Archive for the ‘திருவிசைநல்லூர்’ Category

நான்கு இடங்களில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரருக்கு ஜீவசமாதிகள் இருந்ததா? கராச்சியில் இருந்தது உண்மையா?

மே 9, 2022

நான்கு இடங்களில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரருக்கு ஜீவசமாதிகள் இருந்ததா? கராச்சியில் இருந்தது உண்மையா?

 நான்கு இடங்களில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரருக்கு ஜீவசமாதிகள் இருப்பது: ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரருக்கு நான்கு இடங்களில் ஜீவசமாதிகள் இருக்கின்றன, என்று பக்தி பூர்வமாக எழுதி வரும் கதைகளில் காணலாம். இப்பொழுதெல்லாம், யாரும் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை, அங்கும்-இங்கும் கிடைக்கும் விவரங்களை வைத்து, தமது “மசாலவையும்” சேர்த்து கதைப் போன்று எழுதி வருகின்றனர். விவரங்களை சரிபார்ப்பதில்லை. நெரூர், மானாமதுரை, ஓம்கார், புரி[1], நாசிக் (மஹாராஷ்ட்ரத்தில் ஏதோ ஒரு இடம்) மற்றும் கராச்சி என்று அவ்விடங்கள் சொல்லப் படுகின்றன என்று எழுதிகிறார்கள்.. அவர் ஜீவசமாதி அடைந்த இடமோ, காவிரி புரண்டோடும் கரூருக்கு அருகிலுள்ள நெரூர் ஆகும்[2]. ஆனால் இவர் நெரூர் மற்றும் மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சி, ஒம்கார் மற்றும் காசி முதலிய ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாக “சதாசிவ அஷ்டகம்’ கூறுகிறது என்றும் விளக்கம் கொடுக்கப் படுகிறது. தனது தீர்த்த யாத்திரையின் போது, நாசிக் வழியாக கராச்சிற்கு சென்றிருக்கலாம். ஏனெனில், அப்பொழுது, கரச்சியில் இந்துக்கள் அதிகமாக இருந்திருக்கின்றனர். ஆனால், பிறகு நிலை மாறி விட்டது.

மஹாரஷ்ட்ரா ஜீவசமாதி குறிப்புகள்: மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், ஓம்கார், நாசிக், புரி, என்று ஒன்றிற்கும் மேலான இடங்கள் குறிப்பிடப் படுகின்றன. மஹாராஷ்ட்ராவில், பிரேந்திர ஸ்வாமில் (1649-1745) என்றொருவர் பிரசித்தியுடன் இருந்திருக்கிறார். போன்ஸ்லே பேஸ்வா அரசர்கள், அவரைப் போற்றிவந்துள்ளனர்[3].  சஞ்சீரா சித்திஸ் என்ற முகமதியர் முதலில் ஆதரவு காட்டினாலும், 1727ல் இவரது கோவிலையும், ஆசிரமத்தையு அழித்தனர். இதனால், காலப் போக்கில், இவற்றை மக்கள் மறந்டிருக்கலாம். உள்ளூர் மொழி கதைகளில் அறியப் படுகிறார்கள். பிரும்மேந்திராளுக்கும் இவருக்கும், இந்த துலுக்க சம்மந்தங்கள், கோவில்-ஆச்சிரமம் இடித்தது, புதுக்கோட்டையில், 1745ல் இவரது கோவில்-ஆசிரமம் இடித்தது போலவே இருக்கின்றன. ஆக, இதை வைத்தும் தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது. 1942ல் கனகராஜ ஐயர் ஓம்காரில் குறிப்பிட்ட நாட்களில் பூஜைகள் நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுதைய நிலை தெரியவில்லை.

கராச்சித் தீவில் உள்ள சிவன் கோவிலுக்கு ஶ்ரீசதாசிவபிரும்மேந்திரர் செல்வது போன்ற, ஒரு கற்பனை சித்திரம்.

கராச்சி ஜீவசமாதி குறிப்புகள்: கராச்சி குஜராத்திற்கு அருகில் உள்ளது. 712ல் அரேபியர் படையெடுப்பு, இப்பகுதி- சிந்து மாகாணம் முழுக்கப் பாதிக்கப் பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக, அப்பகுதிகள் முழுவடுமாக மாற்றப்பட்டன. 1947ல் பாரதம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபோது கூட, இந்துக்கள் சிலர் இருந்தனர். ஆனால், பிறகு சுவடுகளுகளே தெரியாமல், அழிக்கப் பட்டன. இப்பொழுது சில கோவில்கள் எஞ்சியுள்ளதாகத் தெரிகிறது. மக்கட்தொகையும் 2.5 லட்சமாகக் குறைந்து விட்டது[4]. இந்துக்களின் சொத்துக்களை, எதிரிகள் சட்டத்தின் கீழ் தொடர்ந்து அபகரிக்கப் பட்டு வருகின்றது. ஆகவே, அந்நிலையில், அங்கு பிரும்மேந்திராள் இருந்த எந்த ஆதாரத்தையும் கண்டு பிடிக்க முடியாது என்றே சொல்லலாம். 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவேளை அவர் அங்கு சென்றிருக்கலாம், படத்தைக் கூட நிறுவியிருக்கலாம், ஏனெனில், சிந்து மாகாணத்தில் இந்துக்கள் இருந்தனர். 800 இந்துக்கள் இந்தியாவுக்கு வந்து குடியேற அனுமதி கேட்டு. தாமதம் செய்ததால், அவர்கள் பாகிஸ்தானுக்கேச் சென்றுவிடதாக இப்பொழுது செய்தி வருகின்றது[5].

கராச்சித் தீவில் உள்ள சிவன் கோவில்

நெரூர் மற்றும் மானாதுரை இங்கு தொடர்ச்சியாக ஆராதனை நடைப்பெற்று வருகின்றது: இப்படி இடங்கள் மாறி-மாற்றிக் குறிப்பிடப் படுகின்றன. நெரூர் மற்றும் மானாமதுரையில், ஆண்டு தோறும், பக்தர்களின் ஆதரவுடன் ஆராதனை நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில நூறு பக்தர்கள் விடாமல் வந்து செல்கின்றனர். மூன்று முதல் ஒருவாரம், பூஜைகள், அன்னதானங்கள், கச்சேரிகள் நடந்து வருகின்றன. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நெரூரில் சமபந்தி போஜனம் மற்றும் “இலையில் உருளுதல்” நேர்த்திக் கடன் சடங்கு, இருந்து வந்ததாலும் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. அது இல்லை என்று தடை செய்யப் பட்டப் பிறகு கூட்டம் குறைந்து விட்டது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், கொரோனா காரணத்தால் கூட்டமில்லாமல், இருந்த நிலை ஏற்பட்டது, ஆனால், பூஜைகள்-ஆராதனைகள் நடந்தன. ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை நாள் வரும் மே மாதம் 2 – ஆம் தேதி ஜேஷ்ட சுத்த தசமியில் 2020ல் நடைபெற்றது[6]. தினமணியில் செய்தி வந்துள்ளது[7].

கராச்சி குஜராத் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிறிய தீவில் இந்த சிவன் கோவில் உள்ளது. அங்கு, இவர் சென்றிருக்கலாம்.

2021ல் 107வது ஆராதனை நடைபெற்றது: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், 107 வது ஆராதனை விழா மே 21. 2021 அன்று நடந்தது. கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அங்கு, ஆண்டுதோறும் மே மாதம் ஆராதனை விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, 2021, மே 17ல் சதாசிவ பிரமேந்திரர் பட உற்சவத்துடன் விழா தொடங்கியது[8]. 20-05-2021 வரை, நாள்தோறும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன[9]. 21-05-2021 அன்று, ஆராதனை விழாவையொட்டி, தெய்வீக பேருரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை மற்றும் சதாசிவ பிரமேந்திரர் உற்வசம் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்றனர்.

கராச்சி குஜராத் அருகில் உள்ளது. நாசிக், மஹாராஷ்ட்ரத்தில் உள்ளது. நாசிக்கிலிருந்து குஜராத், குஜராத்திலிருந்து கராச்சி என்று செக்ல்லலாம்.

11-05-2022 அன்று 2022ல் 108வது ஆராதஐ நடைபெற்றது  பலக்குத் தூக்குதல், பட்டினப் பிரவேசம், தடை என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, அமைதியாக, நெரூரில் பக்தர்கள் வந்தார்கள், வழிபட்டார்கள், சென்றார்கள். முன்பு போன்ற ஆரவாரம், ஊடக விளம்பரம் இல்லையென்றாலும், நம்பிக்கையுடன் வரும், வந்து கொண்டிருக்கின்ற பக்தர்கள் வந்தார்கள், வருகிறார்கள், வழக்கம் போல நடக்க வேண்டியவை நடந்து கொண்டிருக்கின்றன. சுக்ல தசமி, மாக நட்சத்திரம் அன்று  வருகிறது.

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] Puri is a village in Raver in Jalgaon district of Maharashtra State, India. It is located 22 kilometres (14 mi) from sub district headquarter and 60 kilometres (37 mi) from district headquarter. The village is administrated by Sarpanch an elected representative of the village as per Panchayati raj (India).

[2]  இப்பொழ்ய்தெல்லாம், அக்ரஹாரத்தின் குறுக்கே ஒருக்கும் காவாயில் கூட நீர் இருப்பதில்லை, அருகில் உள்ள ஆறும் வற்றியே காணப்படுகிறது. ஆராதனை நேரத்தில், சில நேரங்களில் மதகுகளைத் திறந்து நீரை விட்டால், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளித்து விட்டு செல்கின்றனர்.

[3] R. Sathianatha Iyer, College Textbook of History of India, Vol.III, 194?, pp.48-49.

Brahmendrar Svami (1649-1745): Brahmendrar Svami, the great saint revered by the Bhonsles, the Peshwas and others, played a part in the ministerial period of Maratha history analogous to that of Ramda in the regal period. He settled down near Chiplun (Ratnagiru Dt.) and moved on in 1728 to the neighbourhood of Satara. Patronized even by the Siddis of Janjira, his reputation ans wealth increased, and he became a prominent moneylender to the first two Peshwas. He foretold the greatness of Balaji Viswanath, advised him to support Sahu, himself espousing the Chatrapati’s cause against Tara Bai, and was instrumental in his elevation of Balaji Vivanath to the office of Peshwa. Consequent on Sat Siddi’s destruction of temple near his hermitage in 1727, he preached a crusade against the Siddis. Baji Rao’s treaty with them in 1733 did not satisfy the Svami, who felt much relief on the death of Sat Siddi at the hands of Chimanji Appa in 1736. The saint aided the Peshwas against the intrigues of the Dakhan party and showed pronounced hostility to the Angres. He was kept fully informed of all political developments, and Chimanji wrote to him at length after the capture of Bassein.

[4] Most Hindus and Sikhs of Karachi migrated to India during the 1947 partition and from 1948 onwards – after the establishment of Pakistan. Poor Hindus of Marwari and Rajasthani descent are concentrated particularly in Naraianpura and Lyari, while wealthier Sindhi Hindus live in Clifton and Saddar. Prominent temples include the Sri Swami Narayan temple on MA Jinnah Road, Daryalal Temple in Kharadar, and numerous temples in Narainpura including a Gujarati temple, a Marwari Temple, and a temple for the Karachi Sikh Sangat. Soldier Bazaar is home to a functioning Shri Panchmukhi Hanuman Temple, and Ganesh temple.Two temples function in Clifton: the Samadha Dham and Sri Ratneshwar Mahadev Temple. In Civil Lines, the Sant Satram Dham functions on School Road near Karachi Cantonment Station. A property currently in dispute between Sikhs and Hindus also stands in Aram Bagh (formerly Ram Bagh), although the areas Ram Talao no longer exists, and Ramchandra temple no longer exists. Mithadar is home to the Bhagnari Shiv Temple and Devi Mata Temple. Manora is home to the Sri Varun Dev Temple. As of the 1998 census, some 250,000 Hindus remain in Karachi, forming approximately 0.86% of the total city population. However, despite most Hindus having left Karachi, a large number of streets continue to bear Hindu names, particularly in Aram Bagh, Mithadar, and Ramswamy.

[5] மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800 பேர் குடியுரிமை கிடைக்காததால் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமந்த் லோக் சங்கதன் என்ற அமைப்பு கூறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் இந்துக்கள் சுமார் 25000 பேர் ராஜஸ்தானில் தங்கி இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. அரசால் தங்கள் வாழ்வில் விளகேற்றப்படும் என்று இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்து காத்திருந்த சுமார் 800 பாகிஸ்தான் சிறுபான்மை இந்துக்கள் நீண்ட காலமாகியும் குடியுரிமை கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதால் 2021 ம் ஆண்டு வேதனையுடன் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியதாகத் தெரிவித்துள்ளது.

[6]  தினமணி, பிபரே ராம ரஸம்!, By – எஸ். எஸ். சீதாராமன்  |   Published On : 01st May 2020 06:57 PM  |   Last Updated : 01st May 2020.

[7] https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/may/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-3410861.html

[8] தினமலர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் ஆராதனை, Added : மே 22, 2021  14:57. https://www.dinamalar.com/news_detail.asp?id=2772130

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2772130