Archive for the ‘முத்தேவியர்’ Category

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? தமிழ் இலக்கிய சான்றுகள் தொன்மையினை காட்டுகின்றனவா [5]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? தமிழ் இலக்கிய சான்றுகள் தொன்மையினை காட்டுகின்றனவா [5]

Valluvar, Ovvai- chronology

தமிழ் இலக்கியங்களில் மூதேவி, முகடி: சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( ‘கரிய சேட்டை ஆகிய மூதேவி’), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்[1]. “சங்க இலக்கியம்” என்றாலும், செய்யுள் குறிப்பு கொடுக்கவில்லை. சரி பார்க்கும் போது இவ்வாறாக உள்ளது.

பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு           (சிலம்பு.15:80),இங்கு தாய் என்ற பொருளில் பிரயோகம் உள்ளது.

 

கீழ்கண்ட குறிப்புகளில், தமக்கையைக் குறிப்பதாக உள்ளது:

 

‘தவ்வையைக் காட்டி விடும் |       (குறள்.167)

 

இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற   100

தவ்வையும் தாயும் தழி இயினர். (பெருங்கதை, 1, 33)

 

தவ்வை ஆயினும் தாயே ஆயினும் (மகதம், 14)

 

தவ்வையும் தோழியும் கண்ணினர். (சீவகசிந்தாமணி,1837)

தவ்வையர் ஆகிய தாரையும் விரையும், (மணிமேகலை)

முகடி தெளவை கலதி மூதேவி, (பிங்கலங்கை நிகண்டு)

 

மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருத வேகனோடு இந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்   ……………………மணிமேகலை.105

 

‘கலம்புரி அகவல் குல் தாயர் தவ்வையர்’    ……….(சீவக சிந்தாமணி. :184)

 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே – மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்[2].
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள், என்ற திருவள்ளுவர் குறளும்.

 

‘அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்’ (திருக். 167)

அவ்வை பெரியவள் மூத்தவள் – அக்கை

தேவாரம், ஏழாம் திருமறையில் “தவ்வை”, தாய் என்ற பொருளில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது[3].

பித்தரை ஒத்தொரு பெற்றியர் கற்றவை என்னைப் பெற்ற,

முற்றவை கம்மனே தந்தைக்குத் தவ்வைக்குங் தம்பிராளுர்,

செக்திவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில்,

அத்தவம் ஆவ அறிந்தோமேல் சாம்இவர்க் காட்படோமே. – – 7

கவ்வி வீழ்ங்தென நாடக மயில் துயின் றென்னக்

கவ்வை கூர்தாச் சனகியாம் கடிகமழ் கமலத்து

அவ்வை நீங்கும் என்று அயோத்திவங் தடைந்த அம்மடங்தை

தவ்வை யாம் எனக் கிடந்தனள் கேகயன் கனேயை. (இராமா, மக்கரை, 88) , இவ்வாறுள்ளவை மூதேவியின் பழமையைக் கூறுகின்றன என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

Tavvai, Kodumbalur, Pudukkottai

குறிப்பிட்ட இலக்கிய சான்றுகள் சங்ககாலத்திற்கு ஆதாரமாகாது: குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும். அதாவது, இங்கு திருவள்ளுவரை முதல் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வைக்கும் ஆராய்ச்சிகளை வசதியாக மறைந்து விடுவர். இப்பொழுது 9-11ம் நூற்றாண்டுகள் வரை நீட்டிக்கிறார்கள். அவ்வையார் / ஔவையார் என்றால் யார் என்பது, தமிழருக்கு இன்னும் பரியவில்லை. மூன்று / நான்கு ஔவையார்கள் உள்ளதாக அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்[4]. ஔவையார் விநாயகர் அகவல் பாடியதால், சங்ககாலத்தில் விநாயகர் இருந்தார் என்று ஒப்புக் கொள்வார்களா?  பிறகு, வாதாபி கொண்டான் பிறகு ஔவையார் வருவாரா? குறள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் முதல் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை காலம் கணித்துள்ளார்கள். ஆகவே, அக்காலத்தை இலக்கிய சான்றுகள் சங்க காலத்திற்கு ஆதாரமாகாது.

Kalabhra interrengnum - gap in Tamil history upto 600 CE

ஜைனபௌத்தர்களினால் ஏற்பட்ட பாதிப்புகள்: ஜைனர்கள் இடைக்காலத்தில், தென்னிந்தியாவில் வலுவாக இருந்தனர் என்பதை, இந்த தமிழாராய்ச்சியாளர்கள் மறந்து விடுகின்றனர். “களப்பிரர்களையும்” மறந்து விடுகின்றனர்[5]. மேலும், தமிழ் மன்னர்களே 6-10ம் நூற்றாண்டுகளில் ஜைனர்களாக / சமணர்களாக இருந்து, சைவகளாக மாறுகின்றனர். சைவர்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களுடன் வாதித்ததை, சைவ நூல்களே, திருமறைகளே எடுத்துக் காட்டுகின்றன. ஜைனர்கள் அரசர்களின் ஆதரவுடன், சைவ குருமார்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து வந்தனர். மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களையும் செய்தனர். அவற்றையெல்லாம் மீறி, சைவர் பௌத்தர்களையும், ஜைனர்களையும் வெற்றிக் கொண்டனர். குறிப்பாக, ஜைனர் பெரும்பாலான, இந்து தேவதைகளை கோவில்களில் வைத்துக் கொண்டு மூலவரை மட்டும் மாற்றியமைத்தனர். அதாவது சிவலிங்கத்தை எடுத்து விட்டு, மகாவீரர் சிலைகளை வைத்தனர். சைவர் ஆதிக்கத்திற்கு வந்தததும், அச்சிலைகளை எடுத்து விட்டு, லிங்கத்தை மறுபடியும் வைத்தனர். இதனால் தால், தமிழகத்தில் பல இடங்களில் மகா வீரர், லிங்கம் மற்றும் லிங்கப் பகுதிகள் கிடக்கின்றன.

Kalabhra Jains acting against Tamils upto 600 -1000 CE

1311ல் மாலிகாப்பூர் படையெடுப்பினால் சீரழிந்த நிலை: பிறகு மாலிகாப்பூர் படையெடுப்பின் போது, ஏகப்பட்ட கோவில்கள் சூரையாடப் பட்டன. பாண்டிய மன்னர்கள் தாம், துலுக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். அதனால் தான், சில காலம், மதுரையில் சுல்தான்கள் ஆட்சி இருந்தது, பிறகு, விஜய நகர, நாயக்க, மராட்டிய ஆட்சிகள் ஏற்பட்ட போது, கோவில்கள் புனர் நிமாணம் செய்யப் பட்டன. அப்பொழுதெல்லாம், எல்லாமே முறைப்படி / ஆகமங்கள் படி செய்யப்பட்டன என்று சொல்லமுடியாது. பல கோவில்களில் லிங்கங்கள் மேற்கு பார்த்து இருக்கின்றன. இதற்கெல்லாம் எந்த ஆகம சாத்திரமும் விளக்கம் கொடுக்க முடியாது. அதே போலத் தான், பரிவார தேவதைகள், சப்தமாதர் போன்ற பெண்தெய்வ சிலைகள் பாதிக்கப் பட்டன. ஜைனர்களின் மந்திர-தந்திர-யந்திர கிரியைகளினால், நல்ல தேவதை மற்றும் கெட்ட தேவதை / துர்தேவதை போன்ற பிரிவுகள், விளக்கங்கள் உண்டாகின. தாக்கும் தேவதைகள் என்று கருதப்பட்டு, நம்பியபோது, அத்தகைய தெய்வசிலைகளை புதைக்கவும் செய்தனர். அதனால், அரைகுறையாக புதைக்கப்பட்ட ஜேஸ்டா தேவி சிலைகளையும் பாற்கலாம். இப்ப்பொழுது, உக்கிரமான் பிர்த்யங்கிரா தேவி போன்றவை வழிபாட்டிற்கு வந்துள்ளன, உண்மையான உபசாகர்கள், இதனை ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஆதரிக்கவும் மாட்டார்கள். ஆனால், கேட்டது கிடைக்கும், உடனடியாக பலன் கிடைக்கும் என்ற ரீதியில் அவை பிரபலப் படுத்தப் படுகின்றன, பக்தி என்பதி விட, பலன் அதிலும், உடனடியான பலன் கிடைக்கும் என்ற பேராசையில் மக்கள் கூடுகின்றனர். என்ன பலன் கிடைத்தது, கிடைக்கவில்லை என்பதை அவர்கள் தாம் சொல்லவேண்டும். ஒருவேளை எதிர்மறை விளைவு ஏற்பட்டால், அச்சிலைகள் ஒதுக்கப் படும், அப்பொழுது அவ்வற்றை மூதேவி என்பார்களா அல்லது வேறு பெயரிடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

Date of Valluvar, Ovvai, Sangam period etc..

சாமுண்டா, சண்டிகா, சர்மமுண்டா போன்ற பெயர்கள் சமஸ்கிருத தேவி பாகவத்தில் உள்ளன: பெண் தெய்வம் பற்றிய மூலங்கள், குறிப்பிட்ட பெயர்களுடன் சமஸ்கிருத நூல்களில் தான் காணப்படுகின்றன. அவை வேதகாலத்திலிருந்து இதிகாச-புராணங்கள் காலம் வரை, அதாவது சுமார் 2500 BCE முதல் முதல் நூற்றாண்டுகள் வரை தேதியிட்டு வழக்கத்தில் உள்ளன. கருவுற்றல், குழந்தை பிறப்பு, வளர்ப்பு போன்றவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ளன. சிந்துசமவெளி முத்திரை உருவங்களிலிருந்து சப்தமாதர் போன்றவை 2250-1950 BCE காலகட்டத்லேயே இருந்துள்ளது மெய்ப்பிக்கப் படுகிறது. ரிக்வேத குறிப்புகளிலிருந்து பெண் தெய்வங்கள்[6]

 1. பூமியில் உள்ளவை
 2. ஆகாசத்தில், காற்றில், வளி மண்டலத்தில் உள்ளவை
 3. ஒளி, வெளிச்சம் முதலியவற்றுடன் சம்பந்தப் பட்டவை.

என்று அக்ரவாலா போன்றோர் பிரிக்கின்றனர். அதிதி, பிருத்வி, நிரிதி, உசாஸ், அம்பிகா, ஶ்ரீலக்ஷ்மி, சரஸ்வதி, பாரதி, இல, சினிவல்லி, அனுமதி, ஹ்ரீ,  புஸ்தி, பூதி, சீதா, மாயா, உமா, சசி என்ற பெயர்கள் குறிப்பாக சொல்லப்பட்டுள்ளன. பிறகு மஹாபாரதத்தில் அதிகமாக விவரிக்கப் படுகின்றன. புராணங்களில் மேலும் விவரங்களுடன், கதைகளுடன் காணப்படுகின்றன. ஆனால், தமிழ் இலக்கியங்களில் அவை இல்லை, சொல்லப்படவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகு தான், அத்தகைய பெயர்கள் காணப்படுகின்றன. சமஸ்கிருத நூல்கள் ஆதாரமில்லாது, இவ்விசயங்கள் பற்றி ஒன்றையும் எழுத முடியாது. தமிழில் எழுதப்பட்டதை வைத்து, அதனை தமிழிலுள்ள வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, எல்லாமே தமிழ் தேவதை, கடவுள் என்றெல்லாம் விளக்கம் கொடுப்பது அபத்தமானது. ஆராய்ச்சி என்றால், எல்லா மூலங்களையும் படித்து எழுத வேண்டும், சில புத்தங்களைப் படித்து, தொகுத்து, காப்பி அடித்து எழுதி வெளியிடுவது ஆராய்ச்சி ஆகாது. தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அச்சில் வரலாம், ஆனாக், உண்மையாகாது. அதனால் தான், இக்கதைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களும் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

09-09-2018

Aryan versus Dravidian goddess

[1] சமயம், தமிழர் தெய்வம் மூதேவி வழிபாடு.!, விகடனில் வந்ததை அப்படியே போட்டுள்ளது, இந்த இணைதளம்.

[2] வள்ளுவர் குறிப்பிட்ட தவ்வையும், ஒவ்வை சொன்ன மூதேவியும் ஒன்றா என்று கவனிக்க வேண்டும். தவ்வை, வள்ளுவருக்கு முன்னால் ஏன காணப்படவில்லை என்பதகும் பதில் சொல்லியாக வேண்டும். வள்ளுவர் குந்தர்குந்தர் நூலைத் தான், தனது நூலாக பரப்பி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல், ஜைனர் எழுதி வந்தாலும், இரு கூட்டமும் சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் பிரச்சாரம் செய்கின்றன என்று தெரிகிறது.

[3] அதாவது சைவத்தில், தவ்வை என்ற வார்த்தை மதிப்புடன் உபயோகிக்கப் பட்டது என்றாகிறது. தமிழ் எழுத்தாளர்கள் இதனையும் கவனிக்க வேண்டும்.

[4] மபொசி, ஔவை யார்?, அமுத நிலையம், சென்னை,

[5] ஒரு புறம் களப்பிரர்கள் தாம் தமிழ் கலாச்சாரம், நாகரிகம்,பண்பாடு, இலக்கியம் எல்லாவற்றையும் அழித்து விட்டனர் என்றும் எழுதியுள்ளனர். அவர்களது அரசியல் தாக்கம் சாளுக்கியர்களுக்குப் பின்னரும் தெரிகிறது.

[6] Indira S. Iyer, Durga as Mahisasuramardini – A Dynamic myth of Goddess, Gyan Publishing House, New Delhi, 1997, pp.110-115.

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

செப்ரெம்பர் 12, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? காலநிலையுடன் ஆராய்ந்தால் விடை கிடைக்கும் [3]

Ellora cave saptamatrika sculptures

சப்தபாதருடன் இணைப்பது: ஜெயமோகன் கண்டது, “இரவு அவளுக்கான நேரம் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார், அண்ணாமலையார் சதகத்தை[1] ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார். இந்தியாவெங்கும் இருந்த வழிபாட்டுமுறை மெல்ல சமணத்துக்குள் நுழைந்து சமண தத்துவ மையத்தின் அங்கீகாரம் இல்லாத ஒரு சிறுவழிபாடாக நீடித்தது. சமணம் அழிந்தபின் சாக்த மதத்துக்குள் நுழைந்தது. பின்னர் சக்திவழிபாட்டில் கரைந்து தன் தனித்தன்மையை இழந்தது. இருந்தாலும், கேரளத்தில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக ஏழன்னையர் உள்ளனர்”. ஜெயமோகன் குறிப்பிட்ட அபிதான சிந்தாமணி, சிங்காரவேலர் முதலியாரால், 1910ல் தொகுத்து வெளியிடப்பட்டது[2]. அண்ணாமலையார் சதகம், திருச்சிற்றம்பல நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. அதையும் முதலியார் குறிப்பிட்டார் என்கிறார் ஜெயமோகன். இதிலிருந்து, இவரும் மூலங்களைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், அவரது கருத்தும் அவ்வாறே சுருங்கி விடுகிறது.

Chronology important for studying Mudevi in Tamilnadu

செத்த பாடையும், புதிய கதைகளும்: சமஸ்கிருதத்தை, “செத்த பாடை” என்பர், ஆனால், அதை வைத்து தான், இவர்கள் கதை பேசுவர். அதாவது சமஸ்கிருத நூல் ஆதாரங்களை வைத்து தான், இவர்கள் தமிழின் தொன்மை முதலியவற்றைப் பற்றி பேசுவர். சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். 16-18ம் நூற்றாண்டுகளில் உண்டான கதைகளை வைத்து எல்லாவ்வற்றையும் இணைக்கப்படுகிறது. தமிழில் மூத்த தேவி என்ற பெயரானது வழங்கப்பெற்று, அது மருவி மூதேவி என்று அழைக்கப்படுகிறது. தவ்வை காக்கை கொடியினையும், கழுதை வாகனத்தையும் உடையவர். இதற்கான ஆதாரங்கள் பதம புராணம், லிங்க புராணம் முதலியவற்றில் காணப்படுகின்றன. தமிழில் கம்ப ராமாயணத்தில் பாற்கடை கடையும் போது தோன்றுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. கைகளில் துடைப்பம் கொண்டுள்ளார். சில சிலைகளில் தவ்வை தனித்தும், மற்ற சிலைகளில் தன்னுடைய மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் உள்ளார். மாந்திக்குப் பதிலாக தவ்வையின் மாமியார் சாயாதேவியும் சில சிலைகளில் இருக்கிறார். வடக்கில் மூத்த சகோதரி / ஜேஸ்டா தேவி வழிபாடு  300 BCE லேயே இருந்துள்ளது, ஆனால், தென்னகத்தில் 7-8 CE நூற்றாண்டுகளில் பிரபலமானாலும், 10ம் நூற்றாண்டிலேயே மறைந்து விடுகிறது[3]. ஆகவே தமிழகத்த்தில் எப்பொழுது உண்டானது என்பதனை காலரீதியில் எடுத்துக் காட்ட வேண்டும். இந்த 1300 ஆண்டுகள் இடைவெளி ஏன் என்றதும் நோக்கத் தக்கது.

Child grabbing Hriti, GAndhara

தவ்வை வழிபாடுதமிழ் எழுத்தாளர்கள் விளக்கும் விதம்: தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆனால் எவ்வளவு காலம் என்று சொல்ல மாட்டார்கள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார். பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார்[4]. ஆனால், பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.

Tavvai, Kumbakonam, Tanjore

 

ஆரியதிராவிட இனரீதியிலான ஆராய்ச்சிகள், சித்தாந்தம் முடிவைத் தருமா?: பல்லவர் காலம் 275-897 CE ஆகும், அப்படியென்றால், இக்காலகட்ட்த்தில் இருந்த தவ்வையும்,தமிழர்களின் தவ்வையும் ஒன்றா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் / திராவிட எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் சித்தாந்திகள் பல்லவர், சோழர் முதலியோரை, ஆரியர், வந்தேறிகள், பார்ப்பனர் கைக்கூலி……என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர். பிறகு,  அவர்களது வழிபாட்டை ஏன் குறிப்பிடவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. பல்லவர்களின் குலதெய்வம், தமிர்களின் / திராவிடர்களின் மூத்த தெய்வமாக எப்படி, எப்பொழுது, ஏன் மாறியது என்று சொல்ல முடியுமா? சரித்திர ஆதாரங்கள் பிற்காலத்தைக் காட்டும் போது, முற்காலத்தில் தொன்மையினை எடுத்துச் செல்வது எவ்வாறு? மேலும், மூலங்களுக்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து, விளக்கங்களைப் பெற்று, எல்லாமே தமிழ் என்றால் என்ன ஆராய்ச்சி? ஆரியர்-திராவிடர் என்று கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வதால், உண்மையான தீர்வகளும் கிடைக்காது, முடிவுகளும் கிடைக்காது.

Tavvai, Karunilam, Chingleput
மூதேவிக்கு உள்ள கோயில்கள்: தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாமில், கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. மூதேவி தனிழர்களது தெய்வம் என்றாலும், தமிழகத்தில், தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை[5]. தவ்வை தனியாகவோ, மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. அதனால் எண்ணிக்கையும் சொல்லமுடியாது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார். ஆமாம், சில இடங்களில்! நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது[6]. திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.

Tavvai, Kattupputtur

மூதேவி ஆராய்ச்சியில் கீழ்காணும் காலநிலையை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்:

 1. சங்ககாலம்500 / 300 BCE முதல் 100 / 300 CE வரை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருங்கற்காலம் c.1000 BCEலிருந்து தொடர்கிறது.
 2. பல்லவர்காலத்திற்கு முன்பு [275-897 CE] முழு அளவில் சிற்பங்கள், கோவில்கள் முதலியவை தமிழக்த்தில் இல்லை.
 3. ஆக முதல் நூற்றாண்டுகளில், களப்பிரர்களால், இருந்த கொவில்கள் எதையேனும் அவர்களால் அழிக்கப் பட்டனவா என்று ஆராயவேண்டும். அவர்கள் ஜைனர்கள் எனும்போது, தமிழகத்தின் சரித்திரம் தனியாகப் பார்க்க னுடியாது,
 4. சோழர்காலத்தில் முழுமையான கோவில்கள் கணப்படுகின்றன. ஆகம சாத்திரங்களின் படி, பிரகாரங்கள், மூர்த்திகள் / விக்கிரங்கள் அமைக்கப் படுகின்றன.
 5. விஜயாலய, நாயக்கர் காலங்களில், கோவில் கட்டிடக்கலை சிறப்புற்று, எல்லா கோவில்களும் புதுப்பிக்கப் பட்டன, புனர் நிர்மாணம் செய்யப் பட்டன.

மூதேவி ஒரு அனுக்கிரக தேவதை, இப்படி சொன்னாலும், விடுவார்களா, தமிழ் ஆராய்ச்சியாளர்கள்? இதோ, இதையும் படியுங்கள்.

© வேதபிரகாஷ்

08-09-2018

Tavvai, Kattupputtur.with varahi

[1] சதகம் – நூறு பாடல்கள் கொண்ட இலக்கிய தோற்றம் 18-20 நூற்றாண்டுகளில் உண்டானது. காசுக்காக, தமிழ் பண்டிதர்கள், பலவித நபர்கள் பெயரில் சதகங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி உருவக்கினார்கள். ரப்பிச்சதகம், அப்துல்றகுமானிற்றகீம்சதகம், இயேசுநாதர்சதகம், என்றெல்லாம் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] ஆக 19-20ம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்டதை வைத்து, ஜெயமோகன் போற்றோர் எழுதியதை, சரித்திர ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக் கொள்ள முடியாது.

[3] Jyestha appears in the Hindu tradition, as early as 300 BCE. Her worship was at its peak in South India in the 7th-8th century CE, but by the 10th century, her popularity waned pushing her into oblivion.https://en.wikipedia.org/wiki/Jyestha_(goddess)

[4]ஆனால், வடக்கில் அதற்கு முன்பே இருக்கிறது. ஆகவே, ஆரியர் அல்லது திராவிடர் யார் மூலம், இவ்வழிபாடு தமிழகத்தில் புகுந்தது என்பதனை தமிழ் எழுத்தாளர்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.இல்லையெனில், அத்தகைய இனவாகக் கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு, காலம் தள்லிக் கொண்டிருந்தால், வரலாற்று அசிரியர்கள் மதிக்க மாட்டார்கள், இப்படியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.

[5] அப்படியென்றால், ஏனில்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும், “தமிழரது மூத்தத் தெய்வம்” என்றால், அகழ்வாய்வு, சரித்திர ஆதாரங்களும் இருக்க வேண்டும். வார்த்தைகளினால், எழுத்துகளினால் இருந்தால் போதாது. யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

[6] கருதப்படுகிறது என்றாலும், அதற்கு முந்தைய சிற்ப-வரலாற்று ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை.

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா-முண்டதேவியா? தமிழ் தேவியா-சமஸ்கிருத தேவியா? சேட்டை செய்யும் தமிழ் எழுத்தாளர்கள் [2]

செப்ரெம்பர் 11, 2018

மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியாமுண்டதேவியா? தமிழ் தேவியாசமஸ்கிருத தேவியா? சேட்டை செய்யும் தமிழ் எழுத்தாளர்கள் [2]

Sridevi and Dharidhra devi-Vishnu

முதல் தேவியை சிவனும், இரண்டாவது தேவியை விஷ்ணுவும் ஏற்றுக் கொண்டனர்: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார்[1], “இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, “தூம்ர காளிஎன்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள்சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், “முதல் தேவிஎன்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது[2].

Jhesta - Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

அழுக்கை நீக்குபவள், கழுதைவாஹினி[3]: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார் “தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர். கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள். இந்த காரணத்தினால் தான், சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன[4].

Dhumra Devi, the Goddess of smoke, darkness etc

ஜேஸ்டை தான் சேட்டை[5]: ஹரிப்பிரியா ரங்கராஜன் தொடர்கிறார் “இன்னும் சொல்லப் போனால், “ஜேஷ்டாஎன்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது[6]. காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை,” என்று முடிக்கிறார்[7].

Dasa Maha Vidya - 10 Devis-Shiva

தசமகா வித்யா / வித்தைஎன்றால் என்ன, அதன் நிலை என்ன?: தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மூலங்களைப் படிக்காமல், அடுத்தவர் எழுதி வைத்ததை எடுத்தாண்டு, குறிப்பிட்டு, ஏற்கெனவே ஒரு முடிவை தீர்மானித்து வைத்துக் கொண்டு எழுதி முடிப்பது தான். “தசமகா வித்யா” என்றால், ஏதோ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் எழுதப் பட்டது, தமிழர்களால் “தமிழகத்தில்” பின்பற்றப்பட்டது என்று நினைப்பது தவறு. ஜைன-பௌத்த தாந்திரிக கிரியை முறைகளில் பல தேவியர் உருவாக்கப்பட்டனர், மந்திரங்களினால் உச்சாடனம் செய்யப்பட்டனர். இத்தேவதைகள் குப்தர் காலத்திலிருந்து இடைகாலங்களில் சக்தி உபாசகர்கள் தங்களது வழிபாட்டில் தகவமைத்துக் கொண்டனர். துலுக்கர் காலத்தில், துலுக்க்ச்ரும் இதில் நுழைந்ததால் 18ம் நூற்றாண்டு வரை இதன் தாக்கம் தெரிகிறது. அதாவது, c. 1000 BCE முதல், முதல் நூற்றாண்டுகள் வரை மற்றும் 6th cent CE முதல் 18ம் நூற்றாண்டு CE வரை, இரு காலகட்டங்களில் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் “மஹா நிர்வாண தந்த்ரா” போன்ற போலி-நூல்களும் எழுதப்பட்டன. அதில் ராஜாராம் மோஹன் ராய் போன்றோரும் துணையாக இருந்தனர். ஆகையால், சரித்திரத்தை முழுமையாகப் படிக்காமல், “தமிழ், தமிழர், தமிழகம்” என்று வட்டம் போட்டுக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால், உண்மையினை அறிய முடியாது.

Tamil or Sanskrit Devi-names

தமிழில் எல்லா தேவியரும் ஒன்றுதான்: தமிழ் எழுத்தாளர்கள் எல்லாவற்றையுமே தமிழில் படிப்பதில் வல்லவர். மூதேவி ஆராய்ச்சி இதனை காட்டுகிறது. மூத்த தேவியாக்கி, சனீஸ்வரனின் மனைவியாக்கி எங்கெங்கோ கொண்டு செல்கின்றனர். அக்காவைக் குறிக்கும் சொல்லான ‘அக்கை’ என்கிற வார்த்தை எப்படி ‘தமக்கை’ ஆனதோ, அதேபோல் ‘அவ்வை’ என்ற வார்த்தை ‘தவ்வை’ ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள்[8].  மூன்று தேவி, முழுமையான தேவி, போன்றவை முதேவி ஆகி, மூதேவி ஆகி இருக்க முடியாதா? இக்கால தமிழ் எழுத்தாளர்கள், மூதேவியை நன்றாகக் குழப்பி விட்டுள்ளனர் என்பதை அவர்களது எழுத்துகளிலிருந்தே அறிய முடிகிறது. தவ்வை, ஜேஸ்டா, சேட்டா, சேட்டை, மாமுகடி, முகடி, மோடி, மூத்ததேவி, பழையோள், தூமாவதி, காக்கைகொடியோள், தூம்ரவராஹி, தூம்ரகாளி, மாயை, மஹாநித்திரை, ஏகவேணி, ஒற்றைச் சடையாள், என்று பலவாறு குறிப்பிடுகின்றனர். மூதேவி = மூத்த தேவி, அதனால், லக்ஷ்மிக்கு அக்காள் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். போதாகுறைக்கு, திருமாலின் மனைவி நீளா தேவியைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது என்று நீடியுள்ளனர். தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Tamil or Sanskrit Devi-names-Mudevi, Dhumra Devi

சேட்டைமூதேவி வழிபாடு சமணத்தில் இருந்து சாக்தத்தில் நுழைந்து மறைந்தது: இப்படி ஜெயமோகன் சமணத்தின் தாக்கத்தை ஒப்புக்கொண்டதில் ஓரளவிற்கு சரித்திர விசயத்துடன் ஒத்துப் போகிறார்[9]. அவர் எழுதியுள்ளதாவது, “சாக்த மத நூலான போதாயனஸூத்திரத்தில் இந்த தேவியை எப்படி பூசைசெய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது, இந்த தேவியின் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லும் வெட்டம் மாணி தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருபாடலில் மூதேவியை வழிபடுவது வீண் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் ஜேஷ்டை வழிபாடு அனேகமாக காணப்படுவதில்லை[10], சைவ புராணங்களில் ஜேஷ்டை பார்வதியின் ஒன்பது தோற்றங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறாள் என்கிறார் வெட்டம் மாணி. அபிதான சிந்தாமணி, இவள் முதலில் ஆதிசக்தியில் அவளுடைய ஒரு தோற்றமாகப் பிறந்து பின்னர் திருப்பாற்கடலில் தோன்றியவள் என்கிறார் சிங்காரவேலு முதலியார். இவள் கன்னங்கரிய நிறமும், பாம்பு ஆயுதமும், கழுதை வாகனமும் கொண்டவள், என்று சுப்ரபோதம் என்ற நூலை ஆதாரமாகக் காட்டுகிறார். மூதேவி அரசு மற்றும் விளா மரத்து அடியில் இருப்பாள். மனிதர்களின் நிழல் வழியாக நடமாடுவாள்”.

© வேதபிரகாஷ்

08-09-2018

Jesta devi sculpture at Egmore museum

[1] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[2] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[3] ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[4] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[5]  ஹரிப்பிரியா ரங்கராஜன், மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?‘, தினமலர், Added : ஜூன் 10, 2012  23:47; Updated : ஜூன் 11, 2012: 00:05.

[6] எந்த சாஸ்திரம் என்பது குறிப்பிடப் படவில்லை.

[7] http://www.dinamalar.com/News_detail.asp?Id=483793

[8] தமிழ் இணைய தளத்தில், தம் + அவ்வை =தவ்வை; உம் அவ்வை = உவ்வை;  எம் + அவ்வை =  எவ்வை ; தும் + அவ்வை = துவ்வை, என்றுள்ளதை வைத்து எழுதியுள்ளார் என்று தெரிகிறது.

[9] ஜெயமோகன், சேட்டை, நவம்பர் 4,  2008; https://www.jeyamohan.in/735 – .W4T-eSQzZdg

[10]  ஆனால், இரா.செந்தில்குமார், “கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன”, என்று எழுதுகிறார்.

விகடன், தமிழர்களின் மூத்த தெய்வம்வளத்தின் மூல வடிவம்மூதேவி!, இரா செல்வகுமார், Posted Date : 16:47 (09/10/2017)Last updated : 16:47 (09/10/2017)

https://www.vikatan.com/news/spirituality/104480-glory-of-goddess-moodevi.html

இந்திய யானைகள் அரேபியாவுக்குச் சென்றனவா – பிள்ளையார் வழிபாடு அங்கு இருந்ததா?

செப்ரெம்பர் 16, 2016

இந்திய யானைகள் அரேபியாவுக்குச் சென்றனவாபிள்ளையார் வழிபாடு அங்கு இருந்ததா?

nabataean-elephants-on-pillars-four-side

யானைச் சிற்பங்களைப் பற்றிய விவரங்கள்: சிங்கத்தைப் போன்று, இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், ஒரு சிற்ப தெளிவாக இல்லை. ஒரு கோணத்தில், ஒரு சிற்பம் யானை போலவும் காணப்படுகிறது. எல்-பரீத் என்ற இடத்தில் காணப்படும் உருவம், இயற்கையிலேயே உருவானது என்றாலும் யானையைப் போன்றேயுள்ளது. பெட்ராவில் தூண்களில் மேலே நான்கு பக்கங்களிலும், நான்கு யானைகள் இருக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன[1]. நபாத்தியர்களின் யானை சிற்பங்களில் சில இடிமானங்கள் உள்ள இடத்திலும், சில அருங்காட்சியகத்திலும் காணப்படுகின்றன[2]. இவற்றைப் பற்றிய விவாதங்கள் அதிகமாகவே உள்ளன. மற்ற நாகரிகங்களைப் போலில்லாது, நான்கு பக்கங்களில் நான்கு யானைகள் இருப்பது, பாரத்தை சுமப்பது என்பது, இந்திய கருத்தாகும். இந்திய அண்ட-பேரண்டவியல் சிந்தாந்தத்தின்படி, உலகத்தை நான்கு யானைகள் சுமக்கின்றன, அது மட்டுமல்லாது “திசை யானைகள்” இருப்பதாக, திசைகளைக் குறிக்கக் காட்டப்படுகிறது.

ashta-dik-palakas-and-animals-in-other-cultures

நபாத்தியர் 165 BCE முதல் 106 CE வரை காலத்தில் உபயோகப்படுத்தியதற்கு எந்த ஆச்சரியமும் இல்லை: வழக்கம் போல இந்த யானைகள் ஆப்பிரிக்க அல்லது இந்திய யானைகளின் உருவங்களா என்ற சர்ச்சை உள்ளது. ஜௌகோவெஸ்கி அது இந்திய யானை தான், “சுண்ணாம்பு கல்லில் செதுக்கப்பட்டு, அதன் மீது ஒரு பூச்சுப் பூசப்பட்டுள்ளது,” என்று எடுத்துக் காட்டுகிறார்[3]. நபாத்தியர், இந்தியர்களுடன் நேரிடையாக வியாபரத்தில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் இந்திய யானைகளைப் பற்றி அறிந்திருந்தனர். அதனால், அதன் உருவத்தை தமது தூண்களில் வடித்தனர் என்று மிச்செல் மர்ரே எடுத்துக் காட்டியுள்ளார்[4]. கிரேக்கர்-ரோமானியர் c.1000-500 BCE இந்திய யானைகளை தமது நாணயங்கள், தட்டுகள் முதலியவற்றில் உபயோகப்படுத்தியுள்ளதால், நபாத்தியர் 165 BCE முதல் 106 CE வரை காலத்தில் உபயோகப்படுத்தியதற்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில், யானைகள் கிரேக்க-ரோமானியர்களுக்கு பெட்ரா / ஜோர்டன் பகுதிகளைத் தாண்டிதான் சென்றிருக்க வேண்டும். இல்லை, கடல் வழியாக கப்பல்கள் மூலம், இந்தியாவிலிருந்து ஏற்றுபதி செய்யப்பட்டிருக்க வேண்டும். குதிரைகள் கப்பல்களில் சென்றதால், யானைகளும் சென்றிருக்கலாம்.

four-cardinal-points-of-the-globe-animals-ymbolism-17th-cent-ce

பெட்ரா பாம்பு மலையா, யானையா?: இது தவிர, ஒரு சிறு குன்றின் மீது கட்டுமானத்தின் மீதாக ஒரு உருவச்சிலை உள்ளது. அது பெட்ரா பாம்பு மலை என்று அழைக்கப்படுகிறது. நபாதியர் பாம்புகளை வழிபடுபவர்கள் என்ற ரீதியில், இவ்விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதை பல கோணங்களில் பார்க்கும் போது, யானையைப் போன்றே காணப்படுகின்றது. நபாதியர் யானைகளை சிற்பங்களில் வடித்துள்ளதால், யானைகள் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றன. இவையெல்லாம், வழிபடும் இடங்களில் உள்ளதால், அவற்றை விக்கிரகங்களாகவே கொள்ளலாம். நபாத்தியர் இந்தியர்களுடன் வாசனை திரவியங்கள், தந்தங்கள் முதலிய பொருட்களை விற்பதில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், ஒருவேளை இந்திய யானைகளையும், இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்தார்களா என்றும் நோக்கத்தக்கது. அரேபியர்கள் குதிரைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தபோது, இந்திய யானைகளும் அப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும்.

petra-snake-mountain-another-view-an-elephant-god

1000BCEலிருந்து இந்திய யானைகள் வளைகுடா நாடுகள் சுற்றி இருந்தது: இந்திய யானைகள் சுமார் 1000BCEலிருந்து உபயோகப்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை அசிரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானியர்களின் நாணயங்கள், தட்டுகள், பேழைகள் முதலியவற்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள யானை உருவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

 1. முதன்முதலாக வளைகுடா நாடுகள் மற்றும் சுற்றியுள்ள பழங்கால நாகரிகங்களைக் கவனிக்கும் போது, அசிரிய சுல்மானு-அசரேடு / சன்மனேஸர் – III [Shalmanrzer’s black obelisk, 860 BCE] அரசனின் கருங்கற்சிற்பங்களில் இந்திய யானை காணப்படுகிறது.
 2. .
 3. 326 BCE அலெக்சாந்தர் கௌஹமேலா [Gaugamela] யுத்தத்தின் போது, பாரசீகப்படையில் 15 இந்திய யானைகள் இருந்ததை கண்டனராம்.
 4. 250BCEயில் பைரஸ் [pyrrhus, King of Epins] என்ற மன்னன் ரோமானியர்களை வெல்ல, யானைப்படையை உபயோகித்துள்ளான்.
 5. 218BCEயில், ஹன்னிபால் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து 37 யானைகளுடன் சென்றான் என்றபோது, அந்த யானைகளை சாரஸ் [Sarus, Syria] என்று குறிப்பிட்டாலும், அந்த யானைகள் இந்திய யானைகள் தான் என்று அவர்களே கூறுகின்றனர்.

இதிலிருந்து ஐரோப்பாவில் இந்திய யானை மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது என்கிறார்கள். ஆகவே, 1000BCEலிருந்து இந்திய யானைகள் அங்கிருந்தன, படைகளில், போர்களில் உபயோகப்படுத்தப் பட்டன எனும்போது, அவை இந்தியாவிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது, அவற்றை பாதுகாக்க, பயிற்சி கொடுக்க, மற்றவற்றைக் கவனித்துக் கொள்ள இந்தியர்களும் சென்றிருக்க வேண்டும். ஆகவே, ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் யானைகளைப் பார்த்து முதல் நூற்றாண்டில், நபாத்தியர் சிற்பங்களை வடித்ததில் ஒன்று ஆச்சரியம் இல்லை.

earliest-depictions-of-an-elephant-in-middle-eastern-history-appears-on-shalmanezers-black-obelisk-dated-around-860-bc

நபாத்தியர்கள்  – நாடோடிகளா, கடற்கொள்ளைக்காரர்களாயார்?: இவர்கள் பொதுவாக நபாத்தியர்களை நாடோடிகள், அதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கியிருக்காமல், இடம் விட்டு இடம் சென்று கொண்டே இருப்பர் என்றே குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் கடல் கொள்ளைக்காரர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். நாடோடிகள் என்றால், ஒரு இடத்தில் பெட்ரா போன்ற நாகரிகத்தை உருவாக்கி இருக்க மாட்டார்கள். அத்தகைய சிற்பங்களையும் உருவாக்கியிருக்க மாட்டார்கள். “கடல் கொள்ளைக்காரர்கள்” என்றல், கப்பல்கள் வைத்துக் கொண்டு, கப்பல் கட்டும் தொழில், கடலில் பிரயாணம் செய்தல், பல நாடுகளுக்கு செல்லுதல் போன்றவற்றில் வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும். எனவே இத்தகைய நாடோடிகள், கடல் கொள்ளைக்காரர்கள் முதலிய வர்ணனைகள் முரண்பாடாக, ஒவ்வாததாக உள்ளன.

elephant-coin-in-italy-dated-to-47-46-bce

நபாத்தியர் இந்தியரா, இந்தியயர்களுடன் தொடர்பு கொண்டவர்களா?: இந்தியர்களுடன் வியாபாரம் செய்தனர் எனும்போது, இந்தியர்கள் ஏன் அவர்கள் இடத்தில் இல்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் வியாபாரம் ஒருவழியாக நடக்காது, பரஸொபரமாகத்தான் நடக்கும். மேலும், அக்காலத்தில் பண்டமாற்று முறைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. எப்பொழுதுமே, இந்தியாவுக்கு வந்து வியாபாரம் செய்தனர் என்றுள்ளது. ஆனால், இந்தியர்களும் அங்கெல்லாம் சென்று வியாபாரம் சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால், அந்நகரங்களில் அவர்களது இருப்பிடங்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளுக்கு, கோவில்கள் முதலியனவும் இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை முதல் நூற்றாண்டுகளில், இந்தியர்கள் அங்கெல்லாம் இருந்திருக்கிறார்கள், வாழ்ந்தார்கள் என்றால், நபாத்தியர்கள் இந்தியர்களாகக் கூட இருந்திருக்கலாம். அதனால், அவர்கள் அங்கு கோவில் கட்டும் போது உள்ளூர் பொருட்கள், வேலையாட்கள் என்றெல்லாம் உபயோகித்தபோது, வெளிப்படையாக பார்க்கும் கட்டிட அமைப்புகள் முதலியன கிரேக்க-ரோமானிய தாக்கங்களில் காணப்படலாம். ஆனால், தெய்வங்கள், சிற்பங்கள், வழிபாடு என்று வரும் போது, இந்திய தாக்கம் காணப்படுகிறது.

persian-queens-looking-like-hindu-goddesses

கிரேக்கரோமானியஅரேபியபாரசீகபெண் தெய்வங்களில் ஒற்றுமை காணப்படுது: பிள்ளை-பிள்ளையார் வழிபாடு யானையுடன் மட்டுமல்லாது பெண்-தாய் வழிபாட்டுடன் பிணைந்துள்ளது. கிரேக்க, ரோமானிய, பாரசீக, அரேபிய பெண் தெய்வங்கள், சிற்பங்கள், முதலியவற்றில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன[5]. கட்டிடங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், சிற்பங்கள் என்று பார்க்கும் போது, பல அழிக்கப்பட்டு விட்டன. அந்தந்த இடங்களுக்கு சென்று பார்த்தால், இடிபாடுகளில் உள்ளவற்றை, மாற்றியமைத்தவற்றை, ஓரளவுக்கு சீரமைத்த மாதிரிகளைத்தான் பார்க்க முடிகிறது. முக்கியமான சிற்பங்கள் பற்பல அருங்காட்சியங்கள், தனிமனிதர்களின் சேமிப்புகளில் உள்ளன. அவற்றை நேரில் பார்த்து ஆராய்ச்சி செய்யவே லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால், ஆங்கிலத்தில், மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன எழுதி வைத்துள்ளனரோ அவற்றை வைத்து தான், இந்திய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது. கடவுளர்களின் பெயர்கள் ஒரு மொழியிலிருந்து, இன்னொரு மொழிக்கு மாற்றும் போதே, அதன் மூலம் மறைந்து விடுகிறது. ஆனால், சிற்பங்களைப் பார்க்கும் போது உண்மை தெரிந்து விடுகிறது.

beatul-beatulus-beth-el-the-sacred-stone-depicted-on-coins

இந்திய பெண்தெய்வ வழிபாடு அரேபிய பகுதிகளில் இருந்ததா?: பேடெல், பெத்-ஏல் [Beatyl, Beth-El, house of god, Bethelhem] போன்ற சொற்கள் “கடவுளின் வீடு”, தெய்வம் உறையுல் இல், கோவில் என்ற பொருளில் வழங்கப்படுகிறது என்று பார்த்தாலும், அவற்றின் சிற்பங்களை, உருவங்களைப் பார்க்கும் போது, கோவிலில் நீண்ட உருளை, கூம்பு, மலை வடிவத்தில் கல் இருப்பது, அது லிங்க வடிவம் என்று எளிதாகத் தெரிகிரது. சிலவற்றில் மலை போன்ற உருவத்தைச் சுற்றி பாம்பு இருப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. செடியின் கீழ், அந்த லிங்க உருவம் இருப்பது, அதன் மீது பிறைச்சந்திரன் இருப்பது முதலியவற்றை வைத்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அல்-உஜ்ஜா, துஸ்பரி, வீனஸ், போன்ற தேவதைகள்-தெய்வங்களின் சிற்பங்களை ஆராயும் போது, ஒரு அசிய அரசியின் உருவம் இந்திய பெண்தெய்வம் போன்றே காணப்படுகிறது. பார்த்தவர் எவரும் அதை எளிதாக சொல்வார்கள், இந்தியாவில், அவற்றக் காண்பித்தால், சாதரண மனிதன் கூட அது, பார்வதி, லட்சுமி, அல்லது அம்மன் என்று கூறிவிடுவான். அது ஜெனோபியா [Zenobia] என்ற 240-275 CE காலத்தைச் சேர்ந்த சிரியாவின் பல்மேரா சாம்ராஜ்ஜியத்தின் அரசி. அவளைக் கண்டு அப்பகுதிகளில் இருந்த அனைவருமே மிரண்டு போயிருந்தனர்[6].

allat-the-arab-goddess-of-war-is-the-central-figure-on-this-stone-relief-from-hatra

இந்திய தொடர்புகளை மறைக்கவே சரித்திர ஆதாரங்கள் அழிக்கப் பட்டு வருகின்றன: சமீபத்தில் சைசிஸ் திவிரவாதிகள், இந்த பல்மேரா பகுதியில் இருந்த புராதன கட்டிடங்ளைத் தான் குண்டுகள் வைத்து தகர்த்தனர். அதாவது, கடந்த 2000 ஆண்டுகளாக கிரேக்கர், ரோமானியர், அரேபியர் என்றும், கிருத்துவர்-முஸ்லிம்கள் என்றும் மற்றவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆதாரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அந்நிலையில், எப்படி கண்களை மூடிக் கொண்டு, உலக அளவில் பார்க்காமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டு, குறுகிய பார்வையில், இத்தகைய ஆதாரங்களை விளக்குவது, ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவது, ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவது, என்பதனை கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

16-09-2016

three-goddesses-typical-hatrene-style

[1] Blagg, Thomas FC. Column capitals with elephant-head volutes at Petra., Levant (2013).

[2] McKenzie, Judith S., Sheila Gibson, and A. T. Reyes. Reconstruction of the Nabataean temple complex at Khirbet et-Tannur,  Palestine exploration quarterly (2013).

[3] Joukowsky, Martha Sharp. “Re-Discovering Elephants at Petra!.” Ancient Egyptian and Mediterranean Studies: In Memory of William A. Ward (1998): 133-148.

[4] Michele Murray, Religion and the Nomadic life of the Nabateans, Chap.IX, in Travel and Relion in Antiquity, edited by Philip A Harland, Canadian corporation for Studies in Religion, Wilfrid Laurier University Press, 2011, p.225.

[5] It will be sufficient in this dissertation to assume, what might be proved beyond controversy, that we now live among the adorers of those very deities, who were worshipped under different names in old Greece and Italy, and among the professors of those philosophical tenets, which the Ionick and Attick writers illustrated with all the beauties of their melodious language.

Jones, William. On the gods of Greece, Italy, and India., Journal of Royal Asiatic society, 1807.

[6] Breytenbach, M. M. “A Queen for All Seasons: Zenobia of Palmyra.” (2005).