Posts Tagged ‘மூதேவி’

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? “மந்திர-தந்திர-எந்திர” முறைகள் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும், முடிவுகளும் [7]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? மந்திரதந்திரஎந்திரமுறைகள் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும், முடிவுகளும் [7]

64 yogini temple, Mitawali, Chambal, MP-Areal view

 “மந்திரதந்திரஎந்திரமுறைகள் நீங்கி பக்தி மார்க்கம் வளர்ந்தது: மேலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி மார்க்கம் மூலம் நம்பிக்கையாளர்களைத் திரட்டினர். கோவில்கள் தோறும் சென்று, பதிகம் பாடி பக்தி நெறி வளர்த்தனர். உழவாரப்படை கொண்டு, உழவாரப் பணி செய்து, கோவில்களை தூய்மைப் படுத்தினர்; மூடிய கோவில்களை திறந்து வைத்தனர்.தைவையெல்லாம் மக்கள் இயக்கமாகவும் செயல்பட்டன. “மந்திர-தந்திர-எந்திர” முறைகள் போல ரகசியமாகப் பின்பற்றப்படவில்லை. இத்தகைய குறிப்புகள், அவர்கள், ஜைன-பௌத்த தாக்கங்களினால், சீரழிந்த கோவில்களை மீட்டு, புனர் நிர்மானம் செய்தனர் என்றாகிறது. அதாவது, மக்களை வைத்து செய்வித்தனர். வழிபாட்டு முறைகளை  ஜைன-பௌத்தர் மாற்றியதால், அவற்றையும் முன்னர் இருந்த படி, திரும்பவும் செயல்பட வைத்தனர். இதனால், மக்கள் “மந்திர-தந்திர-எந்திர” முறைகளை விடுத்தனர், அதற்குண்டான தேவதைகளும் விடப்பட்டன.

Neglected Jaina-Buddhist devatas-5

தேவதைகள் பிரிக்கப்பட்டன: ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகளில் தேவதைகள் மூன்று, ஏழு, பதினாறு, 64, 86, 108 என்று பெருகிக்கொண்டே போனது. ஸ்தோத்திரங்களும் பெருகின. பொது மக்களைக் கவர, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவ்வாறு புதிய தேவதைகள் உருவாக்கப்பட்டன. நல்ல-கெட்ட தேவதைகள், துர்தேவதைகள் என்றெல்லாம் கூட பிரிக்கப்பட்டன. சக்தி உபாசகர்களுடன் போட்டியாகவும் அவ்வாறு செய்தனர். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இத்தேவதைகளின் உருவங்கள் கோவில்களில் வைக்கப் பட்டன. இதனால், ஆண்-தெய்வங்களுடன், பெண்-தெய்வங்களும் வைக்கப் பட்டன. அதற்கேற்றார்போல, புராணங்கள், ஆகம விதிமுறைகளும் எழுதப்பட்டன. பக்தர்களுக்குள் ஏற்பட்ட சண்டை-சச்சரவுகளை அப்புதிய புராணக் கதைகளிலும் சேர்த்தனர். அதனால் தான், பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லக்ஷ்மி, சிவன்-பார்வதி அவ்வப்போது சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்க்கலாம். பிறகு அவர்களை சமாதானப் படுத்த அல்லது சண்டையை மேலும் வளர்க்க மகன்–கடவுளர்களையும் சேர்த்தனர். ஆனால், மகாவீரர் மற்றும் புத்தர் தத்தமது மதநூல்களில் சண்டை-சச்சரவுகள் மேற்கொண்டதாக கதைகள் இல்லை. ஆகையால், இவையெல்லாம் அவர்களின் இடைசெருகல்கள் என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். முன்னால் ஜைன ராமாயணம் எழுதியது போல, இவ்வாறு புதிய கடவுளர்களை உண்டாக்கி, புராணங்களையும் உண்டாக்கினர்.

Neglected Jaina-Buddhist devatas-4

புதிய தேவதைகளை ஏற்றுக் கொள்ளுதல், சமரசம் செய்து கொள்ளுதல்  முதலியன: கடவுளர்கள் குடும்பங்கள் உண்டான போது, ஜைன-பௌத்தர்களின் இத்தகைய இடைச் செருகல்ளை தாக்குப் பிடிக்க முடியாமல், ஒரு நிலையில், இந்து மடாதிபதிகள், குருமார்கள், பண்டிதர்கள் முதலியோர், அதற்கேற்றப்படி புராணங்களையும், ஸ்தல புராணங்களையும் மாற்றி எழுதி வைத்தனர். சக்தி உபாசகர்கள் மற்றும் புதிய கடவுளர் பக்தர்களைத் திருப்திப் படுத்த, பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லக்ஷ்மி, சிவன்-பார்வதி முதலியோர்களை சொந்தக்காரர்களாக மாற்றினர். பிரம்மா விஷ்ணுவின் மகனாகிறார். சிவனுக்கு சம்பந்தியாகிறார். இருப்பினும் இடைக்காலத்தில், சைவ-வைணவ மோதல்கள் திகைக்க வைக்கின்றன. சைவ-வைணவ பிரிவுகளில் சேர்ந்த ஜைன-பௌத்தர்களின் வேலையாகவும் இருக்கலாம்.

Neglected Jaina-Buddhist devatas-6

தீட்டுப்பட்ட தேவதைகள், கடவுளர்கள் முதலியன: துலுக்கர்களின் கோவில் இடிப்புகளுக்குப் பின்னர், இத்தகைய பிரிப்புகள் இன்னும் அதிகமாகின. முதலில், துலுக்கர் கைப்பட்ட கோவில்களை பகிஷ்காரம் செய்தனர். உடைந்த, மூளியான விக்கிரங்கள்-சிலைகள் ஒதுக்கப் பட்டன. இருப்பினும் பரிகார முறைகளை அறிமுகப்படுத்தி, சிலசமரசங்களை செய்து கொண்டனர். இதனால், துலுக்கர்களால் தீட்டுப் பட்ட கோவில்களில் நுழைவுவாயில்களை மேற்கு பக்கமாக மாற்றினர். அதற்கேற்றார்போல, மூலவரையும் மேற்கு பக்கம் பார்ப்பது போல வைத்தனர். அதாவது, மேற்கிலிருந்து வந்த துலுக்கர் மற்றும் கிருத்துவர்களால் தாக்கப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட மற்றும்மிடிக்கப்பட்ட கோவில்கள் என்பதை தெரியப் படுத்தவே அவ்வாறு செய்யப்பட்டது. 1310-11ல் மாலிகாபூர் காலத்தில் பாதிக்கப் பட்ட கோவில்க்ளில் அந்நிலையைக் காணலாம். சென்னையில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், இடம் பெயர்ந்து கட்டப் பட்டதால், மேற்கு பக்கம் பார்த்து இருக்கிறது. வாசலில் வைக்கப் பட்டுள்ள கல்வெட்டில்,.முன்பு அக்க்கோவில் இப்பொழுதுள்ள சர்ச் இருக்கும் இடத்தில் இருந்தது, போர்ச்சுகீசியர் இடித்ததால், விக்கிரங்களை எடுத்து வந்து, இங்கு கோவில் கட்டப்பட்டது என்று தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

Neglected Jaina-Buddhist devatas-3

துர்தேவதைகள், கெட்ட தேவதைகள் ஒதுக்கப்பட்டன: இதனால் தான் இடைகாலத்தில் தீட்டுப்பட்ட தேவதைகள், துர்தேவதைகள், கெட்டதை செய்யும் தேவதைகள் என்று பல்வேறு தேவதைகள் விலக்கப் பட்டன. நிர்வாண தேவதைகளும் விலக்கப் பட்டனர். துணிகளால் மூடப்பட்டன, இல்லை தூக்கியெறியப் பட்டன.. வயல்களில் போடப்பட்ட தேவதைகள் எல்லை தெய்வங்களாக, கிராமதேவதைகளாக மாறின. உக்கிரதேவதைகளும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைக்கப்பட்டன. இதனால் தான், நரசிம்மர் விக்கிரங்கள் கோவில்கள் வயல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் இன்றும் காணலாம். சப்தரிஷி மனைவிகள் – சப்தரிஷி மண்டலமாகி, சப்தமாதர்கள் ஆகி, புதியதாக உண்டாக்கப் பட்ட புராணங்களில் அபவாதத்திற்கு உட்பட்டதால், ஒதுக்கி வைக்கப் பட்டனர். ஒன்று கோவில் பிரகாரத்திற்கு வெளியே வைக்கப் பட்டனர் அல்லது நவக்கிரகங்களை வைத்து பரிகாரம் செய்யப் பட்டது. ஏழு ஒன்பதாக, ராகு-கேது சேர்க்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் புதிய் கதைகள் உண்டாக்கி விளக்கம் கொடுக்கப் பட்டன.

Neglected Jaina-Buddhist devatas-2

அலசப்பட்ட ஆதாரங்கள்விவரங்களின் தொகுப்புமுடிவுரை: மேற்கண்ட ஆதாரங்கள், விவரங்கள், விவாதங்கள் முதலியவற்றிலிருந்து, கீழ்காணும் விசயங்கள் முடிவுரையாக கொடுக்கப் படுகின்றன:

  1. சிந்துசமவெளி அகழ்வாய்வு ஆதாரங்கள் படி தாய்-சேய் / பெண் தெய்வம் வழிபாடு அக்காலத்தில் இருந்தது தெரிகிறது. குள்ளி, பலுச்சிஸ்தான் ஆதாரமே3000-2500 BCE காலத்திற்குச் செல்கிறது.
  2. சிந்துசமவெளி நாகரிகத்தின் உச்சகாலகட்ட நிலை2250-1950 BCE மற்றும் திடீரென்று உண்டான மௌரிய c.350-200 BCE கால சாம்ராஜ்யத்திற்கும், இடையில் உள்ள காலத்தை சரித்திராசிரியர்கள் விளக்க வேண்டும்.
  3. ஏழு பெண்கள், சப்தமாதர், ஏழு கன்னியர் வழிபாட்டிற்கான உருவமும் காணப்படுகிறது.
  4. அப்பெண்தெய்வங்களின் உருவங்கள், வரிசை, எண்ணிக்கை மாற்றம் முதலியன, ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகளினால் ஏற்பட்டன.
  5. சமஸ்கிருத இலக்கிய ஆதாரங்கள், கிடைத்துள்ள அகழ்வாழ்வு ஆதாரங்களுடன், காலக்கணக்கியல் ரீதியில் ஒத்துப் போகின்றன.
  6. ஆனால், தமிழ் இலக்கிய ஆதாரங்கள் [c.300 BCE- 100 CE], கிடைத்துள்ள அகழ்வாழ்வு ஆதாரங்களுடன், காலக்கணக்கியல் ரீதியில் ஒப்பிடும் போது, இடைக்காலத்தைக் [9-14thCE] காட்டுகின்றன.
  7. சிந்துசமவெளி நாகரிகம் “திராவிடர்களுடையது” என்றால், அவர்களும் [c.300 BCE- 100 CE வரை என்ன செய்து கொண்டிருந்தனர் என்று சொல்ல வேண்டும்.
  8. ஆதாரங்கள் இல்லாததால், பாரதம் முழுவதும்1950 BCE முதல் c.300 BCE வரை, 1600 ஆண்டுகளுக்கு ஒரே நாகரிகம் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. ஏனெனில், வெறுமையிலிருந்து திடீரென்று மௌரியர்களும் சங்ககால நாகரிகமும் தோன்றியிருக்க முடியாது.
  9. ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகள் சீரழிந்ததால், அம்முறைகள் மற்றும் சம்பந்தப் பட்ட தேவதைகள் ஒதுக்கப் பட்டன.
  10. இதற்கும் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் கட்டுக்கதைகள், கருதுகோள்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றிற்கும் தொடர்பில்லை.
  11. மூதேவியின் கதையினை நம்ப வேண்டுமானால், பாற்கடலைக் கடையும் கதையினை நம்பியாகி வேண்டும். ஆகவே, புராணங்களை கட்டுக்கதைகள் என்று ஒருபக்கம் எதிர்ப்பது, இன்னொரு பக்கம் ஆதரித்து ஏற்றுக் கொண்டு, பார்ப்பனர் சதி, கைவேலை என்றெல்லாம் பேசுவது, முரண்பாட்டைக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

09-09-2018

Neglected Jaina-Buddhist devatas-1

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? ஜைன-பௌத்தர்களின் இடைசெருகல்கள் வழிபாட்டு முறைகளிலும் இருந்தன [6]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? ஜைன-பௌத்தர்களின் இடைசெருகல்கள் வழிபாட்டு முறைகளிலும் இருந்தன [6]

Goddess with head only

முண்டகண்ணி அம்மன் உருவாக்கிய கதை: முண்டா என்றால் தலையில்லாத தேவி. சாமுண்டா என்றால் கபாலங்களை மாலையாக [முண்டமாலா = முண்டமாலை] கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு உக்கிரமாகக் காணப்படும் தேவி. சர்மமுண்டா தேவியோ அதி-உக்கிரமான, பிணத்தின் மீது உட்கார்திருக்கும் கருப்பு நிற தேவதை. சுற்றிலும் பிணங்கள் சூழ வீற்றிருக்கும் தேவதை. சண்டிகா, சாமுண்டா போன்ற பெயர்கள் முதன்முதலில் தேவி பாகவதத்தில் தான் காணப்படுகின்றன [7.6, 27 முதலியன]. ஆக சாமுண்டா, தலையில்லாத தேவி ரேணுகா தேவி ஆவார். அவர் முண்டகண்ணி அம்மன் ஆகிறார். பிறகு தமிழில் “முண்டகண்ணி” என்றால் அகன்ற-பெரிய கண்களைக் கொண்டவர் என்று மாற்றப்படுகிறார். கர்நாடகாவில் 1072ம் ஆண்டைச் சேர்ந்த “கோலாரம்மா” கோவில், கோலாரில் இருக்கிறது. இந்த கோலாரம்மா தான், “கோலவிழி” அம்மன் ஆனார், என்று நம்மாட்கள் கூறலாம். இங்குள்ள அம்மன், சாமுண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார். இங்கே இருக்கும் “அலக்ஷ்மி” அதாவது, ஜேஸ்டா அல்லது மூதேவி காக்கையுடன், கழுதையின் மீது உட்கார்ந்திருக்கிறாள்.

Goddess without head -chiinamasta devi

சிந்துசமவெளி மற்றும் சங்க கால இடைவெளி ஏன்?: சங்ககாலம் 500 BCE-100 CE அல்லது 300 BCE – 100 CE என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்தது 2250-1950 BCE ஆகும்.பிறகு மறைந்து விட்டது. திடீரென்று சரித்திராசிரியர்கள் மௌரிய அரசு c.350-300 BCE காலகட்டத்தில் கங்கைக் கரையில் தோன்றியதாக “இந்திய சரித்திரம்” கல்வெட்டு, நாணயங்கள், கட்டிட-சிற்பக்கலை முதலியவற்றின் மீது ஆதாரமக எழுதப்பட்டுள்ளது. அதே போல தெற்கில் சங்ககால நாகரிகம் இருந்ததாக இலக்கிய ஆதாரங்கள் மூலம் விவரிக்கப் படுகிறது. அப்படியென்றால் இடையில் 1600 வருடங்கள் இந்தியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதே போல, சிந்து சமவெளியில் “திராவிடர்கள்” இருந்தார்கள் என்றால், அவர்கள், தென்னகத்திற்கு வர அல்லது ஆரியர்களால் விரட்டியடிக்கப் பட 1600 ஆண்டுகள் ஆயிற்றா என்ற கேள்வியும் எழுகின்றது. அப்படியே வந்து, குடியேறி வாழ ஆரம்பித்தாலும், சமஸ்கிருதத்தில் உள்ளது போன்ற கலை, விஞ்ஞானம், தொழிற்நுட்ப நூல்கள் இல்லாமல், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு ரீதியில் ஏன் பாட்டுகள் இருக்கவேண்டும். அத்தனை முதிர்ந்த, சிறந்த, அருமையான நாகரிகத்தைக் கொண்டவர்கள், உடனடியாக, பெரிய அளவில் தங்களது நூல்களை தோற்றுவித்திருக்கலாம். சிந்துசமவெளி போன்றே, நகரங்களை உண்டாக்கியிருக்கலாம். பல்லவர்கள், சோழர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவேம் இந்த கால-இடைவெளியை விளக்கியாக வேண்டும். ஆக இருப்பற்றிலிருந்து தான் இல்லாதவை வந்திருக்க வேண்டும். அதாவது, சமஸ்கிருத நூல்களிலிருந்து தான், மற்ற இலக்கிய நூல்கள் உண்டாகியிருக்க வேண்டும்.

How Jain tantra spolided and confused Goddeesses-Chamunda etc

சிந்துச்சமவெளி நாகரிகம், சங்க இலக்கியம்சரித்திர ஆதாரங்கள் இல்லாத 1600 ஆண்டுகள் கால இடைவெளி: சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்த பொகோஸ்காய் கல்வெட்டில், வேத கடவுளர்களான, “இந்திரசீல்-மித்ரசீல்-வருணாசீல்-நசாத்தியா” குறிப்பிடப் பட்டு, இருகுழுவினர் உடன்படிக்கை செய்து கொள்வதாக உள்ளது. அதாவது, சிந்துசமவெளிக்கு பக்கத்தில் இவ்விடத்தில் வேதகடவுளர்களை அறிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதேபோல, திராவிடர்கள் இருந்திருந்தால், அவகளைப் பற்றிய குறிப்புகள் கொண்ட கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கும் இல்லை, இந்தியாவிலும் இல்லை. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சில வார்த்தைகள் கொண்ட உடைந்த எழுத்துகள் போன்ற கீரல்கள், வரிவடிவங்கள் கொண்ட உடைந்த ஓடுகள் முதலியவை தான் கிடைத்துள்ளன. அவை தமிழில் படிக்கலாம் என்று, c.320 BCE – 300 CE தேதியிடப்படுகிறது. முழுவீச்சில் தமிழிலக்கியம் உருவாகியப் பிறகு, மக்கள் இத்தகைய கல்வெட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், காரவேலன் [209-169 BCE] தனது 18-வரிகள் கல்வெட்டில், “திரமரதேசசங்கடன்” [தமிழசர் கூட்டணி] பற்றி குறிப்பிட்டுள்ளபோது, தமிழர்கள், அதற்கும் மேலாக, எழுதி கல்வெட்டுகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

How Jain tantra spolided and confused Goddeesses

களப்பிரர், சமணர், ஜைனர்களால் தமிழகத்தில் மதம் தாக்கப்பட்டது: சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை-பத்துப்பாட்டு நூல்கள் தான் வரும், ஆக குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் 2-9ம் நூற்றாண்டுகள் வரை இருப்பதனால், அந்த இலக்கிய ஆதாரங்களை வைத்து, தீர்மானமான முடிவுக்கு வரமுடியாது. ஏனெனில், அக்காலகட்டத்தில், எந்த சிலையும் கிடைக்கவில்லை. மேலும் தேவி பாகவதம் போன்று விவரங்கள் கொடுக்கும் நூலும் தமிழில் இல்லை. ஆகவே, ஒன்று தமிழர் மற்றவர்களிடமிருந்து இவ்விவரங்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்தியாமுழுவதும் அத்தகைய வழிபாட்டு முறை இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் முதல் நூற்றாண்டுகளில் “களப்பிரர்” ஆட்சி செய்தபோது, தமிழக கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றிற்கான அத்தாட்சிகளை அழித்து விட்டனர் என்று திராவிட சித்தாந்திகள், தமிழ் பிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜைனர்கள் தாம், அவர்கள் தான் அத்தகைய நிலையை ஏற்படுத்தினர் என்று சொல்வதில்லை. சமணத்தினால், தமிழக மதம், முதலியவை பாதிக்கப் பட்டன என்பதனை ஆராய்ச்சி செய்வதில்லை. ஆனால், சைவர் அவர்களை கழுவேற்றி துன்புருத்தினர் என்று இன்றும் எழுதி வருகின்றனர்.

How Jain tantra spolided Goddeesses

ஜைனபௌத்தர்கள் மடாலயங்களில்விஹாரங்களில் மறைவாக செய்த கிரியைகள் என்ன?: ஜைன-பௌத்தர்கள் சாக்தர்களின் புத்தகங்களைப் படித்து கிரியைகளில் ஈடுபட்டபோது, ஆண்-பெண் உடலுறவு கிரியைகளை தவறாகப் புரிந்து கொண்டனர். அதாவது, உடலுறவு கொண்டு செய்யும் கிரியைகள் சில எதிர்பார்க்கும் விளைவுகளை உண்டாக்கும் என்று நம்பினர். இதனால், மடாலயங்களில், விஹாரங்களில் இருந்த சந்நியாடி-பிக்குனிகளிடமே அப்பிரயோகங்கள் நடத்தப் பட்டன. காதக மற்றும் ஜைன தந்திர நூல்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன. இவர்களது மடாலயங்கள் மற்றும் விஹாரங்கள் ஊருக்கு, கிராமங்களுக்கு தொலைவில் மறைவிடங்களாக காடுகளில், மலைகளில் இருந்தன. தேவைக்கு மட்டும் தான் அவர்கள் வெளியே – ஊர்களுக்கு-கிராமங்களுக்கு வந்தனர். அந்நிலையில் அவர்களது கிரியைகள் பற்றி மக்களுக்குத் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்களும் வெளிப்படுத்தினர். பிக்குனிகள் வெளியேற்றப் பட்டனர், சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரங்கள் உள்ளன[1]. இவையெல்லாம் பாலியல் கிரியைகளால் பாதிக்கப் பட்ட பிக்குனிகளின் தற்கொலைகளா அல்லது நரபலிகளா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் மீது பொது மக்கள் கோபம், வெறுப்பு, அருவறுப்பு, கொண்டனர், இச்செயல்கள் அவர்களை மேலும் தனிமைப்படுத்தின.

How Jain-buddha tantra spolided and confused Goddeesses-Chamunda etc

ஜைனபௌத்த தேவதைகள் ஏன் ஒதுக்கப்பட்டன?: அதற்கேற்றப்படி, “மந்திர-தந்திர-எந்திர” நூல்களில் உள்ள சில முறைகளை மாற்றி எழுதி அமைத்தனர்[2]. தேவதைகளும் மாற்றப்பட்டு, புதிய தேவதைகள் உண்டாக்கப்பட்டன. அவற்றிற்கு பெயர்கள், குணாதிசயங்கள், பலன்கள் சேர்க்கப்பட்டன. வேகமாக, துரிதமாகவும் உடனடியாக பலன்களை பெறுவது எப்படி என்று, புராணங்களில் உள்ளவற்றைத் தொகுத்து மாற்றினர், இதைசெருகல்களும் செய்தனர். அரக்கர்கள் பல காலங்களில் அத்தகைய கிரியைகளை செய்ததை தொகுத்து, மாற்றி, தகவமைத்துக் கொண்டனர். எதிரிகளை வெல்ல ஏன், அவர்களைக் கொல்லவும் கிரியைகளை மேற்கொண்டனர். அந்நிலையில் வாமாசார முறைகள் உண்டாக்கி, தீவிரமாகி, மந்திர முறைகள், தந்திர முறைகளால்-கிரியைகளால் சீரழிந்தன[3]. அவற்றை மக்கள் அறிந்த போது தான், அவர்கள் ,அட்டுமல்ல, அவர்களது முறைகள்-கிரியைகள் மற்றும் தேவதைகளும் ஒதுக்கப் பட்டன. ஹரிதி, ஹரினி, அலக்ஷ்மி, ஜேஸ்டா, மூதேவி போன்றவை ஒதுக்கப்பட்டன. சப்தமாதர்களில் தேவதைகள் மாறியது, காலபைரவர்-விநாயகர் நீக்கப்பட்டது-சேர்ந்தது, முதலியவற்றை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

09-09-2018

Child grabbing Hriti, GAndhara

[1] பிக்குனிகள், சங்கத்தில் சேர்ந்த பிறகு, வெளியேருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். அவ்வாறு அவர்கள், சங்கத்தைத்துறப்பது என்றால், தமது முடிவை “மூன்று முறை” அறிவிக்கவேண்டும். ‘சந்தகாலி’, என்ற பிக்குனியின் வெளியேற்றம் மற்றும் இதர பெண்களின் வெளியேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிக்குனிகள் சந்நியாசி வாழ்க்கையினைத் துறந்து, மறுபடியும் இல்லறத்தில் புகுந்ததாகத் தெரிகிறது. இதைத்தவிர, சங்கத்தைத் துறந்து செல்லும் மற்றொரு முறையும் இருந்தது. அது தற்கொலை செய்து கொள்வதுதான். சிஹா என்ற பிக்குனியின் தூக்குப்போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பு உள்ளது. டி லா வல்லி பௌஸின் என்பவர், எப்படி சில பிக்குகள் தமது கழுத்துகளை அறுத்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகின்றார். de la Vallee Pousin, Nirvana, Paris, 1925, p.22.

https://buddhismstudies.wordpress.com/2017/05/11/dedradation-of-monastaries-due-to-admission-of-women-and-the-consequences/

[2] N. N. Bhattacharya, History of the Tantric Religion (A Historical, Ritualistic and Philosophical study), Manohar, New Delhi, 1987.

[3] K.V.Ramakrishna Rao, A Study of Role of Women in Jaina Mantra, Tantra and Yantra, A paper presented at the UGC sponsored National Seminar on women and Jainism held at the Acharya Nagarjuna University on February 11th  and 12th, 2012

https://kvramakrishnarao.wordpress.com/2012/02/15/a-study-of-role-of-women-in-jaina-mantra-tantra-and-yantra/

https://www.scribd.com/document/139524737/A-Study-of-Role-of-Women-in-Jaina-Mantra-Tantra-and-Yantra-K-v-Ramakrishna-Rao

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? தமிழ் இலக்கிய சான்றுகள் தொன்மையினை காட்டுகின்றனவா [5]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? தமிழ் இலக்கிய சான்றுகள் தொன்மையினை காட்டுகின்றனவா [5]

Valluvar, Ovvai- chronology

தமிழ் இலக்கியங்களில் மூதேவி, முகடி: சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( ‘கரிய சேட்டை ஆகிய மூதேவி’), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்[1]. “சங்க இலக்கியம்” என்றாலும், செய்யுள் குறிப்பு கொடுக்கவில்லை. சரி பார்க்கும் போது இவ்வாறாக உள்ளது.

பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு           (சிலம்பு.15:80),இங்கு தாய் என்ற பொருளில் பிரயோகம் உள்ளது.

 

கீழ்கண்ட குறிப்புகளில், தமக்கையைக் குறிப்பதாக உள்ளது:

 

‘தவ்வையைக் காட்டி விடும் |       (குறள்.167)

 

இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற   100

தவ்வையும் தாயும் தழி இயினர். (பெருங்கதை, 1, 33)

 

தவ்வை ஆயினும் தாயே ஆயினும் (மகதம், 14)

 

தவ்வையும் தோழியும் கண்ணினர். (சீவகசிந்தாமணி,1837)

தவ்வையர் ஆகிய தாரையும் விரையும், (மணிமேகலை)

முகடி தெளவை கலதி மூதேவி, (பிங்கலங்கை நிகண்டு)

 

மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருத வேகனோடு இந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்   ……………………மணிமேகலை.105

 

‘கலம்புரி அகவல் குல் தாயர் தவ்வையர்’    ……….(சீவக சிந்தாமணி. :184)

 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே – மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்[2].
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள், என்ற திருவள்ளுவர் குறளும்.

 

‘அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்’ (திருக். 167)

அவ்வை பெரியவள் மூத்தவள் – அக்கை

தேவாரம், ஏழாம் திருமறையில் “தவ்வை”, தாய் என்ற பொருளில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது[3].

பித்தரை ஒத்தொரு பெற்றியர் கற்றவை என்னைப் பெற்ற,

முற்றவை கம்மனே தந்தைக்குத் தவ்வைக்குங் தம்பிராளுர்,

செக்திவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில்,

அத்தவம் ஆவ அறிந்தோமேல் சாம்இவர்க் காட்படோமே. – – 7

கவ்வி வீழ்ங்தென நாடக மயில் துயின் றென்னக்

கவ்வை கூர்தாச் சனகியாம் கடிகமழ் கமலத்து

அவ்வை நீங்கும் என்று அயோத்திவங் தடைந்த அம்மடங்தை

தவ்வை யாம் எனக் கிடந்தனள் கேகயன் கனேயை. (இராமா, மக்கரை, 88) , இவ்வாறுள்ளவை மூதேவியின் பழமையைக் கூறுகின்றன என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

Tavvai, Kodumbalur, Pudukkottai

குறிப்பிட்ட இலக்கிய சான்றுகள் சங்ககாலத்திற்கு ஆதாரமாகாது: குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும். அதாவது, இங்கு திருவள்ளுவரை முதல் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வைக்கும் ஆராய்ச்சிகளை வசதியாக மறைந்து விடுவர். இப்பொழுது 9-11ம் நூற்றாண்டுகள் வரை நீட்டிக்கிறார்கள். அவ்வையார் / ஔவையார் என்றால் யார் என்பது, தமிழருக்கு இன்னும் பரியவில்லை. மூன்று / நான்கு ஔவையார்கள் உள்ளதாக அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்[4]. ஔவையார் விநாயகர் அகவல் பாடியதால், சங்ககாலத்தில் விநாயகர் இருந்தார் என்று ஒப்புக் கொள்வார்களா?  பிறகு, வாதாபி கொண்டான் பிறகு ஔவையார் வருவாரா? குறள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் முதல் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை காலம் கணித்துள்ளார்கள். ஆகவே, அக்காலத்தை இலக்கிய சான்றுகள் சங்க காலத்திற்கு ஆதாரமாகாது.

Kalabhra interrengnum - gap in Tamil history upto 600 CE

ஜைனபௌத்தர்களினால் ஏற்பட்ட பாதிப்புகள்: ஜைனர்கள் இடைக்காலத்தில், தென்னிந்தியாவில் வலுவாக இருந்தனர் என்பதை, இந்த தமிழாராய்ச்சியாளர்கள் மறந்து விடுகின்றனர். “களப்பிரர்களையும்” மறந்து விடுகின்றனர்[5]. மேலும், தமிழ் மன்னர்களே 6-10ம் நூற்றாண்டுகளில் ஜைனர்களாக / சமணர்களாக இருந்து, சைவகளாக மாறுகின்றனர். சைவர்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களுடன் வாதித்ததை, சைவ நூல்களே, திருமறைகளே எடுத்துக் காட்டுகின்றன. ஜைனர்கள் அரசர்களின் ஆதரவுடன், சைவ குருமார்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து வந்தனர். மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களையும் செய்தனர். அவற்றையெல்லாம் மீறி, சைவர் பௌத்தர்களையும், ஜைனர்களையும் வெற்றிக் கொண்டனர். குறிப்பாக, ஜைனர் பெரும்பாலான, இந்து தேவதைகளை கோவில்களில் வைத்துக் கொண்டு மூலவரை மட்டும் மாற்றியமைத்தனர். அதாவது சிவலிங்கத்தை எடுத்து விட்டு, மகாவீரர் சிலைகளை வைத்தனர். சைவர் ஆதிக்கத்திற்கு வந்தததும், அச்சிலைகளை எடுத்து விட்டு, லிங்கத்தை மறுபடியும் வைத்தனர். இதனால் தால், தமிழகத்தில் பல இடங்களில் மகா வீரர், லிங்கம் மற்றும் லிங்கப் பகுதிகள் கிடக்கின்றன.

Kalabhra Jains acting against Tamils upto 600 -1000 CE

1311ல் மாலிகாப்பூர் படையெடுப்பினால் சீரழிந்த நிலை: பிறகு மாலிகாப்பூர் படையெடுப்பின் போது, ஏகப்பட்ட கோவில்கள் சூரையாடப் பட்டன. பாண்டிய மன்னர்கள் தாம், துலுக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். அதனால் தான், சில காலம், மதுரையில் சுல்தான்கள் ஆட்சி இருந்தது, பிறகு, விஜய நகர, நாயக்க, மராட்டிய ஆட்சிகள் ஏற்பட்ட போது, கோவில்கள் புனர் நிமாணம் செய்யப் பட்டன. அப்பொழுதெல்லாம், எல்லாமே முறைப்படி / ஆகமங்கள் படி செய்யப்பட்டன என்று சொல்லமுடியாது. பல கோவில்களில் லிங்கங்கள் மேற்கு பார்த்து இருக்கின்றன. இதற்கெல்லாம் எந்த ஆகம சாத்திரமும் விளக்கம் கொடுக்க முடியாது. அதே போலத் தான், பரிவார தேவதைகள், சப்தமாதர் போன்ற பெண்தெய்வ சிலைகள் பாதிக்கப் பட்டன. ஜைனர்களின் மந்திர-தந்திர-யந்திர கிரியைகளினால், நல்ல தேவதை மற்றும் கெட்ட தேவதை / துர்தேவதை போன்ற பிரிவுகள், விளக்கங்கள் உண்டாகின. தாக்கும் தேவதைகள் என்று கருதப்பட்டு, நம்பியபோது, அத்தகைய தெய்வசிலைகளை புதைக்கவும் செய்தனர். அதனால், அரைகுறையாக புதைக்கப்பட்ட ஜேஸ்டா தேவி சிலைகளையும் பாற்கலாம். இப்ப்பொழுது, உக்கிரமான் பிர்த்யங்கிரா தேவி போன்றவை வழிபாட்டிற்கு வந்துள்ளன, உண்மையான உபசாகர்கள், இதனை ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஆதரிக்கவும் மாட்டார்கள். ஆனால், கேட்டது கிடைக்கும், உடனடியாக பலன் கிடைக்கும் என்ற ரீதியில் அவை பிரபலப் படுத்தப் படுகின்றன, பக்தி என்பதி விட, பலன் அதிலும், உடனடியான பலன் கிடைக்கும் என்ற பேராசையில் மக்கள் கூடுகின்றனர். என்ன பலன் கிடைத்தது, கிடைக்கவில்லை என்பதை அவர்கள் தாம் சொல்லவேண்டும். ஒருவேளை எதிர்மறை விளைவு ஏற்பட்டால், அச்சிலைகள் ஒதுக்கப் படும், அப்பொழுது அவ்வற்றை மூதேவி என்பார்களா அல்லது வேறு பெயரிடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

Date of Valluvar, Ovvai, Sangam period etc..

சாமுண்டா, சண்டிகா, சர்மமுண்டா போன்ற பெயர்கள் சமஸ்கிருத தேவி பாகவத்தில் உள்ளன: பெண் தெய்வம் பற்றிய மூலங்கள், குறிப்பிட்ட பெயர்களுடன் சமஸ்கிருத நூல்களில் தான் காணப்படுகின்றன. அவை வேதகாலத்திலிருந்து இதிகாச-புராணங்கள் காலம் வரை, அதாவது சுமார் 2500 BCE முதல் முதல் நூற்றாண்டுகள் வரை தேதியிட்டு வழக்கத்தில் உள்ளன. கருவுற்றல், குழந்தை பிறப்பு, வளர்ப்பு போன்றவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ளன. சிந்துசமவெளி முத்திரை உருவங்களிலிருந்து சப்தமாதர் போன்றவை 2250-1950 BCE காலகட்டத்லேயே இருந்துள்ளது மெய்ப்பிக்கப் படுகிறது. ரிக்வேத குறிப்புகளிலிருந்து பெண் தெய்வங்கள்[6]

  1. பூமியில் உள்ளவை
  2. ஆகாசத்தில், காற்றில், வளி மண்டலத்தில் உள்ளவை
  3. ஒளி, வெளிச்சம் முதலியவற்றுடன் சம்பந்தப் பட்டவை.

என்று அக்ரவாலா போன்றோர் பிரிக்கின்றனர். அதிதி, பிருத்வி, நிரிதி, உசாஸ், அம்பிகா, ஶ்ரீலக்ஷ்மி, சரஸ்வதி, பாரதி, இல, சினிவல்லி, அனுமதி, ஹ்ரீ,  புஸ்தி, பூதி, சீதா, மாயா, உமா, சசி என்ற பெயர்கள் குறிப்பாக சொல்லப்பட்டுள்ளன. பிறகு மஹாபாரதத்தில் அதிகமாக விவரிக்கப் படுகின்றன. புராணங்களில் மேலும் விவரங்களுடன், கதைகளுடன் காணப்படுகின்றன. ஆனால், தமிழ் இலக்கியங்களில் அவை இல்லை, சொல்லப்படவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகு தான், அத்தகைய பெயர்கள் காணப்படுகின்றன. சமஸ்கிருத நூல்கள் ஆதாரமில்லாது, இவ்விசயங்கள் பற்றி ஒன்றையும் எழுத முடியாது. தமிழில் எழுதப்பட்டதை வைத்து, அதனை தமிழிலுள்ள வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, எல்லாமே தமிழ் தேவதை, கடவுள் என்றெல்லாம் விளக்கம் கொடுப்பது அபத்தமானது. ஆராய்ச்சி என்றால், எல்லா மூலங்களையும் படித்து எழுத வேண்டும், சில புத்தங்களைப் படித்து, தொகுத்து, காப்பி அடித்து எழுதி வெளியிடுவது ஆராய்ச்சி ஆகாது. தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அச்சில் வரலாம், ஆனாக், உண்மையாகாது. அதனால் தான், இக்கதைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களும் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

09-09-2018

Aryan versus Dravidian goddess

[1] சமயம், தமிழர் தெய்வம் மூதேவி வழிபாடு.!, விகடனில் வந்ததை அப்படியே போட்டுள்ளது, இந்த இணைதளம்.

[2] வள்ளுவர் குறிப்பிட்ட தவ்வையும், ஒவ்வை சொன்ன மூதேவியும் ஒன்றா என்று கவனிக்க வேண்டும். தவ்வை, வள்ளுவருக்கு முன்னால் ஏன காணப்படவில்லை என்பதகும் பதில் சொல்லியாக வேண்டும். வள்ளுவர் குந்தர்குந்தர் நூலைத் தான், தனது நூலாக பரப்பி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல், ஜைனர் எழுதி வந்தாலும், இரு கூட்டமும் சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் பிரச்சாரம் செய்கின்றன என்று தெரிகிறது.

[3] அதாவது சைவத்தில், தவ்வை என்ற வார்த்தை மதிப்புடன் உபயோகிக்கப் பட்டது என்றாகிறது. தமிழ் எழுத்தாளர்கள் இதனையும் கவனிக்க வேண்டும்.

[4] மபொசி, ஔவை யார்?, அமுத நிலையம், சென்னை,

[5] ஒரு புறம் களப்பிரர்கள் தாம் தமிழ் கலாச்சாரம், நாகரிகம்,பண்பாடு, இலக்கியம் எல்லாவற்றையும் அழித்து விட்டனர் என்றும் எழுதியுள்ளனர். அவர்களது அரசியல் தாக்கம் சாளுக்கியர்களுக்குப் பின்னரும் தெரிகிறது.

[6] Indira S. Iyer, Durga as Mahisasuramardini – A Dynamic myth of Goddess, Gyan Publishing House, New Delhi, 1997, pp.110-115.

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? நம்பிக்கையா-பகுத்தறிவா, ஆரிய-திராவிட போராட்டமா [4]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? நம்பிக்கையா-பகுத்தறிவா, ஆரிய-திராவிட போராட்டமா [4]

Ramalinga Vallalar and Jyesta Devi

மூதேவி வாசம் செய்யும் இடங்கள் எவை? விலக்க என்ன செய்யவேண்டும்?[1]: அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட தூங்கக்கூடாது என அருளியுள்ளார். வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும். இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும். சில நிறுவனங்கள், கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும். அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம். துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல்(இன்றைய கல்லூரி மாணவிகள் விடுதிகளில் தினமும் செய்வது), எதிர்மறையான எண்ணங்கள் (அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது, தவறான ஆலோசனை தருவது) அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும். மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்க வேண்டியவை: தீபம், தூபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் (பசுவின் சிறுநீர்)[2]. அழுக்கு, நாற்றம், துன்பம், புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது[3].

Vadalur Sabai, yantra shape - aerial view

இராமலிங்க அடிகள், மூதேவி, பகுத்தறிவு: இராமலிங்கள் அடிகள் காலம் 1823-1874 ஆகும். மந்திர-யந்திர-தந்திரங்களில் அதிகமாக நம்பிக்கைக் கொண்டு சித்துவேலைகளை செய்து வந்தார். ரசவாதம் போன்ற வித்தைகளில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர், பல தேவதைகளை வழிபட்டு வந்தார். அந்நிலையில் ஜேஸ்டா தேவி பற்றியும் குறிப்பிடுகிறார். அவரது பாடல்களில், “மந்திர-யந்திர-தந்திர” வார்த்தைகளை சேர்த்தே குறிப்பிட்டுள்ளார்:

மதிவளர் மருந்தே மந்திர மணியே – 3916

மவுனமந் திரமே மந்திரத் தாற்பெற்ற மணியே – 3918

வழுத்தா நின்ற மந்திரங்க ளானானை – 3940

மருந்தைமா மந்திரந் தன்னை – 3956

 மந்திரஆ தரமாய் வல்லதுவாய் – 3990

வயங்குஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே – 4109

எண்ணாத மந்திரமே எழுதாத மறையே – 4144

ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – 4145

மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் – 4150

மந்திர யந்திர தந்திர பாதம். – 4324

ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் – 4433

மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர் – 4491

மந்திர மணி, மந்திரத் தாற்பெற்ற மணி, வழுத்தா நின்ற மந்திரங்கள், மவுனமந்திரம், மந்திர ஆதாரம், வயங்குஒளி மணி, வண்ணாத மந்திரம், ஏசாத மந்திரம், மந்திர யந்திர தந்திர பாதம்….போன்ற குறிப்பான சொற்கள், சொற்றோடர்கள் மற்றும் அவரைப் பற்றி வழங்கி வரும் கதைகள் அவரது “மந்திர-யந்திர-தந்திர” பிரயோகங்களை எடுத்துக் கட்டுகின்றன. இவர் காலத்தில் வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள் [1848-1929], அவரும் “மந்திர-யந்திர-தந்திர” பிரயோகங்களில் ஈடுபட்டவர். 1874ல் அடிகள் மறந்த போது, இவருக்கு வயது 26, ஆகவே, அவரது கிரியைகள் பற்றி அறிந்திருந்தார, சந்தித்தாரா என்று தெரியவில்லை.  பாம்பன் சுவாமிகள் காலமானபோது, ஈவேராவுக்கு 50 வயது. ஆக, இந்த பகுத்தறிவு அவரை ஏன் கலாட்டா செய்யவில்லை என்று தெரியவில்லை.

Aryan versus Dravidian goddess

மூதேவி வழிபாடு மறைந்ததற்கு பார்ப்பனர் தான் காரணம்: அவ்வளவு தான், ஆதாரங்கள் இல்லாமல், தமிழர் தெய்வம் மூதேவி, ஆரியர் / பார்ப்பனர் ஶ்ரீதேவியை நுழைத்து, மூதேவியை மறைத்து விட்டனர், மூதேவி வழிபாடுதான் முதன்மையானது ஏன்றெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டனர். ஆதியில் காளிக்கு அடுத்து இந்த தவ்வை வழிபாடே முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது[4].  இவர் சனியின் மனைவி என்றதால், சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள், இந்த ஜேஷ்டாதேவி எனும் தவ்வையை வணங்கி வந்தால், சனி பகவானின் நன்மைகள் நம்மை வந்தடையும்[5]. சரி, சனி எல்லாம் கூட தமிழர் தெய்வம் ஆகுமா? அதுவும் சங்க இலக்கியங்களில் உள்ளதா? ஆக இப்படியெல்லாம், எதையோ மனங்களில் வைத்துக் கொண்டு, ஆராய்ச்சி செய்தால், எந்த பலனும் இல்லை.

Jyesta Devi, Sivan Temple, Koduvay, Tiruppur

தமிழகத்தில் ஜேஷ்டா தேவி உள்ள கோவில்கள்: திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை “உஜ்ஜீவநாதர்’ (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம்; குளித்தலை கடம்பவனநாதர் கோயில் – திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் – திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் – சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் – திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் – கோயிலுக்கு வெளியே பிள்ளையார், நவக்கிரக சன்னதி அருகே உள்ளது. பெரணமல்லூர் திருக்கரேசுவரர் கோயில், ‘தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய’தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன[6]. தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்[7].

Muttal- Jyeshta Devi in Vellore - State Government Museum - 9th Century CE

10ம் நூற்றாண்டா, 13ம் நூற்றாண்டா என்ற குழப்பம்: ‘சேட்டை’ மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 – ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.  13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. ஆனால், முன்னர், ஆனால், தென்னகத்தில் 7-8 CE நூற்றாண்டுகளில் பிரபலமானாலும், 10ம் நூற்றாண்டிலேயே மறைந்து விடுகிறது[8] என்று பார்த்தோம். ஆக, இக்குழப்பம் ஏன் என்றும் கவனிக்க வேண்டும். இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று. தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார்[9]. நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

09-09-2018

 Sri Jyeshta Devi lay buried (upto the neck) on the western bank of Sri Kapali Temple tank, now on the ground.

 

[1] மாலைமலர், மூதேவி வாசம் செய்யும் இடங்கள் எவை? , பதிவு: ஜூலை 29, 2016 12:45

[2] https://www.maalaimalar.com/Devotional/Worship/2016/07/29124511/1029123/which-places-stay-in-mudevi.vpf

[3] மாலைமலரில் வந்த இது, மற்ற இணைதளங்களிலும் காணப்படுகிறது. அப்படியே “கட்-அன்டு-பேஸ்ட்” வேலை செய்திருக்கிறார்களே தவிர, அதைத் தாண்டி, உண்மை அறிய வேண்டி எதையும் செய்யவில்லை.

[4] தமிழ்.வெப்துனியா, வணங்கக் கூடாத தெய்வமா, மூதேவி?,

[5] http://tamil.webdunia.com/article/special-astro-predictions/do-not-you-be-worshiped-why-118052600028_1.html

[6] விகடன், தமிழர்களின் மூத்த தெய்வம்வளத்தின் மூல வடிவம்மூதேவி!, இரா செல்வகுமார், Posted Date : 16:47 (09/10/2017)Last updated : 16:47 (09/10/2017)

[7] https://www.vikatan.com/news/spirituality/104480-glory-of-goddess-moodevi.html

[8] Jyestha appears in the Hindu tradition, as early as 300 BCE. Her worship was at its peak in South India in the 7th-8th century CE, but by the 10th century, her popularity waned pushing her into oblivion.https://en.wikipedia.org/wiki/Jyestha_(goddess)

[9]விகடனில் வந்த கட்டுரையை இத்தளம் வெளியிட்டுள்ளது https://tamil.samayam.com/photogallery/astrology/story-of-goddess-moodevi-/photoshow/61272020.cms

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

Ellora cave saptamatrika sculptures

சப்தபாதருடன் இணைப்பது: ஜெயமோகன் கண்டது, “இரவு அவளுக்கான நேரம் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார், அண்ணாமலையார் சதகத்தை[1] ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார். இந்தியாவெங்கும் இருந்த வழிபாட்டுமுறை மெல்ல சமணத்துக்குள் நுழைந்து சமண தத்துவ மையத்தின் அங்கீகாரம் இல்லாத ஒரு சிறுவழிபாடாக நீடித்தது. சமணம் அழிந்தபின் சாக்த மதத்துக்குள் நுழைந்தது. பின்னர் சக்திவழிபாட்டில் கரைந்து தன் தனித்தன்மையை இழந்தது. இருந்தாலும், கேரளத்தில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக ஏழன்னையர் உள்ளனர்”. ஜெயமோகன் குறிப்பிட்ட அபிதான சிந்தாமணி, சிங்காரவேலர் முதலியாரால், 1910ல் தொகுத்து வெளியிடப்பட்டது[2]. அண்ணாமலையார் சதகம், திருச்சிற்றம்பல நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. அதையும் முதலியார் குறிப்பிட்டார் என்கிறார் ஜெயமோகன். இதிலிருந்து, இவரும் மூலங்களைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், அவரது கருத்தும் அவ்வாறே சுருங்கி விடுகிறது.

Chronology important for studying Mudevi in Tamilnadu

செத்த பாடையும், புதிய கதைகளும்: சமஸ்கிருதத்தை, “செத்த பாடை” என்பர், ஆனால், அதை வைத்து தான், இவர்கள் கதை பேசுவர். அதாவது சமஸ்கிருத நூல் ஆதாரங்களை வைத்து தான், இவர்கள் தமிழின் தொன்மை முதலியவற்றைப் பற்றி பேசுவர். சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். 16-18ம் நூற்றாண்டுகளில் உண்டான கதைகளை வைத்து எல்லாவ்வற்றையும் இணைக்கப்படுகிறது. தமிழில் மூத்த தேவி என்ற பெயரானது வழங்கப்பெற்று, அது மருவி மூதேவி என்று அழைக்கப்படுகிறது. தவ்வை காக்கை கொடியினையும், கழுதை வாகனத்தையும் உடையவர். இதற்கான ஆதாரங்கள் பதம புராணம், லிங்க புராணம் முதலியவற்றில் காணப்படுகின்றன. தமிழில் கம்ப ராமாயணத்தில் பாற்கடை கடையும் போது தோன்றுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. கைகளில் துடைப்பம் கொண்டுள்ளார். சில சிலைகளில் தவ்வை தனித்தும், மற்ற சிலைகளில் தன்னுடைய மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் உள்ளார். மாந்திக்குப் பதிலாக தவ்வையின் மாமியார் சாயாதேவியும் சில சிலைகளில் இருக்கிறார். வடக்கில் மூத்த சகோதரி / ஜேஸ்டா தேவி வழிபாடு  300 BCE லேயே இருந்துள்ளது, ஆனால், தென்னகத்தில் 7-8 CE நூற்றாண்டுகளில் பிரபலமானாலும், 10ம் நூற்றாண்டிலேயே மறைந்து விடுகிறது[3]. ஆகவே தமிழகத்த்தில் எப்பொழுது உண்டானது என்பதனை காலரீதியில் எடுத்துக் காட்ட வேண்டும். இந்த 1300 ஆண்டுகள் இடைவெளி ஏன் என்றதும் நோக்கத் தக்கது.

Child grabbing Hriti, GAndhara

தவ்வை வழிபாடுதமிழ் எழுத்தாளர்கள் விளக்கும் விதம்: தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆனால் எவ்வளவு காலம் என்று சொல்ல மாட்டார்கள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார். பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார்[4]. ஆனால், பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.

Tavvai, Kumbakonam, Tanjore

 

ஆரியதிராவிட இனரீதியிலான ஆராய்ச்சிகள், சித்தாந்தம் முடிவைத் தருமா?: பல்லவர் காலம் 275-897 CE ஆகும், அப்படியென்றால், இக்காலகட்ட்த்தில் இருந்த தவ்வையும்,தமிழர்களின் தவ்வையும் ஒன்றா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் / திராவிட எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் சித்தாந்திகள் பல்லவர், சோழர் முதலியோரை, ஆரியர், வந்தேறிகள், பார்ப்பனர் கைக்கூலி……என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர். பிறகு,  அவர்களது வழிபாட்டை ஏன் குறிப்பிடவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. பல்லவர்களின் குலதெய்வம், தமிர்களின் / திராவிடர்களின் மூத்த தெய்வமாக எப்படி, எப்பொழுது, ஏன் மாறியது என்று சொல்ல முடியுமா? சரித்திர ஆதாரங்கள் பிற்காலத்தைக் காட்டும் போது, முற்காலத்தில் தொன்மையினை எடுத்துச் செல்வது எவ்வாறு? மேலும், மூலங்களுக்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து, விளக்கங்களைப் பெற்று, எல்லாமே தமிழ் என்றால் என்ன ஆராய்ச்சி? ஆரியர்-திராவிடர் என்று கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வதால், உண்மையான தீர்வகளும் கிடைக்காது, முடிவுகளும் கிடைக்காது.

Tavvai, Karunilam, Chingleput
மூதேவிக்கு உள்ள கோயில்கள்: தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாமில், கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. மூதேவி தனிழர்களது தெய்வம் என்றாலும், தமிழகத்தில், தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை[5]. தவ்வை தனியாகவோ, மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. அதனால் எண்ணிக்கையும் சொல்லமுடியாது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார். ஆமாம், சில இடங்களில்! நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது[6]. திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.

Tavvai, Kattupputtur

மூதேவி ஆராய்ச்சியில் கீழ்காணும் காலநிலையை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்:

  1. சங்ககாலம்500 / 300 BCE முதல் 100 / 300 CE வரை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருங்கற்காலம் c.1000 BCEலிருந்து தொடர்கிறது.
  2. பல்லவர்காலத்திற்கு முன்பு [275-897 CE] முழு அளவில் சிற்பங்கள், கோவில்கள் முதலியவை தமிழக்த்தில் இல்லை.
  3. ஆக முதல் நூற்றாண்டுகளில், களப்பிரர்களால், இருந்த கொவில்கள் எதையேனும் அவர்களால் அழிக்கப் பட்டனவா என்று ஆராயவேண்டும். அவர்கள் ஜைனர்கள் எனும்போது, தமிழகத்தின் சரித்திரம் தனியாகப் பார்க்க னுடியாது,
  4. சோழர்காலத்தில் முழுமையான கோவில்கள் கணப்படுகின்றன. ஆகம சாத்திரங்களின் படி, பிரகாரங்கள், மூர்த்திகள் / விக்கிரங்கள் அமைக்கப் படுகின்றன.
  5. விஜயாலய, நாயக்கர் காலங்களில், கோவில் கட்டிடக்கலை சிறப்புற்று, எல்லா கோவில்களும் புதுப்பிக்கப் பட்டன, புனர் நிர்மாணம் செய்யப் பட்டன.

மூதேவி ஒரு அனுக்கிரக தேவதை, இப்படி சொன்னாலும், விடுவார்களா, தமிழ் ஆராய்ச்சியாளர்கள்? இதோ, இதையும் படியுங்கள்.

© வேதபிரகாஷ்

08-09-2018

Tavvai, Kattupputtur.with varahi

[1] சதகம் – நூறு பாடல்கள் கொண்ட இலக்கிய தோற்றம் 18-20 நூற்றாண்டுகளில் உண்டானது. காசுக்காக, தமிழ் பண்டிதர்கள், பலவித நபர்கள் பெயரில் சதகங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி உருவக்கினார்கள். ரப்பிச்சதகம், அப்துல்றகுமானிற்றகீம்சதகம், இயேசுநாதர்சதகம், என்றெல்லாம் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] ஆக 19-20ம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்டதை வைத்து, ஜெயமோகன் போற்றோர் எழுதியதை, சரித்திர ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக் கொள்ள முடியாது.

[3] Jyestha appears in the Hindu tradition, as early as 300 BCE. Her worship was at its peak in South India in the 7th-8th century CE, but by the 10th century, her popularity waned pushing her into oblivion.https://en.wikipedia.org/wiki/Jyestha_(goddess)

[4]ஆனால், வடக்கில் அதற்கு முன்பே இருக்கிறது. ஆகவே, ஆரியர் அல்லது திராவிடர் யார் மூலம், இவ்வழிபாடு தமிழகத்தில் புகுந்தது என்பதனை தமிழ் எழுத்தாளர்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.இல்லையெனில், அத்தகைய இனவாகக் கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு, காலம் தள்லிக் கொண்டிருந்தால், வரலாற்று அசிரியர்கள் மதிக்க மாட்டார்கள், இப்படியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.

[5] அப்படியென்றால், ஏனில்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும், “தமிழரது மூத்தத் தெய்வம்” என்றால், அகழ்வாய்வு, சரித்திர ஆதாரங்களும் இருக்க வேண்டும். வார்த்தைகளினால், எழுத்துகளினால் இருந்தால் போதாது. யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

[6] கருதப்படுகிறது என்றாலும், அதற்கு முந்தைய சிற்ப-வரலாற்று ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை.

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? சேட்டை செய்யும் தமிழ் எழுத்தாளர்கள் [2]

செப்ரெம்பர் 11, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? சேட்டை செய்யும் தமிழ் எழுத்தாளர்கள் [2]

Sridevi and Dharidhra devi-Vishnu

முதல் தேவியை சிவனும், இரண்டாவது தேவியை விஷ்ணுவும் ஏற்றுக் கொண்டனர்: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார்[1], “இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, “தூம்ர காளிஎன்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள்சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், “முதல் தேவிஎன்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது[2].

Jhesta - Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

அழுக்கை நீக்குபவள், கழுதைவாஹினி[3]: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார் “தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர். கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள். இந்த காரணத்தினால் தான், சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன[4].

Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

ஜேஸ்டை தான் சேட்டை[5]: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார் “இன்னும் சொல்லப் போனால், “ஜேஷ்டாஎன்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது[6]. காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை,” என்று முடிக்கிறார்[7].

Dasa Maha Vidya - 10 Devis-Shiva

தசமகா வித்யா / வித்தைஎன்றால் என்ன, அதன் நிலை என்ன?: தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மூலங்களைப் படிக்காமல், அடுத்தவர் எழுதி வைத்ததை எடுத்தாண்டு, குறிப்பிட்டு, ஏற்கெனவே ஒரு முடிவை தீர்மானித்து வைத்துக் கொண்டு எழுதி முடிப்பது தான். “தசமகா வித்யா” என்றால், ஏதோ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் எழுதப் பட்டது, தமிழர்களால் “தமிழகத்தில்” பின்பற்றப்பட்டது என்று நினைப்பது தவறு. ஜைன-பௌத்த தாந்திரிக கிரியை முறைகளில் பல தேவியர் உருவாக்கப்பட்டனர், மந்திரங்களினால் உச்சாடனம் செய்யப்பட்டனர். இத்தேவதைகள் குப்தர் காலத்திலிருந்து இடைகாலங்களில் சக்தி உபாசகர்கள் தங்களது வழிபாட்டில் தகவமைத்துக் கொண்டனர். துலுக்கர் காலத்தில், துலுக்க்ச்ரும் இதில் நுழைந்ததால் 18ம் நூற்றாண்டு வரை இதன் தாக்கம் தெரிகிறது. அதாவது, c. 1000 BCE முதல், முதல் நூற்றாண்டுகள் வரை மற்றும் 6th cent CE முதல் 18ம் நூற்றாண்டு CE வரை, இரு காலகட்டங்களில் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் “மஹா நிர்வாண தந்த்ரா” போன்ற போலி-நூல்களும் எழுதப்பட்டன. அதில் ராஜாராம் மோஹன் ராய் போன்றோரும் துணையாக இருந்தனர். ஆகையால், சரித்திரத்தை முழுமையாகப் படிக்காமல், “தமிழ், தமிழர், தமிழகம்” என்று வட்டம் போட்டுக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால், உண்மையினை அறிய முடியாது.

Tamil or Sanskrit Devi-names

தமிழில் எல்லா தேவியரும் ஒன்றுதான்: தமிழ் எழுத்தாளர்கள் எல்லாவற்றையுமே தமிழில் படிப்பதில் வல்லவர். மூதேவி ஆராய்ச்சி இதனை காட்டுகிறது. மூத்த தேவியாக்கி, சனீஸ்வரனின் மனைவியாக்கி எங்கெங்கோ கொண்டு செல்கின்றனர். அக்காவைக் குறிக்கும் சொல்லான ‘அக்கை’ என்கிற வார்த்தை எப்படி ‘தமக்கை’ ஆனதோ, அதேபோல் ‘அவ்வை’ என்ற வார்த்தை ‘தவ்வை’ ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள்[8].  மூன்று தேவி, முழுமையான தேவி, போன்றவை முதேவி ஆகி, மூதேவி ஆகி இருக்க முடியாதா? இக்கால தமிழ் எழுத்தாளர்கள், மூதேவியை நன்றாகக் குழப்பி விட்டுள்ளனர் என்பதை அவர்களது எழுத்துகளிலிருந்தே அறிய முடிகிறது. தவ்வை, ஜேஸ்டா, சேட்டா, சேட்டை, மாமுகடி, முகடி, மோடி, மூத்ததேவி, பழையோள், தூமாவதி, காக்கைகொடியோள், தூம்ரவராஹி, தூம்ரகாளி, மாயை, மஹாநித்திரை, ஏகவேணி, ஒற்றைச் சடையாள், என்று பலவாறு குறிப்பிடுகின்றனர். மூதேவி = மூத்த தேவி, அதனால், லக்ஷ்மிக்கு அக்காள் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். போதாகுறைக்கு, திருமாலின் மனைவி நீளா தேவியைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது என்று நீடியுள்ளனர். தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Tamil or Sanskrit Devi-names-Mudevi, Dhumra Devi

சேட்டைமூதேவி வழிபாடு சமணத்தில் இருந்து சாக்தத்தில் நுழைந்து மறைந்தது: இப்படி ஜெயமோகன் சமணத்தின் தாக்கத்தை ஒப்புக்கொண்டதில் ஓரளவிற்கு சரித்திர விசயத்துடன் ஒத்துப் போகிறார்[9]. அவர் எழுதியுள்ளதாவது, “சாக்த மத நூலான போதாயனஸூத்திரத்தில் இந்த தேவியை எப்படி பூசைசெய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது, இந்த தேவியின் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லும் வெட்டம் மாணி தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருபாடலில் மூதேவியை வழிபடுவது வீண் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் ஜேஷ்டை வழிபாடு அனேகமாக காணப்படுவதில்லை[10], சைவ புராணங்களில் ஜேஷ்டை பார்வதியின் ஒன்பது தோற்றங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறாள் என்கிறார் வெட்டம் மாணி. அபிதான சிந்தாமணி, இவள் முதலில் ஆதிசக்தியில் அவளுடைய ஒரு தோற்றமாகப் பிறந்து பின்னர் திருப்பாற்கடலில் தோன்றியவள் என்கிறார் சிங்காரவேலு முதலியார். இவள் கன்னங்கரிய நிறமும், பாம்பு ஆயுதமும், கழுதை வாகனமும் கொண்டவள், என்று சுப்ரபோதம் என்ற நூலை ஆதாரமாகக் காட்டுகிறார். மூதேவி அரசு மற்றும் விளா மரத்து அடியில் இருப்பாள். மனிதர்களின் நிழல் வழியாக நடமாடுவாள்”.

© வேதபிரகாஷ்

08-09-2018

Jesta devi sculpture at Egmore museum

[1] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[2] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[3] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[4] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[5]  ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[6] எந்த சாஸ்திரம் என்பது குறிப்பிடப் படவில்லை.

[7] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[8] தமிழ் இணைய தளத்தில், தம் + அவ்வை =தவ்வை; உம் அவ்வை = உவ்வை;  எம் + அவ்வை =  எவ்வை ; தும் + அவ்வை = துவ்வை, என்றுள்ளதை வைத்து எழுதியுள்ளார் என்று தெரிகிறது.

[9] ஜெயமோகன், சேட்டை, நவம்பர் 4,  2008; https://www.jeyamohan.in/735 – .W4T-eSQzZdg

[10]  ஆனால், இரா.செந்தில்குமார், “கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன”, என்று எழுதுகிறார்.

விகடன், தமிழர்களின் மூத்த தெய்வம்வளத்தின் மூல வடிவம்மூதேவி!, இரா செல்வகுமார், Posted Date : 16:47 (09/10/2017)Last updated : 16:47 (09/10/2017)

https://www.vikatan.com/news/spirituality/104480-glory-of-goddess-moodevi.html

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? [1]  

செப்ரெம்பர் 11, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? [1]

Mudevi- Vikatan, Senthilkumar

மூதேவி பற்றிய சமீபத்தை விளக்கங்கள்: சமீபத்தில் மூதேவி பற்றி ஊடகங்களில் பிரச்சார ரீதியில் ஆதாரமில்லாத விளக்கங்களை சிலர் திட்டமிட்ட ரீதியில் அள்ளி வீசிக் கொண்டிருப்பது கவனிக்கப் பட்டது. ஆராய்ச்சி என்றோ, நம்பிக்கை என்றோ இல்லாமல்,

  • ஆரியர்-திராவிடர்,
  • பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதோர்,
  • தமிழ் பரபினை சிதைப்பது,
  • மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது,
  • பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை
  • பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச்செல்வாக்குடன் சைவம் ஒதுக்கிவிட்டது.
  • வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது.

என்று பலவாறு காட்டமாக, சரித்திர ஆதாரம் இல்லாத, இனவெறி [சரித்திர ரீதியில் கட்டுக்கதை என்று மெய்ப்பிக்கப் பட்ட பிறகும்[1]], மொழி அடிப்படைவாதம் [தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் தோன்றின போன்ற கருதுகோள்[2]] மற்றும் தீவிர சித்தாந்தங்களுடன் வி.இ.குகநாதன் என்பவர் எழுதியிருப்பதும், அத்தகைய கட்டுக்கதைகளை ஊடகங்களில் மற்றவரும் பரப்பி  வரும் போக்கைக் கண்டு, அதனை சரிபார்க்க வேண்டிய நிலையில், இவ்விசயம் ஆராயப் படுகிறது. இரா செல்வகுமார் கட்டுரை [அக்டோபர், 2017] விகடனில் வெளியாகியுள்ளது[3]. அது மற்ற இணைதளங்களிலும் போட்டுள்ளனர்.

V.e.Guganathan, Who is Mudevi- Iniyoru

வி..குகநாதன் எழுதியதன் குறிப்பிட்ட சொற்றோடர்கள் [ஏப்ரல், 2018]: மூதேவி = மூத்ததேவி = லக்ஷ்மி என்ற ரீதியில், ஆரியர், பார்ப்பனர் மூதேவியை மறைத்து, ஶ்ரீதேவியை தூக்கி விட்டனர் என்று கண்டு பிடித்துள்ளனர்[4]. இவ்வாறு முக்கியமான ஒரு தெய்வமாகவிருந்த மூத்ததேவி வழிபாடு பார்ப்பனப்படையெடுப்புடன் நிலைகுலைந்து போனது. பார்ப்பனர்கள் தமது வைதீக (இன்றைய இந்து) மதத்தைப் பரப்பும்போது தமது அக்கினி, இந்திரன், சோமன் போன்ற வேதகால கடவுள்களைப் பரப்ப முயன்று முதலில் தோல்வியுற்ற பின்பு பழங்குடிகளின் கடவுள்களை தமதாக்கினர்,” என்று வி.இ.குகநாதன்[5] கூறியுள்ளார்[6]. இவரது மற்ற கருத்துகள், “(வண்ணார்களின்)  வழிபாடாக மட்டுமே சுருக்கப்பட்டது.   பொதுவாகவே தமிழரின் மரபுகளைச் சிதைக்கவேண்டுமாயின் அவற்றை குறித்த ஒரு சாதிக்கு மட்டுமென ஒதுக்கிவிடடுப்  பின்னர் குறித்த சாதியினருடன் சேர்த்து அந்த மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை……… . பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச் செல்வாக்குடன் சைவம் மூத்ததேவியினை வண்ணாரிற்கு மட்டுமே ஒதுக்கிவிட, வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது. ……………… கோடை மழை பெய்யாதோ, கொடும்பாவி எரியாளோ,என்று பாடப்படும் பாடலில் குறிப்பிடப்படும்  பெண்பாலும், அங்கு எரிக்கப்படும் கொடும்பாவி உருவமும் மூத்ததேவியே.   பார்ப்பனத்தின் கெட்டித்தனமும், தமிழரின் முட்டாள்தனமும் இங்குதான் உள்ளது…………..” உதாரணத்திற்கு இவரது கட்டுரை எடுத்துக் காட்டப் படுகிறது. ஆரிய-திராவிட இனவாத கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாம் சரித்திர ரீதியில் பொய் என்று நிரூபிக்கப் பட்ட பிறகும், 2018ல் இவ்வாறு எழுதுவது, பொய் பிரச்சாரம் செய்வது தான் இதில் வெளிப்படுகிறது. மேலும் ஆதாரங்கள் கொடுக்காமல், பொதுவாக எழுதியுள்ள நிலையினையும் காணலாம்.

parasuram beheading Renuka Devi

முண்டதேவி, மூதேவி ஆகுமா?: முண்ட தேவி என்று ஒன்றுள்ளதே, அது கூட மூதேவி ஆகியிருக்கலாமே என்று ஆய்ந்து பார்க்கவில்லை. அதாவது தலையில்லாத தேவி முண்ட தேவி. ரேணுகா தேவியை பரசுசாமர் தலை கொய்த போது உண்டான முண்ட உருவம், தெய்வமாக வழிபட்ட நிலையும் உண்டு. ரேணுகா தேவி வழிபாடு தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ளது. வண்ணாந்துறைகள் எல்லாமே, ரேணுகா தேவி பெயரில் உள்ளன[7]. ஆனால், அதைக் கண்டுகொள்வதில்லை. மூதேவி போல, முண்டம், முண்ட, முண்டை……. போன்ற வார்த்தைகளும் தமிழில் கெட்ட வார்த்தைகள் தாம். இவர்கள் கொடுக்கும் சிறந்த விளக்கங்களின் படி ஏற்றுக் கொண்டால், இனி அவையெல்லாம் நல்ல வார்த்தைகள் ஆகி விடும். ஆக, சிறந்த பெண்களை இனி மூதேவி போல, முண்டம், முண்ட, முண்டை……என்றெல்லாம் பெருமையோடு கூப்பிடலாம் போல. அது போல சீரும்-சிறப்புமாக வாழ்க என்று வாழ்த்தலாம் போல! பெரியாரிஸவாதிகள் தலியறுப்பு விழா போல, இதற்கும் விழா நடத்தலாம். ஆக, இந்த விளக்கம் கொடுப்பவர்கள், இவற்றையும் ஏற்றுக் கொள்வார்களா? மூதேவிகளுக்கு கோவில் கட்டுவர்களா? பிரச்சினை என்னவென்றால் மூலங்களைப் படிக்காமல், அரைவேக்காட்டுத் தனமாக எழுதுவது தான். பிறகு “தமிழ்” என்று சொல்லி விட்டால், யாரும் கேட்கக் கூடாது, அதனை விமர்சித்தால், தவறை எடுத்துக் காட்டினால், “தமிழ் விரோதி, தமிழின விரோதி…” என்ற தூஷணங்கள் வரும்.

Jesta devi sculpture at Perangiyur, Villuppuram

2012ல் தவ்வை பற்றி வந்த கட்டுரைகள்: 2012 “தவ்வை” பற்றி இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. வரலாற்று.காம்.இல் உளளது[8], “வாழ்வியல் கோட்பாடுகளையும் சமுதாய ஒழுங்குகளையும் காட்சிப்படுத்தும் அரியதோர் இலக்கியமான திருக்குறளே தவ்வைத்தேவியை அறிமுகப்படுத்தும் காலத்தால் முற்பட்ட தமிழ் நூல் எனலாம். தவ்வை (167) என்றும் மாமுகடி (617) என்றும் வள்ளுவரால் சுட்டப்படும் இவ்வம்மை ஜேஷ்டை என்ற பெயரில் கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றுள்ளார். திருமகளின் தமக்கையாகக் கருதப்படும் இத்தேவிக்குச் சோழர் காலம் வரை செழிப்பான வழிபாடு இருந்தமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன,” என்று கலைக்கோவன் – நளினி குறிப்பிட்டு, பிறகு, தமிழகத்தில் உள்ள தவ்வை சிலைகள் பற்றி சுருக்கமாக விவரித்துள்ளனர்[9]. பிறகு ஜீன். 2012ல் வெளிவந்த ஹரிப்பிரியா ரங்கராஜன் கட்டுரையை பலர் எடுத்தண்டுள்ளதால், அக்கட்டுரை சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது[10]. இவ்விசயங்களும் ஏற்கெனவே பி.கே.அக்ரவாலா, ரிச்சர்ட் ப்ருபேகர், தாமஸ் கோபர்ன், எஸ்.கே. தாஸ்,  ஆர்.சி. தாரே, எஸ்.கே.தீக்ஷித், கார்னிலியா டம்மிட், எட்வொர்ட் டிம்காக், இந்திரா ஐயர் முதலியோர்  எடுத்துக் காட்டியுள்ளனர். வசதிற்காக, தமிழில் உள்ள அவரது கட்டுரை உபயோகப்படுத்தப் படுகிறது.

Tavvai, Karunilam, Chingleput

தூம்ரா தேவி, இருட்டில் தோன்றியவள், புகையை விழுங்கியவள்[11]: “தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு’ என்ற தினமலர் செய்தி, என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், “ஜேஷ்டா தேவி’ என்று அழைப்பர். “ஜேஷ்டா’ என்றால், முதல் என்று பொருள். தமிழில், “சேட்டை’ என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், “ஜேஷ்டா’ என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். “தூம்’ என்றால், “புகை’ என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும். அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்[12].

© வேதபிரகாஷ்

08-09-2018

Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

[1] ரோமிலா தாபர் போன்ற மார்க்ஸிய சரித்திராசிரியர்களே, ஆரிய இனம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டி 35 ஆண்டுகள் மேலாகி விட்டன. ஐ.நா அத்தகைய வார்த்தைப் பிரயோகம் கூடாது என்று 1950களிலேயே ஆணை பிறப்பித்துள்ளது.

[2] இதனை ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்வதில்லை.

[3] விகடன், தமிழர்களின் மூத்த தெய்வம்வளத்தின் மூல வடிவம்மூதேவி!, இரா செல்வகுமார், Posted Date : 16:47 (09/10/2017)Last updated : 16:47 (09/10/2017).

[4] வி.இ.குகநாதன், மூதேவி யார்?, இனியொரு-இணைதளம், 03-04-2018.

[5] யார் இந்த குகநாதன் என்று பார்த்தால், “இனியொரு” தளத்தில், “ஆண்டாள்-தெவிடியாள்-வைரமுத்து-சர்ச்சை” என்றது 15-01-2018 தேயிட்டது, இலங்கையில் இந்துத்துவா எனும் புதிய அபாயம் போன்றவை காணப்பட்டன. https://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/. தீவிர மாவோயிஸ்ட் சித்தாந்தி மற்றும் இந்துவிரோத மனப்பாங்கு வெளிப்படுகிறது.

[6] https://inioru.com/whos-is-muthevi/

[7] சென்னை, சைதாப்பேட்டை வண்ணான் துறைக்கு ரேணுகாதேவி பெர் இருப்பது, அங்கிருக்கும் கல்வெட்டு, இன்றும் எடுத்துக் காட்டுகிறது.

[8] ஆர்.கலைக்கோவன், எம். நளினி, தவ்வைத் தேவி, வரலாற்று.காம், இதழ்.86, பிப்ரவரி 15 – மார்ச் 17, 2012.

[9] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1096

[10] வி.துலாஞ்சனன், தமிழரும் தவ்வை வழிபாடும், தனது “உருவங்கள்” இணைதளத்தில், 11-5-2016.http://www.uvangal.com/Home/getPostView/1150

 

[11] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[12] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793