Posts Tagged ‘பாதிரி’

அக்பர், தீன் இலாஹி மற்றும் இதர மதங்களுடன் உரையாடல்!

ஜூன் 19, 2015

அக்பர், தீன் இலாஹி மற்றும் இதர மதங்களுடன் உரையாடல்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (1)].

Akbar having religious discussion with others

Akbar having religious discussion with others

அக்பரின் 1582ல் அறிமுகப்படுத்தப்பட்ட தீன்-இலாஹியைப்பற்றிப் பிரமாதமாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் ஏதோ எல்லா மதங்களையும் இணைத்து, அனைவருக்கும் ஏற்கும்படியான ஒரு புதிய, சமரசம் கொண்ட, ஒப்புதல்-சம்மதம் கொண்ட, தீர்வுகளை அளிக்கும் சமத்துவ மதத்தை ஆரம்பித்தார், அறிமுகப்படுத்தினார், நிறுவினார் என்றெல்லாம் சமத்துவ வல்லுனர்கள், சமதர்ம எழுத்தாளர்கள் சரித்திரப் புத்தகங்களில் எழுதித் தள்ளினர். பிறகு அது ஏன் அவர் இறந்தவுடன், அதுவும் மறைந்து விட்டது என்று அத்தகைய விளக்கத்தை அவர்கள் கொடுத்து விளக்கவில்லை. அடிப்படை இஸ்லாம் கொள்கைகளினின்று மாறுபட்ட பழக்க-வழக்கங்களை நுழைத்தபோது, கர்வம் கொண்ட, எதேச்சதிகாரத்துடன் செயல்பட்ட அக்பருக்கும், மற்ற அடிப்படைவாத காஜிக்கள், மௌல்விகள் மற்றும் மௌலானாக்கள் முதலியோருக்கும் ஏற்பட்ட ஆக்ரோசமான சண்டை, வாதம், விவாதங்களையும் குறிப்பிடவில்லை. மேலும் காஜிக்கள், மௌல்விகள் மற்றும் மௌலானாக்கள் அக்பர் தொடர்ந்து தங்க்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைவது, தங்களது மனைவிகள், சகோதரிகள், மகள்கள் முதலோருடன் குறுக்கிடுவது, அவர்களையும் மயக்கி தனது ஹேரத்தில் சேர்த்துக் கொள்வது போன்ற காரியங்களை வெகுவாக எதிர்த்தனர். அத்தகைய நிலைமையை உருவாக்கும் “மீனா பஜார்” பற்றி பிறகு இன்னொரு இடத்தில் விளக்கப்படுகிறது.

Akbar with birds

Akbar with birds

அக்பர் ஏன் அனைத்து மதங்களுடனான உரையாடலைத் தொடங்க வேண்டும்?: அக்பர் ஆட்சிக்கு வந்து, ஆளத்தொடங்கிய போது, பெருபான்மையான மக்கள் இந்துக்கள் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு, உழைப்பு, உதவி இல்லாமல் பாரதம் முழுவதையும் யாராலும் ஆட்சி செய்ய முடியாது என்பதனை அறிந்து கொண்டார். தெற்கே 1336லிருந்து விஜயநகர சாம்ராஜ்யம் இருந்தது, அது 1646 வரை சிறந்து விளங்கியது. ஒரு தடவை அதிரடியாகத் தாக்கி, குறிப்பிட்டப் பகுதியில் உள்ள ஆட்சியாளரை வென்று விடுவதால் மட்டும் அப்பகுதி முகலாய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்களது வேலைகளை சாதாரணமாகத்தான் செய்து கொண்டிருந்தார்கள், மேலும், முகமதியரைப் பற்றி வெறுப்பைத்தான் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டார். முகமதியர் என்றாலே, கோவில்களை இடிப்பவர்கள், விக்கிரங்களை உடைப்பவர்கள், கோவில் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள், பெண்களைத் தூக்கிச் செல்ப்பவர்கள், சிறுவர்-சிறுமிகளை அபகரித்துச் செல்பவர்கள் என்று தான் தீர்மானித்துள்ளார்கள், அவ்வாறுதான் “மிலேச்சர், துருக்கர்” என்று குறிப்பிடப்பட்டு நடத்தப் படுகிறார்கள் என்றறிந்து கொண்டார். அதனால், அவர்கள் அரசுடன் சுமுகமாக இருக்க வழியைத் தேடினார். அப்பொழுது உருவான எண்ணம் தான் “தீன் இலாஹி”. அல்லாவுத்தீன் கில்ஜியும் 14ம் நூற்றாண்டில் அத்தகைய திட்டத்தை வைத்திருந்தாலும், அவர் கத்தியால் சாதிக்க நினைத்தார், ஆனால், அக்பர் பணம் மூலம் சாதிக்க முடிவு செய்தார்[1], அதாவது உரையாடலுக்கு வந்தவர்களுக்கு பரிசளித்தார்.

Akbar and Sun - gold coin

Akbar and Sun – gold coin

போர்களில் ஈடுபட்டுக் கொண்டு, இடையிடையே மதவுரையாடல்கள்: அயினி-அக்பரி, அக்பர் நாமா போன்ற நூல்களைப் படிக்கும் போது, அக்பர் ஆப்கானிஸ்தானம், குஜராத், காஷ்மீர், வங்காளம் என்று பல இடங்களுக்குச் சென்று போராடுவதாக விவரங்கள் உள்ளன. இடையிடையே, பதேபூர் சிக்கிரிக்கு வந்து, மற்றவர்களுடன் மதம் சம்பந்தப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவதாக உள்ளது. மற்றவர்களுடன் சேர்ந்து ஆன்மீக அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பதேபூர் சிக்கிரி நகரத்தில் இபாதத் கானா என்ற கட்டிடத்திற்கு 1572ல் அடிக்கல் நாட்டினார், 1573ல் கட்டி முடிக்கப்பட்டது. இபாதத் கானாவில் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து, உரையாடல்களை அக்பர் நடத்தினார். முதலில் இஸ்லாத்தில் உள்ள குழுக்களுடன் உரையாடல்கள் நடத்தியபோது, அமீர்களை கிழக்கு, சையதுகளை மேற்கு, உலேமாக்களை தெற்கு மற்றும் செயிக்குகளை வடக்கு திசைகளில் உட்காரவைத்து உரையாடினார். இது அவரது ஜோதிட நம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது, இல்லை இஸ்லாத்தில் வாஸ்து போன்ற முறை இருந்ததா என்று தெரியவில்லை. போர்களில் ஈடுபட்டபோது, பல குற்றங்கள், வன்முறைகள், வரம்பு-மீறல்கள் நடந்துள்ளன. குறிப்பாக இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எப்படி ஒருபக்கம் போர் மறுபக்கம் உரையாடல் என்று ஈடுபட்டார் என்று தெரியவில்லை.

Firangi in Mughal court

Firangi in Mughal court

அக்பரது மதத்தினைப் பற்றிய கிருத்துவ மிஷனரிகளின் பதிவுகள்: ஜெசுவைட்டுகளுக்கும் அக்பருக்கும் உள்ள தொடர்புகள் இருவகையானது. ஒன்று வியாபார ரீதியில் அவர்கள் இடைத்தரகர்களாக வேலை செய்தனர், இரண்டு அக்பருடன் மதரீதியில் உரையாடிப் பார்த்தனர்[2]. அவர்களது எழுத்துகளில் கிருத்துவ சார்புடைய, பாரபட்சமான பதிவுகள் அதிகமாகவே இருக்கின்றன. அக்பர் இவர்களிடம் கிருத்துவத்தைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டாலும், தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. மேலும் தன்னையே ஒரு மதத்தலைவர் அல்லது தெய்வீகநிலைக் கொண்டவர் போலக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிலை வந்தபோது, மற்ற மதத்தினரை மதிக்கவில்லை, மாறாக அவற்றில் உள்ளவற்றை, குறிப்பாக சிலவற்றை தன்னுடைய மதத்தில் சேர்த்துக் கொண்டார். மோன்செரட் [Monserrate] போன்ற கிருத்துவ மிஷனரிகள் தங்களை அக்பர் மதிக்கவில்லை என்று பதிவு செய்துள்ளனர். “கமென்டாரெஸ்” [Commentarius] போன்ற நூல்களும் அக்பர் தான் உருவாக்கிய “தீன்-இலாஹி” மத்ததின் கடவுளாக தன்னை பாவிக்கச் சொன்னதாக குறிப்புள்ளது. நிச்சயமாக அவருக்கு தன்னை ஒரு கடவுள் அல்லது ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று தன்னை நம்பவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது என்று தெரிந்தது என்று பெர்ரி டு ஜாரிக் என்ற பாதிரி பதிவு செய்துள்ளார்[3]. போர்ச்சுகீசியரைத் திருப்திப்படுத்த அவர்கள் கொடுத்த தொப்பி, ஆடைகளை அணிந்து கொண்டார் என்று எழுதியுள்ளனர். மேலும் அவர்களை நம்ப வைப்பதற்காக, அக்பர் ஒருமுறை ஜெசுவைட்டுகள் இருக்கும் இடத்திற்கு வந்து, கிருத்து மற்றும் மேரியை வணங்கினார்[4]. தௌலபுரம் அக்பரைச் சந்திக்க வந்த ஜெசுவைட் கிருத்துவப் பாதிரிகளும் இதைப் பற்றி கண்கூடாகக் கண்டு எழுதி வைத்துள்ளனர். இவர்கள் ஏதோ அக்பர் கிருத்துவத்தை நெருங்கி வந்துவிட்டார், ஏற்றுகொள்ளவும் தயாராகி விட்டார் என்பதுபோல தங்களது ஆவணங்களில் எழுதி வைத்தாலும், அக்பர் தனது நம்பிக்கையிம் ஸ்திரமாக இருந்தார் என்பதுதான் உண்மை. அவர்களிடம் நட்புடன் இருந்த தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டார். போர்ச்சுகீசியர்களும் வியாபார ரீதியில் சலுகைகளைப் பெற்றார்கள்.

Sajahan and sun gold coin

Sajahan and sun gold coin

அக்பர் சூரிய வழிபாட்டை ஊக்குவித்தது: ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் [جلال الدین محمد اکبر , जलालुद्दीन मुहम्मद अकबर] மக்கள் தன்னை “ஜில்-இ-இலாஹி” [“Jil-i-Ilahi” which means shadow of God] அதாவது, “அல்லாவின் நிழல்” என்று அழைத்ததாக சொல்லிக் கொண்டார்[5]. 1556-1605 காலத்தில் தில்லியில் ஆட்சி செய்து வந்த காலத்தில், அக்பர் ஆசாரமான இஸ்லாத்தைப் பின்பற்றாமல் இருப்பது கண்டு பல முல்லாக்கள் கவலைக் கொண்டனர். அக்பர் காலத்தில் இஸ்லாம் மிகவும் ஆபத்தில் இருந்தது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். முல்லா அப்துல் காதிர் பதாயூன் [Mulla Abdul Qader of Badayun] என்பவர் தான் கண்ணால் கண்டாதாக பலவிசயங்களைக் குறிப்பிடுகின்றார். அக்பர் சூரிய வழிபாட்டை ஊக்குவித்ததாக எடுத்துக் காட்டுகிறார். பிரசித்தி பெற்ற ஆலிம், முல்லா சிரி என்பவர் சமஸ்கிருத நூல்களை பாரசீக மொழியில், மொழிபெயர்க்க அக்பரால் நியமிக்கப்பட்டார். அக்பர் சூரியனைப் பார்த்து ஆயிரத்தொரு பெயர்களை உச்சரித்தபோது, அவற்றைத் தொகுத்து, சமஸ்கிருதத்தில் ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்[6].சூரிய உதயம், நடுப்பகல், சாயங்காலம் மற்றும் நடு-இரவு என்ற வேலைகளில் சூரியனை ஆராதிக்க வேண்டும் என்று “நான்கு கட்டளைகளை” இட்டதாகக் குறிப்பிடுகின்றார்[7]. இதற்கான அதிகாரத்தை வெளியிடுமாறு மௌலானாக்கள் கேட்டபோது, அப்துல் பசல் என்பவர், “சூரியன் தான் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைந்து உலகத்திற்கு ஒளி அளிக்கின்றது. இதற்கான ஆதாரம் குரானில் சூரியன் என்ற சூரா உள்ளது”, என்று விளக்கம் அளித்தாராம்[8]. ஆசார இஸ்லாத்தில் முகமதியர் மேற்கு நோக்கித்தான் தொழவேண்டும், சூரியனை வழிபட வேண்டும் என்றால், கிழக்கு நோக்கி தொழவேண்டும், இது இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனால், மௌல்விகள் இத்தகைய விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை[9]. தெய்வீக விசயங்களில் (முதாஹிதூன்) ஒரு குறிப்பிட்ட விளக்கம் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைக்கும் நேர்மையான ஆட்சியாளர் (சுல்தான்–இ-ஆதில்) தான் மற்ற பிரபலமான தெய்வீகமான அதிகாரம் பெற்றவர்களை (முஜாஹித்) விட, அல்லாவின் கண்களுக்கு உயர்ந்தவராகக் காணப்படுவார் என்று 1579ல் உலேமா ஆணையிட்டார்[10]. அக்பர் சூரிய நாட்காட்டியை (Solar Calendar) அறிமுகப்படுத்தி, அதன்படி, தனது ஆட்சிக்காலத்தையும் (Akbar Era) குறிக்க ஆரம்பித்தார்.

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] He was so well acquainted with history that it is possible religion, that he may have been influenced by the example of Sultan Alau-d din Khilji, who at the beginning of the fourteenth century had allowed his vanity to be flattered by a similar mad scheme. Although the Sultan contemplated the enforcement of conformity by the power of the sword, while Akbar trusted to the influence of persuasion aided by bribery, the parallel between the two cases is sufficiently close to warrant quotation of the historian’s account of Alau-d din’s proposal.

Vincent A. Smith, Akbar, the great Mogul 1542-1605, Humphrey Milford, Oxford at the Clarendon Press, 1917, p.209.

[2] கடற்கொள்ளை, குதிரை விற்பனை, மற்ற பொருட்கள் இறக்குமதி-ஏற்றுமதி இவற்றில் ஜெசுவைட்டுகள் மற்றும் அரேபியர்-முகமதியர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வியாபாரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மத்தியஸ்தம் செய்து வந்தனர். அதற்காக கமிஷனையும் பெற்று வந்தனர்.

[3] It is more or less certain that he has a strong desire to be looked upon, and esteemed as a God, or some great Prophet.

Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.68.

[4]  J. S. Hoyland (Trans), The Commentary of Father Monsrrate, S. J., on his Journey to the Court of Akbar, Humphrey Milford, Oxford University Press, London, 1922, p.48.

[5] http://livelystories.com/2013/12/02/an-interview-with-jalaluddin-muhammad-akbar/

[6] Molla Shiri, a well known ‘Alim of the reign of Akhar, was entrusted with the duty of translating the Sanskrit books into persian language, When he was informed that, the king utters one thousand one names of the sun looking towards it; to satisfy him he composed a poem which contained thousand stanza in praise of th sun and placed it before the king.

Abul Hasan ‘Ali. Nadwi, Saviours of Islamic Spirit, vol. III, P. 71-72.

[7] Maulana Mubarik presented an application em-powering Akbar to issue precepts after interpretation, and that he revered the sun, and he had special timings for its worship: sunrise, mid-day, sunset and mid-night. The reason for midnight worship was, says Abul Fazl: “The direction of that which gives light to the world has turned towards devotion and those afflicted by the dark nights received the tidings of delight”. For the approval of this wicked act, reliance was placed upon the Quranic Sura “The Sun”.

[8] Quran, Surah: XCI: 1-15.

[9] http://www.irfi.org/articles/articles_901_950/emperor_mogul_akbar_and_shai.htm

[10] Martin E. Marty, R. Scott Appleby, Fundamentalisms Comprehended, The University of Chicago Press, Chicago University, USA, 1995, p.299-300.