இந்திய தெய்வீக அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் உருவகங்கள் தாக்கப்பட்டதேன்?

இந்திய தெய்வீக அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் உருவகங்கள் தாக்கப்பட்டதேன்?:

அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (13).

ஆயிரத்தொரு இரவுகள் போன்ற கதைகள் கோக்கோகத்தைப் பற்றி தான் விவரிக்கிறது.

ஆயிரத்தொரு இரவுகள் போன்ற கதைகள் கோக்கோகத்தைப் பற்றி தான் விவரிக்கிறது.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற சித்தாந்தம் இஸ்லாத்தில் மறைந்ததும், ஆண்-பெண் உறவுகள் விரிந்து, திரிந்து, அதிகமானதும்: இஸ்லாம் பரவிய பின்னர், ஆண்-பெண் உறவுகள் விரிந்தன, திரிந்தன மற்றும் அதிகமாகின. “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற சித்தாந்தமே மறந்து-மறைந்து போயிற்று. அரேபிய, பாரசீக, துருக்கிய மற்றும் உருது மொழிகளில் கொக்கோக கவிதைகள், கதைகள் மற்றும் இலக்கியங்கள் இருக்கும் போது, திடீரென்று இந்தியா என்று வரும்போது, அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் உருவகங்கள் மாறுகின்றன. ஹிஜ்ர், விஸால், முஜூன், பிஸ்தான், சுரீன் என்று நாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி, கொக்கோகத்தை மறைக்கும் போது[1], அத்தகைய நாகரிகத்தை, இந்து கடவுளர்களை எடுத்தாளும் போது ஏன் வேறுமுறையில் கையாண்டார்கள் என்று அவர்கள் விளக்கவில்லை.

மஸ்நனவி கோக்கோகத்தைப் பற்றி தான் விவரிக்கிறது.

மஸ்நனவி கோக்கோகத்தைப் பற்றி தான் விவரிக்கிறது.

சூபித்துவம் இருமுனை தாக்குதலா?: அகம்-புறம் என்ற இரண்டு வகைகளிலும் தாக்கி அழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டனரா, அதற்கு சூபிக்கள் துணைபோயினரா என்ற கேள்விகளும் எழுகின்றன. கோவில்கள், மடங்கள், காட்டுகள் தாக்கப்பட்டு, இடித்துடைக்கப் பட்டபோதும், அழிக்கப்பட்டபோதும், இந்துக்கள் எதிர்த்தார்கள், உயிரை விட்டார்கள். ஆனால், அவ்வாறு உயிர் விட்டவர்கள் எல்லோருமே பிராமணர்கள் என்று எழுதி வைத்தனர். உண்மையில், விவசாயிகள், கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள், என்று பலர் தங்களது உயிரை விட்டு தியாகம் செய்தனர். அதனால் தான் பக்தி இயக்கம் என்றபோது, எல்லோரும் கலந்து கொண்டபோது, சரித்திராசியர்கள் வேறுவிதமான திரிபு விளக்கம் கொடுத்தனர். ஹேரத்தின் விளைவுகளால், இஸ்லாமிய முறைப்படி நான்கு மனைவிகள் இருக்கக்கூடாது என்ற நிலையில் தான் “மூத்தா திருமணம்” என்று வைத்து, நான்கிற்கு மேற்பட்ட மனைகளை “தற்காலிக மனைகளாக” வைத்துக் கொண்டனர். அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்கு மனைவியாக வைத்துக் கொண்டு அனுபவித்து விட்டுவிடுவர். மற்றவர்கள், இவர்களை மறுபடியும் மணந்து கொள்ளலாம் அல்லது ஹேரத்தில் வைத்துக் கொள்ளலாம். பிறகு அவர்கள் பலதார மணத்தை விமர்சிக்கின்றனர் என்று வியப்பாக இருக்கிறது.

Mughal erotic painting.3

Mughal erotic painting.3

ராதாகிருஷ்ண ஒப்புமை பாரபட்சமானது: இந்நிலையில், முறைப்படியான ஒப்புமை என்று வரும் போது, ராதா-கிருஷ்ண என்று எடுத்துக் கொள்ளும் போது, இஸ்லாத்தில் உள்ள அதுபோன்ற ஜோடியை எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லாவுக்கு மனைவிகள் இல்லை என்றால், மொஹம்மதுக்கு மனைவிகள் இருந்துள்ளனர். அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்ற மூவர் அல்லாவின் மகள்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அப்படியென்றால், அல்லாவுக்கு மனைவி இருந்திருக்க வேண்டும், ஆனால், முகமதியர், இத்தகைய விவரங்களை மறைத்து விடுகின்றனர். மேலும், அதில் ஒரு மனைவி இந்தியாவிலிருந்து வந்தவள் என்று குறிப்பிடப்படுகிறது. அப்படியென்றால், இஸ்லாம்-இந்து ஒப்புமைக்கு அந்த ஜோடிதான் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, அத்தகைய ஒரு ஜோடியை ஒப்புமைக்கு எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. ஒருநிலையில் அக்பர்-ஒரு இந்து பெண்[2], ராதா-கிருஷ்ண பாவனையில் சித்தரிக்கப்பட்டு, ஓவியங்கள் தீட்டப்பட்டன. இது நிச்சயமாக ராதா-கிருஷ்ண தத்துவத்தை தூஷிப்பதற்காகவே என்று தெரிகிறது. எல்லா மதங்களையும் ஒப்பிடுகிறேன் என்றால், எல்லா மதக்கடவுளர்களுக்கும் சமமான அந்தஸ்து, மரியாதை கொடுக்கப்படவேண்டும். அவ்வாறில்லை என்றால், அது ஒப்பீட்டு படிப்பும் இல்லை, முறையும் இல்லை, நேர்மையும் என்றாகிறது. பிறகு அத்தகைய வேலையில் அக்பர் ஏன் ஈடுபட்டிருக்க வேண்டும்?

Meera, Chaitanya, Kabir-duality, Machendra-imitation

Meera, Chaitanya, Kabir-duality, Machendra-imitation

மீரா பாய், சைதன்யர் போன்றோர் மர்மமாக மறைந்தது; மீரா பாய் என்ற கிருஷ்ண பக்தையின் வாழ்விலும் அக்பர் மற்ற கிருத்துவர்கள் தலையிட்டுள்ளனர். மீராவின் மறைவு மர்மமாக உள்ளது. துவாரகா கோவிலில் சென்று மறந்து விட்டார் என்கிறது. அதேபோல, சைதன்யரும் கோவிலில் சென்று மறந்து விட்டார் அல்லது இறைவனுடன் ஐக்கியமாகி விட்டார் என்கின்றனர். சைத்தன்ய மாஹாபிரபு (1486-1534) பக்தி மூலம் தெய்வத்தை அடையலாம் என்று எடுத்துக் காட்டினார்.  சைதன்ய சரிதாம்ரிதா (Caitanya-caritamrita) என்ற நூல் எப்படி, இவரை முகமதிய ராணுவ வீரர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள் ஆனால், இவரைப் பார்த்துப் பேசிய இறகு, இந்துக்களாக மாறினார்கள் என்று விவரிக்கிறது. அதேபோல, சந்த காஜி என்பவருடன் உரையாடல் நடந்த போது, அவர் மாறி, சைதன்யரின் சீடரானார்.  ஆனால், இருவரின் மறைவுகளில் உள்ள மர்மம் பல்வேறு உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ஆக இவைற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இடைக்காலத்தில் தோன்றிய சம்பிரதாயம், வழக்கம் என்று புலனாகிறது.

Krishna with Mughals

Krishna with Mughals

கிருஷ்ணர் எல்லாமுறைகளிலும் தாக்கப்பட்டது ஏன்?: தந்தை-மகன், அண்ணன்-தம்பி, மாமன்-மைத்துனன், தாத்தா-பேரன் என்ற என்ற உறவுமுறைகளைப் பார்க்க வேண்டாம், அரசாள வேண்டும், சிம்மாசனம் வேண்டும் என்றால், இவர்களைக் கொன்றுவிட்டு, ஆட்சிக்கு வரலாம் என்ற சித்தாந்தத்தில் முகமதியர்கள், முகலாயர்கள் இருந்தனர். இதற்கு அவர்களுக்கு கிருஷ்ணரின் பகவத் கீதையும் பிடித்திருந்தது. இது தவறான எண்ணம் என்றாலும், அத்தகையப் போக்குக் காணப்பட்டது. ஏனெனில், கிருஷ்ணரும் அர்ஜுனனுக்கு அவ்வாறுத்தான் சொல்லி, சண்டையிடச் செய்கிறார். இதனால் தான், அவர்களுக்கு ராமாயணத்தை விட மஹாபாரதம் பிடித்திருந்தது. அடிக்கடி தங்களை அவ்வாறே உருவகப்படுத்திக் கொண்டனர். கிருஷ்ணரின் மீது இருவிதமான வெளிப்பாடுகள் உருவாகின விருப்பு-வெறுப்பு என்ற முரண்பட்ட மனோபாவம். இதனால், ஒருபுறம் உறவுமுறைகளை அறவே விட்டொழித்தனர், மறுபுறம், கிருஷ்ணரைத் தூஷித்தனர்.  இதனால் “கிருஷ்ணர்” எல்லா விதங்களிலும் (சம்பந்தப்பட்ட இடங்கள் தாக்கப்படுதல், படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுதல்) தாக்குதலுக்கு உள்ளானார்.

Slave markeyt 1836 - Horace Vernet

Slave markeyt 1836 – Horace Vernet

கிருஷ்ண வழிபாட்டிற்கு எதிராக செயல்பட்ட முகமதியர்: ராதா-கிருஷ்ண தத்துவம் செக்ஸ், பாலியல், உடலுறவு பற்றியதல்ல, ஆனால், முகமதியர் வேண்டுமென்றே அவ்வாறாக கவிதைகளிலும், ஓவியங்களிலும் சித்திரத்துக் காட்டினர். பெண்களுக்கு எதிரான முகலாய, முகமதிய குரூரக் குற்றங்கள் அதிகமாகி வரும் வேலையில், இந்து மகான்களை பெண்களைக் காக்க உருவாக்கிய திட்டம் ராதா-கிருஷ்ண தத்துவம், வழிபாடு முதலியன. அதனால் தான், அதனை முகமதியர் பலவழிகளில் எதிர்த்தனர். குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள கிருஷ்ணருக்கு சம்பந்தப்பட்ட கோவில்களை எல்லாம் முகலாயர்கள் தாக்கியது, அழித்தது, விக்கிரங்களை உடைத்தது முதலியவற்றைக் கவனிக்க வேண்டும். இங்கெல்லாம் தங்களது உயிரைக் கொடுத்து விக்கிரகங்களை மீட்டுள்ளனர். உண்மையான அஹிம்சை இங்கெல்லாம் இந்துக்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பாராட்டிப் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது, ஏனெனில், அதனைக் குறிப்பிடும் போது, முகமதியர்களின் அழிப்புகள், உடைப்புகள், பல்லாயிரக்கணக்கான கொலைகள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும், அதனால், இடைக்காலத்திலிருந்து, இக்காலம் வரையில் மறைப்பு-சரித்திரவரைவியல் (Historiography of Suppression of facts) என்ற சித்தாந்தத்தை கடைபிடித்து வருகின்றானர்.

Aurangazebs imposing Jizya

Aurangazebs imposing Jizya

ஜெசியா வரி உருவானது எப்படி?: குழந்தை தெய்வமாக இருந்த கிருஷ்ணனை, விக்கிரமாக பாவித்தபோது, அதனை முகமதியர் உடைக்க தீவிரமாக இருந்தபோது, இந்த ராதா-கிருஷ்ண உருவகம் பெரிய சக்தியாக வளர்ந்தது. அது பெண்-சக்தியாக, தெய்வமாக இருந்ததால், முகமதியர் அவற்றை அழிக்கத் தயங்கினர். அதனால், மறுபுறம் கொக்கோகக் கவிதைகளினால், ஓவியங்களால் அவதூறுகளைப் பரப்ப ஆரம்பித்தனர். இருப்பினும், இந்து கவிஞர்கள் அத்தகைய காமக்குரோத லோபிகள், கொக்கோகக் கயவர்கள் முகமதியர்கள் தாம் என்று தங்களது பக்தி கவிதைகளில் மறைமுகமாக வைத்துப் பாடி, கோடானுகோடி மக்களுக்குத் தெரிவித்தனர். இங்குதான் சூபிக்கள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்தனர். இதனால் தான், பஜனை, நாமசங்கீர்த்தனம், உஞ்சுவிருத்தி, தெருக்களில் கூட்டம்-கூட்டமாக பாடிக் கொண்டு செல்வது, தீர்த்தயாத்திரை செல்கிறோம் என்று அவ்வாறு மக்களைத் திரட்டியது, பெண்களைக் காப்பாற்றியது என்று மாறியது. இதனால் தான், முகமதியர்கள் குதிரை மீது செல்லக்கூடாது, பல்லக்கில் செல்லக்கூடாது, கூட்டமாகச் செல்லக்கூடாது, பாட்டுப்படிக்கொண்டு செல்லக்கூடாது என்றெல்லாம் சரத்துகள் வைத்து ஜெசியா வரி விதித்தனர்.

Jizya tax collected from Hindus forcefully by order

Jizya tax collected from Hindus forcefully by order

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] Tariq Rahman, The language                of love: a study  of the amorous and erotic associations    of Urdu, January 2012, http://www.researchgate.net/publication/271521192

[2]  அக்பருக்கு ஜோதாபாய் என்ற இந்து மனைவி இருந்தார். அவர் தம் இந்துமுறைப்படி, அரன்மனையிலேயே விக்கிரகத்தை வைத்துக் கொண்டு வழிபட அனுமதி கொடுத்தார். இதேபோல மற்றவர்க்களுக்கும் இருந்தது. அதனால் தான், முகமதிய அரண்மனைகளில் உட்புறங்கள் இந்துக்களின் கோவில் போன்ற அமைப்புள்ள தூண்கள் காணப்படுகின்றன. என்று கதைக்கட்டி விட்டார்கள். இப்பொழுதும், சுற்றுலா கெயிடுகள், இத்தகைய விளக்கத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “இந்திய தெய்வீக அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் உருவகங்கள் தாக்கப்பட்டதேன்?”

  1. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி Says:

    […] [5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-moha… […]

  2. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி Says:

    […] [5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-moha… […]

பின்னூட்டமொன்றை இடுக