Posts Tagged ‘பாரதம்’

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

செப்ரெம்பர் 7, 2023

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

அலெக்சாந்தர் கட்டுக் கதையும், இந்திய சத்திரமும்: மூல சரித்திர ஆதாரங்களை ஆயும் பொழுது, அலெக்சாந்தர் என்ற நபர் இருந்ததே சந்தேகத்திற்கு எடுத்துச்சென்றது. இதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியர் கண்டறிந்தனர். அலெக்சாந்தர் 367-326 BCEல் “இந்தியாவின்” மீது படையெடுத்தான், வென்றான், அதிலிருந்து தான் “இந்தியாவின்” சரித்திரமே ஆரம்பிக்கிறது என்றெல்லாம் ஆங்கிலேயர் எழுதி வைக்க, அது பிரபலமாகி இன்னும் தொயடர்ந்து கற்பிக்கப் படுகிறது, இந்தியர் படித்து தேர்ச்சிப் பெற்று வருகின்றன. ஒரு சிலரே இந்த கட்டுக்கதையினை அவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. ஆனால், முதலில், அவர்களை “Revisionist historians” என்று முத்திரைக் குத்தி, தனிமைப் படுத்தப் பட்டனர்[2]. ஆனால், கட்டுக்கதைகளை தொடர்ந்து, “சரித்திரம்” என்று சொல்லிப் பரப்ப முடியாது. “சந்திரகுப்த” மற்றும் “அலெக்சாந்த” சொற்பிரயோகங்கள் பாரசீக, அரேபிய, உருது மொழிகளில் ஒரே மாதிரி இருப்பதை பலர் எடுத்து காட்டியும் இந்தியாவில் அதைப் பற்றிப் பேசப் படவில்லை. சரித்திராசிரியர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. 

A mosaic of Alexander at House of the Faun in Pompeii, Italy. | Unknown authorUnknown author, Public domain, via Wikimedia Commons

2022ல் அல்லெக்சாந்தர் கட்டுக்கதைகள் பற்றிய கண்காட்சி ஆங்கிலேய நூலகம், லண்டனில் நடந்தது[3]: அந்நிலையில் சென்ற ஆண்டு 2022, அக்டோபர் 21 முதல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம் “அலெக்சாண்டர் தி கிரேட்: தி மேக்கிங் ஆஃப் எ மித்” (Alexander the Great: The Making of a Myth) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது[4]. பொதுவாக அவனது கதைகளுக்கு ஆதாரமாக உள்ளதாகச் சொல்லப் படும் ஆதாரங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அலெக்சாண்டர்  356 BCE ஜூலையில் மாசிடோனின் அரசன் பிலிப் II மற்றும் மனைவி ஒலிம்பியாஸின் மகனாக, மாசிடோனின் தலைநகரான பெல்லாவில் (Pella) பிறந்தான். கிமு 330 BCE ஜூலை வாக்கில், அவன் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தான், 25 வயதில், ஆசியா மைனரின் ஆட்சியாளராகவும், எகிப்தின் பார்வோனாகவும், பாரசீகத்தின்  பேரரசன் டேரியஸ் III பின் ஆட்சியாளனாகவும் ஆனான். அதாவது, ஒரே நபர் மூன்று நாகரிகங்களின் தலைவனாக, கடவுளாகச் சித்தரிக்கப் பட்டதை எடுத்துக் காட்டப் படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அலெக்சாண்டர் ஒரு பேரரசை மேற்கில் கிரீஸிலிருந்து கிழக்கில் சிந்து நதிக்கு அப்பால் வரை உருவாக்கினான். 32 வயதில் பாபிலோனில் தனது மரணத்திற்கு முன், அவ்வாறு சாதித்ததாகச் சொல்லப் படுகிறது. .

A Christian Alexander described as ‘enemy of devils’ heads this amulet scroll in the Ethiopian Ge‘ez language. Ethiopia, 18th century?

இதுரோமாஞ்சன கட்டுக்கதைகள் தான், சரித்திரம் அல்லஎன்ற முன்னுரைஎச்சரிக்கை: எவ்வாறாயினும், இந்த கண்காட்சி வரலாற்றைப் பற்றியது அல்ல, ஆனால் 2,000 ஆண்டுகளாக நிலவி வரும் கட்டுக்ககதைகள், மற்றும் புராணக்கதைகளை வைத்து புனையப்பட்டுள்ளவற்றை ஆராய்வதற்கான அண்காட்சியாக அமைந்தது என்று மிகவும் எச்சரிக்கையாக அறிவித்துக் கொன்டனர். 25 நாடுகளில் இருந்து 21 மொழிகளில் உள்ள பொருட்களைக் கொண்டு, புனையப் பட்ட ஒரு உருவம் எப்படி பல நோக்கங்களுக்காக சரித்திரம் போல செயல்பட, சேவை செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது, இது உலகளாவிய “அலெக்ஸ்சாந்தர் கட்டுக்கதைகள்” (The Alexander Romance),  மூன்றாம் நூற்றாண்டில் CE முதலில் கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட அலெக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் ஆதாரமானவை. ஆனால், அவற்றை மறைக்க இந்த முன்னுரையும் கொடுக்கப் பட்டது.

Nahid, daughter of Philip of Macedon, is here married to the Persian emperor as part of a diplomatic alliance. Rejected on account of her bad breath, she was sent home, unknowingly pregnant, to Greece where she gave birth to a son, Alexander. This version of Alexander’s origins saw him, in Persian eyes, as the legitimate heir and successor to the throne. From the Darabnamah (Story of Darab), by Abu Tahir Muhammad Tarsusi, Mughal India, 1580–85 (British Library Or.4615, f. 129r)

வியாபாரமயமாக்கல் யுக்திகளில் கட்டுக்கதைகள் பரப்பப் படுதல்: அலெக்சாந்தரின் திரைப் படம் பலமுறை வெளிவந்துள்ளது. 2004ல் வெளிவந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சரித்திர ஆதாரமாக, கோடிகள் செலவழிக்கப் பட்டு எடுக்கப் பட்ட படம் சிலரால் எதிர்க்கப் படவும் செய்தது.  இதனால், நான்கு விதமான படப்பிரதிகள் உருவாக்கப் பட்டு விநியோகத்தில் வந்தன[5]. இருப்பினும்,கட்டுக் கதைகளையும் வியாபாரமாக்குவதில் சளைக்கவில்லை. அதிலும் பலர் இறங்கினர். ஆனால் புராணக்கதைகள் காவியக் கவிதை மற்றும் நாடகத்திலும், மேலும் சமீபத்தில் நாவல்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களிலும் பிரபலமாக்கப் பட்டது. இவை அனைத்தின் உதாரணங்களையும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Aristotle instructs a pupil in the Kitab na‘t al-hayawan (On the Characteristics of Animals). Baghdad?, about 1225 (British Library Or.2784, f. 96r)

கண்காட்சியில் வைக்கப் பட்ட ஆதாரங்கள்: ஏறக்குறைய 140 பொருட்களில், 86 பிரிட்டிஷ் நூலகத்தின் சேகரிப்பில் இருந்து வந்தவை. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சேகரிப்புகளில் இருந்து 37 கண்காட்சிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Alexander comforts the dying Darius and agrees to his final requests in Firdawsi’s Shahnamah (Book of Kings). According to one Persian tradition, Darius was in fact his half-brother. Isfahan?, Iran, 1604 (British Library IO Islamic 966, f. 335r)

குதிரையின் சமாதி, அதைப் பற்றிய கட்டுக்கதை: அலெக்சாண்டரின் புகழ்பெற்ற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிமுகத்திற்குப் பிறகு, A Conqueror in the Makeing அலெக்சாண்டரின் தோற்றத்தின் வெவ்வேறு பதிப்புகளும் ஆராயப் படுகிறது. , தத்துவஞானி அரிஸ்டாட்டில் மற்றும் அவரது விசுவாசமான போர்க்குதிரை புசெபாலஸ் முதலியவையும் இருந்தன. அது போரஸுடன் நடந்த போரில் கொல்லப் பட்டதாகவும், அங்கேயே சமாதி கட்டப் பட்டதாகவும் சரித்திரம் எழுதி வைக்கப் பட்டது. ஆனால், அதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவ்வாறு சரித்திரம் போர்வையில், அலெக்சாந்தர் கட்டுக்கதைகளை இந்திய சரித்திரத்தில் எழுதி வைத்தனர்.

In Kandahar, Alexander was persuaded by a beautiful priestess not to destroy the sacred statue. This copy of the twelfth-century poet Nizami’s Khamsah (Five Poems) was especially commissioned by the Mughal Emperor Akbar who had conquered Kandahar in 1595 while this manuscript was still being copied. The painting would have deliberately invited comparison between Akbar, famous for his religious tolerance, and Alexander. Artists: Mukund and La‘l, Lahore, 1593–95 (British Library Or.12208, ff. 317v–318r)

கிரேக்கர்களுக்கு பூகோள ரீதியில் இந்தியா தெரியாது: பகுதி மூன்று, ஒரு பேரரசை உருவாக்குதல், பெர்சியாவின் டேரியஸ் III மீது அலெக்சாண்டரின் வெற்றி மற்றும் இந்தியா மற்றும் சீனாவிற்கு மேலும் கிழக்கே மேற்கொண்டதாக விளக்கும் அவனது பயணங்களைனாக்கட்டுக்கதைகள் விவரிக்கிறது – ஆனால் அலெக்சாண்டர் இந்தியாவை அடைந்தார், என்று கதைகள் சொன்னாலும் சீனாவுக்கு செல்லவில்லை, என்று அக்கட்டுக்கதை பண்டிதர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவைப் பற்றிய அறிவே கிரேக்க பூகோள ஆசிரியர்களுக்குத் தெரியாது என்பது உண்மை. முதலில் கிரேக்க பூகோள ஆசிரியர்கள், சிந்துநதிக்கரைக்கு வந்ததும், உலகத்தின் எல்லைக்கு கடற்கரைக்கு வந்து விட்டோம் என்றனர். ஆனால், அதைத் தாண்டி ஒரு பெரிய நாடு, பேரரசு இருந்ததை அறிந்த அவன், அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன.

The wedding of Alexander and Darius’ daughter, Roxana. From Firdawsi’s Shahnamah (Book of Kings), Qazvin, Iran, about 1590–95 (British Library Add MS 27257, f. 326v)

அலெக்சாண்டரின் உறவுகள் பற்றிய விவரங்கள்: அலெக்சாந்தர் தனது தாயிடமே மையல் கொண்டதாக உள்ளது. ஒரு பகுதியில், அவரது வாழ்க்கையில் முக்கியமான நபர்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன: அவரது மனைவிகள், அவர் சந்தித்த சக்திவாய்ந்த பெண்கள், அவரது ஜெனரல் ஹெபஸ்டின் மற்றும் அலியான அடிமை பகோவாஸ், முதலியோர் காணப்படுகின்றனர். தவிர, அவன், ஒரு அலி என்றும் கதைகள் விவரிக்கின்றன. ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவன் என்று 2004-திரைப்படம் எடுத்துக் காட்டியதால், கிரேக்கர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், பாரசீக, கிரேக்க, எகிப்திய பாலியல் கதைகளில் இவையெல்லாம் சகஜம் என்பது, எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்[6]. ஆகவே தான், இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாக மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று தான், நான்குமுறை திரைப்படத்தை எடிடிங் செய்யப் பட்டு, சிடி/டிவிடி தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.

This Coptic fragment of the Alexander Romance describes Alexander setting off to explore the Land of Darkness. When a mysterious voice predicted his imminent death, he turned back bringing with him some objects he had gathered in the dark. These later turned out to be diamonds. Atripe, Upper Egypt, 14th century (British Library Or.3367/2)

அலெக்சாந்தர் சொர்க்கத்திற்குச் சென்றது: பிறகு, அலெக்சாந்தரின் பிரயாணங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கு அலெக்சாண்டர் மார்பில் முகங்கள், எக்காளங்கள், விசித்திரமான விலங்குகள் மற்றும் டிராகன்கள் போன்ற மக்கள் வசிக்கும் விசித்திரமான நிலங்களில் பயணித்ததாக சொல்லப் படுகிறது. இதெல்லாம் சிந்துபாத் கதைகள் போலவே இருக்கின்றன.. அவரது பயணம் அவரை பூமியின் முனைகளுக்கும், எல்லைகளுக்கும், மேலே உள்ள வானங்களுக்கும் கடலின் அடிப்பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது, எப்போதும் புதிய அனுபவங்களையும் அழியாமைக்கான திறவுகோலையும் தேடுகிறது. எங்கோ சொர்க்கத்தை அடைந்ததாகக் கூட கதைகள் சொல்கின்றன. இங்குதான், இந்திய நிர்வாண சாமியார்களுடன் போட்ட சண்டை, அலெக்சாந்தரை சபித்தது, அவர்களை அலெக்சாந்தர் கொன்றது போன்ற விவரங்களும் காணப் படுகின்றன.

அலெக்சாந்தர் கட்டுக்கதைமுடிவு: இறுதிப் பகுதி, ‘பிரயாணத்தின் இறுதி” அலெக்சாண்டர் பாபிலோனுக்குத் திரும்புவதையும், அவரது அடுத்தடுத்த மரணத்தின் மர்மத்தையும் விவரிக்கிறது. அவரது உடல் ஒரு அற்புதமான வண்டியில் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இறுதியில் அது அலெக்ஸாண்டிரியாவில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறை இப்போது தொலைந்துவிட்டது, அதாவது கண்டுபிடிக்க முடியவில்லையாம், ஆனால் அவரது இறுதி ஓய்வு பெற்ற இடம், உடல் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் இடம் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டது.  உண்மையில் ஆள் இருந்தால், உடல் இருந்திருக்கும், உடல் இருந்திருந்தால், புதைக்கப் பட்டிருக்கும், புதைக்கப் பட்டிருந்தால் கல்லறை இருந்திருக்கும், இருப்பினும், 2300 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பிடிக்க முடியாது[7]. ஆகவே, கட்டுக்கதை மீது கட்டுக்கதைகள், இட்டுக் கட்டி வளர்த்துக் கொண்டிருக்கலாமே தவிர, உண்மையில் எதுவும் கிடைக்காது[8].

© வேதபிரகாஷ்

07-09-2023.


[1] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, https://www.hinduwebsite.com/history/alexander.asp

[2] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and His Influence on India,

https://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] The Scroll, How Alexander become ‘the Great’? A new exhibition explores the making of a myth did, Ursula Sims-Williams, Sep 26, 2022 · 07:30 pm

[4] https://scroll.in/article/1033628/how-did-alexander-become-the-great-a-new-exhibition-explores-the-making-of-a-myth

[5] Four versions of the film exist, the initial theatrical cut and three home video director’s cuts: the “Director’s Cut” in 2005, the “Final Cut” in 2007, and the “Ultimate Cut” in 2014. The two earlier DVD versions of Alexander (“director’s cut” version and the theatrical version) sold over 3.5 million copies in the United States.[5] Oliver Stone’s third version, Alexander Revisited: The Final Cut (2007), sold nearly a million copies and became one of the highest-selling catalog items from Warner Bros (as of 2012).

[6] அதாவது அத்தகைய நாடுகளில் சரித்திரம், கலாச்சாரம், நாகரிகம் பற்றி படிப்பவர்களுக்குத் தெரிந்த விசயம் ஆகும்.

[7] வேதபிரகாஷ், கடவுளின் மகன் யார்முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?, செப்டம்பர் 10, 2016.

[8] https://indianhistoriography.wordpress.com/2016/09/10/who-is-son-of-god-zeus-jesus-christ-muruga-vinayaka-who/

கடவுளின் மகன் யார் – முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?

செப்ரெம்பர் 10, 2016

கடவுளின் மகன் யார் – முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?

reaching-end-of-the-world

அலெக்சாந்தரும் இந்தியாவும்: “இந்தியா” பற்றி பூகோள ரீதியில் கிரேக்கர்களுக்கு சரியாகத் தெரியாது. பாரசீகத்தைத் தாண்டியதும் “இந்தியா” உள்ளது என்று அவர்கள் நினைத்தனர். பாரசீகத்தவரோ, “இந்தியா” தனது நாட்டின் பகுதி(சத்ரப்)யாகக் கூறிக் கொண்டது. அதனால், பாரசீகத்தைத் தாண்டியதும், “இந்தியாவுக்கு வந்து விட்டதாக அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அங்கு தான், யானைப்படையுடன் இரு இந்திய மன்னனை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யானைப்படையைப் பார்த்ததும் திகைத்து விட்ட கிரேக்கப்படை, அதனை எதிர்கொள்வது எப்படி என்று திட்டம் போட்டதாம். அத்தகைய கதையின் படி, கிரேக்கப்படை கொள்ளையடித்த உலோக விக்கிரங்கள், கவசங்கள் முதலிவற்றை நெருப்பிலிட்டு, சிகப்பு நிறத்தில் சூடேறும் அளவிற்கு செய்து, ஒரு பதிற்சுவர் போல, யானைப்படை முன்பு வைத்தனராம். போரஸ் தனது யானைப்படையை அனுப்பியபோது, யானைகள் வேகமாக சென்று அவை எதிரிகளுடைய் காலாட்படை வீரர்கள் என்று கருதி, அவற்றை முட்டி மோதி தள்ளியதாம். ஆனால், அத்தகைய தாக்குதலில், மதகுகள் சூட்டில் பாதிக்கப்பட்டதால், பிறகு, வீரர்கள் மீது பாய்ந்து சென்று தாக்கத் தயங்கினவாம்[1]. இத்தகைய கதைகள், இந்திய யானைகளைக் கண்டு கிரேக்கப் படை பயந்ததைதான் காட்டுகிறது.

greeks-and-indians-alexander-encounter-with-indian-king

அலெக்சாந்தர் தோற்று திரும்பிய விவரம்: உண்மையில், யானைகளைக் கண்ட கிரேக்கக் குதிரைகளும், வீரர்களும் மிரண்டு போய், பின்வாங்கி ஓட ஆரம்பித்து விட்டன. இந்திய அரசன் ஏவிய ஈட்டி அலெக்சாந்தரைக் குத்த, அவன் குதிரையோடு கீழே விழுந்தான். அக்குதிரை அங்கேயே செத்தது. அலெக்சாந்தரே பலமாக காயமடைந்தான், ரத்தப்போக்குடன் கீழே கிடந்த அவனை, படையினர் தூக்கிச் சென்றனர். புறமுதுகிட்ட கிரேக்கப்படையினை தாக்காமல், இந்திய படை சென்று விட்டது. அதிக ரத்தம் வெளியேறியதால், போகும் வழியிலேயே, அலெக்சாந்தர் இறந்தான் என்று கதைகள் கூறுகின்றன. 2004ல் வெளிவந்த திரைப்படம், இவற்றை தத்ரூபமாகக் காட்டுகின்றன.  ஆனால், மேற்கத்தைய முறையில், தோற்றவனை, வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்றவனை தோற்றவனாகவும் மாற்றி எழுதி வைப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால், இந்திய அரசன் தோற்றான், ஆனால், அவன் ராஜ்ஜியம் அவனுக்கே திரும்பக் கொடுக்கப்பட்டது. ஆனால், வென்றவன், தன் நாட்டிற்கு செல்லாமலேயே இறக்கிறான். அவன் இறந்த உண்மையினை மறைக்க, விஷத்தால் இறந்தான், நோயினால் / எய்ட்ஸ் இறந்தான், இன்றளவும் பல கதைகளைக் கட்டி வந்துள்ளனர்.

alexander-on-horse-attacking-indian-king-on-elephant-clear

அலெக்சாந்தர் கட்டுக்கதைகள் கூறும் மாயாஜாலக் கதைகள்: அலெக்சாந்தருக்கு  “இந்தியா” பற்றி தெரியாது, “இந்தியாவுக்கு” வரவில்லை, வரும் வழியில், ஒரு “இந்திய” அரசனோடு போரிட்டு தோற்று, திரும்பி சென்றான். போகும் வழியில் இறந்தான் என்று அலெக்சாந்தர் கட்டுக்கதைகள் [Alexander Romance] கூறுகின்றன[2].  சியோடோ காளிஸ்தனிஸ் [Pseudo-Callisthenes] என்றும் அழைக்கப்படும் இக்கட்டுக்கதைகள் முன்றாம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை பலமொழிகளில் எழுதப்பட்டவை. ஜேகப் புக்கார்ட் என்ற வல்லுனர், எப்படி கிரேக்க பூலோகவியல் வல்லுனர்கள் தமக்கு “இந்தியாவைப்” பற்றி தெரியாமல் இருந்தாலும், இந்தியாவை அடைந்து விட்டோம் என்று பொய்யாக மலைகள், நதிகள் முதலியவற்றைக் காட்டினர்[3]. ஆனால், சிந்து நதிக்குப் பிறகு, ஒரு பெரிய நாடு இருப்பதை அறிந்ததும் பயந்து விட்டான். அதனால், பின் வாங்க நேர்ந்தது.

deification-of-alexander

யானையைக் கண்டு பயந்த அலெக்சாந்தருக்கு, யானை கிரீடம் வைக்கப்பட்டு கடவுளாக்கப்பட்டது: எது எப்படியாகிலும், யானைக்கண்டு பயந்த யானை, அலெக்சாந்தருக்கு கிரீடம் ஆகியது. அதனை பெருமையாக நாணயங்களிலஙுள்ளன என்று எடுத்துக் காட்டுகிறார்கள். பிறகு இந்தோ-கிரேக்க அரசர்களும் அதேபோல கிரிடங்களை வைத்துக் கொண்டனர், ஆனால், அவர்கள் எல்லோரும் கடவுளின் மைந்தர்களாகக் கருதப்படவில்லை. முதலில் அலெக்சாந்தர்-ஸ்கந்தர்-கந்தன் முருகன் தான் என்றனர்[4]. அதில் கூட அலெக்சாந்தர் கட்டுக்கதை திணிக்கப்பட்டது[5]. சிவனும், டையோனிசஸும் ஒப்புமைப்படுத்தப்பட்டனர்[6]. கிரேக்க சிவன் அவனது மகன்கள் எல்லோருமே நிர்வாணமாகத்தான் இருந்தனர், அச்சிலைகளும் அப்படித்தான் உள்ளன. ஆனால், என்ன இப்படி இருக்கிறார்களே என்றும் கேட்கவில்லை. முருகன் மாநாடுகளை நடத்தி, அத்தகைய கட்டுக்கதைகள் ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. டைனோசிசுக்கு ஏகப்பட்ட குழந்தைகள், அதிலும், தெய்வீக மற்றும் மனித குழந்தைகள் என்று பட்டியல் இட்டுள்ளனர்[7]. இத்தனை குழந்தைகள் பிறந்த கதைகளையும் எவரும் கேட்பதில்லை. நல்லவேளை, சிவன் – பார்வதிக்கு இரண்டு குழந்தைகள் தாம். அந்த இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டுதான், இன்று கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், மற்றவர்கள் கலாட்டா செய்து வருகின்றனர்.

god-created-from-earth

மண்ணிலிருந்து, அழுக்கிலிருந்து குழந்தை பிறக்குமா?: கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கடவுள் மண்ணிலிருந்து தான் மனிதனைப் படைத்தார் என்கின்றனர்[8]. எப்படி மண்ணிலிருந்து குழந்தை பிறந்தது என்று எந்த அறிவாளியோ-பிரகஸ்பதியோ இதுவரை கேட்கவில்லை. மண்ணிலிருந்து குழந்தை பிறக்குமா, மண்ணிலேயே ஆண்-பெண் என்றெல்லாம் இருந்து, புணர்ந்து, குழந்தை பிறந்ததா என்று பகுத்தறிவு கேட்கவில்லை. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடவுள் மண்ணிலிருந்து மனிதனை செய்தார் என்றால் நம்புகின்றனர். ஆதம்-ஏவாள் அப்படி மண்ணால் தான் படைக்கப்பட்டனர். பிரம்மா தான் படைத்த சரஸ்வதிவை மனைவியாக்கிக் கொண்டாரே என்று பகுத்தறிவுகள் கேட்கின்றன. ஆனால், ஆதாம் எப்படி ஏவாளை புணர்ந்தான், பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர் என்று கேட்பதில்லை, பிறகு, கடவுளின் பிள்ளை, பிள்ளையார் தான் என்றனர்[9]. ஆனால், இப்பொழுதோ, பிள்ளையாரை அசிங்கப்படுத்துகின்றனர். அவனைக் கடவுளாக்கும் போது ஜீயஸ் என்றும், கடவுளின் மைந்தன் என்றும் கதைகட்டினர்[10]. உலகத்தை வென்றவன் என்ற ரீதியிலும் வர்ணித்தனர்[11].

hannibal-myth-against-indian-king-with-elephants

கிரேக்கர்களும், யானைகளும், யானைப்படையும்: சந்திரகுப்தர் அலெக்சாந்தர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்ற “சத்ரப்புகளை” மீட்க போராடியபோது, அலெக்சாந்தரின் பிரதிநிதி செலுகஸ் நிகேடார் [Seleucus Nicator 305-303 BCE] என்பவன் அங்கு இருந்ததாகவும், போரில் சமரசம் செய்து கொண்ட போது, இவன் தன் மகளை சந்திரகுப்தனுக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், 500 யானைகளை நிகேடாருக்கு சந்திரகுப்தன் கொடுத்ததாகவும் கிரேக்கக் கதைகள் சொல்கின்றன. பிறகு அலெக்சாந்தரின் ஆட்களே தங்களுக்குள் இப்சஸ் [The Battle of Ipsus] என்ற இடத்தில் சண்டை போட்டுக் கொண்டபோது, இந்த யானைகள் உபயோகப்படுத்தப் பட்டதாகக் கதைகள் கூறுகின்றன. யானைகள் அறியாத, யானைப்படை நடத்தத் தெரியாத கிரேக்கர்கள் யானைகளை வைத்து போரிட்டார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. போரஸ் தோற்றான் சமரசம் செய்து கொண்டான், செலுகஸ் தோற்றான் சமரசம் செய்து கொண்டான், போன்றவையும் கதைபோலத்தான் உள்ளது. நிச்சயமாக இந்த யானை விவகாரம், அவர்களது கட்டுக்கதையினை வெளிப்படுத்துகிறது. இந்தோ-கிரேக்க அரசர்கள் யானை கிரீடத்தை அணிந்திருப்பதிலும் ஒன்று வியப்பில்லை, ஏனெனில், இந்தியர்கள் யானையை மதித்தனர்.

greek-shiva-and-hs-son

யானைகள் இல்லாத காலத்தில் யானைப்படையுடன் கிரேக்கர்கள் எப்படி போரிட்டனர்?: ஹன்னிபால் [Hannibal (247 – between 183 and 181 BCE] என்ற கார்த்தேஜின் தளபதி மற்றும் ரோமானிய கார்னிலியஸ் ஸ்கிபியோ [Publius Cornelius Scipio Africanus] என்பவனுக்கும் இடையே ஜமா [The Battle of Zama] என்ற இடத்தில் 17 நாட்கள் யுத்தம் நடந்ததாம். ஹன்னிபால் தன்னுடைய படையில் யானைகளையும் வைத்திருந்தானாம்! எப்படி அவனுக்கு யானைகள் கிடைத்தன, அவற்றை எப்படி நதிகளைக் கடந்து, மலைகளைக் கடந்து அழைத்துச் சென்றான் என்பதெல்லாம் புதிராக உள்ளன. இருப்பினும், அத்தகையக் கட்டுக்கதைகளை சரித்திரம் போன்று சொல்லப்பட்டுள்ளன.இங்கு, யானையின் தாக்கத்தை தான் நாம் கவனிக்க வேண்டும்[12]. யானைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரவிய விஞ்ஞான கண்டுபிடுப்புகளின் விவரங்களை மறைத்து, மறந்து, மறுத்து எந்த விவாதமும் செய்ய முடியாது. மேலும், யானையின் உருவகம் வன்முறையிலிருந்து தெய்வீகத்திற்கு மாற்றிய நிலையை பிற்காலக் கட்டுக்கதைகள் மூலம் அறியலாம்.

© வேதபிரகாஷ்

10-09-2016

mysterious-death-of-alexander

[1] According to legends that grew up around the figure of Alexander, he devised another brilliant plan to deflect the ranks of living tanks. As they story goes, Alexander piled up all the bronze statues and armor that he had taken as booty during his conquests so far and heated them over a fire until they were red-hot. (In reality, the Greeks brought very little booty with them over the Khyber Pass.) Then he set up the statues and shields like a wall in front of the elephants. When Porus sent forth his elephants, they made straight for the heated statues, taking them for enemy soldiers. As the beasts smashed into the statues, “their muzzles were badly burnt” and they refused to continue the attack.

http://erenow.com/ancient/greek-fire-poison-arrows-scorpion-bombs/9.html

[2] http://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] Jacob Burckhardt, History of Greek Culture, Constable Publishers, London

[4] N. Gopala Pillai, Skanda: The Alexander Romance in India, AIOC, 1937, (Trivandrum: Government Press, 1937), Vol. IX, pp. 955-977.

[5] http://murugan.org/events/2001_synopses/rao-1.htm

[6] Alain Danielou, Shiva and Dionysus, trans. K.F. Hurry (New York: Inner Traditions International,1982, p. 91-98.

[7] http://www.theoi.com/Olympios/DionysosFamily.html

[8] Lincoln, Bruce. “The Indo-European myth of creation.” History of Religions, 15.2 (1975): 121-145.

[9] Worthington, Ian. Alexander the Great: Man and God. Routledge, 2014.

[10] Balsdon, John Percy VD. The’Divinity’of AlexanderHistoria: Zeitschrift fur Alte Geschichte (1950): 363-388.

[11] Fredricksmeyer, Ernst A. Alexander, Zeus Ammon, and the conquest of Asia,  Transactions of the American Philological Association (1974-) 121 (1991): 199-214.

[12] Though, archaeologists, researchers and Students of ancient climate and ecology have tried, but none has yet come up with a satisfactory answer: Where did Hannibal get the elephants for his heroic march across the Alps to attack the homeland of the Romans? Yet, such myths are preserved against the Indian King, who actually confronted Alexander with elephant army!