Posts Tagged ‘வேதம்’

பவிஷ்யபுராணம் – முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் உருவானதும், தொடரப்பட்ட இடைச்செருகல்களும்!

ஜூன் 23, 2015

பவிஷ்யபுராணம் –  முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் உருவானதும், தொடரப்பட்ட இடைச்செருகல்களும்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (9)].

Puranas 18 illustrative purpose

Puranas 18 illustrative purpose

பவிஷ்யபுராணம் [भविष्य पुराण]: பவிஷ்ய புராணம் இடைக்காலத்தில் தொகுத்து எழுதப் பட்ட புராணம் ஆகும். பவிஷ்யம் என்றால் எதிர்காலம், அதாவது எதிர்காலத்தைப் பற்றியது என்று பொருள். உண்மையில் ஆரூடங்கள், தீர்க்கதரிசனங்கள், சடங்குகள், கிரியைகள் பற்றி விளக்கும் புராணம் ஆகும். இதுபோன்ற பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்திர புராணம், பவிஷ்யதி புராணம் என்றும் இருந்தன.  அம்மூன்றையும் சுருக்கி இதனை உருவாக்கினர் என்று சொல்லப்படுகிறது[1]. பெருமளவில் ஆரூடங்கள், தீர்க்கதரிசனங்கள் கொண்டு உருவாக்கிய புராணம் இது மட்டும்தான். கல்கி புராணத்தில், அந்த அவதாரமே இனிமேல் ஏற்படும் என்ற ரீதியில் இருந்ததால், கலியுகத்தில் நிலைமை இப்படி இருக்கும் போது, விஷ்ணு அவதாரம் எடுப்பார் என்ற குறிப்பு இருந்தது.  ஆனால், இதிலுள்ள சுலோகங்களில் முகலாய, ஐரோப்பிய அரசர்கள் வருவார்கள், ஆள்வார்கள் என்றெல்லாம் எழுதி வைக்கப்பட்டது.

Bhavisya Puranam about Jesus, Mohammed and Victoria

Bhavisya Puranam about Jesus, Mohammed and Victoria

புராணத்திற்குரிய இலக்கணம், லட்சணங்கள் இல்லாமல் பவிஷ்யபுராணம் உருவாக்கப்பட்டது: பொதுவாக புராணத்திற்குரிய பஞ்ச-லட்சணங்கள் – ஐந்து தன்மைகள் இருக்க வேண்டும் என்ற முறை-மரபு இருந்தது, அதன்படியே புராணங்கள் எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன:

  1. படைப்பு, அண்ட-பேரண்டங்களின் தோற்றம் – சர்க்கம்.
  2. படைப்பு-அழிப்பு சுழற்சி – பிரதிசர்க்கம்
  3. மன்வந்திரங்கள் – பல மனுக்கள் இருந்த காலங்கள்.
  4. சூரிய மற்றும் சந்திர வம்சங்களிகள்.
  5. சடங்குகள்.

ஆனால், பவிஷ்யதி புராணத்தில் அத்தகைய முறை இல்லாமல் இருக்கிறது. இதை சாரலஸ் எலியட் புரொடெஸ்டென்ட் மிஷனரிகள் இந்தியாவில் பைபிள் போதிப்பது ஆரம்பித்தப் பிறகு தான், படைப்புப் பற்றிய விவரங்களை பாவிஸ்ய புராணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்றார்[2]. அதாவது, ஆங்கிலேயர் காலத்தில் அத்தகைய விவரங்கள் சேர்க்கப்பட்டன என்றாகிறது. அதனால், வேண்டுமென்றே பிற்காலத்தில் ஏதோவொரு காரணத்திற்காக இப்புராணம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

வசிஸ்டரால் தொகுக்கப்பட்டது என்பது 18 புராணங்கள் தாம்.

1.       அக்னி

2.       பாகவத

3.       பிரம்மா

4.       பிரம்மாண்ட

5.       பிரம்மாவைவர்த

6.       கருட

7.       ஹரிவம்ஸ

8.      கூர்ம

9.       லிங்க

10.   மார்க்கண்டேய

11.    மத்ஸய

12.    நாரத

13.    பத்ம

14.    சிவ

15.    ஸ்காந்த

16.    வாமன

17.    வாயு

18.   விஷ்ணு

ஆனால், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆட்சிகாலத்தில், தங்களது கதைகளையும் சேர்த்துக் கொண்டு, மேலும் புதியதாக 18 புராணங்களை உருவாக்கினர்.

1.       சனத் குமார

2.       நரசிம்ஹ

3.       பிரஹந்நாரதீய

4.       சிவ-ரஹஸ்ய

5.       துர்வாஸ

6.       கபில

7.       வாமன

8.      பார்க்கவ

9.       வருண

10.   காளிக

11.    சம்ப

12.    நந்தி

13.    சூரிய

14.    பராசர

15.    வசிஸ்ட

16.    தேவி-பாகவத

17.    கணேச

18.   ஹம்ஸ

அவற்றிற்கு உபபுராணங்கள் என்று பெயர் வைத்தனர். இவை பெயர்களிலும், எண்ணிக்கையிலும் வேறுபடுகின்றன. இவற்றிற்கு அங்கீகாரம் இல்லாதனால், மக்களும் அவற்றை பொருட்படுத்துவது இல்லை. இந்த இரண்டு பிரிவுகளிலும் பவிஷ்யபுராணம் இல்லாதது நோக்கத்தக்கது. இவை முகமதியர் காலத்திலும் மறுபடியும் அக்பர் போன்றோரது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டன.

சமஸ்கிருத நூல்களில் வேதங்களில் மொஹம்மது.

சமஸ்கிருத நூல்களில் வேதங்களில் மொஹம்மது.

முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட இடைசெருகல்கள்: மிலேச்சர்கள் இந்தியாவை ஆள்வார்கள், பாபர், அக்பர் போன்றோர் ஆள்வார்கள் என்றெல்லாம் சேர்த்து எழுதப்பட்டது. அதனால், அரேபிய-பாரசீக வார்த்தைகள் (அஹ்லாத், திமிர்லிங்) எல்லாம் இதில் காணப்படுகின்றன. அதாவது, அக்கால நிகழ்ச்சிகளை சேர்த்து-சேர்த்து எழுதபட்டு வந்த நூலாகும். இப்பொழுதுள்ள பவிஷ்ய புராணம் ஆங்கிலேயர் காலத்தில் அச்சிடப்பட்டது. அதில் அரசி விக்டோரியாவின் ஆட்சியும் சேர்க்கப்பட்டது, அதாவது, இந்தியாவை விக்டோரியா ராணி ஆள்வாள் [1876 – 1901] என்று தீர்க்கதரிசனம், ஆரூடம் சொல்லப்பட்டது போல எழுதப்பட்டது. 50-100 ஆண்டுகள் கழிந்த பிறகு, முந்தைய நிகழ்ச்சிகளை, நடக்கும் என்பது போல இப்புராணம் எழுதப் பட்டது. “விக்டோரியா ராணி ஆள்வாள்” என்றெல்லாம் உள்ளதால், அது ஆங்கிலேயர்களாலும் திருத்தி சேர்க்கப்பட்டது என்று தெரிகிறது. இத்தகைய புராணத்தில் தான் இஸ்லாம் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது பிரச்சாரம் செய்கிறார்கள்[3].

சமஸ்கிருத நூல்களில் மொஹம்மது

சமஸ்கிருத நூல்களில் மொஹம்மது

உண்மையில், அக்பர் ஹிந்துக்களை மதம் மாற்ற, அப்புராணத்தில் அவ்வாறெல்லாம், அரசவையில் உள்ள பண்டிதர்களை வைத்து எழுத வைத்தார். அல்லா என்ற கடவுள் இருந்தார், மொஹம்மது நபி வந்து, பழைய ஞானத்தை மீட்டெடுத்து மக்களுக்கு கொடுப்பார் என்றெல்லாம் எழுத வைத்தால், ஹிந்துக்கள் அதனை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்கள் என்று அவ்விதத்தில் கள்ளத்தனமாக, போலி புராணம் தயாரிக்கப்பட்டது[4].

பவிஷ்ய புராணத்தில் ஆங்கிலேய அரசி விக்டோரியா

பவிஷ்ய புராணத்தில் ஆங்கிலேய அரசி விக்டோரியா

முகமதியரைத் தொடர்ந்த ஆங்கிலேயர்களின் இடைசெருகல்கள்; பத்மபுராணம் இப்புராணத்தை ரஜஸ் புராணம் என்கிறது[5], அதாவது, உணர்ச்சி வசப்படல், அதிகமான ஆர்வம் கொள்ளுதல், தேவைக்கு அதிகமாக ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடல் போன்ற குணாதிசயத்தை, நிலையைக் காட்டுவதகும். அப்படியென்றால், பத்மபுராணத்தில் வரும் அந்த சுலோகம் இடைச்செருகல் என்றாகிறது இல்லை பத்மபுராணமே 19-20 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றாகிறது. எப்படியாகிலும் அக்காலம் வரை இடைச்செருகல்கள் நடந்து கொண்டிருந்தன, அவற்றிற்கு காரணம் ஆங்கிலேயர் என்றாகிறது. இப்பொழுதுள்ள பவிஷ்ய புராணம் ஆங்கிலேயர் காலத்தில் அச்சிடப்பட்டது. அதில் அரசி விக்டோரியாவின் ஆட்சியும் சேர்க்கப்பட்டது, அதாவது, இந்தியாவை விக்டோரியா ராணி ஆள்வாள் [1876 – 1901] என்று எழுதப்பட்டது[6]. அது மட்டுமல்லாது, பைபிளில் வரும் ஜெனிசஸ், எக்ஸ்டோசஸ், வசனங்கள் இருப்பதால், 19 அல்லது 19ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அல்ப் ஹில்டிபைடில் குறிப்பிடுகிறார்[7]. இடைக்காலத்தில் முகலாயர் தங்களது மொஹம்மதுவை சேர்த்துக் கொண்டார்கள் என்றால், ஆங்கிலேயர்கள், ஏசு, கிறிஸ்து, மோசஸ் முதலியவற்றை சேர்த்தார்கள் என்றாகிறது. அதனால் தான் ஏசு[8], மொஹம்மது முதலியோரின் குறிப்புகளும் அத்தகையவே[9], என்று எடுத்துக் காட்டுகின்றனர்.  ஏ.கே.ராமானுஜனும், “ஏசு, கிறிஸ்து, மோசஸ், ராணி விக்டோரியா என்று எல்லோரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனை புதுப்பிக்கும் செய்த முயற்சியாகும்”, என்று கிண்டலடித்தார். “இதனால் புராணங்கள் திறந்து கிடக்கும் அமைப்புகளாக இருக்கின்றன”, என்று தனகேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[10]. கல்கத்தா, பாராளுமன்றம் முதலிய வார்த்தைகளையும் சேர்துள்ளதும் ஹஜ்ரா போன்ற வல்லுனர்களால் எடுத்துக் காட்டப் பட்டது[11].

Mohammed in Sanskrit - a great fraud

Mohammed in Sanskrit – a great fraud

நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக, மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து சுலோகங்களை 2.69-87, ….அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மனுதர்ம சாஸ்திரத்தில் இல்லாததையும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அதாவது, சாஸ்திரத்திலேயே இடைச்செருகல்கள் இருந்ததால், எந்த பிரதியில் எந்த உலோகம் இருந்தது, இல்லை என்பது தெரியாமல் இருந்தது. ஸ்டெர்ன்பாக் (Sternbach) போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12]. இடைச்செருகல் செய்யப்பட்ட நூலிலிருந்து, இன்னொரு போலியாக உருவாக்கப்பட்ட நூலில் இத்தகைய இடைச்செருகல்கள், முரண்பாடுகள் இருப்பது ஆராய்ச்சியாளர்களைத் திகைப்ப்டையச் செய்துள்ளது.

வேதபிரகாஷ்

© 23-06-2015

[1] B.K. Chaturvedi, Bhavishya Purana,  Diamond Pocket Books (P) Limited, New Delhi, 2006, p.8.

[2]  Sir Charles Elliot, Hinduism and Buddhism, an Historical Sketch, Vol.I,

[3] ஜகீர் நாயக் போன்ற அரைவேக்காட்டுகள், மோசடி பிரச்சாரிகள் அதிலுள்ள சில சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டது போல பேசிவருவதை, இன்றும் காணலாம்.

[4] இதெல்லாம் ராபர்ட் டி நொபிலி போன்ற கிருத்துவப் பாதிரிகள் போலித்தனமாக வேதங்களை உருவாக்கியது போலத்தான். இந்துக்களை ஏமாற்ற மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகத் தெரிகிறது.

[5] H. H. Wilson,  The Vishnu Purana: A system of Hindu mythology and tradition,  Oriental Translation Fund, p. 12., 1840

[6] V.D.N.Rao, Prophecies on Some Highlights of Bharat thereafter, Shri Kanchi Kamakoti Peetham, http://www.kamakoti.org/kamakoti/bhavishya/bookview.php?chapnum=30

[7] Alf Hiltebeitel, Rethinking India’s Oral and Classical Epics, 2009 Page 277 “Since references to Queen Victoria’s Calcutta provide a mid- to even late-nineteenth-century terminus ad quem for other … but of the Genesis-Exodus sequence and the Krsnarrrtacarita—with its Jesus and Muhammad passages— as well.”

[8] Bonazzoli, Giorgio: Christ in the Bhavisya Purana [Engl.]. (a methodological approach to Bhav. P. III. 3.2.21-32). Puranaissue 21 January 1979, pp. 23-39.

[9] Swami Parmeshwaranand, Encyclopaedic Dictionary of Purāas 2001 – Page 280 “CHRIST IN THE BHAVISYA PURANA… was an expression of the living tradition. All these themes enter into a broader context relating some of the events in the history of the Mleccha-s. In this connection are also mentioned Muhammad “

[10] A. K. Ramanujan mentions finding references to Christ (as Isha Putra), Moses, and Queen Victoria in the “appropriately up-to-date Bhaviya Purāa” and cites this as an example of the fact that: “In spite of repeated efforts to impose schemes and canons on them from time to time, Purāṇas are open systems.” R amanujan, A. K., “Folk Mythologies and Purāas” in: Doniger (1993) p. 105.

[11] Hazra has the following to say regarding the Pratisargaparvan: The Pratisargaparvan, though nominally mentioned in the Bhaviya (I.1.2–3), contains stories aboutAdamNoah, Yākuta, TaimurlongNadir Shah,Akbar (the emperor of Delhi), Jayacdandra, … and many others. It even knows the British rule in India and names Calcutta and the Parliament.

[12]  Patrick Olivelle, Suman Olivelle, Manu’s Code of Law, Oxford University Press, New York, 2005, 54-55

தாரா சிக்கோ – முரண்பாடுகள் கொண்ட இளவரசன், உபநிடதங்களை மொழிபெயர்த்தவன், ஔரங்கசீப்பினால் கொலையுண்டவன்!

ஜூன் 22, 2015

தாரா சிக்கோ முரண்பாடுகள் கொண்ட இளவரசன், உபநிடதங்களை மொழிபெயர்த்தவன், ஔரங்கசீப்பினால் கொலையுண்டவன்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (7)].

Dara Sikhoh - the dual character connossier of aert and hunting

Dara Sikhoh – the dual character connossier of aert and hunting

50 உபநிடதங்களை மொழிபெயர்த்த விளைவு அல்லா உபநிஷடம் உருவானதா?: தாரா சிக்கோ (1615-1659) ஜஹாங்கீருடைய புதல்வன், அக்பரின் பேரன். பொதுவாக இவனைப்பற்றி அதிகமாக புகழ்ந்துதான் சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 1657ல் சமஸ்கிருதத்திலிருந்து 50 உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்துள்ளான் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவன் மற்றவர்களால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த வேலையை கண்காணித்தான் என்றுள்ளது[1]. எனவே சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் தெரிந்த பலர் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது அக்பரது காலத்திற்குப் பிறகுக் கூட இத்தகைய மொழிபெயர்ப்புகள் தொடர்ந்துள்ளன என்று தெரிகிறது. “சிர்-இ-அக்பர்”, என்ற அத்தொகுப்பு “மிகப்பெரிய ரகசியம்” எனப்படுகிறது. அதாவது “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டான். பாரதத்தில் உபநிடதங்கள் என்றுமே ரகசியமாக இருந்ததில்லை. பல இடங்களில் பண்டிதர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, முகலாயர் காலத்தில் அது “மிகப்பெரிய ரகசியம்” என்று ழைக்கப்பட்டதற்கறென்ன காரணம் என்று பார்க்க வேண்டும். உபநிடதங்கள் அப்படியே மொழிபெயர்க்கப் பட்டிருந்தால், ஒரு பிரசினையும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது எனும் போது, மொழிபெயர்ப்பில் ஏதோ செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை மேலே குறிப்பிட்ட அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் அல்லது அது போன்ற உபநிடதங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன் போலும்.

Sirree akbar - 50 upanishad translation

Sirree akbar – 50 upanishad translation

சூபித்துவம்வேதாந்தங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்த தாரா சிக்கோ: தாராசிக்கோவின் “மஜ்மா-உல்-பஹ்ரைன்” (இரண்டு சாகரங்களின் சங்கமம்) என்ற புத்தகம், சூபித்துவம் மற்றும் வேதாந்தத்தை ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ள நூலாகும். ஆனால், இதனால் என்ன தாக்கம் என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை இந்துமதக் கருத்துகளை முகமதிய கருத்துகள் போன்று மாற்றியமைத்து, பாரசீகத்தில் எழுதி அவை சூபி நூல்கள் என்று அறிவித்தார்கள் போலும். சீக்கியர்களின் ஏழாவது குருவான குரு ஹர் ராயுடன் நட்பு கொண்டிருந்தான். ஒருவேளை, இவனும் அக்பர் போலவே, “தீன்-இலாஹி” மதசோதனைகளில் ஈடுபட்டானா என்று தெரியவில்லை. நூர்ஜஹானுக்குப் பிறகு இவன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் நிலையில் தான், ஔரங்கசீப் இவனுக்கு போட்டியாக கிளம்பி வேலை செய்ய ஆரம்பித்தான். இந்து ராஜாக்களின் ஆதரவு பெற தாரா சிக்கோ முயன்றிருக்கலாம். ஆனால், ஔரங்கசீப் தன்னுடைய வேலையில் குறியாக இருந்தான். இருப்பினும், தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய வேலைகளில் ஈடுபட்டான் போலும்.

Dara Shukoh interacting with Sufi saints

Dara Shukoh interacting with Sufi saints

உபநிடதங்களில் நாட்டம், வேட்டையில் குறி, சிற்றின்ப விளக்கம்: தாராசிகோ இத்தகைய மத-ஆராய்ச்சிகளோடு ஓவியத்திலும், வேட்டையிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். வேட்டைப் பற்றிய ஓவியங்களின் பின்னணியில் பெண்ணின்பம் போன்ற சரச உணர்வுகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[2]. வேட்டையில், தமது இலக்கின் மீது குறியாக கண்களை வைத்துக் கொண்டு பார்த்து, சுட்டு வீழ்த்துவது வழக்கம். அதேபோல, தனக்குப் பிடித்தமான பெண்ணைப் பார்த்து, அவளை காமவேட்டையில் வீழ்த்துவது ஆணின் திறமை[3]. தாரா சிக்கோவிற்கு இதெல்லாம் பொறுத்தமான விசயங்கள் அல்ல என்று நினைக்க வேண்டாம். ஆன்மீகம், சூபித்துவம் என்றெல்லாம் இருக்கும் போது, இதில் எப்படி மனம் ஈடுபடுகிறது, இது முரண்பாடல்லவோ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். இந்துக்களின் அஹிம்சையை மதிப்பவன் என்றால், ஏன் வேட்டையில் ஈடுபட்டு மிருகங்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், இளவரசனாக இருந்த அவன் தனது அரசக்கடமைகள், பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்[4] என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Dara Shikoh marriage

Dara Shikoh marriage

பதவிக்காக குறியாக இருப்பது தவறில்லை: உண்மையில் “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டதையே ஆசார-அடிப்படவாத முகமதியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், மிருகவேட்டையை காமவேட்டையோடு ஒப்பிடுவதை, எந்த முகலாய அரசனும் தவறு என்று சொல்லமாட்டான். “ஹராம்” என்றதையே “ஹேரம்” ஆக்கி பெண்களை அனுபவித்து வரும் பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு, இதெல்லாம் சகஜம் என்றுதான் சொல்லவேண்டும். வேட்டையில் விழுந்த மிருகங்கள் எப்படி வேட்டையாடியவர்களுக்கு உணவாகிறதோ, அதுபோலத்தான், ஹேரத்தில் சிக்கிய பெண்களின் கதியும். ஹேரத்தை விட்டு விடுதலையான அல்லது தப்பியோடி வந்த பெண்கள் தாம், அங்கிருக்கும் நிலையை உலகிற்கு சொல்லவேண்டும். தாராசிக்கோ காலத்தினால் பிற்பட்டு வந்தாலும், மதவொப்பீடு, பெண்ணின்பம் என்றெல்லாம் இருப்பதானால் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. ஆனால், இவனே, தனது சகோதரனால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறான்.

Prince Dara Shikoh with his wife Nadira Banu

Prince Dara Shikoh with his wife Nadira Banu

தாராசிக்கோவின் மனைவிகள் குடும்பம் முதலியன: தாரா சிக்கோ நதிரா பானு பேகம் என்ற அழகியப் பெண்ணை 1633ல் கல்யாணம் செய்து கொண்டான். 1659ல் இவள் காலமானாள். 26 ஆண்டு தாம்பத்திய நடத்தியதில் நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் பிறந்தனர். அதாவது அத்தகைய காலகட்டத்திலும், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இருப்பினும் இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்று தெரிகிறது. ஔரங்கசீப் இவனைக் கொன்ற பிறகு, தாரா சிக்கோவின் மனைவிகள் மற்றும் மகள்கள் முதலியோருக்கு, ஔரங்கசிப்பின் ஹேரத்தில் இடம் கொடுக்கப்பட்டது[5]. இதிலிருந்து, காமம், உடலின்பம் என்றெல்லாம் வரும்போது, முகலாயர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள். மேலும், வெட்டையைக் கூட காமரசத்துடன் விளக்கும் திறமை தாரா சிக்கோவிற்கு அனுபவம் இல்லாமல் வந்திருக்க முடியாது. மேலும், இதெல்லாம், அவர்களிடம் சகஜமாக இருந்தது. எனவே மிருகங்களை வேட்டையாடினால், அஹிம்சை பேசக்கூடாது என்பதோ, வேதாந்தம்-குரான் ஒப்பீடு செய்வதால், காமத்தில் ஈடுபடக் கூடாது என்பதோ, அவர்களிடம் எந்தவித கட்டுப்பாடோ, தடையோ, எதிர்ப்போ இல்லை. அவ்வாறு நினைப்பதே முரண்பட்டதாகும்.

Dara-Shikoh-with-girls

Dara-Shikoh-with-girls

தீன் இலாஹியைத் தழுவ வற்புறுத்தல், அதிகாரப்பிரயோகம் முதலியவை மேற்கொண்டது: கான்–இ-ஆஜம் எனப்படுகின்ற மிர்ஜா ஆஜிஜ் கோகா என்பவர் அக்பரின் மதத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அக்பருடன் வளர்க்கப்பட்டு வந்து, பெரிய படைத்தளபதியானவர், அக்பருக்கு மிக நெருக்கமானவர் அதாவது அக்பரின் “சகோதரன்” (Half-brother) என்று குறிப்பிடப்படுகிறான். 1594ல் அக்பர் தன்னைக் கூப்பிட்டபோது, வெறுப்போடு மறுத்து, மெக்காவுக்குச் சென்று விட்டார். ஆனால், அக்பரது ஆட்கள் அங்கும் துரத்திக் கொடுமைப் படுத்தினர். இதனால், வேறுவழியில்லாமல், தில்லிக்குத் திரும்பி வந்து, அக்பருடன் சமாதானம் செய்து கொண்டு, தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார். இதனால், 1580ல் படைத்தலைவரானார், 1587ல் தனது மகளை இளவரசன் மூரதிற்கு திருமணம் செய்து கொடுத்ததால் அக்பருக்கே சம்பந்தியானார்[6]. நண்பன் மற்றும் முசல்மானுக்கே இந்த கதி என்றால், இந்துக்களின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர், அதற்காக வேண்டிய செயல்கள் யாவும் அthiகாரத்துடன், வன்முறையுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிகிறது.

dara-shikoh-and-sarmad

dara-shikoh-and-sarmad

ஜோதிடத்தில் நம்பிக்கை: அக்பர் நவம்பர் 23. 1542ல் பிறந்தபோது, அவருக்கு பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது.

  1. பத்ர்-உதீன் = பௌர்ணமி அன்று பிறந்த,
  2. மொஹம்மது = மொஹம்மது நபி,
  3. அக்பர் = மிகப்பெரிய, சிறந்த மற்றும் அவரது தாத்தாவின் பெயர், செயிக் அலி அக்பர் ஜாமி[7].

ஆனால், சுன்னத் செய்து பெயர் வைக்கும் போது, உறவினர்கள் மற்றும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி அவரது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றப்பட்டது. பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்பது ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் என்றும் பிறந்த தேதி அக்டோபர் 15, 1542 என்று மாற்றப்பட்டது[8]. அக்பருக்கு ஜோதிடத்தில், குறிப்பாக ஆரூடங்களில் அதிக நம்பிக்கை இருந்ததது என்று தெரிகிறது. தமது வம்சாவளியில் மகனால் தந்தைக்கு ஏதாவது தொந்தரவு, பிரச்சினை அல்லது ஆபத்து வரும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.  முகமதியர், இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அரேபியாவில் மற்றும் இஸ்லாம் உலகத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்து வந்துள்ளது, வருகிறது. அரேபிய-பாரசீக மொழிகளில் பற்பல ஆரூட, ஜோதிட, எதிர்கால பலன்கள் கூறும் புத்தகங்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்மும் இருந்தன. முன்பே குறிப்பிட்டப்படி, மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்துக்கள் 18ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து, படிப்படியாக மதம் மாற்றப்பட்டாலும், முந்தைய பழக்க-வழக்கக்களை அவர்கள் தொடர்ந்து வேறுவிதமாக பின்பற்றி வந்தார்கள். புத்தகங்களும் அவ்வாறே மாற்றி எழுதப்பட்டன.

வேதபிரகாஷ்

© 22-06-2015

[1] Erhard Bobel-Gross, Sirr-i akbar, Die Persische Upanishad Ubersetzung des Mogulprinzen Darli Shikuhs (Marburg, 1962); a Hindi translation from the Persian is available under the title Sirre akabara, ed. Salama Mahaphuza (New Delhi, 1988).

[2] Its visual expression in Dara-Shikoh’s hunt is the more dramatic version of a theme that had become important in Mughal miniature painting during Shah-Jahan’s reign, namely princes sitting in “rapt contemplation of their women or the words of sages.” Encyclopaedia of Islam, id ed., s.v. “Mughals,” sec. 9, “Painting and the Applied Arts.”

[3] Similar thoughts were expressed by Terence Mclnerney and quoted by Gamerman in “Curator Decodes a Mughal Hunt Painting”.

[4] Ebba Koch,  Dara-Shikoh Shooting Nilgais: Hunt and Landscape in Mughal Painting,  Occasional Papers, Freer Gallery of art, Washington DC, 1998, vol.I, pp.27-28.

[5]  Ball and Crooke, Tavernier’’s Travels in India, Asian Educational Services, New Delhi, 2004 (1925), Chapt.IV, Dara Shikoh’’s death, p.283.

[6] Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.170, p.272.

[7] Jelaluddin Muhammad Akbar. The name given to him on his birth was Badr-uddin Muhammad Akbar. The first word means ‘ Full moon of Religion ‘ (because he was born on the night of the full moon), the second, word is sacred being the name of the Prophet, and the third word, signifying ‘ very’ great,’ had a reference to the name of his maternal grandfather. Shaikh Ali Akbar Jami.

[8] On the recapture of Kabul in 1545, the circumcision ceremony was performed and the name and the date of his birth were changed. “His relatives,” says Dr. V.A. Smith, “who believed firmly in all the superstitions of their time, sought to protect him against the perils of malignant sorcery by concealing the true date of his nativity and so frustrating the calculations of hostile astrologers. The circumstances of his birth in the desert ensured the advantage that very few people in Kabul knew exactly on what date he had first seen the light.” So his name was changed from Badruddin to Jelaluddin—a word similar in form and not too remote in meaning. So also the date of birth was moved back from November 23, to October 15, 1542 (See Smith’s Akbar pp. 18-19).

சமஸ்கிருத நூல்கள் பாரசீக பாஷைகளில் மொழிபெயர்க்கப்படல், அதர்வண வேதம், அல்லா உபநிஷடம் முதலியன!

ஜூன் 19, 2015

சமஸ்கிருத நூல்கள் பாரசீக பாஷைகளில் மொழிபெயர்க்கப்படல், அதர்வண வேதம், அல்லா உபநிஷடம் முதலியன!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (6)].

A Hindu ascetic with an attendant holding a sunshade left - Styles and titles in Persian of Metcalfe as Agent of the G.G.right

A Hindu ascetic with an attendant holding a sunshade left – Styles and titles in Persian of Metcalfe as Agent of the G.G.right

அக்பர் அரசவையில் இருந்த இந்து பண்டிதர்கள்: பாரதத்தில் பெரும்பான்மையினராக இந்துக்கள் வாழ்ந்து வந்துள்ளதால், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், இந்து பிரஜைகளுக்கு எதிராக ஆட்சி செய்ய முடியாது என்பது அறிந்த விசயம் தான். இருப்பினும், நடைமுறையில் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, ஆளுகின்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. அப்துல் பசலின் நூலின் படி, அக்பர் அவையில் இருந்த இந்து பண்டிதர்கள் (மருத்துவர்கள், பாடகர்கள் முதலியோர் சேர்க்கப்படவில்லை)[1]:

1.       மது சரஸ்வதி

2.       மதுசூதன்.

3.       நாராயண மிஸ்ர.

4.       நாராயண ஹரிஜி சூர்.

5.       தாமோதர் பட்.

6.       ராம் தீர்த்.

7.       நரசிங்க.

8.      பரமிந்திர.9.       ஆதித்ய.

10.   ராம் பத்ர.

11.    ஜாத்ருப் நாராயண.

12.    நாராயண.

13.    மது பட்.

14.    ஶ்ரீ பட்ட.

15.    விஷ்ணு நாத்.

16.    ராம் கிருஷ்ண.17.    பலபத்ர மிஸ்ர.

18.   வாமன் பட்ட.

19.    வித்யா நிவாஸ்.

20.   கௌரி நாத்.

21.    கிருஷ்ண பண்டிட்.

22.   பட்டாச்சார்யா.

23.   பகீரத பட்டாச்சார்யா.

24.   காசிநாத பட்டாச்சார்யா.

இவர்கள் தங்களது பிழைப்பிற்காகவோ, வலுக்கட்டாயமாகவோ, மதம் மாற்றப்பட்டோ, மாற்றப்படாலமலோ கொடுத்த வேலையை செய்வதற்காக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜைன-பௌத்த பண்டிதர்களோ அவ்வாறில்லை. ஜைன மற்றும் பௌத்த காலங்களில், மற்றும் பாரதத்தில் எங்கெல்லாம் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்களோ, தங்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப, இந்து நூல்களை திரித்து எழுதினர் அல்லது புதியதான நூல்களை உண்டாக்கினர்[2]. அதுபோலவே, முகலாயர்களும் ஈடுபட்டனர் என்று தெரிகிறது.

mughal-Persian translation of a Ramayana by Zayn al-Abidin Indian

mughal-Persian translation of a Ramayana by Zayn al-Abidin Indian

சமஸ்கிருத நூல்கள் பாரசீக பாஷைகளில் மொழிபெயர்க்கப்படல்:  அதர்வண வேதம், உபநிடதங்கள், ராமாயணம், மாஹாபாரதம், பகவத் கீதை, ஹரிவம்சம் மற்ற புராணங்கள் பாரசீக மொழியில், மொழிபெயர்க்கப்பட்டடன[3]. சர்ஹிந்தைச் சேர்ந்த ஹாஜி இப்ராஹிம் அதர்வண வேதத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்தார்[4]. இதற்கு முன்னரே அப்பாசித் காலத்தில், இந்திய பண்டிதர்கள், பாக்தாத்திற்கு வரவேற்க்கப்பட்டு, வானியல், கணிதம், மருத்துவம் போன்ற புத்தகங்கள் அரேபித்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இருப்பினும் அக்பர் வலுக்கட்டாயமாக, பண்டிதர்களை, பாரசீக மொழிபெயர்ப்பாளர்களை, அவ்வாறு கள்ளத்தனமான எழுத்துகளை, ஆவணங்களை தயாரிக்க ஆணையிட்டார். அப்படி போலித்தனமாக உருவாக்கப்பட்டவைதாம் –

  1. அல்லா உபநிஷதம்.
  2. அல்லா வேதம்.
  3. இஸ்லாமிய தசவதாரம்.
  4. பாவிஷ்யபுராணம்.
  5. பெர்சிய ராமாயணம்.
  6. ரஜ்ம்நாமா அல்லது யுத்தப் புத்தகம் அல்லது மஹாபாரதம்.
  7. காம சூத்ரா (இது கில்ஜி காலத்திலேயே மிக்க காமரசத்துடன் மாற்றி எழுதப்பட்டது).
  8. ஆனந்த ரங்கா (இது கில்ஜி காலத்திலேயே மிக்க காமரசத்துடன் மாற்றி எழுதப்பட்டது).
  9. அனந்த ரங்கா (இது கில்ஜி காலத்திலேயே மிக்க காமரசத்துடன் மாற்றி எழுதப்பட்டது).
  10. பல ஜோசிய புத்தகங்கள்.

இருக்கின்ற புராணங்களும் திருத்தப்பட்டன, மாற்றப்பட்டன, புதியதாக விசயங்கள் சேர்க்கப்பட்டன. அதாவது, காம இச்சையுடன் உள்ள சுல்தான்கள் எப்படி உல்லாசமாக இருப்பார்களோ அது போலவே புராண பாத்திரங்கள் மாற்றப்பட்டன. அக்பர் “தீன் இலாஹி” என்ற மதத்தை உருவாக்குகிறேன் என்ற திட்டத்தில் இந்துமதத்திற்கும், முகமதியமதத்திற்கும் சமரசம் செய்ய பல திருத்தங்கள், மாற்றங்கள், சேர்ப்புகள் முதலியன புராணங்களில் நடந்தன.

bhima-vs-duryodhana look like mohammedans in Razmnana

bhima-vs-duryodhana look like mohammedans in Razmnana

அதர்வண வேதத்தில் முகமதியர்களுக்கு உண்டான பிரத்யேக விருப்பம்: நகுப்கான், அப்துல் காதிர் பதையுனி மற்றும் செயிக் சுல்தான் சேர்ந்து மஹபாரதம் மற்றும் ராமாயணத்தை, பாரசீகத்தில் மொழிபெயர்த்தனர். மஹாபாரதம், “ரஜம்-னாம்” என்ற பெயரில் வழங்கியது. லீலாவதி, ஹரிவம்சம், பஞ்சதந்திரம் போன்ற நூல்களும் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதில் “தீன்-இலாஹி” பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. அக்பர் காலத்தில் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, முதலில் அதர்வண வேதத்தைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது[5]. பொதுவாக அதர்வண வேதத்தில் முதல் மூன்று வேதங்களில் மாறுபட்ட மந்திரம்-யந்திரம்-தந்திரம் போன்ற முறைகள் இருப்பதினால், அதனை சிலர் முதல் மூன்று வேதங்களுடன் சேர்த்துக் குறிப்பிடுவதில்லை. மேலும், அதர்வண வேதத்தை ஆரம்பித்திலிருந்தே அரக்கர், மிலேச்சர் முதலியோர் துஷ்பிரயோகம் செய்து வந்ததால் அது விலக்கியே வைக்கப்பட்டது. அதனால், முகமதியர் அவ்வேதத்தைக் கற்று மந்திர-தந்திரங்களில் வல்லுனர் ஆயினர் என்ற கருத்து உள்ளது. அதனை திருடுவதற்காகவே அவர்கள் பாரதத்திற்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றார்கள் என்றும் குறிப்புகள் உள்ளன. இதற்கும் அல்லா உபநிஷத்திற்கும் சம்பந்தம் இருப்பதினால் இதனைக் குறிப்பிடவேண்டியுள்ளது.

Allah upanishad Allah is Mitra, Varuna etc

Allah upanishad Allah is Mitra, Varuna etc

அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் (1650 CE): அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் என்பது அக்பரது காலத்தில், குறிப்பாக அவர் “தீன்-இலாஹி” என்ற மத்தை உருவாக்க, பல மதங்களைச் சார்ந்த குருமார்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் தோன்றிய சிறிய சமஸ்கிருத நூலாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அரேபி சாயலுடன், அல்லா, நபி போன்ற வார்த்தைகளுடன் சுலாகங்கள் போல உருவாக்கப்பட்டிதது. அல்லா உபநிஷடம் அதர்வணவேதத்தில் உள்ளது என்று அக்பரிடம் சில காஜிகள் சொல்லி அதனை ஊக்குவித்தனர். ஆனால், பிறகு தான் தெரிந்தது, அது சமஸ்கிருதத்தில் ஒரு போலி உபநிடதம் என்று தெரிந்தது. மேலும் அது அக்பரை “நபி” என்று விவரிக்கிறது[6], இது ஆசார இஸ்லாத்திற்கு எதிரானது. அக்பர் தனது மதமான “தீன்-இலாஹி” பற்றிய விவாதங்களில், தன்னை அம்மதத்தின் காரணக்கர்த்தாவாக காட்ட வேண்டும் என்றாதால், சில முஸ்லிம் பண்டிதர்கள் அவ்வாறான போலி உபநிடதத்தை உருவாக்கினர்[7]. அதனை இந்துக்கள் படிக்கும் போது, அல்லாவே மித்ர, வருண என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி, மதம் மாறுவர் என்று அவ்வாறான நூலை எழுதினர். அக்பரின் கொடுமையான சித்திரவதை தண்டனைக்குப் பயந்து சில சமஸ்கிருத பண்டிதர்களே அத்தைய நூலை அக்பருக்கு எழுதிக் கொடுத்திருக்கலாம் என்றும் எடித்துக் காட்டப்பட்டுள்ளது[8]. வேடிக்கையென்னவென்றால், சமஸ்கிருதத்தில் “அல்லா” என்றால், அம்மா என்று பொருள் (பாணினி.7.3.107). எது எப்படியாகிலும், மோசடிக்காக தயாரிக்கப்பட்ட, ஒரு கள்ளப்புத்தகம் இது ஆகும் என்று உறுதியாகிறது.

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1]  Makhanlal Roychoudhury, The Din-i-Ilahi or the religion of Akbar, University of Calcutta, Calcutta, 1941, P.138; P.214

[2]  ஜைன ராமாயணம், பௌத்த ராமாயணம் முதலியவை புதியதாக உருவாக்கப்பட்டு மக்களைக் குழப்ப எழுதப்பட்டவை ஆகும். இருப்பினும் வால்மீகி ராமாயணம் மற்றும் வியாச மஹாபாரதம் ஏற்கெனவே பாரதம் மற்றும் இதர நாடுகளிலும் பிரசித்து பெற்று விட்டதால், புதியதாக, மாறுபட்ட, திரிக்கப்பட்ட ராமாடண-மஹாபாரதங்கள் மக்களிடையே எடுபடவில்லை.

[3] Beni Prasad, Hindu Muslim Questions, 1941, pp.10-11.

Blochman (Trans), Ain-i-Akbari by Abdul Quadir Baduani, p.105,

[4] Blochman (Trans), Ain-i-Akbari by Abdul Quadir Baduani, p.105.

[5] The Sanskrit books translated or paraphrased comprised the Atharva Veda; both of the great epics, namely, the Mahabhdrata and the Ramdyana of Valmiki; the Lilaavatl, a treatise on arithmetic and many others. Vincent A. Smith, opt.cit, p.423.

[6] Sastri, R Ananthakrishna (1898). Allopanishad or Mahomed Upanishad.The Theosophist (Madras, India: Theosophical Publishing House) XIX: 177.

[7] Bankim Chandra Chattopadhyay wrote that the Allopanishad was “the shameless production of some sycophant of Muslim rulers of India.

 Bijlert, Viktor A. van (1996). “Sanskrit and Hindu National Identity in Nineteenth Century Bengal“. In Houben, Jan E. M. Ideology and Status of Sanskrit: Contributions to the History of the Sanskrit Language: Volume 13 of Brill’s Indological Library (Illustrated ed.). Leiden, The Netherlands: E. J. Brill. p. 358

[8] Tagore, Satyendranath; Devi, Indira (2006). The Autobiography Of Devendranath Tagore (Reprint ed.). Whitefish, Montana, USA: Kessinger Publishing. p. 74.