Posts Tagged ‘காந்தி கொலை’

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (4) – கபூர் கமிஷனிலிருந்து உருவான, ஆதாரமில்லாத சதிதிட்ட கதைகள்!

ஜூன் 20, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (4) – கபூர் கமிஷனிலிருந்து உருவான, ஆதாரமில்லாத சதிதிட்ட கதைகள்!

G.V. Ketkar granson of Tilak

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிலிருந்து உருவான ஜீவன்லால் கபூர் கமிஷன் விசாரணை: இனி கோட்சே வழக்கிற்கு செல்வோம். 05-02-1948 அன்று கோபால் கோட்சே மற்ற எழுவருடன் கைது செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் ஆப்தே தவிர மற்றவர் விடுவிக்கப்பட்டனர். 15-11-1949 அன்று அம்பாலா ஜெயிலில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். 12-11-1964 அன்று கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்கரே விடுவிக்கப்பட்டதற்கு ஒரு விழா நடத்தப்பட்டது. அதில் பால கங்காதர திலகரின் பேரன், ஜி.வி. கேட்கர் [கஜானன் விஸ்வநாத கேட்கர்], கோட்சே தன்னிடம், காந்தியை கொலை செய்ய வேண்டும் போன்ற எண்ணத்தை வெளியிட்டதாகவும், ஆனால், தான் மறுத்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இதை கேட்கர், பாலுகாகா கனித்கர் என்பவருக்குத் தெரியப் படுத்தியதாகவும், அவர், அப்பொழுதைய மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் பி.ஜி.கேருக்கு அறிவித்ததாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸில், 14-11-1964ல் செய்தி வெளியானது. பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். இதனால், கேட்கர் கைது செய்யப்பட்டபோது, மாநில அசெம்பிளி மற்றும் பாராளுமன்றத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், காந்தி கொலை சதித்திட்டத்தில், பெரிய இடத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற நிலையில், அதை முழுவதமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 13-11-1964 அன்று மற்றவர் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கோபால் கோட்சே மறுபடியும் 25-11-1964 அன்று கைது செய்யப் பட்டு, 30-11-1964 அன்று விடுவிக்கப்பட்டார். அப்புத்தகத்தில் உள்ள விசயங்கள் ஏற்கெனவே “பைஞ்சன்” என்ற மராத்தி மாத இதழில் தொட்ராக ஜூன் 1966 முதல் அக்டோபர் 1967 வரை வெளியானது[1].

B G Kher 1888-1957

காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்டதால், அமுக்கப்பட்டதா?: அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எம்.பி கோபால் ஸ்வரூப் பதக் என்பவரை, குல்சாரிலால் நந்தா நியமித்தார். ஆனால், அவர் மைசூருக்கு கவர்னராக நியமிக்கப் பட்டதால், ஜீவன்லால் கபூர் நியமிக்கப்பட்டார்[2]. ஆனால், இத்தகைய புதிய கருதுகோள், ஏ.ஜி.நூரானியின் திரிபு கட்டுரைகளிலிருந்து தான் உருவானது[3]. உண்மையில், இதில் சம்பந்தப் பட்டவர் அனைவருமே – முதலமைச்சர் முதல் மற்றவர் – காங்கிரஸ்காரர்கள் தாம். கேட்கர் பாம்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, அத்தீர்ப்பில், இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன[4]. அப்படியென்றால், காங்கிரஸ் தான் உண்மையினை மறைத்தது என்றாகிறது. இல்லை, ஏ.ஜி.நூரானி போன்று கட்டுரை எழுதுவதென்றால், காங்கிரஸ் தான் இந்து இந்துத்துவவாதி பைத்தியங்களைத் தூண்டிவிட்டு, காந்தியை கொலை செய்தது என்று கூட எழுதலாம். ஏனெனில், காந்தியின் இறப்பினால், யாருக்கு லாபம் என்று பார்த்தால், நேருக்குத் தான் என்று தெள்ளத் தெளிவாகி விடும்.

Gandhi cartoon-jail
விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகளை செய்திகளாக்குவது: பொதுவாக இந்துத்துவவாதிகள் அப்பாவிகள், “இந்து” என்று பெருமையாக, சொல்லிக் கொண்டு, ஏதோ கடவுளைப் போன்று பேசுகின்ற விதத்தைக் கொண்டிருப்பதால், அடிக்கடி கோபத்தில் சாபம் இடுவது வழக்கமாக உள்ளது. “அவன் நாசமா போக, அழிந்து விடுவான், கட்டையில் போக, அவனை கொன்றே விடுவேன்……,” என்றெல்லாம் கூறுவது வழக்கம். “அவன் நாசமா போக” என்றவுடன் யாரும் நாசமாகி போய்விட மாட்டார்கள். அதாவது, அவர்களின் இயலாமையாலும், இந்துக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வருவதால், தனிமையில் அவ்வாறான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவையெல்லாம், விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகள். அதனால், உண்மையிலேயே அவர்கள் கொல்ல திட்டம் போட்டனர் என்றாகாது. “குஜராத் கலவரம்,” அஸீமானந்தா வாக்குமூலம் போனேஅவற்றிலும், அத்தகைய இயலாமை வெளிப்பட்டது. ஆனால், அவற்றையே ஆதாரமாக்கப்பட்டு, வழக்குத் தொடர்ந்து, இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள்.

J L Kapoor report 1969

ஜஸ்டிஸ் ஜீவன்லால் கபூர் விசாரணை செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும்: ஜீவன்லால் கபூர் 21-11-1964 அன்று “காந்தி கொலை சதித்திட்டம் விசாரணை கமிஷனுக்கு” நியமிக்கப்பட்டார். 101 சாட்சிகள், 407 ஆவணங்கள் முதலியவறுடன் 162 முறை கூடி, விசாரணைக்குப் பிறகு அவரது அறிக்கை 30-09-1969 அன்று முடிவடைந்தது. இதற்காக பாம்பே, தில்லி, நாக்பூர், தார்வா, பூனே, பரோடா, சண்டிகர் முதலிய இடங்களுக்கு சென்று வந்தார். ஆர்.எஸ். கொத்வால் மற்றும் பி.பி.லால் மஹாராஷ்ட்ராவுக்கு வக்கீல்களாக இருந்தனர். அவர்கள் முறையே 37 மற்றும் 17 நாட்களுக்கு வாதித்தனர். ஜி.வி. கேட்கர் முதலாவதாக விசஐக்கப் பட்ட சாட்சி. ஜே.டி.நகர்வாலா, மற்றும் மொராஜி தேசாய் முறையே 15 மற்றும் 7 நாட்களுக்கு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஏற்கெனவே, விசாரணை நடந்து, கோட்ஸே மற்றும் ஆப்தே தூக்கிலிட்டப் பிறகு, நடந்த இந்த விசாரணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், தண்டனை முடிந்த பிறகு, வழக்குகளை போஸ்ட்மார்டம் செய்ய முடியாது.

The accused in Mahatma Gandhi case

ஜூன் 25, 1934 அன்று முதல் முயற்சி: ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர். காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “சான்று தேவை” என்ற பீடிகையுடன் விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi in Aga Khan palace, 1944

மே 1944, இரண்டாவது முயற்சி: மே 1944, காந்தி அகாகான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi at Seva gram

செப்டம்பர் 9, 1944 மூன்றாவது முயற்சி: காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi train derailed

ஜூன் 29, 1946 நான்காவது முயற்சி: ஜூன் 29, 1946ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல்-க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi abused by the British

ஜனவரி 20, 1948, ஐந்தாவது முயற்சி: ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர். அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi abused by the British-carricatured

காந்தி கொலை சதிதிட்டம்ஆங்கிலேயர்களின் அமைதியான ஆதரவு: சதி-திட்டம் பற்றிய கருதுகோளை [Conspiracy hypothesis] இவ்வாறு உருவாக்கி, அதனை வளர்த்த பெருமை ஏ.ஜி.நூரானியை சேரும். விக்கிபீடியா போன்றவை “சான்று தேவை” என்று இக்கதையை நூரானி கதையை ஆதாரமாக வைத்து வெளியிட்டுள்ளன. ஆதாரம் இல்லை எனும் போது, அத்தகைய கதைகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சம்பந்தப் பட்டவர்கள் இறந்து விட்டனர் எனும்போது, அவர்கள் வந்து சாட்சி சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். ஆக, அவர் தரப்பு வாத-விவாதங்கள் பிறகு ஏற்படுத்தப் பட்ட கமிஷன்களில் பொருளற்றதாகி விடுகிறது. அப்படி பார்த்தால், காந்தியை அதிக அளவில், திட்டித் தீர்த்த பெருமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு. வெளியில், அவரை “மிஸ்டர் காந்தி” என்றேல்லாம் விளித்தாலும், “இந்த கிழவன் தொல்லை தாங்கவில்லை, என்றுதான் சாவானோ” என்று வசைப்பாடியுள்ளனர், சபித்துள்ளனர். ஆகவே, ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் எல்லா சதிதிட்டங்களும் தெரிந்திருக்கும். ஆனானப் பட்ட அரவிந்தர் போன்றோர் வைத்த குண்டுகளை கண்டுபிடித்தர் என்றால், கோட்சே விகிபீடியா சொல்லும் கதைகளைப் போன்று, ஐந்தாறு முறை தாக்க திட்டம் போட்டது, குண்டு வைத்தது, ரெயிலை கவிழ்ததது என்றெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடந்தேறாது.

© வேதபிரகாஷ்

20-06-2018

Gandhi cartoon - versus others

[1] The book first appeared in a serial form. Fifteen out of its sixteen chapters were serialized in a monthly Marathi magazine called ‘Painjan’ in its issues of June 1966 to October 1967. What is now the seventh chapter of the book — “Throw my ashes into the Indus” — appeared in the issue dated the 8th October, 1967 of a Marathi weekly called ‘Sobat’. Both the journals are published by ‘Asmita Prakashan’, Poona, of which Behere is the proprietor.

[2] Hindustan Times, The politics of an assassination: Who killed Gandhi and why?, Abhishek Saha, ANALYSIS Updated: May 28, 2017 19:23 IST.

[3] https://www.hindustantimes.com/analysis/the-politics-of-an-assassination-who-killed-gandhi-and-why/story-iUJqKjuw0sP9nAfc5KcOII.html

[4] Bombay High Court – Gajanan Vishwanath Ketkar vs The State on 21 July, 1965; Equivalent citations: AIR 1967 Bom 96, (1966) 68 BOMLR 321, 1967 CriLJ 427, ILR 1966 Bom 839, Author: Naik; Bench: Naik, Palekar

https://indiankanoon.org/doc/383735/

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (3) – பிரிவினை, இந்துக்கள்-சீக்கியர் பட்ட சொல்லொனா குரூரங்கள், ரூ 55 கோடி விவகாரம்!

ஜூன் 19, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (3) – பிரிவினை, இந்துக்கள்சீக்கியர் பட்ட சொல்லொனா குரூரங்கள், ரூ 55 கோடி விவகாரம்!

Pakistan separatism led to Khalistan

மேற்குகிழக்கு பாகிஸ்தான்களில் இந்துக்கள் நடத்தப் பட்ட விதம்: 1947, ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் நடந்ததை முழுமையாக அறிந்தால், ஏன் கேட்டறிந்தால்[1], படித்தறிந்தால், துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்[2], நேருவின் செக்யூலரிஸம், படேலின் குழப்பமான தீர்வுகள், நேரு-படேல் கருத்து வேற்றுமை, காந்தியின் தொடர்ந்த, முஸ்லிம் சார்பு உண்ணாவிரதங்கள், பேச்சுகள், முடிவுகள் முதலியவை எந்த மனிதனையும் கொதிப்படையத்தான் செய்யும். அந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்துவை கேட்டால், அவன் காந்தியைத் தான் குற்றம் சொல்வான். மதரீதியில் முஸ்லிம்கள் தனி நாடு கேட்டதால், முஸ்லிம்கள் அதிகமாக இருந்த இடங்களில், உடனடியாக, இந்துக்கள் வெளியேற்றப் பட்டனர்; அவர்களது உடமைகள் பரிக்கப்பட்டன; வீடுகள் சூரையாடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டன; பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்; தடுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது பாகிஸ்தானின் தந்தையான ஜின்னா, இந்துக்களுக்காக எதையும் செய்யவில்லை. நேருவைப் போன்று, பாகிஸ்தான் பிரதம மந்திரி, இந்துக்களுக்காக பரிந்து பேசவில்லை. செக்யூலரிஸ ரீதியில், துலுக்கரைக் கண்டிக்கவில்லை.

Partition horror 1947

இந்தியாவில் முஸ்லிம்கள், முசல்மான்கள், துலுக்கர்நடத்தப் பட்ட விதம்: நிச்சயமாக கொதித்திருந்த இந்துக்களில், சிலர் முஸ்லிம்களை பதிலுக்கு-பதில் பழிவாங்க வேண்டும் என்ற மனப்பாங்கில் வன்முறையில் இறங்கினர். 10% தான் அவ்வாறான இந்துக்கள் இருந்தனர். அவர்கள், யார் சொல்லியும் அவ்வாறான வன்முறையில் இறங்கவில்லை.  இந்துமகாசபாவோ, ஆர்எஸ்எஸ்ஸோ சொல்லவில்லை, தூண்டிவிடவில்லை. அவ்வாறாக இருந்தால், காந்தி நவ்காளிக்குச் சென்றிருக்க வேண்டாம்.  நேரிடையா, நேருவை வைத்து, அவர்களை மிரட்டி அல்லது பணிய வைத்து, முஸ்லிம்களை கிழக்கு வங்காளத்திற்கு அமைதியாக அனுப்பி வைத்திருக்கலாம். மாறாக, காந்தி போன்று, இந்துக்களுக்கு உயிர் வாழ ஆசையிருந்தால், நவ்காளியை விட்டு சென்று விடுங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார்.  நேரு, படேல், மற்றும் ராணுவ அமைச்சர் முதலியோர், இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக  “இந்திய தந்தை” காந்தி “நவ்காளி யாத்திரை” என்று விளம்பரப் படுத்தி, சொந்த நாட்டிலேயே இந்துக்கள் கொல்லப்பட வழி செய்தனர்.

Noakhali atrocities, gandhi- riots

தில்லி சலோகூக்குரல் அதிகமாக இருந்தது: பாகிஸ்தான் பஞ்சாபிலிருந்த அனைத்து சீக்கியரும், தில்லுக்குச் சென்றுவிடவேண்டும் என்ற உணர்வோடு இருந்தனர். ஏனெனில், முஸ்லிம்கள் தாக்க ஆரம்பித்தது தெரிந்து விட்டது. ஆக அந்நேரத்தில் “தில்லி சலோ” என்ற கோஷம், தேசப்பற்றாக இல்லை, தப்பித்துச் சென்று அங்கே சென்றடைய வேண்டும் என்ற உந்துதலோடு, கூக்குரலிட்டனர், தில்லிக்கு வந்து சேர்ந்தனர். அதனால் தான், தில்லியில் சீக்கியர் அதிகமாக உள்ளனர். சீக்கியர் அதிகமாக இருந்த பஞ்சாபையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, சீக்கியர்களுக்கு பெருத்த மனவருத்தம் தான்[3]. இன்றைக்கும் பாகிஸ்தான் பஞ்சாம், இந்திய பஞ்சாப் என்றுள்ளது. சீக்கியர் துலுக்கர்களால் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களை 1947க்குப் பிறகும், இன்றைக்கும் மற்ற இந்தியர்கள் முறையாகப் போற்றுவதில்லை.

Gandhi partition debt-- news cuttings

காந்தியின் மற்றவரைக் கட்டுப் படுத்தும் சக்தி[4]: காந்தியை யாரும் எதிர்க்க முடியாத நிலையில் இருந்தார். ஒரு முனிவர்-துறவி அந்தஸ்தில் உள்ளவராக்கி விட்டார்; “மஹாத்மா” என்ற நிலையில் ஆளுமையுடன், அதிகாரத்துடன் செயல்பட்டார். தன்னுடைய பேச்சை யாரும் தட்ட முடியாத அளவிற்கு தார்மீக அழுத்தத்தை உண்டாக்கி வைத்திருந்தார். ஏதோ மந்திரவாதியைப் போன்று மத்தியஸ்தர்கள் என்று எல்லோரையும் தனது ஹிப்னாடிஸம் போன்ற திறமையால் கட்டுப்பட செய்தார். இதனால், அதிகாரம் கொண்டவர் வந்தால் கூட, முதுகெலும்பு இல்லாத மிருகங்கள் போன்று செயலற்றவர்களாகினர். அவர் சொன்னதை தட்டாமல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனானப் பட்ட லார்ட் இர்வினே, இதை வெளிப்பட்டுத்தியுள்ளார். அவரது சக்திக்கு கட்டுப்பட்டுத்தான் “காந்தி-இர்வின் பேக்ட்”ற்கு [Gandhi Irwin Pact] ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். அவரிடம் சென்றால், ஏதோ மந்திர-ஏவல் தம் மீது பாய்ந்து கட்டுப்பட வைத்து விடும் என்று அஞ்சினர். அதனால், தாங்கள் கொள்கைக்களுக்கு எதிராக இருந்தாலும், சமரசம் செய்து கொண்டு, ஒப்புக்கொள்ளாதவற்றை எல்லாம், ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அத்தகைய மந்திரசக்தியின் சக்க்தியை சமீபத்தில் உணர்ந்தாதாக கோஸ்லா, ரூ 55 கோடிகள் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டார். 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று எடுத்துக் கூறினார். ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்ததால், காந்தி மூன்றே நாட்களில் அப்பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.  அதனை ஒரு அதிசயம் [miracle] என்றே கோஸ்லா குறிப்பிட்டார்.

Gandhi fast unto death - news cuttings

மகாத்மாவின்சாகும் வரை உண்ணாவிரதம்போராட்டம் [Fast unto death]: அவரது “சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டம் [Fast unto death], ஆங்கில அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை கதிகலங்க வைத்தது. அவருக்கு எதிராக வந்து பேசக்கூட மறுத்தனர். சி.இ.எம். ஜோட் [C.E.M. Joad] என்பவர், காந்தி எப்படி “சாகும் வரை உண்ணாவிரதம்”  என்றதை பேரம் பேசும் கருவியாக [fasting as a bargaining tool] உபயோகப் படுத்தினார், என்று குறிப்பிட்டார். உண்மையினை சொன்னால், காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால், அது உலக செய்தியாக இருந்தது, “ஒருவேளை அந்த கிழவர் இறந்து விட்டால், பழி நம் மீது விழுந்து விடும் என்று அஞ்சினர்,” என்றும் குறிப்பிடப் பட்டது. அந்த அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதாவது, யாரும் அவரது இறப்பை உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது, அதனால், பயந்து, அவரது கோரிக்கைகளை ஏற்று ஒப்புக் கொண்டனர். ஆக அத்தகைய பெரிய மகாத்மாவை யாராலாவது இறக்கச் செய்ய முடியுமா?.

Gandhi partition debt--RBI note

ரூ 55 கோடிகளுக்கான மகாத்மாவின்சாகும் வரை உண்ணாவிரதம்: ஜனவரி 23, 1948 அன்று பாதுகாப்பு அமைச்சர் சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனை சந்திக்கிறார். அவர் கசப்புடன் இந்த உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம் 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது என்று எடுத்துக் காட்டினார். துணை பிரதமமந்திரி பாராளுமன்ற அவையில் காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வரும்வரை நிலுவை தொகை நிறுத்திவைக்கப்படும் என அறிவித்து, அதன் பின்னர் பிரதமமந்திரியும் அதை ஏற்று அறிக்கை சமர்பித்தார், மேலும் ராணுவ தளவாடங்கள் பகிர்ந்துகொள்ள படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விரிவாக விளக்கிய பின்னர், ஒரு கிழவரின் உண்ணாவிரதம் ஒருமித்த முடிவை கேலிக்குரியதாக ஆகியது, அனைவருக்கும் திகைப்பாக இருந்தது, அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியானது. எதிர்கட்சி இருந்தால் அரசை கவிழ்த்திருப்பார்கள் ஆனால், அடங்கி போக வேண்டியதாயிற்று. 55 கோடி நிலுவை தொகை அளிப்பதற்கான முடிவு எட்டப்பட்டபோது பிர்லா இல்லத்தில் இருந்ததாக கூறும் பல்தேவ் கனஷ்யாம் தாஸ் பிர்லாவிடம் காந்தியின் நோக்கம் ஈடேறிவிட்டதால் இன்னும் 48 மணிநேரத்திற்குள் உண்ணாவிரதத்தை முடித்துகொள்வார் என பந்தயம் கட்டியதாக சொல்கிறார்.

Noakhali atrocities, gandhi

நிர்பந்தத்தில் அவசாமாக ரூ 55 கோடிகள் கொடுக்கப்பட்ட விதம்: காந்தியின் அழுத்தத்தினால், எவ்வாறு பணம் கொடுக்கப் பட்டது:

  1. இஸ்லாம் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய பாகிஸ்தான் பிரிவினையின் போது தன் பங்காக 100 கோடி பணத்தைப் பிரித்துக் கொடு என்று கேட்டது.
  2. 1948-49 பட்ஜெட்டை பிப்ரவரி 28, 1948 அன்று சண்முகம் செட்டி சமர்ப்பித்தபோது, பாகிஸ்தான் ரூ 300 கோடிகள் கொடுக்க வேண்டும் என்று பதிவு செய்தார்.
  3. நிதியமைச்சர் சண்முகம் செட்டி பிரிவினை-கடன்-பாக்கி ரூ 300 கோடிகள் பணத்திற்கு 3% வட்டியும் பாக்கியுள்ளது என்று எடுத்துக் காட்டினார்[5].
  4. ரூ 100 கோடிகளில் இந்தியா முதற்கட்டமாக 20 கோடி கொடுத்து, பேச்சுவார்த்தையின் முடிவாக மீதி 75 கோடி அளிக்க ஒப்புக்கொண்டது.
  5. மீதி 55 கோடிகளை அளிப்பதற்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சி ஏற்படுத்தினர்.
  6. அதனால் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய தொகையை நிறுத்தி வைத்தது.  ஆனால் காந்தி புகுந்து பிரச்சினை உண்டாக்கினார்.
  7. 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று காந்திக்கு எடுத்துக் கூறினார்.
  8. ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்து, மூன்றே நாட்களில் அப்பணத்தைக் கொடுக்க செய்து, விரதத்தை முடித்துக் கொண்டார்[6].
  9. 13-01-1948 அன்று உண்ணாவிரதம் ஆரம்பம், 15-16 RBI அவசர கூட்டம்; 16-01-2018 விரதம் முடிவு, 30-01-2018 அன்று கொலை செய்யப்பட்டார்.
  10. நேரு, படேல் முதல் கோட்சே வரை எல்லோரும் ரூ 55 கோடி கொடுக்கக் கூடாது என்றனர், RBI க்கு உத்தரவிட்டு கொடுக்கப்பட்டது! [10]

© வேதபிரகாஷ்

19-06-2018

Pakistan stamp.1950

[1]இன்றைக்குக் கூட 80 வயதுக்கு மேலே உள்ளவர்கள், குறிப்பாக வடவிந்தியாவில், ஏன் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களின் வம்சாவளியினரிடம் கேட்டால், அத்தகைய உண்மைகளை சொல்வார்கள்.

[2] துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்…இவற்றிற்கெல்லாம் தனித்தனி அர்த்தங்கள் உள்ளன, அதனால் தான் பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது, இன்றைக்கு இஸ்லாமிசம் என்று வேறு சொல்கிறார்கள்.

[3] இதைத்தான், பிறகு துலுக்கர், சீக்கியர்களை “காலிஸ்தான்” இயக்கம் தூண்ட ஊக்குவித்தாக அமைந்தது. காஷ்மீர் பிரச்சினை போன்று, காலிஸ்தான் பிரச்சினையை உண்டாக்கி, இரு மாநிலங்களிலும், தொடர்ந்தமெல்லைப் பிரச்சினைகளை உண்டாக்க பாகிஸ்தான் திட்டம் போட்டது.

[4] But then, suddenly, I was overcome by a strange apprehension, which only they can appreciate who knew the position held by Mahatma Gandhi in India and the influence he exercised in every sphere of activity, political, social and economic. It was reported that there was, about him, an aura of saintliness and a magical power which hypnotised his interlocutors and reduced them to tame, supine creatures ready to efface themselves, to agree to whatever he said and carry out his directions. Lord Irwin was supposed to have been affected in this manner when he gave his assent to the Gandhi-Irwin pact in 1931. His fasts had converted his strongest opponents, and it was rumoured that die-hard British politicians and administrators were unwilling to meet him, lest under his mysterious spell they compromised their principles. Only a few days previously the world had witnessed a demonstration of his powers……

Khosla, The Muder of Mahatma, p.9.

[5] ………for 1948-49 on February 28, 1948, R.K. Shanmukham Chetty, the then Minister for Finance, had put the rate of interest at around three per cent for the Rs 300-crore debt. It shows the total liabilities at Rs 56,51,784.22 crore for 2013-14.

[6] http://www.gandhitoday.in/2015/12/55.html

 

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

ஜூன் 15, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

The accused Godse 12-05-1948

நாதுராம் கோட்சே கடைசிவரை நான் தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டது: மஹாத்மா காந்தி கொலை வழக்கைப் பொறுத்த வரையில், கடைசி வரை, நாதுராம் கோட்சே தார்மீகத்தைக் கடைப் பிடித்து, “ஆமாம், நான் தான் மகாத்மாவைக் கொன்றேன்,” என்று ஒப்புக் கொண்டதால் தான் வழக்கில், தூக்குத் தண்டனைக் கிடைத்தது. சுட்டப் பிறகு ஏற்பட்ட அமளியில், நாதுராம், கொஞ்சம் தூரம் சென்று அமைதியாக நின்றிருந்தால் கூட, ஒன்றும் தெரிந்திருக்காது. ஆனால், நாதுராம் ஓடவில்லை, ஒளியவில்லை, அமைதியாக நின்றிருந்தான். அப்படியே நின்றிருந்தான் பிறகு நடந்ததைப் பற்றி பலவிதமாக சொல்லப்பட்டது, எழுதப்பட்டது. கோட்ஸே அமைதியான சரண்டர் ஆனார், மக்கள் அடித்து நொறுக்கினர், ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ….ஆகாயப்படை அதிகாரி அவனைப் பிடித்தார், கையில் இருந்த துப்பாக்கி பிடுங்கப் பட்டது, போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்……. இப்படி செய்திகள் வந்தன.

Fourth bullet theory - The Dawn, Pakistan

சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கைப் பற்றிய சர்ச்சைகள்: “தி கார்டியன்” என்ற நாளேட்டின் படி[1], “கோட்ஸே, தன்னை கொல்வதற்காக நான்காம் முறை சுட்டான், ஆனால், அருகிலிருந்த விமான அதிகாரி அவனது கையை முறுக்கி, துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார். அவர் கோட்ஸேவை சுட முயன்றார், ஆனால், போலீஸார் தடுத்து விட்டனர். கோபம் கொண்ட கூட்டம், கொம்புகளால் கோட்ஸேவை அடித்தனர். ஆனால், போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு, போலீஸ் ஷ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விட்டனர்.” ஆகவே, துப்பாக்கியில் கைரேகை இருந்தது பற்றிய விவரங்கள் ஆதாரமாகாது. காந்தி சுடப்பட்டது பற்றி கூட இவ்வாறு, விதவிதமான செய்திகள் உலக நாளிதழ்களில் வெளி வந்தன. மூன்று மற்றும் நான்கு முறை சுடப்பட்டது, சுட்ட சப்தம் கேட்டது…..போன்ற செய்திகள் வெளிவந்தன. கொலை செய்ய முயன்றது பற்றிக் கூட, முயற்சிகள் நடந்தது எத்தனை என்பது பற்றி தெளிவாக இல்லை. பலர், பலவிதமாக செய்திகளை வெளியிட்டனர். வெளிநாட்டவர் பலவிதமாக, புத்தகங்களில் எழுதி வைத்தனர்.

Gandhi assassination, Gita recited 30-01-1948

காந்தி இறந்தது எப்பொழுது?: காந்தி உடனே இறந்தாரா, “ஹே ராம்” சொல்லி இறந்தாரா, பிர்லா ஹவுஸுக்கு கொண்டு சென்றபிறகு 30 நிமிடம் கழித்து இறந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. பிர்லா மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மந்திரங்கள் உச்சாடனம் செய்யப் பட்டது. இதனால், அவர் இறக்கும் வரை மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி வேறு வந்தது. மனுபென் குறிப்பின்படி, காந்தி கீழே விழுந்தபோது, கடிகாரத்தில் 5.17 காட்டியது. அவரது வெண்ணிற உடையில் பல இடங்களில் ரத்தம் தோய்ந்திருந்தது. அவரை திரும்ப வீட்டிற்குள் எடுத்துச் செல்ல 10 நிமிடங்கள் ஆகின. அப்பொழுது எந்த டாக்டரும் இல்லை. முதலுதவி பெட்டிதான் இருந்தது, ஆனால், அதில் காயத்திற்கு போட எந்த மருந்தும் இல்ல, காந்தி அதிகமாக ரத்தத்தை இழந்தார். எல்லோரும் சப்தமாகக் கத்திக் கொண்டிருந்தனர். பாய் சாஹெப் மருத்துவ மனைக்கு போன் செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு வெல்லிங்டன் ஹாஸ்பிடலுக்குச் சென்று திரும்ப வந்தார். அவர் உடல் அறையில் வைக்கப்பட்டு, கீதா படிக்கப் பட்டது, பிறகு காலனெல் பார்கவ் வந்து, பார்த்து அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்[2].

Gandhi assassination, by a fanatic 30-01-1948

காந்தியைஇந்து வெறியாளன்சுட்டான்: “இந்து வெறியாளன்” என்ற சொற்றோடர் மட்டும் எல்லாவற்றிலும் இருந்தது[3]. ஆனால், உடனடியாக, மௌன்ட் பேட்டன், நேரு, படேல் முதலியோர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கெனவே கொதித்திருக்கும் இந்துஸ்தான மக்கள் கலவரங்களில் ஈடுபட்டால், துலுக்கருக்குத் தான் அபாயம் ஏற்படும் என்று அறிந்து செயல்பட்டனர். இதனால் தான், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. சர்தார் பட்டேல் பற்றியும் முரண்பட்ட வாதங்கள் இன்று வைக்கப் படுகின்றன[4]. மஹாத்மா காந்தி கொலைசெய்யப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைப் படித்துப் பார்த்தால், வழக்கில் உள்ள ஓட்டைகள் தெரியும். இது ஒரு அரசியல் கொலை, தனிமட்ட மனிதனின் கொலையல்ல என்று கோடானு கோடி மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 1947-48 காலங்களில் வாழ்ந்த முதியோர்களில் பெரும்பாலோர், மஹாத்மாவின் முஸ்லிம் ஆதரவு கொள்கைகளை விரும்பவில்லை.

Gandhi assassination, Noakhali appeasement, 30-01-1948

மஹாத்மாவை மதித்த மக்கள், அவரது முஸ்லிம் சார்பு கொள்கைகளினால் வருத்தமடைந்தது: “பாகிஸ்தான் உருவானால், எனது இறந்த உடல் மீது தான் நடந்து செல்ல வேண்டும்,” என்று காந்தி சொன்னது எல்லோருக்கும் தெரியும். ஆனால், லட்சக்கணக்கான துலுக்கர், இந்துக்களைக் கொன்று அவகளின் உடல்களின் மீது தான் நடந்து பாகிஸ்தானிற்குச் சென்றனர். அப்பொழுது கூட, இந்து நலன் காக்காமல், சந்தோசமாக நேரு பதவி ஏற்றார். காந்தியோ, துலுக்கரின் உயிரைக் காப்பேன் என்று நவ்காளிக்குச் சென்றார். உண்மையான தேசப்பற்றுக் கொண்டவன் கொதித்துக் கொண்டிருந்தான். கோடானு கோடி மக்களுக்கு, மஹாத்மா கடவுள் போன்றே இருந்தார். அவர் விஜயம் செய்தால், லட்சக்கணக்கில் மக்கள் வந்து, கால்களில் வீழ்ந்து வணங்கிச் சென்றது சாதாரணமான விசயமாக இருந்தது. ஆனால், சுதந்திரம் கிடைத்து பத்தே நாட்களில் நிலைமை மாறியது. நேரு மற்றும் காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை, நன்றாகப் புரிந்து கொண்டனர். துலுக்கர் இந்துக்களின் பிணங்களை அனுப்பி வைத்தபோது, கோடிகளை இவர்கள் பதிலுக்கு தானமாகக் கொடுத்தனர். இப்படி பட்ட விசயங்களுக்காக, நாதுராம் மட்டும் கோபப் படவில்லை, கோடானு கோடி இந்திஸ்தான மக்கள் கோபப் பட்டனர், “இந்த கிழவன் செத்தால் தேவலை,” என்று கரித்துக் கொட்டினர். அந்நிலையில் தான் நாதுராம் சுட்டுக் கொன்ற போது, மக்கள் மகிழ்ந்தனர், “மஹாத்மா” சென்று விட்டதால் வருத்தம் அடையவும் செய்தனர். அதனால், சிலர் இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தனர் என்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துமஹா / அபிநவ பாரத் சபாகாரர்கள், என்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் என்றே குறிப்பிட்டன.

Gandhi assassination, Cincinnati Post 30-01-1948

காந்தி இறப்பு ஆர்.எஸ்.எஸ்.க்கு முன்னரே தெரியுமா, இனிப்புகள் விநியோகித்தார்களா?: ஆங்கிலத்தில் எப்பொழுதும் பொய்யை சொல்லும் போது, சுற்றி வளைத்துக் சொல்வார்கள். உதாரணத்திற்கு இதனை எடுத்துக் காட்டுகிறேன்:

 As Gandhi’s Boswell, Pyarelal, records in his memoirs[5], “members of the RSS at some places had been instructed beforehand to tune in their radio sets on the fateful Friday for the ‘good news’, and sweets were distributed by the members at many places.”

போஸ்வெல் மற்றும் பியாரேலால் தங்களது நினைவுகளை பதிவு செய்தபடி, “முன்னமே, சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு ரேடியோவை ஆன் செய்து வெள்ளிக்கிழமை அன்று நல்ல செய்தி வரும் என்று அறிவுருத்தப் பட்டார்கள், மற்றும் இனிப்புகள் பல இடங்களில் விநியோகித்ததார்கள்,” என்று ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளதை கவனிக்கலாம்.

  1. அதாவது நூரானிக்கு போஸ்வெல் மற்றும் பியாரேலால் தான் ஆதாரம்.
  2. போஸ்வெல் மற்றும் பியாரேலால் இவர்களுக்கு அவர்களது நினைவுகள் ஆதாரம்.
  3. அந்நினைவுகளிலோ ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு யார் அறிவுருத்தினர் என்று தெரியாது.
  4. மேலும், அறிவுருத்தப் பட்ட ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் ரேடியோ கேட்டார்களா இல்லையா – நூரானிக்குத் தெரியாது.
  5. பிறகு, “sweets were distributed by the members at many places.” என்றால் அதே ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  6. அதிலும் பல இடங்களில் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  7. இதுவும் காந்தி சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கை கதையாக இருக்கிறது.
  8. ஏதோ, ஒரு இயக்கம் இருக்கிறது, அதன் மீது எல்லா பழிகளையும் போடலாம், என்ற ரீதியில் தான் வாதன் உள்ளது.
  9. பிறகு இதில் உண்மை என்னத்தான் உள்ளது?

 

© வேதபிரகாஷ்

14-06-2018

Gandhi assassination, who killed

[1] According to The Guardian report, which did not mention Herbert Reiner Jr, Godse “fired a fourth shot, apparently in an effort to kill himself, but a Royal Indian Air Force sergeant standing alongside jolted his arm and wrenched the pistol away. The sergeant wanted to shoot the man but was stopped by the police. An infuriated crowd fell upon the man and beat him with sticks, but he was apprehended by the police and taken to a police station.”

https://www.theguardian.com/world/1948/jan/31/india.fromthearchive

[2] The watch she was carrying showed 5:17 p.m. and blood was everywhere on their white clothes. Manuben estimated that it took about ten minutes to carry Gandhi back into the house, and no doctor was available in the meanwhile. They only had a first aid box, but there was no medicine in it for treating Gandhi’s wounds. According to Manuben,………Gandhi had suffered profuse blood loss. Everyone was crying loudly. In the house, Bhai Saheb had phoned the hospital many times, but was unable to reach any help. He then went to Willingdon Hospital in person, but came back disappointed. Manuben and others read Gita as Gandhi’s body lay in the room. Col. Bhargava arrived, and he pronounced Gandhi dead.

Gandhi, Manuben (1962), Last Glimpses of Bapu, Ahmedabad: Nuvajivan, Delhi: Agarwal

[3] ஒரு முஸ்லிம் சுட்டான் என்று கூட செய்தி வந்து கலவரம் கூட ஏற்பட்டது, என்றெல்லாம் ஆதாரங்களேஐல்லாமல் இப்பொழுது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

[4] The Front Line, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece

[5] Frontline, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013;  ( Mahatma Gandhi: The Last Phase; page 750).

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece