Posts Tagged ‘திஸ்பூர்’

நரகாசுரன் காமரூபத்தை, பிராக்ஜோதிசபுரத்தை ஆண்ட ஒரு சரித்திரகால மன்னன் – போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்!

ஒக்ரோபர் 29, 2016

நரகாசுரன் காமரூபத்தை, பிராக்ஜோதிசபுரத்தை ஆண்ட ஒரு சரித்திரகால மன்னன் போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்!

copper-plate-seal-of-kamarupa-kings

காமரூப அரச வம்சாவளியினரின் தாமிர பட்டயம் – நரகாசுரனின் பெயர் உள்ளது.

கல்வெட்டுதாமிரப்பட்டயங்களில் நரகாசுரன், நரக வம்சாவளி பெயர்கள் காணப்பட்டது: சரித்திராசியர்கள் கல்வெட்டுகள் மற்றும் தாமிர பட்டயங்களின் ஆதாரமாக, கீழ்கண்ட வம்சங்கள் காமரூபத்தை ஆண்டுவந்ததாகத் தெரிவிக்கின்றன:

எண் வம்சாவளி பெயர் ஆண்ட காலம் ஆங்கிலத்தில்
1 நரக C.2200 BC to 1389 BC Naraka dynasty
2 வர்மன் 350 CE to 654 CE Varman dynasty
3 மிலேச்ச C 655 to 985 CE Milechchha dynasty
4 பால 985 – 1130 CE Pala dynasty
5 வராஹி பால 1200-1400 CE Varahi Pala dynasty
6 தேவ 1130-1500 CE Deva dynasty

இது தவிர நரகாசுரன் இருந்தது, நரகாசுராகாவ், நரகாசுர கிராமம், நரகாசுர பஹாட், நரகாசுர மலை போன்றவை இன்றும் இருப்பது காட்டுகிறது[1]. அசாமின் மிகப்பழைய அரச வம்சாவளியின் மன்னன் மஹிரங்க தானவ ஆகும். இவர்கள் மைரங்க என்ற இடத்தில் தங்களது தலைநகரை அமைத்து ஆண்டனர். இப்பொழுது இது கௌஹாத்திற்கு அருகில் உள்ள மைரங்க பர்வதம் என்ற மலையுடன் அடையாளம் காணப்படுகிறது. மஹிரங்க தானவ என்பவனுக்குப் பிறகு, ஹடக்சூர், சம்பராசூர், ரத்னசூர் என்பவர் ஆண்டனர். “தானவ” மற்றும் “அசுர” என்ற பட்டங்கள் ஆரியர்-அல்லாத மூலங்களைக் காட்டுவதாக அப்பொழுதைய ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். கிராடா என்ற பகுதியை கடகாசூர் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனை வென்றுதான், நரகாசூர் ஆட்சிக்கு வருகிறான். இவனது பெயர் பல புராணம் மற்றும் தந்திர நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவை அவன் பௌம, வராஹ, பிருத்வி வம்சத்தில் பிறந்தவனாகக் குறிக்கின்றன. பிஷ்ணு தன்னுடைய வராஹ அவதாரம் காலத்தில் பூமி மூலம் பிறக்க செய்தார். இவன் விதேஹ நாட்டு [வடக்கு பீஹார் பகுதி] மன்னன் ஜனகரால் வளர்க்கப் பட்டான்.

nidhanpur_inscription_of_bhaskar_varman

பாஸ்கர வர்மனின் கல்வெட்டு – நரகாசுரனின் பெயர் உள்ளது

 

பூமிபுத்திரர்கள், நரகாசூர் வழிவந்தவர்கள் பிராக்ஜோதிசபுரகாமரூப பகுதியை  ஆண்டது: பிராக்ஜோதிசபுர-காமரூப பகுதியை ஆண்டவர்கள் எல்லோருமே தம்மை பூமிபுத்திரர்கள், பூமிவம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டனர். பிராக்ஜோதிசபூர் தான் இப்பொழுது திஸ்பூர் அன்றகியுள்ளது[2]. பிராக்-ஜோதிசபுர என்றால், கிழக்கில் உள்ள ஒளி மிகுந்த நகரம் என்று ;பொருள்[3]. இவர்கள் எல்லோருமே நரகாசூர் வழிவந்தவர்கள் தாம். நரகாசூர் முதலில் காமாக்கியா தேவியின் பரம பகதனாக இருந்தான். தேவிக்குப் பிரியமானவர் விஷ்ணு ஆவார். கிராடர்களை கடற்கரைப் பகுதிக்கு விரட்டி விட்டு, ஒரு வலுவான கோட்டையைக் கட்டிக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அக்கோட்டைக்குள் சாதாரணமாக யாரும் [தேவர்கள் கூட] உள்ளே நுழைய முடியாது. அவ்வாறு சுபீட்சமாக ஆட்சி செய்து வந்தான். அந்நிலையில், சோனித்பூரை ஆண்டுவந்த பாணாசுரன் என்பவனுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால், அவை பாதை தவறி கெட்டவன் ஆனான். காமாக்கிய தேவியின் மீதே காமம் கொண்டான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புருத்தினான். இதனால், காமாக்கிய தேவி தந்திரத்தால் அவனை கொல்ல தீர்மானித்தாள். அதன்படி, ஒரே இரவில் தனக்கு மலை மீது கோவில், மலைக்குச் செல்ல பாதை, குளம் முதலியவற்றை கட்டினால், அவனது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அறிவித்தாள். அவன் தனது வேலையை ஆரம்பித்து அவ்வாறே செய்தான். அதற்குள் தேவி சேவல் கூட்டத்தி கூவச் செய்து, விடிந்து விட்டது போன்ற உணர்வை உண்டாக்கினாள். இதனால், ஏமாந்த நரகாசுரன் விடிவதற்கு முன்னமே தன் வேலையை நிறுத்தி விட்டான். உண்மையில் விடிந்த பிறகு தான், தான் ஏமாந்து விட்டதை அடைந்தான். இதனால், தேவியின் மீது கோபம் கொண்டான். அக்கோவிலுக்கு யாரும் செல்வதை தடுத்து வந்தான். அதனால் தான் ஒரு நாள் வசிஸ்டர் வந்தபோது, அவரையும் தடுத்து அவமானம் படுத்தினான்.

image-of-the-demon-banasur-in-chitralekha-park

சித்ரலேகா நந்தவனத்தில் உள்ள பாணாசுரனின் சிற்பம்

பாணாசுரன், உஷா, அநிருத்தன் முதலிய கதைகளும், சரித்திரமும்: இந்த பாணாசுரனுக்கு உஷா என்ற அழகிய மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள அநிருத்தன் ஆசைப்பட்டதால், கிருஷ்ணர் அவளை கவர்ந்து வந்து அநிருத்தனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால், பாணாசுரனுக்கு கிருஷ்ணரின் மீது தீராத பகைக் கொண்டான். அக்னிபர்வதம், மஹாபைரவ கோவில், பைரவி கோவில் தேஜ்பூரில் உள்ள மற்ளிடிந்த நிலையில் உள்ள கோவில்கள், சிற்பங்கள், இடிபாடுகள் முதலியவை பாணாசுரனுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவன் சரித்திர ரீதியில் வாழ்ந்த மன்னன் தான் என்று பி.சி.சௌத்ரி போன்ற சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. புராணங்களின் படி, பாணாசுரனுக்கு 1000 கைகள் இருந்தது மற்றும் சிவனின் தீவிர பக்தனாக இருந்தான் என்றுள்ளது. உஷாவைப் பார்க்க வந்த அநிருத்தனை சிறைப் பிடித்து வைத்ததால், கிருஷ்ணர், பலராமர் மற்றும் பிரத்யும்னன் பாணாஸுரனின் மீது படையெடுத்து வந்தனர்.

krishna-fighting-with-siva-banasur

கிருஷ்ணருக்கும், சிவனுக்கும் நடந்த போர் – பிள்ளையார், முருகன் எல்லாம் பலராமன், பிரத்யும்னன் முதலியோருடன் சண்டை போடுவது தமாஷாக இருக்கிறது.

3100 BCE சிவனுக்கும், கிருஷ்ணருக்கும் ஏற்பட்ட போர்[5]: போரில், பாணாசுரனுக்கு உதவியாக சிவனே, கிருஷ்ணரை எதிர்த்துப் போரிட்டார் என்று புராணங்களும் தந்திர நூல்களும் கூறுகின்றன. சிவன் “மஹேஸ்வை ஜுவரம்” என்ற நோயை உண்டாக்கி, கிருஷ்ணர் படையைத் தாக்கினார். கிருஷ்ணர் பதிலுக்கு ஒரு ஜிவரத்தை உண்டாக்கித் தடுத்தார். பாணாசுரனை கொல்ல யத்தனித்தபோது, சிவன் தடுத்தார். இவையெல்லாம் மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களை எடுத்துக் காட்டுகின்றன. அதனால், கிருஷ்ணர், நான்கு கைகள் தவிர மற்றவற்றை வெட்டிவிட்டார். இதுவும் ஒரு தந்திர ரீதியிலான விளக்கம் என்றாகிறது. ஏனெனில், கிருஷ்ணருக்கே இரண்டு கைகள் இருந்த காலத்தில் பாணாசுரனுக்கு 1,000 கைகள் இருந்திருக்காது, அதில் 996 வெட்டப்பட்டு, நான்கே கைகள் பாக்கி வைத்தார் என்பதும் உருவகமாக சொல்லப்பட்டது என்றாகிறது. பாணாசுரனும், கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தன்னுடைய மகளை அநிருத்தனுடன், தனது ராஜ்ய ரதத்திலேயே அனுப்பி வைத்தான். ஆனால், அதே கிருஷ்ணரைத் தான், தனது நண்பன் நரகாசுரன் போரில் எதிர்கொள்கிறான். போரில் நரகாசுரன் கொல்லப்பட்டது முன்பே விளக்கப்பட்டது. சிவன் கிருஷ்ணருடன் போரிட்டது, சிவன் 3100 BCEல் அப்பகுதியில் வாழ்ந்த / ஆட்சி செய்த அரசர் என்றாகிறது. இது முன்னர் குறிப்பிட்டது போல, அக்கால சைனாவை ஆண்ட அரசராக இருக்கலாம். தனது மனைவியின் மீது நரகாசுரன் ஆசைப்பட்டது, முதலியவை சாதாரணமாக அரசர்களுக்கு இருக்கும் குணத்தைத் தான் காட்டுகிறது. இதனால் தான் விஷ்ணு உதவினார் என்றுள்ளது.சிவன் போரிட்டாலும், பாணாசுரனுக்கு பரிந்து அவ்வாறு செய்கிறாரே தவிர விரோதியாகக் கருதவில்லை.

seal-of-bhaskar-varman-found-at-nalanda-dated-643-ce

643 CE தேதி கொண்ட பாஸ்கர வர்மனின் முத்திரை – நாளந்தாவில் கண்டெடுக்கப் பட்டது.

தாமிர, வெங்கல பட்டயங்களில் நரகாசுரன் பெயர் காணப்படுவது[6]: நரகாசுரனின் பெயர், நரகாசுர வம்சாவளியின் பெயர், அவனுக்குப் பிறகு ஆண்ட அரசர்கள் முதலியோர்களின் விவரங்கள் கீழ்கண்ட தாமிர பட்டயங்களில் காணப்படுகிறது.

எண் எழுத்துகள் பொறித்த பட்டயம் /  வம்சாவளி கண்டெடுக்கப் பட்ட இடம் ஆங்கிலத்தில் பெயர் / விவரங்கள்
1 வனமலவரமாதேவ பர்பத தாமரப் பட்டயம் [The Parbatiya Copper Plate Inscription of Vanamalavaramadeva]
2 வனமலவரமாதேவ திகாலிகாவ் தாமரப் பட்டயம் [The Dighaligaon Copper Plate Inscription of Vanamalavaramadeva]
3 சலஸ்தம்ப வம்சாவளி நரகாசூர் பஹாட் வெண்கல பட்டயம் மற்றும் தாமிர மணி [The Narakasur Pahar Bronze Plaque and Copper Bell Inscription]
4 ஹர்ஜர, சலஸ்தம்ப வம்சாவளி நரகாசூர் பஹாட் பித்தளைப் பட்டயம் [The Narakasur Pahar Bronze Plaque Inscription]
5 வனமல நரகாசூர் பஹாட் தாமரப் பட்டயம் [The Narakasur Pahar Bronze Plaque Inscription]

பொதுவாக தாமிரப்பட்டயங்கள், கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் எந்த அரசனின் பெயர், வம்சாவளி, முதலிய விவரங்கள் BCE [Before Common / Current Era]க்கு முன்னால் போனாலே, அவற்றை கற்பனையில் உருவான கதை, கட்டுக் கதை, இட்டுக்கதை, புனைந்த கதை, மாயை [myth, fable, legend, fairy tale] என்றெல்லாம் ஏளனமாகக் குறிப்பிட்டு ஒதுக்கிவிடுவது, மேனாட்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் முதலியோர்களின் வழக்கமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, கிருஷ்ணர், விக்கிரமாதித்தியன், சந்திரகுப்த மௌரியன், அசோகன் போன்றவர்களின் சரித்திரத் தன்மையினை மறுத்து வந்தனர். பிறகு, ராஜதரங்கிணி, முத்ரா ராக்ஷஸம் போன்ற நூல்களை வைத்துக் கொண்டு சந்திரகுப்த மௌரியன், அசோகன் முதலியவர்களை ஒப்புக் கொண்டனர். ஆகவே, இங்கு நரகாசுரன், பாணாசுரன், பகதத்தன் முதலியோர் கிருஷ்ணர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று வருவதால், அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி, விலக்கி வைத்து விட்டார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

ruins_of_pragjyotishpura_guwahati_kamarupa_-_panel_on_plinth

பிராக்ஜோதிசபுரத்தின் இடிபாடுகள் – அடிமட்டத்தில் கண்டெடுக்கப் பட்ட சிற்பங்கள் கொண்ட கற்பகுதி.

[1] Assam Gazetteer, Government of Assam, Guwahati, Vol.I, 1999, p.107.

[2] K.L. Barua, the modern site of Dispur, situated about 3 km. to the east of Narakasurgaon, is believed to be the abbreviation of Pragjyotishpur.

K.L. Barua, Early History of Kamrupa., 1996, p.19.

[3] D.C. Sircar : ”Pragjyotisha-Kamarupa”, The Comprehensive Historyof Assam,(ed.), H.K.

Barpujari, p.60.

[4] According to P.C. Choudhury, the historicity of Bana is established by the remains of Agniparvat, Mahabhairab temple, Bhairavi temple and other remains in Tezpur associated with his name

[5] Srimad Bhagavatam—42;  http://www.advaita-vedanta.org/articles/humbling_of_banasura.pdf

[6] Assam Gazetteer, Government of Assam, Guwahati, Vol.I, 1999.