Posts Tagged ‘ஷாஜஹான்’

அக்பர் விசயத்தில் சுன்னி-ஷியா சர்ச்சைகள், சண்டைகள் மற்றும் மோதல்கள் (மஹதி)

ஜூன் 23, 2015

அக்பர் விசயத்தில் சுன்னிஷியா சர்ச்சைகள், சண்டைகள் மற்றும் மோதல்கள் (மஹதி):

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (8)].

Amir Khusrau teaching his disciples, miniature from a manuscript of Majlis al-Ushshaq by Husayn Bayqarah

Amir Khusrau teaching his disciples, miniature from a manuscript of Majlis al-Ushshaq by Husayn Bayqarah

அக்பர் கலிபுல்லாஹ் அல்லது மஹதி ஆக முடியுமா?: ஷியா பண்டிதர்கள் அக்பரை “மஹதி” என்று வர்ணித்தனர். செயிக் அப்துல் பதல் பாரசீக மஹாபாரத்ததின் முன்னுரையில் அவ்வாறே கூறியுள்ளார். அக்பர் எல்லோருரையும் வழிநடத்துபவர் மற்றுமன்றி மஹதியும் ஆவர் என்று குறிப்பிட்டார். சிலர் அவரை சாஹப்-இ-ஜமன் [Saheb-i-zaman] என்றும் வர்ணித்தனர். முன்னரே குறிப்பிட்டப்படி செயிக் அப்துல் பதல், அவரை கலிபத்துல்லாஹ், அல்லாவின் பிரதிநிதி என்று சிறப்பித்தார். ஏனெனில், ஷியாக்கள் இமாம் மஹதியை, கலிப-துல்லாஹ், அதாவது, அல்லாவின் ஆட்சியை, இப்பூமியின் மீது நிறுவ வந்துள்ளவர் என்று விவரிக்கிறது. இஸ்மயிலி ஷியைத் இறையியலின் படி, இமாம் என்பவர் ஒரு வலியாகப் பிறக்கிறார் மற்றும் அவரது தாயார் மிகச்சுத்தமாகவும், எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவராகவும் இருக்கிறார். அக்பரின் தாயார் கர்ப்பத்துடன் இருக்கும் போது கண்ணால் பார்க்கமுடியாத மற்றும் சிறந்த தீர்க்கதரிசனங்களைப் பார்த்துள்ளாராம். அதனால், அக்பர் அவரது கர்ப்பத்தில் இருக்கும்போது, அவரது முகம் பிரகாசத்துடன் இருந்தது என்று செயிக் அப்துல் பதல் விவரிக்கிறார். மேலும் அக்பர் கருவிலிருக்கும் போதே, எல்லா ஞானத்தையும் கடவுளிடமிருந்து நேரிடையாகப் பெற்றுவிட்டார், மற்றும் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சக்தியைக் கொண்டிருந்தார் என்று விவரித்தார்[1]. அதாவது தீர்க்கதரிசி என்றால், அதிசயங்களை செய்ய வேண்டும், குறிப்பிட்ட சின்னங்களை காட்ட வேண்டும் என்றுள்ளது. அதனால், அக்பரரை அவ்வாறெல்லாம் வர்ணிக்கப்பட்டு உருவாக்கினர். ஆனால், சுன்னி முகமதியரோ, வெளிப்படையாக அத்தகைய நம்பிக்கைகளை மிகக்கடுமையாக எதிர்த்தனர்.

Amir Khusro with his Guru

Amir Khusro with his Guru – அமிர் குஸ்ரு கையில் தம்புராவுடன், அவரது குரு தலைன் பின்னால் ஜோதியுடன், இந்துக்கள் போலவே சித்தரிக்கப் பட்டனர். ஆனால், சமாதி விசயத்தில் சுன்னி-ஷியாக்கள் இடையே ஏன் பிரச்சினை?

சுன்னிஷியா சர்ச்சைகள், சண்டைகள் மற்றும் மோதல்கள் (இறையியல், சமாதிகள் முதலியன): 1567ல் செயிக் அபுதுன் நபி என்பவரின் அறிவுரையின் படி, அமீர் குர்ஸு சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த, மீர் மூர்தாஜா செரிப் சிராஜி என்பவரின் சமாதி தோண்டப்பட்டு, உள்ளேயிருந்தவற்றை வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது.  இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், அடிப்படைவாத இஸ்லாம் சமாதி, சமாதி மரியாதை, வழிபாடு, நினைவு கொள்வது முதலியவற்றை எதிர்க்கிறது[2].

Khusro-Tomb-at-Nizamuddin-Dargah

Khusro-Tomb-at-Nizamuddin-Dargah

பிறகு அமாதிகளில் ஷியா-சுன்னி என்று வித்தியாசம் பாராட்டுவது ஏன் என்று தெரியவில்லை. இத்தகைய ஷியாக்களுக்கு எதிரான காரியங்கள் 1570 வரை நடந்து கொண்டிருந்தன. 1573ல் அக்பர் மஹதவித்துவம் (Mahadhvism) என்ற முகமதியப் பிரிவை அடக்கி ஒடுக்கியுக்கினார். அப்பிரிவைச் சேர்ந்த பந்தகி மியான் செயிக் முஸ்தபா என்ற மதத்தலைவர், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தில்லிக்கு இழுத்து வரப்பட்டார். ஒன்றரை வருடங்களில் சிறையில் இருந்த அவர், 1570ல் விடுதலை செய்யப்பட்டதும் உடனே இறந்து விட்டார் என்று முகமதிய நூற்க்குறிப்புகள் கூறுகின்றன. 1495ல் ஜோன்பூரைச் சேர்ந்த முல்லா மொஹம்மது என்பவர் தன்னை மஹதி என்று அறிவித்துக் கொண்டார். அவர் வழி வந்தவர் தாம் இந்த மியான் செயிக் முஸ்தபா. அக்பர் மற்ற மத மக்களை, நம்பிக்கையாளர்களை எப்படி தண்டித்தார், கொலைசெய்தான் என்பதனையும் பாடப்புத்தகங்களில் எடுத்துக் காட்டுவதில்லை. சுன்னி-ஷியாக்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை, இந்துக்கள் இப்பொழுது வரை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

சுன்னி-ஷியா பிரச்சினை.2

சுன்னி-ஷியா பிரச்சினை.2

அக்பர் ஷியா முகமதியர்களுடன் ஏன் உரையாடல் நடத்தவில்லை, ஒத்துப் போகவில்லை?: எல்லா மதங்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு சமரசத்துடன் கருத்துகள், பழக்கங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அக்பர் மாறிய நிலையில், ஷியாக்களுடன் ஏன் அவர் ஒத்துப் போகவில்லை என்பதை எந்த செக்யூலரிஸவாதியும் கண்டுகொள்ளவில்லை போலும். மொஹம்மதுக்குப் பிறகு யார் தலைவராவது என்ற விசயத்தில், ஓரு பிரிவினர் அலி என்கின்றவரைத் தேர்ந்தெடுத்தனர். மொஹம்மதுவின் மகளை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தார். மற்றொரு பிர்வினர் வேறொருவர் வரவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இதனால், அலி இமாமான போது இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. 661ல் குபா என்ற இடத்தில் அலி கொல்லப்பட்டார். அவரது மகன்களும் கொல்லப்பட்டனர். சுன்னியொருவர் இமாம் ஆனார். இவ்வாறு தான், பிரிவு ஏற்பட்டது. இஸ்லாத்தில் உள்ள பிரிவினர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு சேர்ந்து, அமைதியாக வாழ்வது சுலபமானது என்பது போல உள்ளது. ஆனால், அப்பிரிவினர் ஏன் சேர்ந்து போவதில்லை என்பது தான் புதிராக உள்ளது[3]. ஆலிப் முறை, காலிப்புகளை மதிப்பது சுன்னித்துவம் என்றால், மஹதியிஸத்தை அதிகமாகப் போற்றுவது, அதுபோலவே காட்டிக் கொள்வது, நடப்பது முதலியவை ஷியத்துவ ஆகிறது. பிறகு தன்னையும், தனது தாயையும் அவ்வாறான குணாதிசயங்களைப் பெற்றிருப்பது போல காண்பித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

சுன்னி-ஷியா பிரச்சினை

சுன்னி-ஷியா பிரச்சினை

இந்துக்கள் மசூதிகளை இடித்தனரா அல்லது அக்பர் கொடுத்த இடத்தில் கோவில்களைக் கட்டிக் கொண்டனரா?: முஜாதித் அல்ப் தானி, இந்துக்கள் மசூதிகளை இடித்துவிட்டு கோவில்களைக் கட்டினர் என்று எழுதிவைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. அக்பர் காலத்தில், இந்துக்களுக்கு அதிக அளவில் இடம் கொடுத்ததால், அவர்கள் அதிகாரம் பெற்று, அதனால், மசூதிகளை மாற்றி கோவில்களைக் கட்டினார்கள் என்று தானி கூறுகிறார்[5]. தானேஸ்வரத்தில் குருக்யாதின் உள்ளே ஒரு மசூதி மற்றும் சமாதி இருந்ததாகவும், அதனை ஒரு இந்து இடித்து விட்டு, மசூதி கட்டினான் என்று எழுதி வைத்துள்ளார். ஆனால், இதெல்லாம் முகமதியர்களே கிளப்பி விட்ட வதந்தி என்று அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆசார இஸ்லாம் நீர்க்கப்பட்டுகிறது என்ற ஆதங்கங்கத்தில் அவர்கள் அவ்வாறு எழுதிவைத்தனராம். உண்மையில் அக்பர் காலத்தில் பீர்பலைத்தவிர வேறெந்த இந்துவும் காணப்படவில்லை. ஜைனர்களும், கிருத்துவர்களும் தான் ஆதிக்கம் பெற்றிருந்தனர். எனவே, அக்பர் காலத்தில், இந்துக்களுக்கு அதிக அளவில் இடம் கொடுத்ததால், அவர்கள் அதிகாரம் பெற்று, அதனால், மசூதிகளை மாற்றி கோவில்களைக் கட்டினார்கள் என்று தானி குறிப்பிடுவது அப்பட்டமான பொய்யாகும்.

Mughal illustrated page from the Hasht-Bihisht, Metropolitan Museum of Art

Mughal illustrated page from the Hasht-Bihisht, Metropolitan Museum of Art

ஒருபக்கம் இந்துக்களின் ஆதிக்கம், தாக்கம் அக்பர் அவையில் உள்ளன என்று குற்றஞ்சாட்டி வந்தாலும், இந்துக்கள்-அல்லாதர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. ஜைனர்களின் கோவில்கள் இடிக்கப்படக்கூடாது என்று அக்பர் ஆணையிட்டார், புதிய ஜைன-கோவில்களைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்தார். ஆனால், அக்பர் காலத்தில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன, ஜெசியா வரி விதிக்கப்பட்டிருந்தது. அவ்வரி பிறாகு தான் நீக்கப்பட்டது, அதற்கு, ஒரு இந்து கவி, அக்பரைப் புகழ்ந்து பாடவேண்டிஇருந்தது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. எனவே, அக்பர் காலத்தில், இந்துக்கள் மசூதிகளை இடித்தனர் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்களாகும்.

வேதபிரகாஷ்

© 23-06-2015

[1] Abul Fadl; Akbar Nama, vol. I. P. 187; Ibid.Mahabharat (preface). P. 9-12.

[2] அமிர் குஸ்ரோ ஹொடர் தூர்தர்ஷனில் ஒலிபரப்பியபோது, சமாதி காட்டியது, சமாதியிலிருந்து குரல் வருவது, புகை வருவது போன்றா காட்சிகளை எதிர்த்து அடிப்படைவாத முஸ்ளிம்கள் வழக்கு தொடர்ந்தனர். பிறகு அத்தகைய காட்சிகள் நிறுத்தப்பட்டன.

[3]  இன்று கூட ஐசிஸ் போன்ற தீவிரவாத ஜிஹாதிகள் அல்லாவின் பெயரிலேயே, ஷியா முஸ்லிம்களைக் கொன்றுவருகின்றனர். ஆனால், இந்தியாவில் இரு பிரிவுகளும் இந்துக்களுக்கு எதிரான விசயங்களில் ஒன்றாக செயல்படுகின்றனர்.

[4] Shaikh Ahmad, Maktubat Imam Rabbani, vol. I, Maktub no. 105; Ibid, vol. II, Maktub No. 92.

[5] During the reign of Akbar, the Hindus became The infidle people of the Hind are mercilessly obliterating the Mosques and in that place they are erecting their Mandirs………………….so powerful that, without any hesitation, they obliterating the Mosque erected their mandirs. There was a mosque at Thanyswar within Kurukhayt, and a grave- yard of a pious man, the Hindus distroying them, erected a mandir there.

தாரா சிக்கோ – முரண்பாடுகள் கொண்ட இளவரசன், உபநிடதங்களை மொழிபெயர்த்தவன், ஔரங்கசீப்பினால் கொலையுண்டவன்!

ஜூன் 22, 2015

தாரா சிக்கோ முரண்பாடுகள் கொண்ட இளவரசன், உபநிடதங்களை மொழிபெயர்த்தவன், ஔரங்கசீப்பினால் கொலையுண்டவன்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (7)].

Dara Sikhoh - the dual character connossier of aert and hunting

Dara Sikhoh – the dual character connossier of aert and hunting

50 உபநிடதங்களை மொழிபெயர்த்த விளைவு அல்லா உபநிஷடம் உருவானதா?: தாரா சிக்கோ (1615-1659) ஜஹாங்கீருடைய புதல்வன், அக்பரின் பேரன். பொதுவாக இவனைப்பற்றி அதிகமாக புகழ்ந்துதான் சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 1657ல் சமஸ்கிருதத்திலிருந்து 50 உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்துள்ளான் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவன் மற்றவர்களால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த வேலையை கண்காணித்தான் என்றுள்ளது[1]. எனவே சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் தெரிந்த பலர் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது அக்பரது காலத்திற்குப் பிறகுக் கூட இத்தகைய மொழிபெயர்ப்புகள் தொடர்ந்துள்ளன என்று தெரிகிறது. “சிர்-இ-அக்பர்”, என்ற அத்தொகுப்பு “மிகப்பெரிய ரகசியம்” எனப்படுகிறது. அதாவது “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டான். பாரதத்தில் உபநிடதங்கள் என்றுமே ரகசியமாக இருந்ததில்லை. பல இடங்களில் பண்டிதர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, முகலாயர் காலத்தில் அது “மிகப்பெரிய ரகசியம்” என்று ழைக்கப்பட்டதற்கறென்ன காரணம் என்று பார்க்க வேண்டும். உபநிடதங்கள் அப்படியே மொழிபெயர்க்கப் பட்டிருந்தால், ஒரு பிரசினையும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது எனும் போது, மொழிபெயர்ப்பில் ஏதோ செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை மேலே குறிப்பிட்ட அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் அல்லது அது போன்ற உபநிடதங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன் போலும்.

Sirree akbar - 50 upanishad translation

Sirree akbar – 50 upanishad translation

சூபித்துவம்வேதாந்தங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்த தாரா சிக்கோ: தாராசிக்கோவின் “மஜ்மா-உல்-பஹ்ரைன்” (இரண்டு சாகரங்களின் சங்கமம்) என்ற புத்தகம், சூபித்துவம் மற்றும் வேதாந்தத்தை ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ள நூலாகும். ஆனால், இதனால் என்ன தாக்கம் என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை இந்துமதக் கருத்துகளை முகமதிய கருத்துகள் போன்று மாற்றியமைத்து, பாரசீகத்தில் எழுதி அவை சூபி நூல்கள் என்று அறிவித்தார்கள் போலும். சீக்கியர்களின் ஏழாவது குருவான குரு ஹர் ராயுடன் நட்பு கொண்டிருந்தான். ஒருவேளை, இவனும் அக்பர் போலவே, “தீன்-இலாஹி” மதசோதனைகளில் ஈடுபட்டானா என்று தெரியவில்லை. நூர்ஜஹானுக்குப் பிறகு இவன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் நிலையில் தான், ஔரங்கசீப் இவனுக்கு போட்டியாக கிளம்பி வேலை செய்ய ஆரம்பித்தான். இந்து ராஜாக்களின் ஆதரவு பெற தாரா சிக்கோ முயன்றிருக்கலாம். ஆனால், ஔரங்கசீப் தன்னுடைய வேலையில் குறியாக இருந்தான். இருப்பினும், தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய வேலைகளில் ஈடுபட்டான் போலும்.

Dara Shukoh interacting with Sufi saints

Dara Shukoh interacting with Sufi saints

உபநிடதங்களில் நாட்டம், வேட்டையில் குறி, சிற்றின்ப விளக்கம்: தாராசிகோ இத்தகைய மத-ஆராய்ச்சிகளோடு ஓவியத்திலும், வேட்டையிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். வேட்டைப் பற்றிய ஓவியங்களின் பின்னணியில் பெண்ணின்பம் போன்ற சரச உணர்வுகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[2]. வேட்டையில், தமது இலக்கின் மீது குறியாக கண்களை வைத்துக் கொண்டு பார்த்து, சுட்டு வீழ்த்துவது வழக்கம். அதேபோல, தனக்குப் பிடித்தமான பெண்ணைப் பார்த்து, அவளை காமவேட்டையில் வீழ்த்துவது ஆணின் திறமை[3]. தாரா சிக்கோவிற்கு இதெல்லாம் பொறுத்தமான விசயங்கள் அல்ல என்று நினைக்க வேண்டாம். ஆன்மீகம், சூபித்துவம் என்றெல்லாம் இருக்கும் போது, இதில் எப்படி மனம் ஈடுபடுகிறது, இது முரண்பாடல்லவோ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். இந்துக்களின் அஹிம்சையை மதிப்பவன் என்றால், ஏன் வேட்டையில் ஈடுபட்டு மிருகங்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், இளவரசனாக இருந்த அவன் தனது அரசக்கடமைகள், பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்[4] என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Dara Shikoh marriage

Dara Shikoh marriage

பதவிக்காக குறியாக இருப்பது தவறில்லை: உண்மையில் “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டதையே ஆசார-அடிப்படவாத முகமதியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், மிருகவேட்டையை காமவேட்டையோடு ஒப்பிடுவதை, எந்த முகலாய அரசனும் தவறு என்று சொல்லமாட்டான். “ஹராம்” என்றதையே “ஹேரம்” ஆக்கி பெண்களை அனுபவித்து வரும் பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு, இதெல்லாம் சகஜம் என்றுதான் சொல்லவேண்டும். வேட்டையில் விழுந்த மிருகங்கள் எப்படி வேட்டையாடியவர்களுக்கு உணவாகிறதோ, அதுபோலத்தான், ஹேரத்தில் சிக்கிய பெண்களின் கதியும். ஹேரத்தை விட்டு விடுதலையான அல்லது தப்பியோடி வந்த பெண்கள் தாம், அங்கிருக்கும் நிலையை உலகிற்கு சொல்லவேண்டும். தாராசிக்கோ காலத்தினால் பிற்பட்டு வந்தாலும், மதவொப்பீடு, பெண்ணின்பம் என்றெல்லாம் இருப்பதானால் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. ஆனால், இவனே, தனது சகோதரனால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறான்.

Prince Dara Shikoh with his wife Nadira Banu

Prince Dara Shikoh with his wife Nadira Banu

தாராசிக்கோவின் மனைவிகள் குடும்பம் முதலியன: தாரா சிக்கோ நதிரா பானு பேகம் என்ற அழகியப் பெண்ணை 1633ல் கல்யாணம் செய்து கொண்டான். 1659ல் இவள் காலமானாள். 26 ஆண்டு தாம்பத்திய நடத்தியதில் நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் பிறந்தனர். அதாவது அத்தகைய காலகட்டத்திலும், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இருப்பினும் இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்று தெரிகிறது. ஔரங்கசீப் இவனைக் கொன்ற பிறகு, தாரா சிக்கோவின் மனைவிகள் மற்றும் மகள்கள் முதலியோருக்கு, ஔரங்கசிப்பின் ஹேரத்தில் இடம் கொடுக்கப்பட்டது[5]. இதிலிருந்து, காமம், உடலின்பம் என்றெல்லாம் வரும்போது, முகலாயர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள். மேலும், வெட்டையைக் கூட காமரசத்துடன் விளக்கும் திறமை தாரா சிக்கோவிற்கு அனுபவம் இல்லாமல் வந்திருக்க முடியாது. மேலும், இதெல்லாம், அவர்களிடம் சகஜமாக இருந்தது. எனவே மிருகங்களை வேட்டையாடினால், அஹிம்சை பேசக்கூடாது என்பதோ, வேதாந்தம்-குரான் ஒப்பீடு செய்வதால், காமத்தில் ஈடுபடக் கூடாது என்பதோ, அவர்களிடம் எந்தவித கட்டுப்பாடோ, தடையோ, எதிர்ப்போ இல்லை. அவ்வாறு நினைப்பதே முரண்பட்டதாகும்.

Dara-Shikoh-with-girls

Dara-Shikoh-with-girls

தீன் இலாஹியைத் தழுவ வற்புறுத்தல், அதிகாரப்பிரயோகம் முதலியவை மேற்கொண்டது: கான்–இ-ஆஜம் எனப்படுகின்ற மிர்ஜா ஆஜிஜ் கோகா என்பவர் அக்பரின் மதத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அக்பருடன் வளர்க்கப்பட்டு வந்து, பெரிய படைத்தளபதியானவர், அக்பருக்கு மிக நெருக்கமானவர் அதாவது அக்பரின் “சகோதரன்” (Half-brother) என்று குறிப்பிடப்படுகிறான். 1594ல் அக்பர் தன்னைக் கூப்பிட்டபோது, வெறுப்போடு மறுத்து, மெக்காவுக்குச் சென்று விட்டார். ஆனால், அக்பரது ஆட்கள் அங்கும் துரத்திக் கொடுமைப் படுத்தினர். இதனால், வேறுவழியில்லாமல், தில்லிக்குத் திரும்பி வந்து, அக்பருடன் சமாதானம் செய்து கொண்டு, தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார். இதனால், 1580ல் படைத்தலைவரானார், 1587ல் தனது மகளை இளவரசன் மூரதிற்கு திருமணம் செய்து கொடுத்ததால் அக்பருக்கே சம்பந்தியானார்[6]. நண்பன் மற்றும் முசல்மானுக்கே இந்த கதி என்றால், இந்துக்களின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர், அதற்காக வேண்டிய செயல்கள் யாவும் அthiகாரத்துடன், வன்முறையுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிகிறது.

dara-shikoh-and-sarmad

dara-shikoh-and-sarmad

ஜோதிடத்தில் நம்பிக்கை: அக்பர் நவம்பர் 23. 1542ல் பிறந்தபோது, அவருக்கு பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது.

  1. பத்ர்-உதீன் = பௌர்ணமி அன்று பிறந்த,
  2. மொஹம்மது = மொஹம்மது நபி,
  3. அக்பர் = மிகப்பெரிய, சிறந்த மற்றும் அவரது தாத்தாவின் பெயர், செயிக் அலி அக்பர் ஜாமி[7].

ஆனால், சுன்னத் செய்து பெயர் வைக்கும் போது, உறவினர்கள் மற்றும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி அவரது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றப்பட்டது. பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்பது ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் என்றும் பிறந்த தேதி அக்டோபர் 15, 1542 என்று மாற்றப்பட்டது[8]. அக்பருக்கு ஜோதிடத்தில், குறிப்பாக ஆரூடங்களில் அதிக நம்பிக்கை இருந்ததது என்று தெரிகிறது. தமது வம்சாவளியில் மகனால் தந்தைக்கு ஏதாவது தொந்தரவு, பிரச்சினை அல்லது ஆபத்து வரும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.  முகமதியர், இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அரேபியாவில் மற்றும் இஸ்லாம் உலகத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்து வந்துள்ளது, வருகிறது. அரேபிய-பாரசீக மொழிகளில் பற்பல ஆரூட, ஜோதிட, எதிர்கால பலன்கள் கூறும் புத்தகங்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்மும் இருந்தன. முன்பே குறிப்பிட்டப்படி, மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்துக்கள் 18ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து, படிப்படியாக மதம் மாற்றப்பட்டாலும், முந்தைய பழக்க-வழக்கக்களை அவர்கள் தொடர்ந்து வேறுவிதமாக பின்பற்றி வந்தார்கள். புத்தகங்களும் அவ்வாறே மாற்றி எழுதப்பட்டன.

வேதபிரகாஷ்

© 22-06-2015

[1] Erhard Bobel-Gross, Sirr-i akbar, Die Persische Upanishad Ubersetzung des Mogulprinzen Darli Shikuhs (Marburg, 1962); a Hindi translation from the Persian is available under the title Sirre akabara, ed. Salama Mahaphuza (New Delhi, 1988).

[2] Its visual expression in Dara-Shikoh’s hunt is the more dramatic version of a theme that had become important in Mughal miniature painting during Shah-Jahan’s reign, namely princes sitting in “rapt contemplation of their women or the words of sages.” Encyclopaedia of Islam, id ed., s.v. “Mughals,” sec. 9, “Painting and the Applied Arts.”

[3] Similar thoughts were expressed by Terence Mclnerney and quoted by Gamerman in “Curator Decodes a Mughal Hunt Painting”.

[4] Ebba Koch,  Dara-Shikoh Shooting Nilgais: Hunt and Landscape in Mughal Painting,  Occasional Papers, Freer Gallery of art, Washington DC, 1998, vol.I, pp.27-28.

[5]  Ball and Crooke, Tavernier’’s Travels in India, Asian Educational Services, New Delhi, 2004 (1925), Chapt.IV, Dara Shikoh’’s death, p.283.

[6] Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.170, p.272.

[7] Jelaluddin Muhammad Akbar. The name given to him on his birth was Badr-uddin Muhammad Akbar. The first word means ‘ Full moon of Religion ‘ (because he was born on the night of the full moon), the second, word is sacred being the name of the Prophet, and the third word, signifying ‘ very’ great,’ had a reference to the name of his maternal grandfather. Shaikh Ali Akbar Jami.

[8] On the recapture of Kabul in 1545, the circumcision ceremony was performed and the name and the date of his birth were changed. “His relatives,” says Dr. V.A. Smith, “who believed firmly in all the superstitions of their time, sought to protect him against the perils of malignant sorcery by concealing the true date of his nativity and so frustrating the calculations of hostile astrologers. The circumstances of his birth in the desert ensured the advantage that very few people in Kabul knew exactly on what date he had first seen the light.” So his name was changed from Badruddin to Jelaluddin—a word similar in form and not too remote in meaning. So also the date of birth was moved back from November 23, to October 15, 1542 (See Smith’s Akbar pp. 18-19).

அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது

ஜூன் 19, 2015

அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (4).

13th century illustration depicting a public library in Baghdad, from the Maqamat Hariri. Bibliotheque Nationale de France

13th century illustration depicting a public library in Baghdad, from the Maqamat Hariri. Bibliotheque Nationale de France

சமஸ்கிருத நூல்கள் அரேபியபாரசீக பாஷைகளில் மொழிபெயர்க்கப்படல்: இந்தியப் புராணங்களின் படி, விக்கிரமாதித்யன் மத்தியத்தரைக்கடல் நாடுகள் முழுவதையும் ஆண்டுவந்தான் என்றுள்ளது. விக்கிரமாதித்தியனின் கல்வெட்டு ஒன்று தங்கத்தட்டில் பதிக்கப்பட்டு, மெக்காவில் தொங்கவிடப்பட்டிருந்தது என்று ஷாயர்-உல்-ஓகுல் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நூலகத்தில் உள்ளது. BCE 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாகோஷ்காய் கல்வெட்டு வேதக்கடவுளர்கள் அங்கிருந்த மக்களால் வழிப்பட்டதாகக் கூறுகின்றது. அதனால் முகமதியம் தொன்றுவதற்கு முன்னாக், அப்பகுதிகளில் இந்தியர்கள் இருந்தனர் என்று தெரிகிறது. முகமது நபியால் (570-632 CE) இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டு, பிறகு காலிப்புகளால் அம்மதம் பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர், இந்துக்கள் அங்கிருந்தனர். அதற்குப் பிறகும் தொடர்புகள் இருந்தன. கிரேக்கர் முதல் மற்றவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படித்து வருவது வழக்கம்[1]. ஆனால், முகமதிய மதம் வளர ஆரம்பித்தவுடன், நிலைமை மாறியது. பல பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டன; நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் அழிக்கப்பட்டன[2]; பண்டிதர்கள், வல்லுனர்கள் தூக்கிச் செல்லப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்[3]. இதனால், கல்வியறிவு, படிப்புகள் முதலியன குறிப்பிட்ட மடாலயங்களுக்குள் சுருங்கின. இதனால், இந்தியாவிலிருந்து பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் சமஸ்கிருத புத்தகங்கள், அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சுன்னிமத உமயாத் காலிப் ஆட்சியை (661-750 CE), ஷியாமத அப்பாஸித் புரட்சி தூக்கியெறிந்து, அப்பாஸித் ஆட்சியை நிறுவியது (750-1258 CE).

Middle East-Age of the Caliphs

Middle East-Age of the Caliphs

அக்காலத்தில் தான் சமஸ்கிருத நூல்கள் பல அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அல்-மன்சூர் (700-775 CE) காலத்தில் அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. கணிதம், வானியல், மருத்துவம், தத்துவம் போன்ற புத்தகங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டன[4].

Lunar_eclipse_al-Biruni

Lunar_eclipse_al-Biruni

ஹருன் அல்-ரஷீத் (786-809 CE) காலத்தில் சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகள் அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்து மருத்துவர்களே அங்கிருந்தனர்[5]. இதனால், மனிதனின் இறப்பு-இறப்பு சுழற்சி, ஆத்மா, ஆத்மாவின் அழியாத்தன்மை, மறுபிறப்பு, அவதாரம், போன்றவை அரேபியர் மற்றும் பாரசீக கவிஞர்கள், எழுத்தாளர் மற்றும் இறையியல் வல்லுனர்களின் மனங்களை நெருடச் செய்தன. சூபித்துவத்தில் அவை பெருமளவில் வெளிப்பட்டன.

Celestial_Globe_1650 mafd in India

Celestial_Globe_1650 mafd in India

ஆகவே, “மஹதி” தத்துவம் அவர்களது இறையியலில் முக்கியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பொதுவாக எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் ஏற்புடையதாக இருந்ததால், தன்னை மஹதி என்று அறிவித்துக் கொள்ள அக்பர் அறிவித்துக் கொள்ள விரும்பியது அல்லது அவ்வாறு நடந்து கொண்டதும், இயல்பாகவே உள்ளது.

the-tribute-the-caliph-harun-al-rashid-to-charlemagne-1663

the-tribute-the-caliph-harun-al-rashid-to-charlemagne-1663

அக்பர் மீது கூறப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள்: மேலும் அக்பர் மீது பல குற்றச்சாட்டுகள் அவர்களால் கூறப்பட்டன. மசூதிகள் மூடப்பட்டன மற்றும் இடிக்கப்பட்டன; ஆசார இஸ்லாம் மறக்கப்பட்டது. அக்பரைப் பார்த்தால், தலையில் இருக்கும் குல்லாவை, தொப்பியை, முண்டாசை எடுத்து, மறுபடியும் தலையில் வைத்துக் கொண்டு மரியாதை செய்யவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.  தாடியை தான் மழித்துக் கொண்டதுடன் மற்றவர்களையும் மழிக்கச் சொன்னார். வேட்டையாடுவதை நிறுத்தி விட்டார், அடைத்து வைக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் விடுவிக்கப்பட்டன. உடம்பு சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால், மருத்துவர் அறிவுறையின் படி மது அருந்தலாம் என்று செயிக் அப்துல் அலி கூறியதால், ஒரு மதுக்கடையினை தமது அரண்மனைக்கு அருகில் ஆரம்பித்து வைத்தார். அதற்கு பெண்கள் தாம் பொறுப்பாக வைத்து, அவற்றிற்கு விலையும் வைத்திருந்தார்[6]. மதுமான கடையை ஆரம்பித்த போது, மதுவில் பன்றியில் ரத்தம் கலக்கப்பட்டது என்றெல்லாம் கூறினார்கள். எப்படியோ அக்பர் இறந்தவுடன், இந்த பிரச்சினைகளும் மறைந்து விட்டன[7].  எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 1579ல் முபாரக் என்பரின் படி, அக்பர் வெளிப்படையாக இஸ்லாத்தை ஆதரித்து வந்தாலும், மனத்தால், இதயத்தால் இஸ்லாம், நபி, குரான், ஹதீஸ் எல்லாவற்றையும் விட்டுவிட்டார் எனப்படுகிறது[8].

Abbasid exchange of knowledge

Abbasid exchange of knowledge

சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்குவது (சிதாஹ்): தீன் இலாஹி அறிமுகப்படுத்தியப் பிறகு, அக்பர் அரசவைக்கு வந்து வீற்றிருக்கும் போது கடைபிடிக்கும் சடங்குளில் “சிதாஹ்” அல்லது தரையில் விழுந்து வணங்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆசார முசல்மான்கள் இதனை எதிர்த்தாலும், அக்பர் தனியாக யாராவது சந்திக்கும் போது, அத்தகைய மரியாதையை எதிர்பார்த்தார். இப்பழக்கம் அவர்காலம் முழுவதும் தொடர்ந்து, பிறகு ஷாஜஹான் நிறுத்தினார்[9]. இந்துமதத்தில் கடவுளை வணங்குபர்கள் தாம் இவ்வாறு தரையில் விழுந்து வணங்குவார்கள், அது சாஷ்டாங்கமாக வணங்குவது, அதாவது உடலின் எட்டு அங்கங்கள் தரையில் படுமாறு வணங்குவது என்பதாகும். அதில் நெற்றியும் தரையில் படும். ஆனால், நெற்றி தரையில் படுவது, தொழுகையின் போதுதான். அதன்படி, ஒரு முஸ்லிம் எத்தனை தடவை அவ்வாறு நெற்றி தரையில் படும்படி தொழுகை செய்கிறானோ அந்த அளவுக்கு அவனது நெற்றியில் கறை ஏற்படும். ஆகவே, அத்தகைய தொழுகை முறையை, அக்பர் மாற்றினால் என்று ஆசாரமான முஸ்லிம்கள் இம்முறையினை எதிர்த்தனர்.

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] பிதாகோரஸ் முதல் பல கிரேக்க தத்துவ ஞானிகள் இந்தியாவுக்கு வந்து படித்துச் சென்றனர், அதாவது, உயர்ந்த ஞானத்தை கற்றுக் கொண்டு சென்றனர்.

[2] அலெக்சான்டிரியா நூலகம் எரியூட்டப்பட்டு, விலையுயர்ந்த புத்தகங்கள் அழிக்கப்பட்டன என்ற உதாரணத்தை மேனாட்டவர்கள் கொடுக்கிறார்கள். ஆனால், “ஜஹல்லியா” காலத்தில் உள்ளவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று, அதே போல பல நூலகங்களை முகமதியர் அழித்துள்ளனர்.

[3] அலெக்சாந்தரே அத்தகைய வேலையை செய்துள்ளான். சிந்து மாகாணத்திலிருந்து, தோற்றுத் திரும்பும் போது, கிரேக்கப்படைகள், பல நிர்வாண சந்நியாசிகளைப் பிடித்துக் கொண்டு சென்றன.

[4] Finbarr Barry Flood, Objects of Translation: Material Culture and Medieval “Hindu-Muslim”, Encounter Princeton University Press, 2009.

[5]  B.N. Puri, M.N. Das, A Comprehensive History of India: Comprehensive history of medieval India, Sterling Publishers Private Limited, New Delhi, 2003, Pp.6-7.

[6] Shaikh Abul Fadl made the king understand that wine might be drunk by the advice of the physician for the hailing of the body. Accordingly, to make the wine available for all, Akbar set up a wine-shop near the palace, under the charge of porters wife, who belonged by birth to the class of wine sellers and appointed a fixed tariff. Badauni, op cit., vol. II, p.301

[7] Rumours were rife that Mosques were being closed and destroyed, that those who entered his Harem were required to say “There is no God but Allah, and Akbar is his messenger” a bastardised version of the traditional Muslim Shahada, or declaration of faith. When Akbar opened a wine shop, it was believed he also ordered pigs blood to be mixed with the mixture. Many members of the ulema began to protest his actions, and Ahmad Sarhindi (who had been nick-named “Mujaddid” or “Renovator” of islam) wrote tracts rejecting the Shirk that he believed Akbar was guilty of. He was to be arrested by Jahangir upon his successon. Ultimately, despite Akbar’s attempts at reconciling the two major faiths, by the end of the 16th century community relations would be worse than when Akbar ascended to power.

[8] In September 1579 the emperor acted on Mubarak’s hint, and assumed the primacy of the MusUm faithful by means of the ‘ infallibility decree ‘. At that time he kept professedly within the limits of Islam, and gave at least lipservice to the authority of the Koran and tradition. He still went on pilgrimage, and was in many respects a conforming Musalman. But in his heart he had rejected Islam, Prophet, Koran, tradition and all.

Vincent A. Smith, Akbar, the great Mogul 1542-1605, Humphrey Milford, Oxford at the Clarendon Press, 1917, p.214.

[9] Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.104, pp.256-257.