Archive for the ‘ஹஜ்’ Category

அரேபிய நபாத்தியர்கள் யானை சிற்பங்கள் வடித்தது எப்படி, மலைக்கடவுள்-சந்திர பெண்கடவுளை வணங்கியது எப்படி?

செப்ரெம்பர் 15, 2016

அரேபிய நபாத்தியர்கள் யானை சிற்பங்கள் வடித்தது எப்படி, மலைக்கடவுள்சந்திர பெண்கடவுளை வணங்கியது எப்படி?

arabia-jordan-iraq-iran-india-location

பழங்கால நாகரிகங்களுக்கும் அரேபியாவுக்கும் உள்ள தொடர்புகள்: அரேபிய தீபகற்பம் வடக்கில் ஜோர்டான், இஸ்ரேல், லெபனான், சிரியா, இராக் முதலிய நாடுளும், கிழக்கில் இரான், பாரசீக வளைகுடா, ஓமான் நபாதியர், முதலிய நாடுளும், தெற்கில் யாமன் மற்றும் மேற்கில் எகிப்து, சூடான், எரித்ரியா முதலிய நாடுளும் சூழ்ந்துள்ளன. சிரியாவிற்கு மேலாக துருக்கி இருக்கிறது. இதன் கிழக்கில் கிரீஸ் மற்றும் கிழக்கில் இரான் இருக்கின்றன. இப்பகுதிகளில் தான் பழங்கால நாகரிகங்கள் சிறந்து விளங்கின. அப்பொழுது, இந்நாகரிகங்களுக்கு இடையே தொடர்புகள் இருந்துள்ளன. ஆனால், புதிய நாகரிகங்கள் தோன்றி, சுமார் 500 BCE வாக்கில், கிரீஸ், பாரசீகம் இந்தியா, சைனா போன்ற நாகரிகங்கள் சிறப்புடன் இருந்ததாக பேசப்படுகிறது. இருப்பினும், கிரேக்க நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு, நாகரிக சந்திப்புகள் விளக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு முன்பும், மக்கள் பலவழிகளில் தொடர்பில் இருந்தனர். இதுவரை, கிரேக்க-ரோம கலாச்சாரங்கள் மற்றும் இந்திய கலாச்சாரங்களில் யானையுடன் இருந்த விவரங்கள் விளக்கப்பட்டன. கிருத்துவ மற்றும் முகமதிய நாகரங்களில் இடைக்காலத்தில் இருந்த யானையின் கலாச்சாரம் எடுத்துக் காட்டப்பட்டது, இனி, அரேபிய கலாச்சாரத்தில், யானை வந்தது எப்படி என்று பார்த்தோம். இனி, மற்ற அரேபிய பகுதிகளைக் கவனிப்போம்.

%e0%ae%b9%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%85-%e0%ae%9aஇந்தியசீன நாகரிகங்கள் தொடர்ந்து இருந்து வருவது: 3102 BCE வாக்கில், மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, இந்நாகரிகங்கள் மறைய ஆரம்பித்தன. யுத்தத்தில் பங்குகொண்ட அரசர்கள், படைகள் முதலியன அவரர்வர் வந்த நாடுகளுக்குத் திருமொஇச் சென்றனர். யுத்தத்தில் உறவினர்களாக, நண்பர்களாக, நெருங்கியவர்களாக இருந்தாலும், ஒருவரையொருவர் எதித்துப் போரியட்டதால், பகைமை பாராட்ட வேண்டிய  நிலையும் ஏற்பட்டது. இதனால், ஒரே நாட்டினர், குடும்பத்தினர், பிரிவினர், பிரிந்து தனுத்தனியாகினர். 2250-1950 BCE வரை சிந்து சமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்து, திடீரென்று மறைந்து விட்டது. 1450 BCE வாக்கில் எகிப்திய, ஹிட்டைட், மிட்டானி, அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களால் சூழப்பட்டிருந்தன.  அவைகளும் மறைய ஆரம்பித்தன. இக்காலத்தைய பகோஸ்கோய் [Bogozkay inscription (c.1450 BCE)[1]] என்ற இடத்தில் இருந்த மக்கள் பக்கம் உள்ளூர் கடவுளர் மற்றும் இந்தரசீல், மித்திரசீல், வருணசீல், நசாத்தியா என்று மற்ற கடவுளர்களையும் வணங்கி வந்ததாக, அங்கு கிடைத்த கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது[2]. அதற்கு பிறகு, பழைய நாகரிகங்கள் மறைந்து, புதிய உருவில் உருமாறின. சுமார் 500 BCEவாக்கில் அவை கோலோச்சின. உண்மையில் சைனா-இந்திய நாகரிகங்கள் உலகில் தொடர்ந்து இருந்து வருகின்றன.  எகிப்திய, ஹிட்டைட், மிட்டானி, அசிரிய, பாபிலோனிய நாகரிகங்கள் மறைந்து விட்டாலும், இந்த இரண்டு நாகரிகங்கள் வாழும் நாகரிகங்களான உள்ளன.

dushara-lord-of-the-mountain-also-transliterated-as-dusaresநபாதியர் யார்அவர்களது மூலம் மர்மமாக, தெரியாமல் இருக்கிறது: அந-பாதியர் [الأنباط‎‎ al-ʾAnbā ] அரேபியர்கள் தாம். அவர்கள் அரேபியாவின் வடபகுதி மற்றும் கிரேக்க-இத்தாலி நாடுகளிலும் முதல் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்து வந்தனர். யூப்ரடீஸ் நதிமுதல் செங்கடல் வரை பரவியிருந்தனர். வியாபாரிகளாக இருந்த அவர்கள், பாலைவனங்களில் தங்குமிடங்களை நிர்வகித்து வந்தனர். கிரேக்க-ரோமானியர்கள் கிழக்குப் பக்கம் [இராக், இரான், ஆப்கானிஸ்தான், இந்தியா] செல்ல வேண்டுமானால், இவர்களது ராஜ்ஜியம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.ஆதேபோல, அரேபியர் தெற்கிலிருந்து, வடமேற்காக செல்ல வேண்டுமானால், இவர்களைக் கடந்து தான் செல்லவேண்டும். நபாதியர், பெதுவின் மக்களைப் போன்று, நாடோடிகளாக வந்த மக்கள், ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. அரேபியாவின் தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்த அரேபியர் என்றும் சொல்லப்படுகிறது. கற்பூரம், சாம்பிராணி, போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் யானை தந்தம் முதலியவற்றில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

nabataean-goddess-atargatis-northern-syriaதுஸ்ஹாரா மற்றும் அல்உஜ்ஜா கடவுளர்கள்: நபாத்தியர்கள் பலவித கடவுளர்களை வழிபட்டு வந்தாலும், துஸ்ஹாரா [Dushara] மற்றும் அல்-உஜ்ஜா [al-‘Uzzá] கடவுளர்களை வழிபட்டு வந்தது தெரிகிறது. துஷாரா [الشرى‎‎, “Lord of the Mountain” என்றால் “மலையின் கடவுள்” என்று பொருள்.  துஷாரா துசாரெஸ், ஜீயஸ், டையோனிசியஸ் போன்ற கடவுளர்களுடனும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது[3]. இதனால், அது இந்திய கடவுள் சிவனை ஒத்துள்ளது. அல்-உஜ்ஜா [Al-‘Uzzá (Arabic: العزى‎‎] இஸ்லாத்திற்கு முன்னர் அரேபியர் வணங்கி வந்த அல்-லத் மற்றும் அல்-மனத் என்று மூன்று பெண் தெய்வங்களில் ஒன்றாகும். கிரேக்க தெய்வம் ஹைரானியா, வீனஸ் [Aphrodite Ourania (Roman Venus Caelestis)] போன்ற தேவதைகளுடன் ஒப்புமைப்படுத்தப் படுகிறது. மெக்காவில் அல்-தைஃப் என்ற இடத்தில் இருக்கும் சதுரப்பெட்டக வடிவில் இருக்கும் உருவம் இத்தெய்வம் தான். குரானிலும் [Qur’an Sura 53:19] இவைப்பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளன. இத்தாலியிலும் இக்கடவுளின் உருவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் முதல் நூற்றாண்டுகளில் அப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற தெய்வமாக இருந்தது தெரிகிறது.

elephant-rock-near-el-bared-natural-stone-sculpture-little-the-capital-city-of-the-nabataeans-rock-cityகல்-நகரம், கல்லால் ஆன நகரம், மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் “பெட்ரா”:  நபாத்தியர் தூண்கள், கற்பாறைகள், முதலியவற்றில் கடவுள் இருந்ததாக நம்பினர். மலயுச்சிகளை அப்படியே கடவுள் உருவத்தில் செதுக்கி அர்பணித்து, கடவுளாகவே பாவித்து வழிபட்டனர். மலைகளைக் குடைந்து கட்டிடங்களையே உருவாக்கியத் தன்மைதான் “பெட்ரா” கல்-நகரம், கல்லால் ஆன நகரம் என்ற பெயரையே கொடுத்தது. 168 BCE முதல் 106 CE வரை ஆண்ட நபாத்திய அரசர்கள் இதை உருவாக்கியுள்ளனர். பெட்ரா என்ற இடத்தில் ஒரு பழைய நகரம் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்தன. பெரிய தூண்களால் ஆன மண்டபங்கள், குடவரை மாளிகைகள், கோவில்கள், இடிந்த நிலையில் காணப்பட்டன. நீண்ட தூண்களின் அமைப்பில் கிரேக்க-ரோமானிய தாக்கம் தெரிகிறது. பல இடங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்ட நிலையும் காணப்படுகிறது. சில சிற்பங்களைப் பார்க்கும் போது, இந்திய தாக்கமும் நன்றாகவே தெரிகிறது.

nabataean-elephants-pillarபெட்ராவில் காணப்படும் சில சிற்பங்கள், இந்தியத் தாக்கத்தைக் காட்டுகின்றது: பெட்ராவில் காணப்படும் சிலைகள், சிற்பங்கள் முதலியற்றை வைத்து, இந்துமத தாக்கத்தை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. கிராம் ஹாங்காக்[5], பிபுதேவ மிஸ்ரா[6] இவர்களின் தளங்களில் அத்தகைய விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்நாகரிகம், ரோமானியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்டதாலும், பிறகு இஸ்லாமியர் பலவற்றை அழித்து விட்டதாலும், இருக்கின்ற சிலைகள், சிற்பங்கள் முதலியற்றை வைத்து தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஆனால், இஸ்லாத்திற்கு முந்தைய கவிதைகள், கதைகள் மற்றும் இதர எழுத்துகள், இஸ்லாத்திற்கு பிறகு குரான், ஹதீஸ், ஷரீயத் மற்றும் எஞ்சியுள்ள கவிதைகள், கதைகள், இதர எழுத்துகள் மற்றும் சித்திரங்கள் முதலியவற்றை வைத்து, தொடர்புகளை ஆராய்ச்சி செய்யலாம். நபாத்தியரின் அட்ராகாடிஸ் [Atragatis] என்ற பிரதான தேவதை பொறித்த பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இதைப் பார்க்கும் போதே, இந்திய பெண்தெய்வத்தின் தொடர்பை கண்டு கொள்ளலாம். டைகி [Tyche] என்ற தேவதையின் சிற்பமும் அவ்வாறே உள்ளது. வலது பக்கத்தில் பிறை மற்றும் இடது பக்கத்தில் சூலம், வேல், அம்பு போன்றவை காணப்படுகின்றன. மேலும், சுற்றி 12 ராசிகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன[7].  ஆனால், அவற்றில் வழக்கமான கிரமமுறையில் இல்லை.

baetyl-depicted-with-a-lunar-crescent-on-the-topகற்களால் ஆன நீளுருண்டை வடிவங்கள் முதலியன: பேடெல் [Baetyl] எனப்படுகின்ற பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட சிற்பங்கள் போன்றுள்ளது. பேடெல், பெத்-ஏல் [Beatyl, Beth-El, house of god, Bethelhem] போன்ற சொற்கள் “கடவுளின் வீடு”, தெய்வம் உறையுல் இல், கோவில் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. யுரேனஸின் மகனின் பெயரே பெடேலுஸ் என்றுள்ளது. இக்கற்கள் தாமாக உண்டானவை மற்றும் வானத்திலிருந்து விழுந்த எரிகற்கள் என்றும் உள்ளன. தெய்வத்தன்மைக் கொண்ட கற்கள் என்பதால், அவற்றிற்கு சக்தி உள்ளது என்றும் மக்கள் நம்பினார்கள்[8]. பெட்ராவைப் பொறுத்தவரையில் அங்கிருக்கும் கல்வெட்டுகள், அல்-உஜ்ஜா தான் கடவுள் என்று குறிப்பிட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டு, இது போஸ்ராவில் உள்ள அல்-லத் என்று குறிப்பிடுகிறது[9].  அதாவது படிப்படியாக, அசிரிய, பாபிலோனிய, ரோமானிய, இஸ்லாமிய நாகரிகங்களின் தாக்கம் தெரிகிறது. இவையெல்லாம் மேலாக இருந்தாலும், உள்ளே, மலைகளில், மலைப்பாறைகளில், குடவரை கட்டிடக்களில், சிற்பக்களில், சுமண் சிற்பங்களில், பழங்கால இந்தியாவின் தாக்கம் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2016

petra-snake-mountain-another-view-an-elephant-god

[1] Boğazkale is a district of Çorum Province in the Black Sea region of Turkey. It is located at 87 km from the city of Çorum. The population of the town is about 1,500. The mayor is Osman Tangazoğlu (AKP). Formerly known as Boğazköy or Boghazköy,

[2] Fournet, Arnaud, and Allan R. Bomhard. The Indo-European Elements in Hurrian, in” La Garenne Colombes/Charleston (2010).

[3] Patrich, Joseph. Was Dionysos, the wine-god, venerated by the Nabataeans?ARAM Periodical 17 (2005): 95-113.

[4] http://www.viewzone.com/petra.html

[5] Bibhu Dev Misra, Petra, Jordan – Is it an ancient Shiva Temple complex?, https://grahamhancock.com/dmisrab4/

[6] Bibhu Dev Misra, Olmec Yogis with Hindu beliefs: Did they migrate from ancient China?, http://www.bibhudevmisra.com/

[7] Belmonte, Juan Antonio. “Petra revisited: New clues for the Nabataean cultic calendar.” European Society for Astronomy in Culture: 9.

[8] The term “baityl/baetyl/betyl” derives from the Greek ßanUAla. Philo of Byblos (FGrHist 790 F 2,23) in the second century A.D. explains that ßatTUAta were invented by the god Ouranos when he managed to create AlBot EJ.1\jfUXOt, meaning animated stones, which fell from the heavens and possessed magical power.

[9]  The worship of Allat in an Arabian tradition which is also found in the Hawran (CIS II no. 185; the reading °m / “Ihy”, “the mother of the gods,” is not accepted by all scholars; cf. further the votive niche of Allat-Atargatis [Daiman 1908: no. 149, fig. 681 with features of the mother goddess; cf. Krone 1992: 339-42). AI-cUzza seems to be the great mother goddess in Petraean mythology as reflected in a late source (Epiphanius of Salamis, Panarion 51, 22, 9-/1; cf. Cook 1940: 912-16). The related figurines of a goddess and a child among the Nabataean terracottas (I. Parlasca 1997: 127-28, figs. 139-40) may be taken as an earlier indication for this tradition.

அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது!

செப்ரெம்பர் 13, 2016

அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது!

vinayaka-jesus-muhhamad

உலக மதங்களை ஒப்பீடு செய்தல், சம்பந்தப்படுத்துதல்: உலகமதங்களை ஒப்பீடு [Study of comparison of religions / Comparative religion] செய்து ஆராய்ந்தால், பலவுண்மைகள் புலப்படும். இந்துமதத்தை மற்றவர்கள் – கிருத்துவர்கள், முகமதியர்கள், நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், ஏன் இந்துவிரோதிகள் ஆராய்ச்சி செய்துள்ளதைப் போன்று, இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், சாதாரண இந்துக்கள் கூட ஆராய்ச்சி செய்ததில்லை. மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன சொன்னார்களோ, எழுதி வைத்தார்களோ அவற்றை வைத்தே, இன்றும் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்துக்களின் பலவீனமாகி விட்டது. மேலும், தன்னைப் பற்றியே படித்துத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்ற “முட்டாள் இந்துக்கள்”, மற்றவர்களைப் பற்றியும் படித்து-தெரிந்து கொள்வதில்லை.

parvati-mary-khadija

இயற்கை மதம் மற்றும் தெய்வீக மதம் உருவானது: மக்களிடையே நம்பிக்கை இருந்தாலும், மதம் திடீரென்று வந்து விடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இயற்கை மற்றும் மக்களுக்கு இடையில் நடந்த போராட்டங்களிலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சதிகள் மற்றும் மக்களுக்கு இடையில் நடந்த சந்திப்புகளிலும், ஏற்பட்ட மோதல்கள், வெற்றிகள், பிறகு அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை முதலிய அனுபவங்கள், காலம்-காலமாக நடந்து கொண்டிருந்த போது, ஒரு நிலையில், நிலைநிறுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருப்பது கண்டபோது, அவை நம்பிக்கைகள் ஆகின. மக்களிடையே அவை பரவி, இயற்கையோடு இயைந்த முறையில் காணும் போது, அவற்றை தனக்கும் மேலாக இருக்கின்ற அந்த சக்திகளை தெய்வங்களாக ஆக்கி [Deification of natural forces] வழிபட ஆரம்பித்தான். இத்தகைய விளக்கங்கள் புரியாதபோது, கடவுள், தெய்வம், முதலியவை உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

abraham-sacrifises-isaac-god-stops-ram-substituted

ஒரே மூலம் மற்றும் ஒன்றிற்கு மேலான மூலங்களிலிருந்து தோன்றியவை என்ற கோட்பாடுகள்[1]: எப்படி, இயற்கையில், நிலப்பரப்பு, நீர்பரப்பு, மலைகள், நதிகள், முதலியவை மாறுபட்டுள்ளனவோ, அங்கங்கிருந்த மக்களும் மாறிய நிலையில் அவற்றை சின்னங்களாக மாற்றும் போதும், தெய்வத்தன்மை கொண்டது போல பாவித்து உருவங்களாக மாற்றியபோதும் [Deification], அவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டன. மக்கள் தானாகவே படைக்கப்பட்டனர் என்ற சித்தாந்தம் படி நோக்கினும் ஒரே மூலத்திலிருந்து பிறந்வர்கள் [monogenous] மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட மூலங்கள் [heterogenus] மூலம் பிறந்தவர்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது[2]. தானாகவே பிறந்தது-தோன்றியது [autogenous] போன்ற சித்தாந்தங்களும் உண்டாக்கப்பட்டன. அவ்வாறே மற்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

abraham-sacrifises-ismeil-god-stops-ram-substituted

ஆண்-தெய்வம், பெண்-தெய்வம், தெவ்வீகக் குடும்பங்கள் உருவானது:  தெய்வீகமாக்கப்பட்ட சின்னங்கள் இயற்கை சக்திகளாக [natural forces] – ஊழி, புயல், வெள்ளம், தீப்பிடித்தல், நிலச்சரிவுகள், பூகம்பம் ஏற்படுதல் – இருந்தன. மிருகங்களும் [animals] மனிதனை வெற்றிக் கொண்டபோது தெய்வங்களாகின [deification of animals]. மனிதர்களுக்குள்ளேயே ஒரு மனிதன் – ஆண் அல்லது பெண் [man / woman] மற்றவர்களைவிட அதிக சக்திகளைக் கொண்டிருக்கும் போது அந்த ஆண் அல்லது பெண் தெய்வமாக்கப் பட்டாள் [deification of man and woman]. இவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட ஆண்-பெண் கடவுளர்களுக்கு தெய்வீக குடும்பமும் [divine family] மேற்படுத்தப் பட்டது. மனிதர்கள் தத்தமது வம்சாவளி கூறுகள் [hereditary] மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை [environmental]  காரணைகளால் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றனர். அதனால் அவர்கள் அப்படியே ஒரெ அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட உருவங்கள் அல்லது உருவ நகல்கள் [identical copies] போன்றிருக்க மாட்டார்கள். அதனால், அவர்களால் பாவிக்கப்பட்ட கடவுளர்களும் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதை முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், எல்லாவற்றிற்கு மூலகாரணமாக [archytype] ஒன்றிருக்க வேண்டும் என்ற சித்தாந்தமும் உருவானது.

abraham-sacrifises-ismeil-god-stops-ram-substituted

பிறப்பு-இறப்பு, பிராயசித்தம்-பலி, பலியிடுதல்-உயிர்ப்பித்தல்: மனிதனை இறைவன் மண்ணிலிருந்து உருவாக்கினான், அம்மனிதனின் விலா எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கினான் என்று யூத, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் கூறுகின்றன. ஆகவே, ஒரேமூலத்திலிருந்து, ஒரே கடவுளிருந்து பிறந்தவர்கள் சகோதர-சகோதரி ஆவர். இருப்பினும், அவர்கள் புணர்ந்து மக்களை உருவாக்கினர். அதாவது, கடவுளின் ஆணையை மீறியதால், சபிக்கப்பட்டு அவ்வாறு மாறினர். அத்தகைய பாவத்தைச் செய்ததால், பிராயச்சித்தமாக இறைவனுக்கு பலி கொடுக்க வேண்டும் என்ற முறை ஏற்படுத்தப் பட்டது. இயற்கையில், பூமியை உழுது, விதை போட்டு, பயிரிட்டு, விளைச்சல் ஏற்பட்டு, அறுவடை செய்யும் போதும், தலைப்பிள்ளையை பலிகொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆகவே, அப்பன்-பிள்ளைகளில் இப்பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது.

abraham-sacrifice-isaac

அப்பன் பிள்லையை பலியிடும் பழக்கத்தில் பிள்ளைக்குப் பதிலாக மிருகம் வந்தது: ஆதாம், ஜெஹோவாவின் ஆணையை மீறிய போது, பிராயசித்தம் எதுவும் செய்யவில்லை. அதற்குத்தான், ஏசுகிறிஸ்து பலியானார் என்றனர். யூதர்களோ எதிர்பார்க்கப்பட்ட நபி இன்றும் வரவில்லை என்று பலியிட்டுக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முகமதியர்களோ அப்ரஹாம், தன் மகன் ஐசக்கையே பலியிட துணிந்தபோது, கடவுள் தடுத்து ஆட்கொண்டதால், மகனுக்கு பதிலான ஒரு விலங்கை பலியிடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. மகனை பலியிட அம்மா, அம்மன், தாய் மறுத்ததாலோ, இல்லை அப்பா, அப்பன், தந்தை ஒப்புக்கொள்ளாதலாலோ, மகனுக்குப் பதிலாக மிருகம் என்று மற்றப்பட்டதொ என்பதும் நோக்கத்தக்கடு. அந்த விலங்கும் எந்த விலங்கு என்று சொல்லப்படாதலால், இடத்திற்கு இடம் மாறி வருகிறது. ஓட்டகம், ஆடு, மாடு, கோழி என்றுள்ளது. ஐசக் யானையை ஏன் பலியிடவில்லை என்று யாரும் கேட்கவில்லை. அந்நிலையில் தான் ஒரு யானையை பலியிட்ட அப்பனின் கதை வருகிறது.

universal-elephant-birth-of-elephant-god-bhisnupur-temple-1694-ce

யானைப்பலி, யானை உயிர்ப்பித்தல் கதைகளின் பின்னணி: சிவன் பார்வதி யானை உருவத்தில் புணர்ந்து பிள்ளையார் உருவான கதை இப்பொழுது எல்லோருக்கும், மிக நன்றாகவே தெரிந்திருப்பதால், அதனை மறுபடியும் விளக்க வேண்டாம். ஆதாம்-ஏவாள் கூட அவ்வாறே யானை உருவத்தில் புணர்ந்து ஒன்றல்ல, இரண்டு பிள்ளைகளைப் பெற்றுள்ளனர். சிவன் பார்வதி ஆணையின் படி தடுத்த விநாயகரைக் கொன்றார். பலியிட்டார். யானைக்குப் பிறந்தது, யானையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், பலியான பிள்ளையை உயிர்த்தெழ செய்யும் போது, ஆண்டவர் யனைத்தலை வைத்து உயிப்பித்தார் என்றுள்ளது. அதாவது, இறந்து புதைக்கும் போது ஒரு உடல் இருக்கும், இறுதி தீர்ப்பு நாளன்று உயிப்பொத்து எழும் போது, வேறு உடல் இருக்கும் என்பதை குறிக்கிறது போலும். ஆதாமும், ஏவாள் காரணத்தால் தான் கடவுளிடம் கோபத்தைப் பெற்று, பாவியாகிறான். அவர்களுக்குப் பிறந்த கைன் மற்றும் ஆபெல் பிள்ளைகளிடம் ஆண்டவர் பலி கேட்கிறார். இருவரும் பலி கொடுக்கின்றனர். ஆனால், ஆபெல் கொடுத்த பலியை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். இதனால், கோபமுற்ற கைன், ஆபெலைக் கொல்கிறான். அதாவது, மூத்தப் பிள்ளை, இளையப் பிள்ளையை, ஆண்டவருக்கு பலியிடுகிறான். இவற்றையெல்லாம் ஆதாம் பிள்ளை தடுக்கவில்லை.

siva-kiiling-elephant

அப்ரஹாம் ஏன் யானையை பலியிடவில்லை?: ஆண்டவர் / அல்லா / கர்த்தர் / ஜேஹோவா, அப்ரஹாம் / இப்ராஹிம் அப்பனிடம், பிள்ளையை பலி கேட்டபோது, அப்பன் பிள்ளையை பலியிட முயன்றான். ஆண்டவர் அவனது அபரீதமான பக்தியை மெச்சி, பிள்லைக்குப் பதிலாக மிருகத்தைப் பலியிடச் சொன்னபோது, யானையை பலியிடவில்லை. அங்கு யானைகள் கிடைப்பதாக இருந்தால், யானையை பலியிட்டிருக்கலாம். பிறகு யானைப்படை, காபாவை அழிக்க வரும் என்பதால், தீர்க்கதரிசனத்துடன் யானையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. ஏனெனில், பிறகு, யானை காபாவைத் தாக்கவில்லை. மொஹம்மது பிறக்கப் போகின்ற இடம் என்பதால் நின்று விட்டன. பிறகு, யானை வருடத்தில் மொஹம்மது அவதாரம் செய்கிறார். தீர்க்கதரிசனத்தால், இவற்றையெல்லாம் முன்னரே அப்ரஹாம் அறிந்ததால், பிள்ளையை விட்டுவிட்டது போல, யானையையும் விட்டுவிட்டனர் போலும்.

siva-beheading-ganesha-and-resurrects

கடவுளின் ஒரே மகன், அறிவுள்ளபுத்திசாலியானசிறந்த மகன் தான் பலிக்கு விஷேசமானவன்: பலிகேட்கப்பட்ட பிள்ளை ஐசக்கா அல்லது இஸ்மாயிலா என்ற கேள்வி எழுகின்றது. யூத-கிருத்துவ மரபு படி, அப்ரஹாமின் ஒரே மகன் தான் பலிக்குக் கேட்கப்பட்டான்[3]. குரானில் [ Qur’ân – from verse 37:99 to verse 37:109] அந்த பிள்ளையின் பெயர் குறிப்பிடப்படவில்லை[4]. ஆண்டவர், மிகவும் அறிவாளி, சிறந்த-குணாவானான மகனைத் தான் பலியாகக் கேட்டார். பிறகு இன்னொரு வரியில் சிறந்த மகன் ஐசக் [37:112] என்றுதான் வருகிறது. இருப்பினும், ஹதீஸ் மற்ற இலக்கிய ஆதாரக்களை வைத்து, அந்த பிள்ளை இஸ்மாயில் என்று தான் தீர்மானம் செய்யப்பட்டது[5]. ஏனெனில், ஐசக் சத்தியப்பிரமாணமாகக் கொடுக்கப்பட்ட பிள்ளை[6], 90 வயதில் அதிசயமாகப் பிறந்த பிள்ளை[7], ஐசக்கின் பிள்ளைகள் தான் அப்ரஹாமின் பூமிக்கு சொந்தக்காரர்கள்[8] என்று தீர்மானிக்கப்பட்டது. அதனால், அந்த அதிசயக் குழந்தைக் காக்கப்படவேண்டும், என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகியது. கைநாபெல் கதை போல, இஸ்மாயில்-ஐசக் கதை உள்ளது. நல்ல பிள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இக்கதையே யூதமதத்திற்கு முந்தையது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

siva-abraham-ibrahim-kiiling-son

உண்மைகள் அறிய படிக்க வேண்டும், உள்ள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்: இக்கதைகளை எல்லாம் படித்துப் பார்த்தால், அப்பன் மகனை பலியிட்டது, அப்பனுக்காக மகன் தானே பலியிட்டுக் கொண்டது, அப்பன் மகனுக்குப் பதிலாக மிருகத்தை பலியிட்டது முதலிவ விவகாரங்கள் நன்றாகவே புரியும். இப்பொழுது ஐசிஸ் ஆதாரங்களை அழித்து வருகின்றது. முன்னர் முகமதியர், கிருத்துவர், யூதர் முதலியோரும், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இடருப்பவற்றை அழித்து அல்லது மாற்றித்தான் வந்துள்ளார்கள். இருப்பினும், கடந்த 300 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் உண்மைகளை எழுதி வைத்திருப்பதால், அவை மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு உபயோகமாக இருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, இந்திய கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் முதலில் இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான், அவர்கள் இந்துக்களை விமர்சிக்க மாட்டார்கள். நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள் வகையறாக்கள் 100% உண்மைகளை சொல்ல-எழுத வேண்டும். அரைகுறை, அரைவேக்காட்டுத்தனமான வாத-விவாதங்கள் உபயோகப்படாது.

© வேதபிரகாஷ்

13-09-2016

vishnu-killing-and-saving-elephant

[1] Frazer, James George, The Golden Bow: A study in magic and religion, 1929.

[2] Lévi-Strauss, Claude, The structural study of mythThe Journal of American Folklore 68.270 (1955): 428-444.

[3] Jews and Christians say that the sacrificed was Isaac -“Abraham’s only son”, whereas according to the Islamic tradition the sacrificed is Ishmael. (Genesis 22:1-2, R.S.V.). (Hebrews 11:17, R.S.V.). (James 2:21, R.S.V.).

http://www.islamic-awareness.org/Quran/Contrad/MusTrad/sacrifice.html

[4] Sherwood, Yvonne. Binding–Unbinding: Divided Responses of Judaism, Christianity, and Islam to the “Sacrifice” of Abraham’s Beloved Son, Journal of the American Academy of Religion 72.4 (2004): 821-861.

[5] Firestone, Reuven. Abraham’s son as the intended sacrifice (Al-dhabīh, Qur’ān 37: 99–113): Issues in Qur’ānic exegesis, Journal of Semitic Studies 34.1 (1989): 95-131.

[6] Isaac was the only promised child of Abraham, a fact which the Quran agrees with (cf. Genesis 17:15-21; Surah 11:69-73, 37:112-113, 51:24-30). Ishmael was never a promised child.

[7] Isaac was conceived miraculously to a barren mother and a very aged father, with the Quran likewise agreeing (cf. Genesis 17:15-17, 18:9-15, 21:1-7; Galatians 4:28-29; Surah 11:69-73, 51:24-30). Ishmael was conceived normally without the need of any miraculous intervention.

[8] God promised that it would be Isaac’s descendants who would inherit the land given to Abraham. (Genesis 13:14-18, 15:18-21, 28:13-14). Ishmael had no part in the inheritance and promise given to Isaac through Abraham.

 

712 CE வரையிலுள்ள சரித்திரத்தை பாரசீகப் புராணங்களில் வைத்து-திரித்து, அதற்குப் பிறகுள்ள சரித்திரத்தை மறைத்தது!

ஜூலை 7, 2015

712 CE வரையிலுள்ள சரித்திரத்தை பாரசீகப் புராணங்களில் வைத்துதிரித்து, அதற்குப் பிறகுள்ள சரித்திரத்தை மறைத்தது!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (17)].

Arab invasion of sind

Arab invasion of sind

இந்திய சரித்திரத்தை முகலாயர் சரித்திரமாக மாற்றிய விதம்: இந்திய சரித்திரத்தில் ஹர்ஷருக்குப் பிறகு (606-647 CE) ராஜபுத்திரர்களின் சுமார் 700 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை (650-1200 CE) சுருக்கமாக முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள ஆட்சியை சில பக்கங்களில் முடக்கிவிடுகின்றது. 7ம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாம் கத்தியேந்திய முகமதியர்களால் மத்திய ஆசிய நாடுகளில் பரவி, அதற்குப் பிறகு தான் 712ல் சிந்துதேசத்தில் நுழைந்தனர். மொஹம்மது தோன்றி, முகமதியம் தோன்றி, இஸ்லாமாக வளர்வதற்கு முன்னால் அப்பகுதிகளில் யார் ஆண்டனர், எம்மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனை சரித்திராசியர்கள் விளக்குவதில்லை. இந்துகுஷ், பிரமாணபாத் போன்ற இடங்களும், “ஸ்தான்” என்று முடியும் பல பகுதிகளும், அங்கு கிடைத்துள்ள அகழ்வாய்வு ஆதாரங்களும், இந்திய தாக்கத்தைத்தான் காட்டுகின்றன. குறிப்பாக முகமதிய சித்திரங்களில் பௌத்த தாக்கத்தைக் காணலாம். ஏனெனில், ஆரம்பகாலத்தில் அதிக அளவில் பௌத்தர்கள் முகமதிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

Sasanid, Kushan, Uygur empires

Sasanid, Kushan, Uygur empires

சரித்திரத்தன்மை இல்லாத “சிந்துவின் மீதான படையெடுப்பு” என்றதைத் திணித்தது: ராய் ஷாசி II க்குப் பிறகு, சச் (c. 610-671 CE) என்ற பிராமண அரசர் சிந்தை ஆண்டுவந்தார், இவரைப்பற்றி தான் சாசா நாமா என்ற நூலில் சொல்லப் பட்டிருக்கிறது. சந்தர் என்ற சச்சின் சகோதரர் பிறகு  ஆண்டார். மொஹம்மது பின் காசிம் 711 CEல் சிந்தின் மீது படையெடுத்தான். அப்பொழுது ஆண்ட தாஹிர் என்ற அரசனுக்கு பௌத்தர்கள் உதவவில்லை. இதனால், ராஜா தாஹிர் தோற்கடிக்கப்பட்டார், அலோர், தேபால் பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டன. இங்கும் சச் அரசரைப் பற்றி முரண்பாடான விவரங்கள் சொல்லப்படுகின்றன. நவீன சரித்திர ஆசிரியர்கள் அவரை பௌத்தர் என்கிறார்கள். பிறகு பௌத்தர்கள் அவருக்கு உதவாமல், அரேபியர்களுக்கு என் உதவினார்கள் என்று விளக்கவில்லை. பிராமணர் எப்படி ஆளமுடியும் என்பதும் முரண்பாடானது, அதாவது, அக்காலத்தில், சத்திரியர்கள் ஏன் அப்பகுதிகளை ஆளவில்லை என்று நோக்கத்தக்கது. இவ்வளவு நடந்தும் இபின் ஹவ்கல் [Ibn Hawqal] என்ற அரேபிய பிரயாணி 967 CEல் அங்கு வந்தபோது, மக்கட்தொகை மிக்க 24 நகரங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளான்.

Hajj discrimination shia and gender

Hajj discrimination shia and gender

அரேபியர்களும், அரேபியர்-அல்லாதவர்களும்: சிந்தின் முக்கிய மக்கள் ஜாட், சோதா, ஜரேஜா, மெட்ஸ் என்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜாட் மக்கள் பெருமளவில் அடிமைகளாக்கி இராக்கிற்கு அனுப்பப் பட்டனர்[1], என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. இன்னொருப் பக்கமோ, சச் அரேபியப் பெண்களை சரியாக நடத்தவில்லை அதனால், மொஹம்மது பின் காசிம் அனுப்பப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றிற்கு சரித்திர ஆதாரங்கள் இதுவுமே இல்லை. பொதுவாக பாரசீக நூல்களின் படி, இப்பொழுதுள்ள முகமதியர்கள் எல்லோருமே அரேபியர்களின் சந்ததியர், வாரிசுகள், வழிவந்தவர்கள் என்றுதான் உறுதியாக சொல்லிக் கொள்கின்றனர். அதிலும், குறிப்பாக இரான் அல்லது புகராவிலிருந்து வந்த ஒரு பெரிய வீரன் அல்லது சந்நியாசி மூலங்களிலிருந்து வந்தார்கள் என்றுதான் அறிவித்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அரேபியர்கள் ஒப்புக்கொள்வதில்லை[2]. சவுதியில் வேலை, திருமணம், ஹஜ் போன்ற விசயங்கள் வரும் போது, அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று தான் நடத்தப்படுகிறார்கள்.

Khilji, Lodi etc ruled India

Khilji, Lodi etc ruled India

முகமதியர் மற்றும் ஆங்கிலேய எழுத்தாளர்கள் சரித்திரத்தை திரித்தது: இஸ்மயிலி குழுக்கள் வந்து மதமாற்றங்களில் ஈடுபட்டன. இது சூபிக்களின் வேலை போல உள்ளது. சிந்து மற்ற பகுதிகளை ஆண்டு வந்த இந்து அரசர்களின் விவரங்களை சச் நாமா அல்லது ஃபடே நாமா அல்லது தாரிக்-இ-ஹிந்த் வ சிந்த் என்ற நூலிலிருந்து தான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது, ஆனால், அவற்றிற்கு சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை[3]. இதை எழுதியது யார் என்று தெரியாது, மேலும், அரேபியத்திலிருந்து பாரசீகத்தில் மொழிபெயர்த்துள்ளது என்கிறார்கள். புராணக்கதை, கட்டுக்கதை, ரோமாஞ்சனக் கதை என்றெல்லாம் கருதப்பட்டது[4]. ஆனால், மவுன்ட்ஸ்டௌர்ட் எல்பின்ஸ்டோன் என்பவர் சொல்லித்தான், அவ்விவரங்களை சரித்திரத்தில் சேர்த்துக் கொண்டார்கள்[5]. இந்திய புராணங்கள் என்று வரும்போது, அவையெல்லாம் கட்டுக்கதை, பொய், சரித்திர ஆதரம் இல்லை என்றது கவனிக்கத்தக்கது. எனவே, முகமதியர் மற்றும் ஆங்கிலேய எழுத்தாளர்கள் சரித்திரத்தை இவ்வாறு பாரபட்சத்துடன், ஓரவஞ்சனையுடன், தீர்மானித்துள்ள திட்டத்தின்படி திரித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

Hajj women and Jain women

Hajj women and Jain women

ஜைனர்களால் ஏன் முகமதியர்களை எதிர்க்க முடியவில்லை?: மத்திய ஆசியப்பகுதிகளில் ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அதிகமாக இருந்தனர். ஸ்வேதேம்பர ஜைனர்கள் அப்படியே மதம் மாற்றப்பட்டனர், திகம்பரர்கள் தப்பியோடினர். மற்றவர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், மதம் மாற்றப்பட்டனர். அஹிம்சை தவிர பௌத்தம் மற்றும் இஸ்லாத்திற்கு பெருமளவில் வித்தியாசம் இல்லாமல் இருந்தது. எல்லா கடவுளர்களையும் மறுத்தது (லா இல்லாலஹ) பௌத்தம், ஆனால், முகமதியம் எல்லா கடவுளர்களையும் மறுத்தது அதற்கு (லா இலா இல்லல்லாஹ) அல்லா என்று பெயரிட்டு, கூட (மொஹம்மது ரசுரல்லாஹ) நபியையும் சேர்த்துக் கொண்டனர். சுமார் 300 ஆண்டுகள் காலம் அமைதியாகவே இருந்தது, அதாவது இந்துக்கள் தாம் ஆண்டுகொண்டிருந்தனர். ஆனால், இச்சரித்திரமும் இந்தியர்களுக்குச் சொல்லப்படுவதில்லை.  சிந்து பகுதிகளில் இடிபாடுகளுடன் இருக்கும் கோவில்கள், ஜைனத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். அப்படியென்றால், ஜைனர்கள் எப்பொழுது அதிகாரத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தனர் என்றும் விளக்கப் படுவதில்லை. இடைக்காலத்தில் சைவர்களுடன் தென்னிந்தியாவில், மேற்குக்கடற்கரைப் பகுதிகளில், இந்துக்களை மதமாற்றிருக்கிறார்கள். பிறகு, முகமதியர்களுடன் அவர்களால் ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை?

Muslim Comparison Chart for HAJJ

Muslim Comparison Chart for HAJJ

712 முதல் 1026 வரை சரித்திரம் என்ன சொல்லப்படவில்லை: பிறகு 1000 முதல் 1026 CE வரை மொஹம்மது கஜினி 17 முறை பாரதத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றான்.  ஜாட் அரசர்கள் அவனை பலமுறை துரத்தியடித்திருக்கிறார்கள். ஜெயபால் ஒரு லட்சம் வீரர்களுடன், கஜினி வரை சென்று, மொஹம்மதுவைத் துரத்தியடித்திருக்கிறான். மொஹம்மது கோரியின் தாக்குதல்கள் 1175-1206 காலகட்டத்தில் ஏற்பட்டன. “அடிமை வம்சத்தின் ஆட்சி” 1206 முதல் 1290 வரை இருந்தது. இக்காலத்தில் தில்லி மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள கோவில்கள் தாக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன. கில்ஜி வம்சம் 1290 முதல் 1320 CE வரை ஆண்டது. இதில் அலாவுத்தின் கில்ஜி காலத்தில் வடவிந்தியாவில் பற்பல குரூரங்கள், கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. துக்ளக் ஆட்சி காலம் 1320 முதல் 1414 CE வரை இருந்தது. பிறகு சையதுகள் 1414 -1451 CE மற்றும் லோடிகள் 1451-1526 காலத்தில் ஆண்டனர்.

Raja Dahir anniversary

Raja Dahir anniversary

350 ஆண்டுகளுக்குப் பிறகு முகலாயர்களின் ஆட்சி ஏற்பட்டது எப்படி?: 1290-1526 காலத்திற்கு அதாவது சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு முகலாயர்களின் ஆட்சி ஏற்பட்டது. பாமனி சுல்தான்கள் 1347-1526 CE வரை தெற்கில் சில பகுதிகளை ஆண்டு வந்தாலும், அவர்கள் தில்லியின் பிரதிநிதிகளாக இருந்தனர். 1336-1565 CE வரை, விஜயநகர பேரரசு முகமதியரை தெற்கில் வரவிடாமல் தடுத்து ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.  அதாவது சுமார் 350-700 ஆண்டுகள், தில்லி மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்ட வரலாற்றை, இந்திய வரலாறு என்றும், அதிலும் 712-1757 காலத்தை முகமதியர் ஆட்சி காலம் அல்லது 700 ஆண்டுகள் முகமதியர் ஆட்சி காலம் என்று வர்ணிக்கின்றனர். ஆனால், மற்ற பகுதிகளில் ஆண்ட இந்திய அரசர்களின் நிலைப் பற்றி மறைத்து விட்டார்கள். 712-1757 CE காலகட்டத்தில் அவர்கள் ஆண்ட இடங்கள் என்று வரைப்படத்தில் காட்டும் போது, விடுபட்டுள்ள அப்பெரிய இடத்தை யார் ஆண்டார்கள் என்பதை எப்படி அவர்கள் மறைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுவே இந்திய சரித்திரத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடி என்றாகிறது.

வேதபிரகாஷ்

© 07-07-2015

[1] http://www.dawn.com/news/885796/time-check-mediaeval-india-impact-of-the-arab-conquest-of-sindh

[2] http://tribune.com.pk/story/317619/arab-origins/

[3] Chach Nama (Sindhi: چچ نامو‎), also known as the Fateh nama Sindh (Sindhi: فتح نامه سنڌ‎), and as Tarekh-e-Hind wa Sindh Arabic (تاريخ الهند والسند), is a book about the history ofSindh, chronicling the Chacha Dynasty’s period, following the demise of the Rai Dynasty and the ascent of Chach of Alor to the throne, down to the Arab conquest by Muhammad bin Qasim in early 8th century AD.

[4] The Táríkh Maasúmí, and the Tuhfatulkirám are two other Muslim histories of the same period and on occasion give differing accounts of some details. Later Muslim chronicles like those by Nizam-ud din Ahmad, Nuru-l Hakk, Firishta, and the Mir Ma’sum draw their account of the Arab conquest from the Chach-Nama.

[5] It was translated into Persian by Muhammad Ali bin Hamid bin Abu Bakr Kufi in 1216 CE[2] from an earlier Arabic text. At one time it was considered to be a romance until Mountstuart Elphinstone’s observations of its historical veracity. The original work in Arabic is believed to have been composed by the Sakifí family, the kinsmen of Muhammad bin Qasim.