Posts Tagged ‘வம்சாவளி’

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

ஏப்ரல் 30, 2012

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

293வது பட்டத்தில் நித்யானந்தா வருகிறார் என்றால், 292 மடாதிபதிகள் இருந்துள்ளனர்கள் என்றாகிறது.

மடங்களில் மடாதிபதிகள் இருந்தத்தை பல்வேறு விதமாகக் குறித்து வைத்துள்ளனர். “குரு பரம்பரை” என்று நூல்கள் உள்ளன. மடங்களில் அவர்களின் சிலைகளே வடிக்கப் பட்டிருக்கும். இறந்தவுடன், மடத்தின் வளகத்தினுள்ளேயே புதைக்கப் படுவதால், சமாதிகளில் சில குறிப்புகள் இருக்கும்.

ஏனெனில், தொடர்ந்து 40-80 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர்களும் உண்டு, பட்டமேற்று சில நாட்களிலேயே காலமாகிவிடுபவர்களும் உண்டு. அதனால், பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் ஒரு மடாதிபதி / அரசன் ஆட்சிகாலத்தை சுமார் 10 அல்லது 20 வருடங்கள் என்று கொண்டு கணக்கிடுவர்.

ஆகவே, ஒவ்வொருவர் 10 / 20 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தனர் என்று கொண்டால், மொத்த மடாதிபதிகளின் காலம் 293 x 20 = 5860 அல்லது 293 x 10 = 2910 வருடங்கள் என்றாக இருக்க வேண்டும்.

அதாவது 5860 – 2910 YBP (Years Before Present) வருடங்களுக்கு முன்பு அம்மடம் ஸ்தாபித்ததாக ஆகிறது. சராசரியாக எடுத்துக் கொண்டால் கூட 4300 வருடங்கள் ஆகிறது. ஆகையால் தான் 2500 வருடம் தொன்மையானது என்று மடாதிபதி கூறுகிறார் போலிருக்கிறது.

மடத்தில் அப்படி இருந்த 292 மடாதிபதிகளின் கால அட்டவணை இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அத்தாட்சியாக இருக்கும்.