Posts Tagged ‘வாக்கு மூலம்’

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

ஜூலை 6, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

Rehashing Gandh-Godse stuff by the leftists and muslims

காந்தி கொலையைப் பற்றி இப்பொழுது ஆராய்ச்சித் தேவையா?: காந்தி கொலைவழக்கு முடிந்தாகி விட்டது, கொலைகாரன் கோட்சே தூக்கில் போட்டாகி விட்டது, ஆகவே, இப்பொழுது அக்கொலை, கொலைசதி முதலியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதன் அவசியம் என்ன என்று சிலர் கேட்கலாம். தேவை, அவசியம் இல்லையென்றால், தி இந்து (The Hindu), பிரன்ட் லைன் (Frontline) தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடாது. ராகுல் காந்தி முதல் திக்விஜய் சிங் வரை அவ்வப்போது, ஆர்.எஸ்.எஸ் தான் காந்தியைக் கொன்றது என்று பேசுவதும், அதற்கு ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக எதிர்த்து முடிவு கட்டுகிற முறையில் நடவடிக்கை எடுக்காமல், யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரர் வழக்குத் தொடுப்பது, மன்னிப்புக் கேட்பது, பிறகு மறுபடியும் மேடையில்-கூட்டத்தில் பேசுவது, ஜனரஞ்சக ரீதியில் நாளிதழ்-சஞ்சிகைகளில் எழுதுவது என்ற செயல்பாடு இருக்காது. ஆர்.எஸ்.எஸ்-தாக்குதல் என்பதை விட, இந்து-எதிர்ப்பு, இந்துமத-தூஷணம் முதலியவற்றில் தான், குறிப்பிட்ட கூட்டங்கள் ஈடுபடுவதை கவனிக்க முடிகிறது.  “ஒரு இந்து, ஒரு இந்து கொன்றான்” என்ற விதத்தில் கூட சுருக்கி, இந்துக்கள் எல்லோருமே கொலைகாரர்கள், வன்முறையாளர்கள், காந்தி போன்றவர்களைக் கூட கொலை செய்ய தயாராக இருப்பதால், இனிமேலும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று அடுக்கிக் கொண்டே போவதை கவனிக்கலாம். ஒருகுறிப்பிட்ட திரிபுவாதத்தில், பிராமண-எதிர்ப்புப் போர்வையில், இந்துமதம் அதிகமாகவே தாக்கப் படுகிறது. ஆகவே, இதை அரசியல் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு என்ற நிலைகளினின்று மீறி செயல்படுவதால், நிச்சயமாக, இதனை ஆராய வேண்டியுள்ளது.

Against RSS - The Hindu, Frontline

திரும்பதிரும்ப எழுதுதல், மறுபடிமறுபடி பேசுதல் முறைகளில் உள்ள ஆபத்து: மேலும், தி இந்து, பிரன்ட் லைன் வகையறாக்கள் அதிகமாகவே பாரபட்சத்துடன், திரிபுவாதங்களுடன், பொய்களை குழைத்து, ஆங்கிலத்தில் திறமையாக எழுதி, துவேசத்தை, விசத்தைக் கக்கியுள்ளார்கள். ஏ.ஜி.நூரானி போன்றோர் அதில் தகுதிக்கு கீழாக எழுதியுள்ளனர் என்பது நோக்கத் தக்கது. பொதுவாக, இவற்றைப் படிப்பவர் சில நூறு ஆட்கள் என்று கொண்டாலும், சில ஆயிரம் ஆதிக்கத்தில் உள்ள எழுத்தாளர்கள், சித்தாந்திகள், பிரபலங்கள் மறுபடி-மறுபடி அத்தகைய பொய்களை திரும்ப-திரும்ப எழுதி, பேசி, தமது கட்டுரைகள், புத்தகங்களில் முதலியவற்றில் எடுத்தாண்டு வருவதால் [quoted-quote methodology], அப்பொய்களே, ஏதோ நிலைநிறுத்தப் பட்ட உண்மை போன்ற பிரமிப்பை உண்டாக்கியுள்ளனர். ஜே. டி. கோஸ்லா தீர்ப்பைக் கூடப் படிக்காமல், இவற்றை குறிப்பிட ஆரம்பித்து விட்டனர். அத்தகைய போக்கு, மிகவும் ஆபத்தானது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை, பாசிஸ்டுகள், கொயபல்ஸ் என்றெல்லாம் விமசரித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இவர்கள் தாம் அத்தகைய போக்கைக் கொண்டிருப்பதை காணும் போது, திகைப்பாக இருக்கிறது.

Chaouri Chura 1922

1922 – சௌரி சௌரா, ஒத்துழையாமை இயக்கம், வன்முறை: பிப்ரவரி 5, 1922 ம் தேதி, சுமார் 2,000-2,500 மக்கட்கூட்டம், ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, திரும்பிக் கொண்டிருந்தது. யுனைடெட் ப்ரோவின்ஸ் [உத்திரபிரதேசம்], கோரக்பூர் மாவட்டம், சௌரி சௌரா என்ற இடத்தில், மார்க்கெட்டை நோக்கி அக்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, இடையில் ஒரு போலீஸ் ஷ்டேஷனைக் கடந்து சென்றது. அவ்வேளையில் போலீஸார் மற்றும் கூட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையில் பார்வை பரிமாற்றம் நடந்த போது, அதில் கோபம், சந்தேகம், பீதி, பயங்கரம் என்றிருந்தன. கூட்டம் கடந்து சென்று விட்டது. ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடைசியில் மெதுவாக நடந்து வந்த சிலரை, போலீஸார் பிடித்து, ஷ்டேசனிற்குள் கூட்டிச் சென்று விட்டனர், அடித்துக் கொண்டிருக்கின்றனர்; வெளியில் வந்து துப்பாக்கி சூடு நடத்தப் போகிறது; என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பி வந்தகூட்டம், போலீஸ் ஷ்டேஷனைத் தாக்கியது; சூரையாடியது, தீயிட்டுக் கொளுத்தவ்போலீஸ் ஷ்டேஷவும் செய்தது. கொல்லப்பட்டவர் 10 பேர், 20, 23, 30 என்றெல்லாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதில் அதிகமாகக் கொல்லப்பட்டவர் போலீஸ் தான்.  இந்த வன்முறைக்கு, கலவரத்திற்கு காந்தி தான் பொறுப்பு என்று ஆம்ஹ்கிலேய அரசாங்கம் கூறியது. ஆனால், காந்தி பொறுப்பேற்றுக் கொண்டு, இனி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதில்லை என்று வாக்குருதி கொடுத்து, முடிவு கட்டினார்.

Churi chura violence 1922

1942-1947 – ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும்: மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் தான் தலைவன் ஆகிறான், வன்முறையை, தூண்டுபவன், கட்டவிழ்ப்பவன் அல்ல! காந்தி இந்தியர்களைக் கட்டுப் படுத்திய விதத்தை கவனிக்க வேண்டும். வன்முறையை கட்டுப் படுத்தியதால் தான், அவர் மஹாத்மா ஆனார்! காந்தி, சௌரி சௌராவை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், ஆங்கிலேயர் எல்லாம் ஒட்டு மொத்தமாக, அன்றே செத்திருப்பார்கள்! நூறு கோடி இந்துக்களில் ஒரு கோடி இந்துக்கள் நடந்து சென்று  எதிரி நாட்டின் மீது படுத்தாலே, அது தெரியாமல் போய் விடும்!இந்திய / இந்து மக்கள் சக்தி மகத்தானது, அதனை ஒருமித்து, செயல்படுத்த வேண்டும். பலன் கிடைக்கும், என்றுணர்ந்ததால், அவர் சத்தியாகிரகத்திற்கு மாறினார். ஆங்கிலேயனை வன்முறையளன் ஆக்கி, தான், அமைதியின் பிரதிநிதி ஆனதால் தான், காந்திக்கு சிறப்பு உண்டானது. மேனாட்டவரே, ஏசுவின் மறு உருவம், ரிஷி-முனி போன்றவர் போன்று மதிக்க ஆரம்பித்தனர்.

Police recovered four bullets

30-01-1948 – காந்தி கொலையில் நான்கு துப்பாக்கி குண்டுகள் சர்சை விவரங்கள்: காந்தியின் ரத்தக்கறை படிந்த உடை, சுட்டபோது போத்திக் கொண்ட சால்வை, நான்கு புல்லட்டுகளைக் காட்டுகிறது[1].  மேலும், காந்தியின் உடலை பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பது கூரிப்பிடத் தக்கது[2]. “டான்” நாளிதழ் தலைப்புச் செய்தியில் நான்கு முறை துப்பாக்கி சுடப்பட்டு, நான்கு குண்டுகள் பாய்ந்தன என்று குறிப்பிட்டது. பிறகு, “டைம்ஸ் ஆப் இந்தியா,” லோக் சத்தா போன்றவையும் நான்கு புல்லட்டுகள் சுடப்பட்டன என்றே குறிப்பிட்டன. வின்சென்ட் ஷெரீன் [Vincent Sheean] நான்கு கருமையான குண்டு வெடிப்புகள் [“four full dark explosions”] என்று குறிப்பிட்டுள்ளார். “ரியூட்டர்ஸ்” என்ற நாளிதழ் குழுமத்தைச் சேர்ந்த கே.சி. ராய் [K.C. Roy (of Reuters)] என்பவரும் நான்கு துப்பாக்கி குண்டுவெடி சப்தத்தை கேட்டதாகக் குறிப்பிட்டார். “தி இந்து” ஜனவர் 31, 1948 அன்று வெளியிட்ட புகைப்படத்தில் நான்கு துப்பாக்கி காயங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். அது அரசு புகைப்படம் ஆகும் [government photograph, PIB MG 2626]. ஆகவே, நான்கு எவ்வாறு மூன்றாகியது? சுடுவதற்கு உபயோகப்படுத்தப் பட்ட பெரெட்டா பிஸ்டலில் [Beretta pistol] நான்கு குண்டுகள் பாக்கி இருந்ததாக, போலீஸார் குறிப்பிட்டனர். அப்படியென்றால் இதிலிருந்து மூன்று குண்டுகள் தான் வெளியேறியுள்ளன. பிறகு, நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, எந்த துப்பாக்கி மூலம் சுடப்பட்டது, யார்-எங்கிருந்து சுட்டார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. இருப்பினும் இவ்வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

Four bullets, news cuttings

மீரா பென்னின் வாக்குமூலம்: கபூர் கமிஷன் முன்பு, மீரா பென்[3] வாக்குமூலம் கொடுக்க செல்லும் போது, மொரார்ஜி தேசாய், தான் சிறியவள் என்பதால், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று சொல்லுமாறு அறிவுருத்தினாராம். ஆனால், மீரா பென் தான் காந்தியின் சீடை டென்பதால் உண்மைதான் கூறுவேன் என்று உறுதியாக இருந்தாளாம்[4]. ஜனவரி 30 அன்று கோட்சே மதியம் வந்தான், காந்தியின் வலது பக்கத்தில் நின்றிருந்தான். அவன் காந்தியைக் கொன்றிருக்கலாம், ஆனால், ஏதோ காரணத்திற்கு அவ்வாறு செய்யவில்லை என்றாளாம். மீரா பென் காந்தியின் அருகில் இருந்தாலும், கோட்சே அவளைத் தள்ளிக் கொண்டு, காந்தியின் முன்பு வந்து சுட்டான் என்பதாலும், அவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப் பட்டது. ஆனால், அதுவே பாதிக்கப்பட்டது, அழுத்தத்திற்குட்பட்டது, அதன் மீதும் மாற்றுக் கருத்துச் சொல்லப்படுகிறது எனும் போது, பொது மக்களுக்கு சந்தேகம் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

04-07-2018

 

Mira Behn, Gandhi

[1] The PIL also says an examination of the “blood-stained shawl” that Gandhi wore at the time of his death would reveal the truth behind the number of gunshot wounds and expose the inherent inconsistencies in the murder trial.

Hindustan Times, Two assassins, four bullets and a foreign hand: What PIL seeking fresh probe into Mahatma Gandhi’s murder says, Ashok Bagriya, New Delhi, Updated: Jan 10, 2018 07:50 IST.

[2] https://www.hindustantimes.com/india-news/two-assassins-four-bullets-and-a-foreign-hand-what-pil-seeking-fresh-probe-into-mahatma-gandhi-s-murder-says/story-GKNSQ5ZFqbciLHMf87OO0M.html

[3] Madeleine Slade (Mirabehn) (22 November 1892 – 20 July 1982), daughter of the British Rear-Admiral Sir Edmond Slade, was a British woman who left her home in Britain to live and work with Mohandas Gandhi, the leader of the Indian Independence Movement. She devoted her life to human development and the advancement of Gandhi’s principles.

[4] Tushar Gandhi, Let us kill Gandhi, p.77.