Posts Tagged ‘ஆர்.எஸ்.எஸ்’

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் – தூக்கிலிட்டப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை மற்றும் தடை நீக்கம்! (2)

ஜூன் 17, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ்தூக்கிலிட்டப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை மற்றும் தடை நீக்கம்! (2)

 A G Noorani, left, anti-Hintuwa-3

ஆர்.எஸ்.எஸ்.ஐ காந்தி கொலையுடன் இணைத்து எழுதும் முறை: முன்னமே குறிப்பிட்டப்படி, ஏ.ஜி.நூரானி இவ்விசயத்தில் தீவிரமாக கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர், எழுதிய ஆங்கில கட்டுரை தமிழில் “தி.இந்து”வில் அக்டோபர் 2016ல் வெளியிடப் பட்டுள்ளது[1]. அதிலும், அதே கதை சிறிது மாற்றி வெளியிடப்பட்டுள்ளது[2]. “ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு படேல் செப். 11, 1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது. “இந்து சமுதாயத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர் கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்து விட்டெரிய முஸல்மான்களைத் தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்குப் பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது[3]. இந்துக்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப் பதற்கும் விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாகக் காந்திஜியின் உயிர்த் தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்எஸ்எஸ் மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளி கூடப் பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.” ஏ,ஜி,.நூரானிக்கு பதிலாக, ஆர்..விஜயசங்கர் என்ற பெயர் உள்ளது[4].

Sardar patel letter to Golwalkar 09-1948

படேலின் முழு கடிதத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது: படேலின் முழு கடிதத்தைப் படித்தால் தான் அதன் உண்மைத் தன்மை விளங்கும்[5]. முதல் பத்தியில் ஆர்எஸ்எஸ் சேவையைப் பாராட்டி, பிறகு அவர்களது முஸ்லிம் வெறுப்பைக் கண்டிக்கிறார். இரண்டாவது பத்தியில், ஆர்எஸ்எஸ் காங்கிரஸுக்கு எதிராக செயல்படும் போது, எவ்வாறு நடந்து கொள்கிறது, மற்றும் காந்தி கொலைக்குப் பிறகு, அரசு ஆர்எஸ்எஸ்.ஐ நம்புவதாக இல்லை என்று விவரிக்கிறார். மூன்றவது பத்தியில், எவ்வாறு ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் இணைந்து செயல்படலாம் என்று விவரிக்கிறார். ஆர்எஸ்எஸ்.காரன் காந்தியைக் கொன்றான் என்றால், படேல் எவ்வாறு ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் சேர உத்தேசித்து அறிவுரை கூறுவார். பிறகு, நேருவும் அதனை ஆமோதித்திருப்பார்? ஆக, இதில் எவ்வாறு ஆர்எஸ்எஸ் சம்பந்தப்படவில்லை என்று உறுதியாகிறது. ஹிந்து மஹாசபாவின் பங்கு மறுக்கப்படவில்லை, காங்கிரஸுக்கும் அது ஒத்துப் போகவில்லை. அதனால், ஒருவேளை, ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் சேர்ந்தால், காங்கிரஸ் வலுவடையும் என்று நினைத்திருக்கலாம்.

A G Noorani, left, anti-Hintuwa-2

ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் சேவா தள் அமைப்புகள்: ஆர்எஸ்எஸ் செப்டம்பர் 27, 1925 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் சேவா தள் முன்னரே, ஜனவரி 1, 1924ல் ஆரம்பிக்கப்பட்டது. காந்தி தொப்பியை அணிந்து, ஆனால், ராணுவம் போன்ற சீருடையை அணிந்து, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு செயல்பட்டது. நேரு இதற்கு தலைவராக இருந்தர். 1923லேயே நாக்பூரில் கொடி ஊர்வலம் சென்றபோது, ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவம் போன்ற இந்த அமைப்பை, காங்கிரஸாரே எதிர்த்தனர். 1932ல் பெண்கள் ராணுவம் உருவாக்கியதால், ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. 1948ல், மேற்கு வங்காள அரசும் தடை செய்தது, ஆனால், நேரு அந்த தடையி நீக்கினார். ஆகவே, ஆர்எஸ்எஸ் ஒருவேளை, இதற்கு போட்டியாக, ஆரம்பித்தாரா என்ற கேள்வியும் எழுகின்றது. தொப்பி மற்றும் சீருடை வண்ணம் தவிர, மற்றெல்லாம், ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கலாம். நேருவின் இதற்கான ஆதரவு மற்றும் ஆர்எஸ்எஸ்கான எதிர்ப்பையும் கவனிக்கலாம். நேரு மே 27, 1964 அன்று இறந்த பிறகு, ஜீவன்லால் கமிஷன் அமைக்கப் பட்டது.

A G Noorani, left, anti-Hintuwa

ஜீவன்லால் ஜஸ்டிஸ் விசாரணை செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும்: ஜீவன்லால் கபூர் 21-11-1964 அன்று “காந்தி கொலை சதித்திட்டம் விசாரணை கமிஷனுக்கு” நியமிக்கப்பட்டார். 101 சாட்சிகள், 407 ஆவணங்கள் குதலியவறுடன் 162 முறை கூடி, விசாரணைக்குப் பிறகு அவரது அறிக்கை 30-09-1969 அன்று முடிவடைந்தது. இதற்காக பாம்பே, தில்லி, நாக்பூர், தார்வா, பூனே, பரோடா, சண்டிகர் முதலிய இடங்களுக்கு சென்று வந்தார். ஆர்.எஸ். கொத்வால் மற்றும் பி.பி.லால் மஹாராஷ்ட்ராவுக்கு வக்கீல்களாக இருந்தனர். அவர்கள் முறையே 37 மற்றும் 17 நாட்களுக்கு வாதித்தனர். ஜி.வி. கேட்கர் முதலாவதாக விசஐக்கப் பட்ட சாட்சி. ஜே.டி.நகர்வாலா, மற்றும் மொராஜி தேசாய் முறையே 15 மற்றும் 7 நாட்களுக்கு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஏற்கெனவே, விசாரணை நடந்து, கோட்ஸே மற்றும் ஆப்தே தூக்கிலிட்டப் பிறகு, நடந்த இந்த விசாரணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், தண்டனை முடிந்த பிறகு, வழக்குகளை போஸ்ட்மார்டம் செய்ய முடியாது.

Sardar patel letter to Nehru RSS not involved- 27-02-1948

கோல்வால்கர் கைது, ஆர்.எஸ்.எஸ் தடை: காந்தி கொலைக்குப் பிறகு, பிப்ரவரி 1, 1948 அன்று குருஜி கோல்வால்கர் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 4, 1948 அன்று ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப் பட்டது. பிப்ரவரி 4, 1948 அன்று “தடை அமூலில் இருக்கும் வரை” ஆர்.எஸ்.எஸ்.ஐ கலைத்து விடும்படி கோல்வால்கரே ஆணையிடுகிறார். அதற்குள் கோல்வால்கர் அரசுக்கு பல கைதங்கள் எழுதி, ஆர்.எஸ்.எஸ்க்கும், காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்குகிறார். இருப்பினும், முஸ்லிம் விரோதம், வன்முறை முதலியவற்றைச் சுட்டிக் காட்டி ஒப்புக்கொள்ளாமல் இருந்தது. பிறகு, ஆகஸ்ட் 6 1948 அன்று கோல்வால்கர் சரத்துகளுடன் விடுவிக்கப் படுகிறார், ஆனால், நாக்பூரிலேயே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. ஆகஸ்ட் 11, 1948 அன்று தொடரும் கட்டுப்பாடுகளைப் பற்றி, நேரு மற்றும் படேலிடம், கோல்வால்கர் புகார் செய்கிறார். நவம்பர் 3, 1948 அன்று கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால், கோல்வால்கர் தில்லிக்குச் செல்கிறார்.

Nehru forced patel to ban RSS 27-02-1948

ஆர்.எஸ்.எஸ்.காரர்களை காங்கிரஸில் சேர்க்க நேரு, படேல் முயன்றதேன்?: பல கடித பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஜூலை 11, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்படுகிறது. அக்டோபர் 7, 1949 அன்று காங்கிரஸ்காரகள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர நேரு காங்கிரஸ்கமிட்டி மூலம் ஒப்புதல் வாங்கினார். ஆனால், நேருவின் ஆணைக்கு இணங்க, நவம்பர் 7, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு விலகினால் காங்கிரஸில் சேரலாம் என்று சொல்லப்பட்டது.  அரசாங்கம், எந்த இயக்கத்தையும், தடை செய்ய வேண்டும் என்றால், அது அரசுக்கு அல்லது மக்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பதனைக் காட்ட வேண்டும். ஆகவே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொம்பு வைத்துக் கொள்கிறார்கள், முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள், ரகசியமாக செயல்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. கோல்வால்கர், அதற்கெல்லாம் பதில் அளித்தப் பிறகு தான், தடை நீக்கப் பட்டது. அந்நிலையில், அரசு குற்றஞ்சாட்டப் பட்ட விவரங்களை வைத்து, 2010, 1016 ஆண்டுகளில் திரித்து எழுதுவது சரியில்லை. இவ்விவரங்களை, ஏ.ஜி.நூரானி, பிரென்ட் லைனில், தமக்கேயுரிய பாணியில் திரித்து எழுதியுள்ளார்[6]. ஆர்.எஸ்.எஸ்.காரர்களை படேல் காங்கிரஸில் சேர்ந்து விட வேண்டும் என்றதையும், நேரு மறைமுகமாக வற்புருத்தியதையும் மறைத்து எழுதி வருகிறார்கள்[7]. நேரு, படேலை வற்புருத்தி, ஆர்எஸ்எஸ்.ஐ தடை செய்ய பணித்தார் என்பது, கடித பரிமாற்றங்களில் புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

17-06-2018

Congress Seva Dal- RSS prototype

[1] தி.இந்து, காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!, Published : 02 Oct 2016 11:52 IST; Updated : 02 Oct 2016 11:52 IST.

ஆர். விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: vijay62@gmail.com

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-147-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article9176072.ece

[3] இது காங்கிரஸை ஆர்எஸ்எஸ் அணுகும் விசயத்தில் சொன்னது, ஆனால், அதை முஸ்லிம்களுடன் இணைத்து எழுதியுள்ளார் விஜயசங்கர்.

[4] ஆர். விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: vijay62@gmail.com

[5] Aurangzeb Road, New Delhi, 11th Sept. 1948,

Brother Sri Golwalkar, Received your letter dated 11th August. Jawaharlal has also sent me your letter of the same date.

You are very well aware of my views on the RSS. I have expressed these thoughts at Jaipur in December last month at Lucknow in January. The people had welcomed those views. I had hoped that your people also would accept them. But they appear to have no effect on the RSS persons, nor was there any change in their programmes. There can be no doubt that the RSS did service to the Hindu Society. In the areas where there was the need for help and organisation, the young men of the RSS protected women and children and strove much for their sake. No person of understanding could have a word of objection regarding that. But the objectionable part arose when they, burning with revenge, began attacking Mussalmans. Organising Hindus and helping them is one thing but going in for revenge for its sufferings on innocent and helpless men, women and children is quite another thing.

Apart from this, their opposition to the Congress, that too of such virulence, disregarding all considerations of personality, decency or decorum, created a kind of unrest among the people. All their speeches were full communal poison. It was not necessary to spread poison and enthuse the Hindus and organise for their protection. As a final result of the poison, the country had to suffer the sacrifice of the valuable life of Gandhiji. Even an iota of sympathy of the Government or of the people no more remained for the RSS. In fact the opposition grew. Opposition turned more severe, when the RSS men expressed joy and distributed sweets after Gandhiji’s death. Under these conditions it became inevitable for the Government to take action against the RSS.

Since then, over six months have elapsed. We have hoped that after this lapse of time, with full and proper consideration the RSS persons would come to the right path. But from the reports that come to me, it is evident that attempts to put fresh life into their same old activities are afoot. I once again ask you to give your thought to my Jaipur and Lucknow speeches and accept the path I had indicated for the RSS. I am quite certain that therein lies the good of the RSS and the country and moving in that path we can join hands in achieving the welfare of our country. Of course, you are aware that we are passing through delicate times. It is the duty of every one from the highest to the lowliest in this country to contribute his mite, in whatever way possible, to the service of the country. In this delicate hour there is no place for party conflicts and old quarrels. I thoroughly convinced that the RSS men can carry on their patriotic endeavor only by joining the Congress and not by keeping separate or by opposing. I am glad that you have been released. I hope that you will arrive at the proper decision after due consideration of what I have said above. With regard to restrictions imposed upon you I am in correspondence with the CP Government. I shall let you know after receiving their reply.

Yours
VALLABH BHAI PATEL (Written originally in Hindi)

[6] A.G. NOORANI, Communalism, Basic instinct And the Sangh’s survival strategy, Frontline, Volume 27 – Issue 01 :: Jan. 02-15, 2010.

[7] https://www.frontline.in/static/html/fl2701/stories/19930326052.htm