Posts Tagged ‘முரசொலி’

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-1

ஏப்ரல் 22, 2012 – கருணாநிதியின் பெரிய விளக்கம்[1]: முரசொலியில், மூன்று பக்கங்களுக்கு வரிந்து கட்டி எழுதிய கருணாநிதி கடிதத்தில், இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தன, “மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமதுவிடுதலைநாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதுஇந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் –  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.” இந்த நாக.கணேசன் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு விவரங்களைக் கொடுத்து உதவுபவர். மு. தெய்வநாயகம், ஜி.ஜே.சாமுவேல் போன்றோரின் நண்பர்[2].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-2

தமிழ்ப் புத்தாண்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தது[3][september 2012]: இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.  ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அந்த தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகிறது எனவும் ஆகமங்களில் இருந்து அறிய முடிவதாக பிருகுசங்கிதை எனும் நூல் கூறுகிறது.  மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்றாம் பாகத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் தொடக்க மாதம் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும், அங்கேயே சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என அச்சிடப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்தது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்[4].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-3

2020லும் உண்மைகள மறைத்து துவேசத்தை வளர்க்கும் போக்கு: இப்பொழுது 2020 ஆண்டு நடக்கிறது, ஆனால், அந்த திராவிடத்துவ ஊளைகளின் ஓசைக் கேட்கத்தான் செய்கிறது. பழைய விசயங்களை மறைத்து, மறுபடியும் மக்களிடம் மொழி ரீதியில் பிளவு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றைத் தூண்டும் முறையில் சமூக ஊடகங்களில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது, சமூக ஊடகங்கள் இந்த குழப்பங்களை செய்து வருகின்றன. இப்பொழுது “தமிழ்” என்ற முகமூடி அத்தகைய பிரச்சாரங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன. வழக்கம் போல, பிராமணர் வெறுப்பு, பார்ப்பனக் காழ்ப்பு, சமஸ்கிருத துவேசம் எல்லாம் இருக்கின்றன, தொடர்கின்றன. இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளில் எந்த ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. இருக்கின்ற விவரங்களை வைத்துக் கொண்டு, கூகுள் படங்களை சேர்த்துக் கொண்டு, ஒரே வார்தத்தில், எல்லாமே தமிழ் தான். தமிழிலிருந்து தான், சமஸ்கிருத எழுத்தாளர்கள் காப்பி அடித்தார்கள் என்று வாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற படி எந்த ஆதாரங்களியும் கொடுப்பதில்லை.

Ilangovan, Naga.Ganesan, Santhosam, Prajapati, Kumari Ananthan

தமிழில் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப நூல்கள் இருந்தனவா?: தழிழர்களின் கணிதம், கணித சாஸ்திரம், வானியல், வானியல் சாஸ்திரம், பேரண்டவியல், முதலியவைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் சிதறிக் கிடக்கின்றனவே தவிர, தனியாக நூல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், பல்லவர் காலத்து கல்வெட்டுகளில் பலவித சாஸ்திரங்கள் இருந்தது தெரிகிறது. கோவில், கோவில்கட்டுமானம், அமைப்பு, முதலியவை, அதற்குப் பின்னுள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களைக் காட்டுகின்றன. மற்ற மாநிலங்களைப் போல அத்தகைய நூல்கள் சமஸ்கிருதத்தில் இருதிருக்கக் கூடும், பிறகு தமிழில் இருந்திருக்கக் கூடும். ஏனெனில், சில குறிப்பிட்ட நூல்கள், 18-19ம் நூற்றாண்டுகளைச் சேந்ததாகத் தெரிகின்றன. நவீன காலத்தில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியபோது, தமிழைத் தனியாக எடுத்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில், “புத்தாண்டு,” என்ற கொள்கையைக் குழப்ப, மொழிவெறி வித்தகர்கள் முயன்றனர். மொழியின் மீதான காமம் அதிகமான போது, எல்லாமே தமிழ் என்ற நிலையில், ஒத்தாண்டையும் தனிமைப் படுத்த முயன்றனர். இதனால், சூரியன் ராசி மண்டலத்தில் புகும் போதான சந்திகளை “சங்கராந்தி” என்றறிந்து, அவற்றை குறிப்பிட்டு அழைத்தனர்.

60 years cycle

60 years cycle

சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது 12 மாதங்கள் கணக்கீடு: சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது மற்றும் வெளிவருவதை வைத்து, அத்தினத்தை விசேஷ தினமாகக் கொண்டாடுகின்றனர்.

சந்திரமாதத் தேதி / நாள் சங்கராந்தி பண்டிகை
14 January – Pongal, Makar Sankranti மகரம் பொங்கல்
12 February – Kumbha Sankranti கும்ப கும்பமேளா
14 March –  Meena Sankranti மீனம் நீர்நிலைகளுக்கு பூஜை
14 April –  Solar New Year, Mesha Sankranti மேஷம் சூரிய வருட ஆரம்பம்
14 May –  Vrishabha Sankranti ரிஷபம் சிவனுக்குரியது
15 June –  Mithuna Sankranti மிதுனம் மழை ஆரம்பம்
16 July (Sunday) Karka Sankranti கடகம் தக்ஷிணாயனம் ஆரம்பம்
17 August –  Simha Sankranti சிம்மம் செழுமை
17 September –  Kanya Sankranti, Vishwakarma Puja கன்னி விஸ்வகர்ம ஜெயந்தி / மஹாலயம்
17 October – Tula Sankranti துலாம் நிறைவான / திருப்திகரமான மாதம்
16 November – Vrischika Sankranti விருச்சிகம் கார்த்திகை
16 December  – Dhanu Sankranti தனுசு முதல் சூரிய மாத துவக்கம், உத்தராயணம்

சந்திரமாதம் முதலில் பின்பற்றப் பட்டது. பிறகு சூரியமாதம் வழக்கில் வந்தது. பிறகு, இரண்டையும் . “சௌர்ய-சந்திர” சேர்த்த போது, குழப்பங்கள் வந்தன. அதிகமாதம் சேர்ப்பு வந்தது. அந்நிலையில் தான், இவ்வருடம் யுகாதி கணக்கு படி சைத்ரமாதம் 25-03-2020 அன்றே ஆரம்பித்து 24-04-2020 அன்று முடிந்து, வைசாக மாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே வானியல், வானவியல் ரீதியில் அணுக வேண்டியதை மொழிப் பற்று, மொழிகாமம் என்ற ரீதியில், மொழிவெறியாக்கு, திரிபு விளக்கங்களினால் எதையும் மெய்ப்பிக்க முடியாது.

© வேதபிரகாஷ்

14-04-2020

60 years samvatsara

60 years samvatsara

[1] முரசொலி, தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012. மூன்று பக்கங்களில் வெளியானது.

[2] மே 2017, 17-19 தேதிகளில் ஸ்காட் கிருத்துவ கல்லூரியில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

[3] தினமணி, தமிழ்ப் புத்தாண்டு எப்போது? கருணாநிதி விளக்கம், Published on : 20th September 2012 04:08 AM

[4]https://www.dinamani.com/tamilnadu/2012/apr/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-484331.html