Posts Tagged ‘வெள்ளைகுதிரை’

தீர்க்கதரிசி, 1000 ஹிஜிரா, வெள்ளைகுதிரை மீது வரப்போகும் மஹதி!

ஜூன் 19, 2015

தீர்க்கதரிசி, 1000 ஹிஜிரா, வெள்ளைகுதிரை மீது வரப்போகும் மஹதி!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (3).]

imam-mehdi-horse, flag

imam-mehdi-horse, flag

ஹிஜிரி 1000 ஆண்டு வந்ததும், முகமதியர்களின் கலக்கமும்[1]: 1592-93ம் காலம் ஹிஜிரி 1000த்துடன் வருகிறது. அப்பொழுது, முகமதியர்கள் மஹதி அல்லது தங்களை உய்விப்பவர் வருவார், அதற்கு தாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இஸ்லாமிய உலகம் இதனை குறிப்பாக கவனித்துக் கணக்கிட்டு வந்தது[2]. இவ்விசயங்களை அறிந்த அக்பர், 1000 ஹிஜிரி அல்லது 1592ம் ஆண்டை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள விரும்பினார். அதனால், தீப் இலாஹியை 1582ல் பிரகடனம் செய்து, தனது இலாஹி சகாப்த ஆண்டையும் ஆரம்பித்து வைத்தார். அப்துல் பசல், நாஸிர்-இ-குஸ்ரு என்பவரின் பாட்டை நினைவு படுத்தினார்:

992ம் ஆண்டில்[3] கிரகங்கள் ஒன்றாக வரும் நிலையை இருமுறை நிகழக் கண்டேன்

நான் மஹதி மற்றும் எதிர்கிறிஸ்து வரும் அடையாளங்களையும் கண்டேன்.

அதனால் ஒன்று அரசாட்சி மாறவேண்டும் அல்லது மதம் மாறவேண்டும்.

மறைந்திருக்கும் ரகசியத்தை நான் நன்றாகவே கண்டுகொண்டேன்”.

கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் ஒன்றாக வரும்போது, உலகம் அழியும், ஊழி வரும், மறுபடியும் இன்னொரு சகாப்தம் ஏற்படும் என்பது எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்தது. அக்பர் இதையெல்லாம் அறிந்து கொண்டுதான், இவ்வாறு சூரியமுறை காலண்டரைம், இலாஹி சகாப்த ஆண்டைம் அறிமுகப்படுத்தினார். ஆயிரமாவது வருட நினைவாக அக்பர் 612-1162 CE என்று கணக்கிட்டு “ஆலிப்” (ALF) மற்றும் “ஏக் ஹஜாரி” நாணயங்களையும் வெளியிட்டார்[4]. அதாவது மெக்காவிலிருந்து மெதினாவுக்கு சென்ற ஆண்டு 622 CE என்று கொண்டு, ஹிஜிரா ஆண்டு கணக்கிடப்படுகிறது. சூரியமுறை காலண்டர் மற்றும் இலாஹி சகாப்த ஆண்டு கணக்கீட்டு முறை 44 ஆண்டுகள் வழக்கில் இருந்து, 1638ல் ஷாஜஹானால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஷாஜஹான் “நௌ ரூஜ்” / புதிய வருடம் கொண்டாடுவதைத் தொடர்ந்து கடைபிடித்தார். முகமதிய நாடுகளில் நிஸா மாதத்தின் முதல் புதன்கிழமை புத்தாண்டாகக் கொண்டாடுவது பிரபலமாக இருந்தது. சூரியன் வடக்காக நகரும்போது, பகல்-இரவு சமமாக இருக்கும் நாள் வரும், அது இளவேனிற்காலத்தைக் குறிக்கிறது. இது மார்ச் 19, 20, 21, அல்லது 22ம் தேதியில் வரும். இது பழங்கால நாகரிகங்களில் இன்றும் புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. 1659ல் ஔரங்கசீப் மறுபடியும் அக்பர் இலாஹி சகாப்த ஆண்டு கடைப்பிடிப்பதை தடை செய்தார் என்றுள்ளதால், அது 1659 CE வரை இருந்தது என்றாகிறது[5]. சந்திரமுறை வருடக் கணக்கீட்டிலிருந்து, சூரியமுறை வருடக் கணக்கீட்டிற்கு மாறுவது என்பதே இந்திய தாகந்த்தைத் தான் காட்டுகிறது[6]. உண்மையில் இரண்டும் சடங்குகளுக்கு, கிரியைகளுக்கு பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்பட்டன. இதனை முகமதியர்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். கிரிகோரியும், சந்திர-சூரிய ஆண்டுமுறை காலண்டர்களை மாற்றியமைத்துதான், இப்பொழுதைய காலண்டரை உருவாக்கினார். கலியுகம் 3102 BCEல் பிறந்தது கிரகங்கள் எல்லாம் ஒன்றக சேர்ந்து வந்த நிலையைக் காட்டியது. அக்பர் பாரத்தத்தில் உள்ள எல்லா சகாப்தங்களையும் ஆய்ந்து, இலாஹி சகாப்தத்தை 1584ல் ஆரம்பித்தார்.

Christ coming on white horse

Christ coming on white horse

மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி, வெள்ளைக்குதிரை புராணக்கதைகளின் பின்னணி: “அல்லாவைத்தவிர வேறு கடவுளும் இல்லை, மொஹம்மதுதான் ரசூல், நபி, இறைத்தூதர்” என்று நம்பிவரும் முகமதியர்களே, மொஹம்மதுக்குப் பிறகு ஒரு “மஹதி வருவார்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது யூதர்கள் எதிர்பார்த்த “மேசியா” (Messaiah) மற்றும் “கிருத்துவர்களின் இரண்டாவது வரவு” (The Second coming of Jesus) போன்றவவை. மஹதி என்றால் முகமதியர்களைக் காப்பவர், உய்விப்பவர், உலகை ஆள்பவர், அல்லாவில் ஆட்சியை இப்பூமியின் மீது நிலைநிறுத்துபவர் என்றெல்லாம் முகமதியர் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றி ஏராளமான புராணக்கதைகள் அவர்களிடம் புழக்கத்தில் இருந்தன. எதிர்பார்க்கப்பட்ட அவர் வெள்ளைக்குதிரையின் மீதேறி வருவார், அவர் இறுதிதீர்ப்பு சொல்லப்படும் நாள் வரை 7, 9, 19 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். மஹதியைப் பற்றிய குறிப்பு குரானில் இல்லையென்றாலும், ஹதீஸிலிருந்து பல குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. சில முகமதிய குறிப்புகளினின்று, மஹதியின் வரவு, கிருத்துவின் இரண்டாவது வரவு நாளுடன் சேர்ந்திருக்கும் என்றும், அப்பொழுது இருவரும் சேர்ந்து மஷிஹ்-அத்-தஜ்ஜல் (masih ad-Dajjal) அல்லது போலி தீர்க்கதரிசி (False imposter) அல்லது எதிர்-கிறிஸ்து (Anti-Christ) என்பரை எதிர்ப்பார்கள் என்று சொல்கின்றன.

Kalki coming on white horse

Kalki coming on white horse

மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி பற்றி சுன்னிஷியா முகமதியர் வேறுபடுவது: மொஹம்மதுக்குப் பிறகு ஒரு வரும் மஹதி பற்றி, சுன்னி மற்றும் ஷியா முகமதியர்களில் வேற்றுமை வருகிறது. சுன்னிகளின் நம்பிக்கையின் படி, மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி இன்னும் வரவில்லை, அதனால் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஷியா முகமதியர்களைப் பொறுத்த வரையில் மஹதி ஏற்கெனவே பிறந்தாகி விட்டது, அவர் மறைந்து வாழ்கிறார். மஹதி பிறந்து வளர்ந்து இருக்கும் நேரத்தில், தனது ஏழாவது வயதில் காணாமல் போய்விட்டார். உலக மக்களுக்கு நியாயம் வழங்க, ஒரு நாள் தோன்றுவார், அவர் தான் அல்-மஹதி அல்லது 12வது இமாம் என்று சொல்கின்றனர், என்று ஷியாக்கள் நம்புகின்றனர். அந்நிலையில் ஏற்கெனவே பலர் தான்-தான் மஹதி என்று அறிவித்துக் கொண்டு தனிசாகைகளை, பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன[7]:

  • மொஹம்மது ஜோன்புரி – மஹ்தவியா பிரிவு.
  • பப் – சையிது அலி மொஹம்மது – பப்பிஸம்
  • மொஹம்மது அஹம்மது – மஹதியின் ஆட்சி – சூடான்.
  • மீர்ஜா குலாம் அஹமது – அஹமதியா பிரிவு.

பஹாய் முகமதியர் இரான் மற்றும் அஹமதியர் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து, அவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்று அறிவிக்கப் பட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மசூதிகளும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன.

white-horse Mahdi myth

white-horse Mahdi myth

வெள்ளைக்குதிரைக் கதைகள், புராணங்கள்: வெள்ளைக்குதிரை என்பது பழைய நாகரிங்களில் இருந்து வந்துள்ளது மற்றும் அவர்களின் இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளன. இது பொதுவாக, சூர்யன், சூயனின் ரதம் முதலியவற்றுடன் சம்பந்தப்படுத்தப் பட்டுள்ளது. செல்டிக் (Celtic), ட்ருயிட் (Druid), கிரேக்க (Greek), ரோம ()Rome நாகரிகங்களில் எபோனா (Epona) என்ற தேவதை குதிரை, கழுதை முதலியவற்றின் காக்கும் தேவதையாக உள்ளது. யூத-கிருத்துவ-முகமதிய நம்பிக்கைகளில் வெள்ளைக் குதிரை புராணம் மனங்களில் ஆழப்பதிந்திருப்பதினாலும், அது பெரும்பாலான இந்து மக்களின் கல்கி அவதாரத்துடன் ஒத்துப் போவதினாலும், அக்பர் அதனை பயன்படுத்தி, எல்லா நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியினால் ஆட்டிப்படைக்கலாம் என்று தீர்மானித்திருப்பார். இதனால், பவிஷ்யபுராணத்தைத் திரித்து, மொஹம்மது நபி தோன்றுவார் என்றெல்லாம் எழுதி சுலோகவரிகளை இடைசெருகல் (interpolations) செய்தனர். இன்னொருபக்கம், அல்லா உபநிஷதம் எழுதப்பட்டு முகமதியர்-இந்துக்கள் இருவர்களையும் மூளைசலவை செய்யப் பார்த்தார். புராணங்கள் அக்பர் மற்றும் ஆங்கிலேயர்கள் காலங்களில் மாற்றப்பட்டன, திருத்தப்பட்டன, இடைச்செருகல்கள் செய்யப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[8].

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] Harun Yahya (Adan Oktar), The Prophet Jesus (as) and Hazrat Mahdi will come this century, http://www.mahdi.com/

[2] Ali M. Ansari (Ed.), Perceptions of Iran: History, Myths and Nationalism from Medieval Persia to the Islamic Republic, I. B. Tauris % Co. Ltd, New York, 2014, p.58.

[3] 1584ம் ஆண்டு.

[4] Najaf Haider, The Monarch and the Millennium – A new inyerpretation of the Alf coins of Akbar, pp.76-83.

The millennial year of the Hijra (A. H. 1000 = Oct. 9, 1391, to Sept. 27, 1592, o.s.). Millennial coins issued.

https://ia601004.us.archive.org/3/items/MonarchMillennium/Monarch%20&%20Millennium.pdf

[5] Rajat Datta (Ed.), Rethinking a Millennium: Perspectives on Indian History from the Eighth to Eighteenth Century, Akbar Books, New Delhi, 2008, p.132.

[6]  “அயினி அக்பரி”யில், இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா சகாப்த உபயோக முறைகள், கணக்கிடுகள் முதலியவற்றை அறிந்து கொண்டார் என்றுள்ளது.

[7] இரான் (ஷியா), பாகிஸ்தான் (சுன்னி) போன்ற நாடுகள், இவர்களை “முஸ்லிம்கள்” இல்லை, “காபிர்கள்” என்றறிவித்து, அவர்களது மசூதிகளை உடைத்து, நாடு கடத்தியுள்ளன. இதனால் தான் பஹாய் தில்லியில் “தாமரை கோவில்” கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அஹமதிய முஸ்லிம்களும் இந்தியாவில் பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

[8] Klaus K. Klostermaier, A Study of Hinduism, Third edition, New York Press, 2007, p.582.