Posts Tagged ‘சங்கராச்சாரி’

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப் பட்டது

ஏப்ரல் 26, 2023

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது

2,532-வது ஜெயந்தி பற்றிய செய்தி வெளியீடு: பொதுவாக ஶ்ரீசங்கர ஜெயந்தி, ஆதிசங்கரர் ஜெயந்தி பற்றியெல்லாம் ஊடகங்கள் கண்டு கொள்ளாது. அது எதுவோ பார்ப்பனர்களின் சமாச்சாரம், அதிலும் காஞ்சி மடம் என்றால்,”அவாள் சமாசாரம்” என்ற ரீதியில் அப்படியே ஒதுக்கி விடுவர். சுமார் 70 ஆண்டுகளாக நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால், 2023ல் இது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. இது விழிப்புணர்வா, இந்துத்துவத்தின் தாக்கமா, செக்யூலரிஸமா என்று இனிமேல் தான் தெரியவரும். தினகரன் போன்ற நாளிதழ்களும் “கொண்டாடப் பட்டது” என்ற செய்திக்குப் பதிலாக ஆதிசங்கரர் பற்றிய சரித்திரத்தைக் கொடுத்து, “தொடரும்” என்று போட்டிருக்கிறது. அதாவது, மற்ற நாளிதழ்கள் செய்தி வெளியிடும் பொழுது, நாமும் எதையாவது போடுவோம் என்ற ரீதியில் போட்டுள்ளது. இப்பொழுது கூட, “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சில வகுப்பினர் அதிசங்கரரைத் தாக்கி வருகின்றனர். பிராமண / பார்ப்பன எதிர்ப்பு அதிலும் வேலை செய்கிறது. சித்தாந்தம், தத்துவம், தர்க்கம் என்று சொல்லிக் கொண்டும் குழப்பங்களை, புரட்டுகளை மற்றும் தூஷணங்களில் ஈடுபட்டு வருவதும் இருக்கிறது. அந்நிலையில் தான் செய்தி வருகிறது. இதைப் பற்றி விமர்சனம் இது வரை காணப் படவில்லை. ஒருவேளை இனி வரக்கூடும்.

மடங்களை உண்டாக்கியது: தென்னிந்தியாவில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம், கிழக்கில் கோவர்த்தவன பீடம் என நான்கு விதமான அத்வைத பீடங்களை நிறுவிய ஆதி சங்கரர் பல அற்புதமான நூல்களையும் நமக்கு தந்துள்ளார்[1]. இவ்விசயத்தில் சிருங்கேரி மற்றும் காஞ்சி மடங்கள் வேறு படும். காஞ்சி மடம் என்பதே இல்லை என்று வாதிடும் சிருங்கேரி மடம். குறிப்பாக மற்றமடங்கள் 509-477 BCE தேதியை பின்பற்றி வௌம் பொழுது,788-820 CE ஆற்ரிக் கொண்டது சிருங்கேரி மடம்…..ஆதிசங்கரர் சுப்ரஹ்மண்ய புஜங்கம், செளந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மாத்ருகா பஞ்சகம் போன்ற பல நூல்களை அருளி உள்ளார். இதில் சுப்ரஹ்மண்ய புஜங்கம், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது, அம்பிகையின் அருளை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அம்பாளின் கருணையையும் சொல்வது செளந்தர்ய லஹரி[2], என்று சமயம் விவரிக்கிறது. புதிய தலைமுறை, அவரது சரித்திரத்தைக் குறிப்பிட்டு[3], “தொடரும்” என்று வெளியிட்டுள்ளது[4].

2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது: அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா 25-04-2032 அன்று இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் கொண்டாடப்பட்டது[5]. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்[6]. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர் (509-477 BCE). 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில் சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார். இவரது 2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் 25-04-2032 அன்று கொண்டாடப்பட்டது[7]. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் குறித்த வேத செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் இவரது ஜெயந்தி விழா அமைந்துள்ளது[8].

இந்தியாவில், நேபாளத்தில் கொண்டாடப் பட்டது: இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபாள், வாராணசி, அசாம் – காமாக்யா, ராணிபூல், சிக்கிம், பூரி, புது டெல்லி, பஞ்சாப், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆதிசங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியன நடைபெற்றன. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ஆதிசங்கரருக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்தார். முன்னதாக ஆச்சாரியரின் உற்சவ மூர்த்தி கபிலேஸ்வர சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு நேற்று நடைபெற்ற விழாவுக்கு தலைமை தாங்கினார். ஆதிசங்கரர் பிறந்தநண்பகல் வேளையில் சங்கர விஜயத்தின் பாடல்கள் பாடப்பட்டன[9]. காஞ்சி மடத்தின் பாடசாலைகளில் குருகுல முறை மூலம் நான்கு வேதங்களைப் பயின்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஸ்ரீ விஜயேந்திரர் வழங்கினார்[10].

திருப்பதி நிகழ்ச்சியில் ஸ்ரீவிஜயேந்திரர் பேசியதாவது: “சனாதன தர்மத்தை, அத்வைத தத்துவத்தை நமக்கு போதித்தவர் ஆதிசங்கரர். அவரது போதனைகள் தேசிய ஒருமைப்பாட்டை மட்டுமல்லாது முழு உலகத்தையும் ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டுள்ளன. அவர் தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அவரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம் சமூக நலனுக்காக நாடு முழுவதும் கலாச்சாரம், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் பல சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,” என்றார். நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் நிர்வாகிகள், வேத பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

அமைதியாக கடந்துவிடும் நிகழ்ச்சி: இதுகுறித்து சங்கர மடத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘ஆதிசங்கரரின் 2532-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது[11]. இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வேதபண்டிதர்கள், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையிலும், புனேயை சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிக்கிமிலும் கூடி உள்ளனர். ஆதிசங்கரர் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்’ என்றனர்[12]. தினகரனுக்கு இதைப் பற்றி செய்தி வெளியிட விருப்பம் இல்லை போலும்[13]. இருப்பினும், “ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!” என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது[14]. இதுவரை சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் கூட்டம் என்றெல்லாம் விமர்சிக்கவில்லை. 788-820 CE தேதியிருக்க, 509-477 BCE தேதியைவைத்து எப்படி 2532வது பிறந்த நாள் என்று கணக்கிடலாம் என்றும் கேட்கவில்லை. இது மாற்றமா, அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டமா என்று கவனிக்க வேண்டும்….

© வேதபிரகாஷ்

26-4-2023


[1] சமயம்.காம், ஆதி சங்கரர் ஜெயந்தி 2023 : இந்து மதத்தை நெறிப்படுத்திய ஜகத்குருவின் அவதார தினத்தில் என்ன செய்ய வேண்டும்?, Authored by Mohana Priya | Samayam Tamil | Updated: 24 Apr 2023, 9:55 pm.

[2] https://tamil.samayam.com/religion/hinduism/adi-sankarar-jayanthi-2023-date-significance-of-this-day/articleshow/99738949.cms

[3] புதிய தலைமுறை, இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஆன்மிக தத்துவ ஞானி!ஆதிசங்கரர் அவதரித்த தினம் இன்று.. Jayashree A, Published on : , 25 Apr, 2023, 4:12 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/spiritual/indian-philosopher-adi-shankara-birthday-today

[5] தமிழ்.இந்து, நாடு முழுவதும் காஞ்சி சங்கர மடத்தின் கிளைகளில் ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா, செய்திப்பிரிவு, Published : 26 Apr 2023 05:12 AM, Last Updated : 26 Apr 2023 05:12 AM.

[6] https://www.hindutamil.in/news/spirituals/981806-adi-shankarar-2-532nd-jayanti-celebrations-at-kanchi-sankara-math-branches-across-the-country.html

[7] தினமலர், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா ஸ்ரீமடங்களில் கோலாகலம், Added : ஏப் 25, 2023 23:53 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3304006

[9] தினமலர், ஆதிசங்கரர் 2532வது ஜெயந்தி ராமேஸ்வரத்தில் யாக பூஜை, Added : ஏப் 25, 2023 22:46 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3303812

[11] மாலைமலர், 2,532-வது ஆண்டு ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு, By Maalaimalar, 25 ஏப்ரல் 2023 2:00 PM

[12] https://www.maalaimalar.com/news/state/2532th-adi-shankara-jayanti-celebration-organized-by-kanchi-sankara-mutt-across-the-country-601122

[13] தினகரன், ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!, ஆதி சங்கரர் ஜெயந்தி, April 25, 2023, 12:20 pm, 25-4-2023.

[14] https://www.dinakaran.com/adishankar_advaitadharisanam_adishankarjayanti/