loxodonta] மற்றும் ஆசிய [Elephas maximus indicus] யானை வகைகள் என்று இரண்டாகப் பிரித்துள்ளனர். ஆப்பிரிக்காவைப் பொறுத்த வரையில், மனிதர்களும், யானைகளும் சேர்ந்தே[1] சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி வளர ஆரம்பித்தன என்று விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2]. மனிதன் மற்றும் யானைகளில் பரிணாம வளர்ச்சிகளை ஒப்பிட்டிப் பார்த்தால் அத்தகைய ஒற்றுமைகளில் பலவிசயங்களில் பார்க்கமுடிகிறது[3]. அதனால், ஆப்பிரிக்க மக்கள் யானையை தெய்வமாகக் கருதினர். தங்களது நாகரிகம், பண்பாட்டின் சின்னமாக வைத்துக் கொண்டனர்.

babylon-elephants-depicted

40,000 YBP முதல் 1000 BCE வரை: சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்களும், யானைகளும் சேர்ந்தே பரிமணித்தனர், வளர்ந்தனர், மாற்றம் கொண்டனர் என்றால், அந்நிலைகளில் நாகரிகம் அடைந்தது என்பது முன்னரே நடந்திருக்க வேண்டும். சுமார் 1000 BCEயில் இரும்பு உபயோகத்துடன் மனிதன் வளர்ச்சியடைந்தான் என்று சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது. மனிதன்  பழங்கற்காலம் [paleollithic], இடைக்கற்காலம்  [mesolithic], பெருங்கற்காலம்  [megalithic]  மற்றும் புதிய கற்காலம் [neolithic] என்று வளர்ச்சியடைந்து தான், நவநாகரிகமான மனிதன் ஆகவேண்டும் என்ற வரையறை வைத்திருப்பதும் நோக்கத்தக்கது. அப்படியென்றால், கோடிக்கணக்கான, லட்சக்கணக்கான, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து இருந்து வரும் மனிதர்கள், வில்லங்குகள் அப்படியே இருந்து, சுமார் 3000-5000 ஆண்டுகள் முன்னர் தான் நாகரிகம் அடைந்தது என்பது அத்தகைய விஞ்ஞான கொள்கைக்கே முரணாக உள்ளது. யானை விசயத்தில் இருந்தது-இல்லை என்ற முரண்பாடுகள் நன்றாகவே வெளிப்படுகின்றன.

elephant-head-trunk-etc-represented-in-the-coins-issued-by-the-kings-of-nw-india

இந்திய யானைகளின் வகை, தொன்மை மற்றும் பரவல்: இந்திய வகை யானைகள் நேபாளம், பங்களாதேசம், பூடான், மியன்மார் / பர்மா, தாய்லாந்து, மலாய் தீபகற்பம், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பரவி, காணப்படுகின்றன. ஆனால், பாகிஸ்தானில் முழுவதுமாக மறைந்து விட்டன. பொதுவாக, ஆசிய நாடுகளில் காணப்படும் யானைகள் தெவீகமாகப் போற்றப்படுகின்றன. அங்குள்ள மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் முதலியவை அவ்வாறே காணப்படுகின்றன. பொதுவாக யானைகள் தந்தந்தளுக்காகக் கொல்லப்படுகின்றன. தந்தந்திலிருந்து, மறுபடியும், தெய்வீக உருவங்கள் செதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய தந்தப் பொருட்களின் தொன்மை எந்த அளவிற்கு உள்ளன என்று பார்க்கும் போது, போம்பேய் எனப்படுகின்ற ரோமானிய நகரத்தில் ஒரு அகழ்வாய்வில் கிடைத்த லக்ஷ்மியின் உருவத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

sambu-people-believe-god-created-elephants-and-men-brothers

ஆப்பிரிக்கவில் மாறி வரும் நிலைமை: ஆப்பிரிக்காவில் குருகர் பூங்கா என்ற இடத்தில் உள்ள யானைகள் சரணாலாயத்தில், 7000 BCE முதல் 300CE வரை யானைகள் இயற்கையான வசிப்பிடங்களில் இருந்ததற்கான ஆதாரங்களை பாறை கலைச்சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன[4]. இருப்பினும், இக்காலத்தில் மக்கட்தொகை அதிகரிக்கும் நிலையில், யானைகள் தொகை அதிகமாகும் போது, அவற்றை நிர்வகிக்க அதிக செலவாகிறது என்ற நிலையில், அங்கு, யானைத் தொகயினை குறைக்க வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், நகர்புறங்களில் யானையின் தெய்வீகத்தன்மை மறக்கப்பட்டு வருகின்றது. 40,000 வருடங்களுக்கு முன்னரே மனிதன் யானைகளை வேட்டையாடியதற்கான ஆதாரங்கள் ஸ்பெயினில் காணப்படுகின்றன[5]. ஐரோப்பாவில் யானைகள் இல்லை, பிறகு உள்ளே நுழைந்தன என்று வாதிடுபவர்கள் இதை கவனிக்க வேண்டும். யானை தந்தம், தந்தத்தினால் செய்யப்பட்ட தாயத்து, சின்னங்கள், பொம்மைகள் முதலியன நீண்ட ஆயுள், செல்வம், பாதுகாப்பு முதலியவற்றைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தில் இன்றும் தெய்வீகமாகக் கருதப்படுகிறது[6].

mithra-temple

ஜீயஸ், மித்ரா, விநாயகர்யானை சம்பந்தம்வாத விவாதங்கள்: ஜீயஸ் மற்றும் மித்ரா போன்ற கிரேக்க, ரோமானிய, பாரசீகக் கடவுளர்களுடன் யானை தொடர்பு படுத்தப் படுகிறது. கணேஸர் ஜீயஸ்-மித்ராவுடனும் ஒப்புமைப்படுத்தப் படுகிறது[7]. நாணயங்களில் காணப்படும் யானை, யானை துதிக்கை, தலை, காது போன்ற உருவங்களை வைத்தும் கணேஸர் ஜீயஸ்-மித்ரா தொடர்புகள் எடுத்துக் காட்டப்பட்டன[8]. கிரேக்கப் புராணங்களில் உள்ல கதைகளை வைத்து ஜியஸ் மற்றும் மித்ரா போர் கடவுள், சைனியத்தை நடத்துபவர்கள், தாயினால் பால் கொடுத்து வளர்க்கப்பட்ட கடவுள் முதலியவற்றை வைத்து விளக்குகிறார்கள். பொதுவாக இத்தகைய விளக்கங்களில், விநாயகக் கடவுள் தோற்றம், கிரேக்கர்களிடத்திலிருந்து பெறப்பட்டது என்றுள்ளது. சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த யானை உருவங்களை மறந்து அவர்களது ஆராய்ச்சி விவாதங்கள் இருந்துள்ளன. மேலும், இந்தோ-கிரேக்க மன்னர்கள் யானைத்தலை கிரீடங்களை அணிந்ததாலும், அவற்றின் உருவங்கள் நாணயங்களில் காணப்படுவதாலும், கிரேக்கத்திலிருந்து, இந்தியாவுக்குள் வந்தது என்ற சித்தாந்தத்தை வைக்கின்றனர். இந்தியாவில் யானைகள் இருந்தன, ஆனால், யானையை தெய்வீகமாகக் கருதவில்லை. கிரேக்கத்தில் யானைகள் இல்லை, ஆனால், அவகள் யானையை தெய்வீகமாகக் கருதினர், அதனை கிரேக்கர்களிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக் கொண்டனர் என்ற வாதம் வேடிக்கையாக இருக்கிறது.

Alexander was defeated by the Indian King

இறைவனின் மகன் என்ற விளக்கத்திற்கு உட்படுத்தப்படும் ஜீயஸ், மித்ரா, கணேஸா: கிரேக்கர்கள் யானையைப் பார்த்தது கிடையாது என்கிறார்கள். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது, யானைப்படையைப் பார்த்து, கிரேக்க சைனியம் பயந்தோடியது என்றுள்ளது.ஆலெக்சாந்தரின் மெடல் / பதக்கம் நாணயங்களிலும் அவ்வாறே சித்தரித்து வைத்தனர். ஆனால், கிரேக்கர்கள், இந்தியாவிலிருந்து, அங்கு குடியேறிய, தாழ்த்தப்பட்ட சத்தியர்களே என்று இக்கால, எழுத்தாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அலெக்சாந்தரையும் கடவுளாக்கும் முயற்சியில், அவனுக்கு யானை கிரீடம் வைத்து, ஜீயஸ்ஸுடன் ஒப்பிடும் முயற்சியும் உள்ளது. சிந்துசமவெளி யானை வழிபாட்டை கவனிக்கும் போது, அது 2250-1950 BCE காலத்தில் இருந்திருந்ததால், 1000 BCE காலத்தில் எவோனியர் மூலம், கிரேக்கர்களை அது அடைந்திருக்க வேண்டும். அதே போல, பஞ்சநதிகள் பாயும் இடத்திலிருந்து, இந்தியாவிற்குள் பரவியிருக்க வேண்டும். இதே போல, பிறகு, ஏசுவிற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை என்ற நிலையில், இவர்களுடன் ஒப்புமைப் படுத்தி, கிருத்துவயியல் எழுத்தாளர்களும் கட்டுக்கதைகளைப் புனைய ஆரம்பித்தார்கள்.

© வேதபிரகாஷ்

10-09-2016

babylon-elephants-depicted-in-cinema

[1] Peter Jackson, Elephants and Rhinos in Africa: A Time for Decision, 15, 1983.

[2] Schmidtz, David, and Elizabeth Willott. Reinventing the commons: an African case study,  Environs: Envtl, L. & Pol’y J. 27 (2003): 203.Michael D. Lemonick & Andrea Dorfman, Up From the Apes: Remarkable New Evidence is Filling in the Story of How We Became Human, TIME, Aug. 23, 1991, at 50.

[3] Michael D. Lemonick & Andrea Dorfman, Up From the Apes: Remarkable New Evidence is Filling in the Story of How We Became Human, TIME, Aug. 23, 1991, at 50.

[4] Of the 109 shelters containing rock art so far discovered in Kruger Park, only one depicts elephants. This suggests there were elephants in what is now Kruger Park somewhere between 7000 BCE. and 300 CE.

[5] F. Clark Howell discovered evidence of Homo erectus living in Spain and hunting elephants as long as 400,000 years ago. He found large numbers of elephant fossils, together with evidence of fires used to stampede them, and stone tools used to butcher them.

[6] Christy, Bryan. Ivory worship, National Geographic 222 (2012): 28-61.

[7] Bopearachchi, Osmund. Elephant-Headed GaneSa or Zeus-Mithra, Yavanika, Vol. 2, 1992, and.” (1993).

[8] Bopearachchi, Osmund. “On the so-called earliest representation of Ganesa.” Topoi 3.2 (1993): 425-453.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – முகமதியர் மற்றும் ஐரோப்பியர் எழுதி வைத்த வரலாறுகள் (2)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைமுகமதியர் மற்றும் ஐரோப்பியர் எழுதி வைத்த வரலாறுகள் (2)

வேதபிரகாஷ்

Col Colin Mackanzie 1754-1821

தமிழ் வரலாற்றுப் பாரம்பரியம், எழுதும் முறை: தமிழகத்து வரலாறு மற்ற மாநிலங்களைப் போல, பெரும்பாலும் புராணங்களினின்றுதான் பெறப்படுகிறது. புராணங்களில் கீழ்க்கண்ட வகைகள் உள்ளன:

  • பாரம்பரிய 18 புராணங்கள்.
  • 18 உப-புராணங்கள்.
  • ஸ்தலப் புராணங்கள்.
  • வம்சாவளி / குல புராணங்கள்.
  • ஜாதி வரலாறுகள்

ஓலைச் சுவடிகளாக இருந்த, அப்புத்தகங்கள் இக்காலத்தில் தான், அச்சிடப்பட்டு இக்காலப் புத்தகங்களாக வெளியிடப் பட்டன. கீழ்திசை ஓலைச்சுவடி நூலகம், பல சரித்திர நூல்களை புத்தகங்களாக வெளியிட்டன. இப்புராணங்கள் எக்காலத்தில் எழுதப்பட்டாலும், பிரம்மா இவருக்குச் சொன்னார், இவர் அவருக்குச் சொன்னார்,…..இப்படித்தான் இவ்விவரங்கள் இன்னாரிடத்திலிருந்துப் பெறப்பட்டன என்று ஆரம்பிப்பது வழக்கம். அதனால், அந்நூல் பிரம்மா சொல்லி எழுதப்பட்டது அல்லது பிரம்மா காலத்தில் எழுதப்பட்டது என்றாகாது. வரலாற்றுவரைவியல் (Historiography) என்று இன்று சரித்திரம் எப்படி எழுதப்பட வேண்டும் என்று ஒரு படிப்பே உள்ளது. மூலங்களைப் பார்த்து எழுத வேண்டும் என்கிறது. அவ்வாறு எழுதுபவருக்கு சார்பு கருத்து (bias), தப்பெண்ணம் (prejudice), முன்பே கருத்துருவாக்கம் (preconceived notions) செய்து கொண்ட மனநிலை (mindset) முதலியவை இருக்கக் கூடாது என்கிறது. சுருக்கமாக சொல்வதானால், பொய் சொல்லக் கூடாது, நடந்ததை நடந்தபடி எழுதவேண்டும் என்று போதிக்கிறது.  இதற்கு கார்[1] (E. H. Carr) போன்றோர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ECI officials - turned historians

முகலாயர்கள், ஐரோப்பியர்கள் எழுதிய சரித்திரம் இந்தியர்களிடம் எடுபடவில்லை: முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் சரித்திரம் எழுதி வைத்தது இந்தியர்களுக்கு என்றாலும், இந்தியர்களுக்கு உதவுவதாக எழுதப் படவில்லை, அதனால்தான், அவை பொது மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், இந்திய மக்களுக்காக எழுதப்பட்ட இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் இன்றளவும் படிக்கப் பட்டு வருகின்றன. ஊடகங்கள் மாறினாலும், மக்களுக்கு காண்பிக்கப்படும் முறைகள் மாறினாலும், அவற்றை மாற்ற முடியவில்லை. மாயை / கட்டுக்கதை என்றால், அவற்றின் பாரம்பரியமே 3000-5000 வருடங்களுக்கு முன்பாக, பலநாடுகளில் வழங்கி வந்திருக்க முடியாது. பொது மக்களுக்கு, நடைமுறைக்கு உதவுவதாகும். ரோமிலா தாபர், பணிக்கர், சர்மா, என்று “பிரபலமான சரித்திராசிரியர்கள்” இன்று பேசப்படலாம், ஆனால், வால்மீகி, வியாசர், கம்பர், ஒட்டக்கூத்தர், இறையனார் என்றும் இன்றும் பேசப்படுகின்றனர். ஏனெனில், சரித்திரம் மனிதனுக்கு உதவுவதாக இருக்க வேண்டும், எல்லாவிதங்களிலும் உதவுவதாக இருக்க வேண்டும். படித்தால் நுழைவு தேர்வில் வெற்றிப் பெறலாம், வேலை கிடைக்கும் என்றோடு நின்றுவிடாமல், எல்லாவற்றிற்கும் உதவுவது உண்மையான சரித்திரம், சரித்திரப் புத்தகம் ஆகும்.

Biased, prehudiced, Marxist histories

ஆனால், இக்கால சரித்திரவரைவியல் ஆசிரியர்கள், சரித்திராசிரியர்களுக்கு குறிப்பான நோக்கம், தெளிவான பார்வை மற்றும் பாரபட்சமற்றத் தன்மை (objectivity) முதலியவை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற நிலையில் கூட வாதிடுகிறார்கள். அதாவது, மூன்று பேர், மூன்று இடங்களில் உட்கார்ந்து கொண்டு, மூன்று கோணங்களில் ஒரே நிகழ்வை பார்த்து, அவரவர்களுக்கு தாங்கள் கண்டபடி, புரிந்தபடி, தெரிந்தபடி, மூன்று சரித்திரங்கள் எழுதலாம். மூன்றும் சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறார்கள். உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரத்தை யாராலும் எழுத முடியாது, அதனால், அத்தகைய சரித்திரன் என்பது இல்லவே இல்லை என்பது அவர்கள் வாதம். அந்நிலையில் மற்றவர்கள் எழுதுவதை சரித்திரம் இல்லை என்று அவர்கள் எவ்வாறு விமர்சிக்கின்றனர், தீர்மானிக்கின்றனர், அதிகாரத்துடன் செயல்படுத்துகின்றனர் என்பது, அரசியல் ஆதிக்கத்தின் மூலம்தான் என்று தெரிகிறது. அதேபோல, விஞ்ஞானப் பூர்வமான சரித்திரம் என்று, இவர்களே சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், விஞ்ஞானத்திலும், சில விஷயங்கள் தத்துவங்களாக இருக்கின்றன. ஆகவே, “விஞ்ஞான பூர்வமான சரித்திரம்” எந்த அளவிற்கு உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரமாக இருக்கும் என்று யாராலும் வாக்குறுதி தரமுடியாது. அதாவது அவர்களது கடைபிடுக்கும் முறையே (methodology) முரண்பாடாக உள்ளது என்றாகிறது.

History books how written, lies, myth etc

சரித்திரம் பொது மக்களுக்கு, நடைமுறைக்கு உதவுவதாகும்: இந்நிலையில் தான் மக்களால், மக்களுக்காக எழுதப் பட்ட சரித்திரங்கள் இந்தியாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கீழே காண்பது, பக்ஷாலி என்ற இடத்தில் கண்டெடுக்கப் பட்ட சுமார் 1800-2000 ஆண்டுகளுக்கு முந்தையதான, ஒரு மாணவனின் கணக்கு நோட்டுப் புத்தகம். இதே மாதிரி தமிழகத்திலும் மாணவர்கள் நோட்டுப் புத்தகங்கள் வைத்திருப்பார்கள், கணிதம் போன்ற படிப்புகளைப் படித்திருப்பார்கள். ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதனால், அவர்களுக்கு கணாக்கேத் தெரியாது என்று சொல்லமுடியாது. ஆனால் சரித்திரத்தைப் பொறுத்த வரைக்கும், இது – கிடைத்துள்ள நோட்டுப் புத்தகம் முதன்மை ஆதாரமாகிறது (primary evidence). அது அக்காலத்தில் இருந்த இந்தியர்களின் படிப்புமுறை முதலியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது. இது மக்களின் சரித்திரம், சரித்திர ஆதாரம். இங்கு உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரம் உள்ளது. இதை யாரும் மாற்றி விளக்கம் அளிக்கமுடியாது. இந்தியர்களைப் பற்றி, மற்றவர்கள் என்ன எழுதி வைத்தார்கள் என்பது சரித்திரம் ஆகாது, ஆனால், பொதுமக்கள் என்ன எழுதி வைத்தார்க்கள் என்பதுதான் சரித்திரமாகிறது.

Bhakshali mathematics mss c.2000 years old

தமிழில் மேனாட்டு சரித்திரவரைவியலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்கள்:  சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய “பிற்கால சோழ சரித்திரம்” தமிழில் எழுதப் பட்ட பிரபலமான சரித்திரப் புத்தகம் ஆகும். து. அ. கோபிநாதராவ் எழுதிய “சோழவமிச சரித்திரச் சுருக்கம்” 1910ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது[2]. பி. எஸ். சுப்ரமணிய ஐயரின் “வடநூல் வரலாறு” முதலிய பிரசித்திப் பெற்ற புத்தகங்கள் ஆகும். மு. இராகவ ஐயங்காரின் “ஆராய்ச்சித் தொகுதி” இன்றளவிற்கும் குறிப்புதவும் புத்தகமாக உபயோகப் படுத்தி வருகின்றனர். “செந்தமிழ்” இதழ்களில் வந்த சில ஆராய்ச்சிக் கட்டுரைகள், “ஆராய்ச்சித் தொகுதி” போன்று தரமாக உள்ளன.  கல்கியின் “பொன்னியன் செல்வன்”, சாண்டில்யனின் “கடல் புறா”, “யவன ராணி” முதலியவை சரித்திர நாவல்களாக இருப்பினும், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு பலவிதத்தில் உதவும்படி அவர்கள், அடிக்குறிப்புகளில் பல ஆதாரங்களைக் கொடுத்துள்ளார்கள். பல புத்தகங்களின் குறிப்புகளையும் கொடுத்துள்ளார்கள். தாங்கள் எழுதுவது “சரித்திர நாவல்களாக” இருந்தாலும், சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் எழுதவில்லை. அதனால் தான், அவை இன்றளவிலும் படிக்கப் பட்டு வருகின்றன. பொதுவாக ஜே. சோமசுந்தரம் பிள்ளை, கே. கனகசபா பிள்ளை, கே. என். சிவராஜ பிள்ளை, என். சுப்ரமணியம் முதலியோர் ஆங்கிலத்தில் எழுதி வந்தார்கள். அவர்களது புத்தகங்கள் “சரித்திரப் புத்தகங்கள்” வகையில் இருந்தாலும், தமிழில் இல்லாதிருந்தாலும், இங்கு குறிப்பிடப்படுகிறது.

KAN and Sadasiva Pandarattar writing history in Tamil

கல்லூரிகளில் தமிழில் சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள்: தமிழில் சரித்திரப் பாடம், பட்டப்படிப்பிற்காக எடுத்துக் கொண்டு படிக்கும் மாணவர்களுக்காக, தமிழில் சரித்திரப் புத்தகங்கள் எழுதப் பட்டன. ஆனால், இவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டவையாக இருந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அத்தகைய பல புத்தகங்களை 1980களினின்று வெளியிட்டுள்ளது. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் “தமிழ்நாட்டைப் பற்றி குறிப்புகள்” என்ற புத்தகம் பிரபலமானது. கே. வி. ராமனின் “சோழர் வரலாறு”, தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மங்கள முருகேசன் போன்றோரும் அதே முறையப் பின்பற்றியுள்ளனர். ராஜு காளிதாஸ் போன்றோர் சிறிது மாறுபட்டுள்ளனர். மயிலை சீனி வெங்கடசாமி என்பவர் சில புத்தகங்களை எழுதியிருந்தாலும் அவை பெரும்பாலும் உணர்ச்சிப் பூர்வமான நிலையில் உள்ளன. சதாசிவப் பண்டாரத்தார் போன்று எழுதப்படவில்லை. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள புத்தகங்களும் குறிப்புப் புத்தகங்கள் போலத்தான் உள்ளன. இப்பொழுது தமிழ் வவளர்ச்சிக் கழகம் சில புத்தகங்களை வெளியிட்டுள்ளாலும், அவை தமிழ்மொழி தொடர்புடவையாக உள்ளன. திராவிடப் பல்கலைக் கழக நூல்களும் அவ்வாறே உள்ளன.

The Bower mss medical work in Sanskrit

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] இன்றைய சரித்திராசிரியர்கள் இப்பெயர்களை அதிகமாக உபயோகப் படுத்துவார்கள். இல்லையென்றால், அப்படி செய்யாதவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் எடைபோடுவர்.

[2] சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக நியமிக்கப்பட்டிருந்தது. மு.. இராகவைங்காரின் “நூலாசிறியரின் வரலாறு” சேர்க்கப்பட்டு இரண்டாம் பதிப்பாக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 1994ல் நிழல்பட பிரதியாக வெளியிட்டுள்ளது.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைசரித்திர எழுதப்படும் முறை (1)

வேதபிரகாஷ்

No history without sources, evidence, proof

No history without sources, evidence, proof

இதிகாசம்” – “இது இப்படி நடந்தது: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான்,  “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார்.

ஆகவே, இப்படி –

  • நடந்துள்ளது,
  • நடந்திருக்கக் கூடும்,
  • நடந்திருக்க வேண்டும்

என்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்

  1. பார்ப்பவர் (the persond who sees the historical event),
  2. சொல்பவர் (the personal who narrates the historical event),
  3. கேட்பவர் (the person who listerns to the historical event),
  4. எழுதுபவர் (the person who actually writes the historical event)

முதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது.

How Mahabharat written- Vidur told Dridhrastra

How Mahabharat written- Vidur told Dridhrastra

மூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம் எழுதப்படாது [मूल लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.

How Mahabharat written

How Mahabharat written

சரித்திரத்தின் தந்தைகளும், தாத்தாக்களும்: ஐரோப்பியர்களுக்கு தமக்குச் சொந்தமாக இருப்பது மிகவும் குறைவே, ஏனெனில், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நாடுகளாக உருவான நிலையில் ஒவ்வொரு சமய, தத்துவ, சமூக, பொருளாதார காரணிகளுக்கு  வெவ்வேறான பழமையான நாகரிகங்களிலிருந்து பெற வேண்டியதாகியது. பைபிளை சார்ந்து பொதுவாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எழுதி வந்ததால், –

  • மதத்திற்கு, மத்தியத்தரைகடல் பகுதி,
  • தத்துவத்திற்கு கிரேக்கம்,
  • வானவியலுக்கு பாபிலோனியா,
  • கணிதத்திற்கு அசிரியா,
  • காலக்கணக்கீடுத் தொன்மைக்கு எகிப்து

என்று பலவிடங்களிலிருந்து பெற்று, பைபிள் காலக்கணக்கீடு (Biblical chronology) என்பதனை உருவாக்கினர். அதை வைத்துக் கொண்டு சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலும் கிரேக்க-ரோமானிய மூலங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால், வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியன அவற்றைச் சான்றதாகவே இருக்கும். கிரேக்க நூற்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், அதற்கு அதிகாரம், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளப் படும் தன்மை என்பவற்றை மனத்தில் கொண்டு “ஹெரோடோடஸ் சரித்திரத்தின் தந்தை” (Herodotus is the Father of History) என்று சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் ஹெரோடோடஸ் ஒன்றும் இப்பொழுதுள்ள  சரித்திரம் போன்று எழுதிவிடவில்லை.

Herodotus and his history

Herodotus and his history

ஹெரோடோடஸ் சரித்திரம் ஒன்றும் சரித்திரம் இல்லை: ஹெரோடோடஸின் புத்தகத்தைப் படித்தால், அவருடைய உலகத்தின் ஞானம் மற்றும் இந்தியாவின் அறிவு முதலியவற்றைக் காட்டும் மாதிரி வரைப்படம் முதலியவற்றை அறிந்து கொள்லலாம்.குறிப்பாக இந்தியா, இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும் போது,

  • அவர்களுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்கள்,
  • நான்கு கைகள் இருந்தன,
  • உடைகள் அப்படியே மரங்களில் காய்த்துத் தொங்கின,
  • எறும்புகள் நாய் உருவில் பெரியதாக இருந்தன,
  • அவை பூமிக்கடியில் சென்று தங்கப்பொடியை அள்ளிக் கொண்டு வந்தன

என்றெல்லாம் எழுதியுள்ளதாக, அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் சரித்துவத்துவம் (Historicity) என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ “சிந்துபாத்” மற்றும் “ஆயிரத்தொரு இரவுகள்” கதைகளில் வரும் விஷயங்களைப் போல் உள்ளது. பிறகு எப்படி, ஹெரோடோடஸ் “சரித்திரத்தின் தந்தை” என்றாகிறார் என்று தெரியவில்லை!

Indians according to Herodotus and his history on India

Indians according to Herodotus and his history on India

கிரேக்க சரித்திரம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது: இந்தியா எப்படி இருக்கும் என்று தெரியாது, இந்தியர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறியாது, இந்தியர்களின் தன்மயினையும் புரியாது ஹெரோடோடஸ் எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த நிகழ்ச்சியிலிருந்து தான் இந்திய சரித்திரமே ஆரம்பிக்கிறது என்ற முடிவுசெய்த, ஆதாரமில்லாத சருதுகோளின் மீது ஆதாரமாக இந்திய சரித்திரம் எழுதப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், சமகாலத்தைய இலக்கியச் சான்றுகளை (contemporary literary evidences) நோக்கும் போது, இந்திய புராணங்கள் “சரித்திரப் புத்தகங்களை”ப் போன்றுள்ளன. ஆகவே, எங்களிடத்தில் “தாத்தாக்கள்” இல்லையென்றாலும், “தந்தைகள்” இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்ள அவ்வாறு கூறிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இந்திய புராணங்கள் பற்றி கேவலமாக “அவை மாயை (myth), மாயாஜாலக் கதைகள் (fables), கட்டுக் கதைகள் (legends)” எழுதி வைத்தார்கள். ஆனால், வம்சாவளிகள் (geneologies), ராஜப்பரம்பரைகள் (royal dynasties), வரிசைக்கிரம ஆட்சியாளர்கள் (successive rulers), அவர்களது ஆட்சியின் காலம் (period of reign), முதலிய விவரங்களைப் புராணங்களிலிருந்து தான் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் புராணங்கள் இல்லாமலிருந்தால், வில்லியம் ஜோன்ஸ் (William Jones), ஜான் பைத்புல் பிளீட் (John Faithful Fleet), வின்சென்ட் ஸ்மித் (Vincent Smith) முதலியோரால் இந்திய சரித்திரமே எழுதியிருக்க முடியாது.

Herodotus and his history on India

Herodotus and his history on India

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] “தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.

[2] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.

[3] Conquerer and conquered, victor and defeated, ruler and ruled and such concepts were involved in writing their histories. And thus, they never recorded their defeats or the victories of their opponents.

[4] History is not what had been written or being written or would be written, but, it is actually what had happened in the past.

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!

மார்ச் 24, 2012

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!

சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[1]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[2]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[3]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[4]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன.

கடலில் மூழ்கி அகழ்வாய்வு செய்பவர்களுக்குக் கிடைக்காதது மீனவர்களுக்குக் கிடைத்துள்ளது: ராமேசுவரம், மார்ச். 24, 2012 -சேது சமுத்திர கால்வாய் தோண்டிய கப்பலின் உதிரி பாகங்கள் பழைய இரும்பு கடையில் விற்கப்பட்டன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். ராமேசுவரத்திலிருந்து கடந்த 19-ந் தேதி ராமு என்பவருக்கு சொந்தமான படகில் 5 மீனவர்கள் தனுஷ்கோடி 4-வது தீடை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு மீன்களுக்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் பெரிய கப்பலின் உதிரி பாகம் ஒன்று சிக்கியது. இதையறியாமல் மீனவர்கள் வலைகளை இழுத்த போது கனமாக இருந்தது. மீன்கள் தான் அதிகம் சிக்கி விட்டன என்று கருதி மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து படகில் ஏற்றினர். அந்த வலையில் இரும்பு மற்றும் அலுமினிய கம்பிகளுடன் சுமார் 600 கிலோ எடை கொண்ட பெரிய கப்பலின் உதிரிபாகம் ஒன்று சிக்கி இருந்தது தெரியவந்தது. இதன்பின் கப்பலின் உதிரி பாகத்தை ராமேசுவரம் கடல் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

கிடைத்ததை விற்றபோது மாட்டிக் கொண்டனராம்: பின்னர் அந்த உதிரி பாகத்தின் ஒரு பகுதியை உடைத்து ராமேசுவரம் மார்க்கெட் அருகே உள்ள பழைய கடை ஒன்றில் விற்றனர். மீதமுள்ள உதிரி பாகத்தை நேற்று ராமேசுவரம் கடற்கரை பகுதியில் உடைத்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ராமேசுவரம் கடற்கரைக்கு போலீசார் விரைந்து சென்றனர். கடலில் கிடந்த உதிரி பாகத்தையும், கடையில் எடைக்கு போடப்பட்ட உதிரி பாகத்தையும் கைப்பற்றிய கடலோர போலீசார் அவற்றை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் வலையில் சிக்கிய கப்பலின் உதிரி பாகம் குறித்து போலீசார் சேது சமுத்திர திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்களும் விரைந்து வந்து அந்த உதிரி பாகத்தை பார்வையிட்டனர். அவர்கள் கூறும் போது, “கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் தனுஷ்கோடி அருகே 4 வது மணல் தீடை அருகே உள்ள கடல் பகுதியில் ‘அக்வாரிஸ்’ என்ற பெரிய கப்பல் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த கப்பலின் உதிரி பாகமான 2 ‘ரிக்’குகள் உடைந்து தனுஷ்கோடி கடல் பகுதியில் விழுந்தன. அதை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டோம். தற்போது மீனவர்கள் வலையில் சிக்கியுள்ள உதிரி பாகம் ‘அக்வாரிஸ்’ கப்பல் உதிரிபாகத்தின் ஒரு பகுதி தான்” என்று தெரிவித்தனர்.

சரித்திர ஆசிரியர்கள் குப்பையிலிருந்து அள்ளப் போகின்றனாரா அல்லது மேல் முறையீடு செய்யப் போகின்றனரா?: ரோமிலா தாபர் இருமுறை நீதிமன்ற தீர்ப்புகள் தங்களது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கும் போது, மேல் முறையீடு செய்வேன் என்று எக்காளமிட்டார். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. “தி ஹிந்து” மட்டும் பிரமாதமாக, அவர் சொன்னதையெல்லாம் வழக்கம் போல அப்படியே போட்டது. இப்பொழுதாவது உண்மையிலேயே, அத்தகைய ரோஷம் இருந்தால், விற்பனை செய்யப் படுகின்ற ஸ்கிரேப்பையெல்லாம் (உலோகக் கழிவுகள்) வாங்கி மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்) வைக்க வேண்டும். செக்யூலார் மற்றும் கூத்தாடிகள், இமான்தாரிகள் செய்வார்களா?

வேதபிரகாஷ்

24-03-2012