கருணாநிதியின் புத்தாண்டும், சரித்திர புரட்டலும்

கருணாநிதியின் புத்தாண்டும், சரித்திர புரட்டலும்

© வேதபிரகாஷ்

“சரித்திரம் திரும்புகிறது” (History repeats) என்பது கருணாநிதி விஷயத்தில் உண்மையாகிறது. தைத்திங்கள் முதல் தேதி தமிழன் எப்பொழுது புத்தாண்டு என்று சொன்னான், முதன்முதலில் இப்பொழுது கொண்டாடினான் என்ற ரகசியங்களை கருணாநிதி எடுத்துக் காட்டவில்லை. சென்ற வருடம் இதை எதிர்த்த வழக்கு சொதப்பலாக தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வாறு செய்தது, இவரின் நண்பர் நீதிபதி சந்துரு[1] என்பவர்தாம்! அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்று தெரிந்து கொண்டதும், ஜனவரி 14-18 தேதிகளில் பொங்கல்-புத்தாண்டு விழா என்று அறிக்கையை விட்டுவிட்டார்[2].

K. Chandru, retired judge ideologically oriented

K. Chandru, retired judge ideologically oriented

தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர்! 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது! [அப்பொழுது அவர்கள் கிமு, கிபி என்றுதான் குறிப்பிட்டார்கள்]

Hebrews flat eath depiction

Hebrews flat eath depiction

சௌமியனுக்குப் பிறகு இந்த சாதாரணன்!: சி. என். அண்ணதுரை (1909-1969) “சௌமியன்” என்ற புனைப்பெயர் கொண்டிருந்தார். கருணாநிதி, அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது, “சௌமியனுக்குப் பிறகு இந்த சாதாரணன்” வந்தான் என்ற கவிதை வடித்தார்! முன்பெல்லாம் AIR / DD விஐபிக்களின் கவிதைகளை ஒலி / ஒளிபரப்புவது வழக்கம். அப்பொழுது கருணாநிதியின் கவிதை இடம் பெற்றது. நாத்திகவசமாகவோ, துரதிருஷ்டமாகவோ அண்ணதுரை “சௌமிய” வருடத்திலே (1969-70) இறந்தார்[3]. அதனால் சாதாரண வருடத்தில் (1970-71) கருணாநிதி பதவிக்கு வந்தார். இந்த வருடங்கள் எங்கிருந்து வந்தன? அந்த செத்த பாடை சமஸ்கிருத 60 வருடங்களிலிருந்துதானே வந்தன? பிறகென்ன, அப்பொழுது இனிக்கிறது, இப்பொழுது கசக்கிறதா கருணாநிதிக்கு? சரி, எப்படி இந்த 60 வருடங்கள் வந்தன? கருணாநிதியே சொல்கிறார், படியுங்கள்!

Narada myth used for time reckoning

Narada myth used for time reckoning

கிருஷ்ணனுக்கும்நாரதிக்கும் பிறந்த 60 குழந்தைகள்தமிழ் ஆண்டுகள் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? “தமிழ்ப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்! முதல்வர் கலைஞரின் இன எழுச்சியுரை[4]: சென்னை, ஜன. 16, 2009- தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுபற்றியும், இதுவரை இருந்துவந்த தமிழ்ப் புத்தாண்டுபற்றியும் முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்துரைத்தும், தைமுதல் நாள் புத் தாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன எழுச்சியுரையாற்றினார். கருணாநிதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகை ஒரு இலட்ச ரூபாய் பொற்கிழி வழங்கி, தங்கப் பதக்கம் அணிவித்துச் சிறப்பு செய்து, சிறந்த நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்க்கும் பரிசுகள் வழங்கி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஆணைகள் வழங்கி, விழாச் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில், மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

60 years cycle

60 years cycle- here the weeks have been depicted, but the 60 equal parts can be added after it.

தமிழனுக்கு புத்தாண்டு வந்த கதை!: தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகின்ற இந்த நாளில் – நேற்றைய தினம் புத்தாண்டு – ஏழையெளியவர்களுக்கு எல்லாம் – எல்லோருக்கும் சமத்துவப் பொங்கல் சாப்பிட இந்த அரசின் சார்பாக அவர்களுக்கெல்லாம் தேவையான பொருட்களை வழங்கிய அரசு – இந்த அரசு – இந்தப் புத்தாண்டை இதற்கு முன்பு நாம் கொண்டாடினோம். வருடப் பிறப்பு என்ற பெயரால் கொண்டாடினோம். அந்த வருடப் பிறப்பு எப்படி புத்தாண்டாக மாற நேரிட்டது என்றால் – தந்தை பெரியார் போன்றவர்கள், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் போன்றவர்கள், மறைமலை அடிகளார் போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து – நம்முடைய தமிழனுக்கு ஒரு ஆண்டு வேண்டும், அந்தத் தமிழ் ஆண்டு, புத்தாண்டு தை முதல் நாளாகத் தான் இருக்க முடியும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அந்தச் சொல் வந்ததற்குக் காரணமே, தை பிறந்தால் தான் தமிழனுக்கு, ஏழைக்கு, விவசாயிக்கு, உழவனுக்கு, பாட்டாளிக்கு வாழ்வு பிறக்கின்றது. ஆகவே அந்த நாளை நாம் புத்தாண்டு என்று வைப்போம் என்று வைத்தார்கள்.

60 years samvatsara

60 years samvatsara

நான் பிறந்த வருடம் 1924 எப்படி வந்தது என்று கேட்டால் தெரியாது! அதற்கு முன்பு இருந்த புத்தாண்டு, வருடப்பிறப்பு – அது வேறு, இது வேறு. அய்யோ, அதை ஒழித்து விட்டீர்களே என்று யாராவது சொன்னால், நீங்கள் கேளுங்கள். நீ எந்த வருடம் பிறந்தாய் என்று – என்னையே கேளுங்கள் -அவர்களுடைய கணக்குப்படி-நான் ரக்தாட்சி வருடம் பிறந்தேன். அப்படியென் றால் இப்போது எனக்கு என்ன வயது? ரக்தாட்சி வருடம் பிறந்த வனுக்கு அட்சய வருடத்தில் என்ன வயது என்று கேட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய – ஒரு வருடம் – ஏனென்றால் அறுபது ஆண்டுகள் – பெயர்கள் சுற்றிக் கொண்டே வரும். பிரபவ, விபவ, சுக்ல, பிரஜோபத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு என்று இப்படி அறுபது ஆண்டுகள் சுற்றிக் கொண்டே வரும். அப்படி சுற்றிக் கொண்டு வரும்போது இந்த அறுபதில், 1924ஆம் ஆண்டு பிறந்த நாள் – இந்த வருடத்தின் சுற்று முடியும் போது – யாராலும் சரியாக வயதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. 1924இல் பிறந்தவன் என்று சொல்கிற போது, இப்போது என்னுடைய வயது 85 என்று சொல்ல முடியும். எப்படி வந்தது இந்த வருஷம்.?

Kannda panchanga depicting Narada, Brahma, Vishnu etc

Kannda panchanga depicting Narada, Brahma, Vishnu etc – as the Puranas were for common people such allegorical comparison was used for them to remember and understand.

எப்படி 60 வருடங்கள் வந்தன? ஒரு நாள் கிருஷ்ணனைப் பார்த்து நகர் வலம் வந்த நாரதர் – கிருஷ்ணா எனக்கொரு ஆசை என்றார். என்ன ஆசை நாரதா என்றார். நான் கதை சொல்லவில்லை. இது திரைக்கதை வசனம் அல்லவே அல்ல. இது திவ்யமான புராணம். அந்தப் புராணத்திலே நாரதர் வீணையோடு வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணனிடம் எனக்கொரு ஆசை, அதை நீ நிறைவேற்ற வேண்டுமென்றார். ஒரு அழகான பெண்ணோடு நான் ஒரு நாளாவது வாழ வேண்டும் என்றார் நாரதர். கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. இவர் யார், நாம் யார்? நம்மைப் பார்த்து இப்படி கேட்கிறாரே என்று, சரி உனக்கு நான் இந்த வரம் தருகிறேன், நீ இந்த ஊரில் எல்லா வீடுகளுக்கும் போ, எந்த வீட்டிலேயாவது அழகான ஒரு பெண் உனக்காக இருந்தால், நீ அவளை ஏற்றுக் கொள்ளத் தடை இல்லை, அவள் உன்னோடு வருவாள், போ என்று அனுப்பி வைத்தார். நாரதர் போனார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புருஷனோடு பெண் இருந்தாளே தவிர, தனியாக ஒரு பெண்கூட இல்லை[5]. திரும்பி வந்தார் நாரதர். ஏன் என்று கிருஷ்ணர் கேட்டார். எல்லா வீடுகளிலும் பெண், ஆணோடு தான் இருக்கிறாள், அதனால் எனக்கேற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை, என்னை விரும்புகிற பெண்ணையே காணவில்லை என்றார். சரி என்ன செய்யச் சொல்றே? நானே பெண்ணாக ஆகி விடுகிறேன், நீ ஆணாக இருந்து என்னை சந்தோஷப்படுத்து என்று நாரதர் கிருஷ்ணனைக் கேட்கிறார்.

The western concept of earth was flat

The western concept of earth was flat

ஒரே நாளில் 60 பிள்ளைகள்: சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும் என்று நாரதரைப் பெண்ணாக்கி, நாரதர், நாரதியாகி – கிருஷ்ணன் நாரதர் இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்து – அதைத் தான் படம் பார்த்திருப்பீர்கள் – பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் வந்தது – பாட்டிகளுக்கெல்லாம் தெரியும் – கிருஷ்ணன் நாரதி[6] என்று படமே வந்தது. நான் பொய் சொல்லவில்லை. அவர்கள் இருவருக்கும் சேர்ந்து 60 பிள்ளைகள் பிறந்தன. கடவுளுடைய காதல் அல்லவா? அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் அறுபது பிள்ளைகள் பிறந்தன[7]. அந்த அறுபது பிள்ளைகளுக்கும் வைத்த பெயர்கள் தான் பிரபவ, விபவ, சுக்ல என்று ஆரம்பித்து அட்சய வரையிலே உள்ள வருடங்களின் பெயர்கள்.

தமிழனுக்கு ஆண்டு திங்கள் மாதம் கிழமை வேண்டாமா? ஒரு அந்த வருடங்கள் தான், அந்தக் கடவுளர்கள் தான், நமக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் வைக்கப்படுகிற வருடங்கள், ஆண்டுகள் என்றிருந்தால் தமிழன் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவன் தமிழனாக இருக்க முடியுமா? தமிழனாக இருப்பதற்கு அவனுக்கு எப்படி ஒரு கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகள்[8] எல்லாம் வேண்டுமோ – பண்பாடு வேண்டும், அவனுக்கு வருடம் வேண்டாமா? அவனுக்கு ஒரு ஆண்டு வேண்டாமா? அவனுக்கு ஒரு திங்கள் வேண்டாமா? மாதம் வேண்டாமா? கிழமை வேண்டாமா? அதைத் தான் ஆய்ந்தாய்ந்து 500-க்கு மேற்பட்ட புலவர்கள் கூடி[9], 1921ஆம் ஆண்டு எடுத்த முடிவு தான், நேற்றையதினம் நாம் கொண்டாடிய நாள், தமிழர் புத்தாண்டு நாள் – இந்த ஆண்டு நாம் இதை ஓரளவு மகிழ்ச்சியோடுதான் கொண்டாடியிருக்கிறோம். ஏனென்றால் தமிழர்கள் வேறு ஒரு பக்கத்திலே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் நம்மால் அவ்வளவு தான் கொண்டாட முடிந்தது[10]. அந்தத் தமிழர்களுக் காக நாம் இங்கே அந்த விழாவினை ஓரளவு தான் கொண்டாடி னோம்.

Islamic concept of flat earth

Islamic concept of flat earth

அடுத்த ஆண்டுமுதல்….2010!: அடுத்த ஆண்டிலேயிருந்து அமெரிக்க சுதந்திர தினம் எப்படிக் கொண்டாடப்படுகிறதோ – இங்கிலாந்திலே எப்படி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறதோ அதைப் போலவே தமிழர்களுடைய ஆண்டு தினம் – முதல்நாளைக் கொண்டாட வேண்டும். கடற்கரையிலே வாண வேடிக்கைகள் – ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரத்திலும் – குளக்கரையிலே, தெருக் களிலே, மைதானங்களிலே வான வேடிக்கைகள் நடைபெற வேண்டும். அப்படி கோலாகலமாக இந்த விழாவை நாம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விருது வழங்கப்பட்ட இந்த விழாவிலே இந்த விளக்கங்களைத் தருவதற்கு நேரம் கிடைத்த காரணத்தால் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த காரணத்தால் – என் நோய் பறந்தது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Geological_time_spiral- courtesy Wikipedia

Geological_time_spiral- courtesy Wikipedia

யாருக்கும் தெரியாதது இவருக்குத் தெரியுமா? இப்படி தமிழில் பேசினால் கணக்கு, வானியல், சரித்திரம் வந்துவிடுமா? இந்த மூன்று வருடங்கள் கணக்கிடே, இவரை வெளிபடுத்திவிட்டது. ஆமாம், தை முத்சல் தேதி இப்படி வருகிறது!

ஆண்டு / ஜனவரி

14

15

16

17

2008

திங்கள்

செவ்வாய் (தை.1)

புதன்

வியாழன்

2009

புதன் (தை.1)

வியாழன்

வெள்ளி

சனி

2010

வியாழன் (தை.1)

வெள்ளி

சனி

ஞாயிறு

பிறகு திங்கள், செவ்வாய்……………………முதலியவற்றை சனியன் என்று ஒழித்துவிடமுடியுமா? இல்லை, ஜனவரி 17 வடுகிறதே என்று ஜெயலலிதாவுடன் சண்டை போட்டால் சரியாகிவிடுமா?  இவர் குறிப்பிட்டவர்களுக்கு தமிழைத் தவிர என்னத் தெரியும்? அடுத்த “தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு” என்றால், அது இவரை கேட்டு அவ்வாறே வருமா?

Linear time line

Linear time line

ரோமிலா வந்து பேசியது வெறும் யதேச்சையானதா?: சரித்திரம் தெரியாத கருணாநிதி ஊளறுவதும், சரித்திரம் தெரிந்த ரோமிலா தாபர் உளறுவதும் ஒன்றுதான், அதாவது இருவரும் இவ்வாறு காலக்கணக்கீடுகளைப் பேசி புரட்டுகின்றனர்! சரியாக ஜனவரி 7ம்தேதி சென்னைக்கு வந்து ரோமிலா கலாசேத்ராவில் இந்த சமாச்சரத்தைப் பற்றி பேசுகிறார்! அதாவது இந்திய காலக்கக்கீடு சுழற்ச்சி முறையில் கணக்கிடப்பட்டதால் அது சரித்திர கணக்கீட்டிற்கு உதவாது. சுழற்ச்சிகணக்கீடு (cyclic time) சரித்திரத்திற்கு உதவாது, நேர்கிரம கணக்கிடுதான் (linear time) சரித்திரத்திற்கு உதவும், என்றெல்லாம் விளக்குகிறார்!.

West imagination of flat earth-ships falling diwn

West imagination of flat earth-ships falling diwn

2000 ஆண்டில் ஆஸ்லோ மாநாட்டில் ஹபான்ஸ் மிக்கியா[11] என்ற மார்க்ஸீய சரித்திரவாதி இந்தியர்களின் காலக்கணக்கியல் சுழற்சி முறையானது, முகமதியர்கள் வந்துதான் நேர்காணக்கணக்கியல் ஆரம்பித்தது என்று கணக்குத் தெரியாமல் குழப்ப ஆரம்பித்தார். அப்பொழுது பலர் அதிலுள்ள தவறுகளை எடுத்துக் காட்டி விமர்சனம் செய்தனர்[12]. சரித்திர ஆசிரியர்கள் கணக்கு / வானியல் பற்றி பேசும்போது, கொஞ்சமாவது அடிப்படை விஷயம் தெரிந்திருக்கவேண்டும், இப்படி ஒன்றுமே தெரியாமல் உளரக்கூடாது, ஏனெனில் நேர்கிரம காலக்கணக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தும். அது அதிகமாகும்போது, சுழற்சிமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒன்றும் கணக்கில் குழப்பம் இல்லை. ஆனால் அடிப்படையேத் தெரியாத சரித்திரவாதிகள்தாம் உளரிக்கொட்டுவது[13]. உண்மைத் தெரிந்தவுடன், மறுபடியும் அந்த அபத்த உளரல்களை ரோமிலா தாபர் மாற்றியமைத்து உளர ஆரம்பித்துவிட்டார். அதாவது இந்தியர்கள் இரண்டு முறைகளும் கடைபிடித்தனர், இருப்பினும் அவர்களது சரித்திர காலக்கணக்கீடு தவறானது, புராணங்களில் உள்ள கணக்கியல் தவறு, இந்திய வம்சாவளிகள் உருவாக்கப்பட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டது வேடிக்கையாக உள்ளது!

flat earth-001 depiction in modern times

flat earth-001 depiction in modern times

நேர்கிரம காலக்கீடுதான் சரித்திர ரிதியிலானது என்றால் கடிகார முட்கள் ஏன் சுழலுமாறு அமைந்துள்ளன? கடிகாரம் அவ்வாறே நீளமாக தயாரிக்கவேண்டியதுதானே? நேர்கிரம நேரக்காட்டி ஏன் இல்லை? 60-60 ஆக ஏன் விநாடிகள், நிமிடங்கள் எண்ணப்படவேண்டும்? கோளத்தை எடுத்துக் கொண்டால், தீர்க்க-அட்சரேகைகள் கோடுகளாக வரையப்பட்டாலும், அவை வட்டங்களே! அதாவது கோடுகள் சந்திக்காவிட்டால், உலகம் தட்டையாகிவிடும்! முகமதியரும் உலகம் தட்டைதான் என்று நம்பிக்கொண்டுருக்கின்றனர்! ஆகவே, கிருத்துவ / முகமதிய இறையியல் ரீதியாகத் தான் அத்தகைய குழப்பம் ஏற்பட்டது. ஆனால், இந்திய காலக்கணக்கீட்டியலை அறிந்தபிறகு, ஐரோப்பியர்களுக்கு தங்களுடைய தவறு[14] தெரிந்துவிட்டது! இருப்பினும், பைபிளுக்கு எதிராக போக இருக்கவேண்டுமே என்று விஞ்ஞானிகளை பலாத்காரம் செய்து உண்மையை மறைக்க முயன்றனர். அகஸ்டின் என்ற கிருத்துவர்தான் இத்தகைய சுழற்சி மற்றும் நேரிட்டு நேரம் (linear and cyclic time) என்று பிரிவை ஏற்படுத்தினார்[15]. அதாவது, கிருத்துவர்களின் நம்பிக்கை மற்றும் விஞ்ஞானம் இரண்டையும் அனுசரித்தது மாதிரி! முன்னர் கூட ராமர்சேது விஷயத்தில் கருணாநிதிபோல “இந்து” மற்றும் “EPW”ல் கட்டுரைகள் எழுதினார்[16]. ஆனால், அவை தகுந்தமுறையில் மறுக்கப்படபோது, அவரிடத்திலிருந்து எந்தவித பதிலும் இல்லை[17]. இப்பொழுது, அந்த திட்டத்தையே கிடப்பில் போட்டதும் மௌனிகளாகி விட்டனர்!

Rand-McNally-Histomap-of-4000-Years-of-History

Rand-McNally-Histomap-of-4000-Years-of-History – One can see that the Chinese and the Indian Civilizations have been existing continuously since historical times.

சரித்திரமும், வானியலும், காலக்கணக்கீடும், சித்தாந்தமும்: நேரம் கணக்கிடுதல் அல்லது நேரவியலில் – நேரம் – நொடி, நிமிடம், மணி, பகல், இரவு என்றுதான் வரும், அவையே நாள், வாரம், மாதம், வருடம் என்றுதான் கணக்கிடப்படும். ஆகவே சுழற்ச்சிதான் உண்மை, ஏனனில் அனைத்துமே சுழல்கின்றன. சுழலாமல், நேராக செல்கிறது என்றால் சுழற்ச்சியை மறுப்பது அதாவது கிரகங்களின் சுழற்ச்சியையே மறுப்பது ஆகும், அது விஞ்ஞானமாகாது. மேலும் இவையெல்லாம் படித்தவர்களுக்கு என்றிருந்தாலும், நடைமுறையில் எல்லோருக்கும் புரிந்துக் கொள்ள / உபயோகபடுத்தக் கூடியாதாக இருக்கவேண்டும். அதனால்தான், 60ன் மடங்காக 60 வருடங்கள் கொண்ட கணக்கீடு வைக்கப்பட்டது. இதிலுள்ள வானியல் நுட்பங்களை அறிந்துகொள்ளத்தான், அந்நாட்களில் முக்கியமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. அதை மறுத்து சித்தாந்த ரீதியில், நாத்திகம் என்ற போர்வையில் கேலி பேசுவதுதான் அறியாமை. இத்தனைகாலமாக கணக்கிடு சரியாக இருக்கும்போது, இப்பொது மாற்றினால், அதுதான் பாமெரும் தவறாகும். ஏனெனில் அந்த மாறத்திர்கு எந்த அறிவு, விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் இல்லை.

தமிழனுக்கு ஆண்டு திங்கள் மாதம் கிழமை வேண்டாமா? தாராளமாக வைத்துக் கொள்ளட்டும். ஆண்டு வைதாகிவிட்டது! பிறகு யார் மாதம், வாரம், நாள், இரவு, பகல், மணி, நிமிடம், வினாடி.முதலியவற்றை வைப்பது? மறைமலை அடிகள் வருவாரா? இல்லை நாரதியையேக் கூப்பிடலாமா?

முன்பே குறிப்பிட்டது போல, சில பதிவுகள் காணப்படாமல் போவது ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் இது சமந்தப்பட்ட, பதிவுகளின் தளங்களை கீழ்கண்டவாறு தருகிறேன்:

http://janamejayan.wordpress.com/2008/05/01/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history/

http://vedaprakash.indiainteracts.in/2009/01/16/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history-part-ii/

http://vedaprakash.indiainteracts.in/2008/04/29/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history/

http://indiainteracts.wordpress.com/2010/01/17/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history/

http://indiainteracts.wordpress.com/2010/01/17/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history/#comment-45

http://indiainteracts.wordpress.com/2010/01/17/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history-ii/#comment-54

© வேதபிரகாஷ்

17-01-2010


[1] No unconstitutionality in changing Tamil New Year, says High Court, புத்தாண்டை மற்றியதில், எந்த அரசியல் நிர்ணய விரோதமும் இல்லை, http://www.hinduonnet.com/2008/09/23/stories/2008092353380100.htm

முன்பு, உச்சநீதி மன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை, கே.ஜி. பாலகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார்!

[2] Pongal and Tamil – New Year Celebrations 14 – 18th January 2009, Tamil New Year Press Note,

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2009/pr150109/pongal_celebration_TN_House.pdf

[3] கருணாநிதிக்கும் அத்தகைய பயம் வந்துவிட்டது போலும். அதாவது சௌமியன் சௌமிய வருடத்தில் இறந்தது பற்றியது. சாதாரண வருதத்தையே எடுக்கவேண்டுமானால், வருடத்தை மாற்றவேண்டும். அதைத்தான் இப்பொழுது செய்துள்ளார். இப்படியும் ஒருவெடெளை இருக்குமோ? தெரியவில்லை, அவருடைய ஆஸ்தான சோதிடர்களான நாடாத்தூர் நம்பி, அ. கணேசன் போன்றவர்களைத்தான் க் கேட்டுத் தெரரந்து கொள்ளவேண்டும்!

[4] http://files.periyar.org.in/viduthalai/20090116/news02.html மற்றும்

http://files.periyar.org.in/viduthalai/20090116/thalai.html

[5] இதெல்லாம் வானியல் செய்திகள், மக்களுக்குப் புரியவேண்டும் என்று அவ்வாறு பெயர்கள் வைத்து, கதைகட்டி விளக்கினார்கள். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்கள், வருடங்கள் எல்லாமே 60-60ஆகத்தான் இருக்கும். வருடத்திற்கு 60 x 60 = 360 நாட்கள்தாம் இருக்கும். கொளங்களின் போக்கை அறிவது வட்டத்தில்தான். கோளரங்கம் அதனால்தான் நீளமாக இருந்தாலும், உருணையாகிறது. வட்டத்திற்கு 360 டிகிரிகள் உள்ளன அதாவது 360 சமபாகங்களாகப் பிரிக்கமுடியும்…………….!

[6] கிருஷ்ணன் – கருப்பானவன், நேரத்தை அளப்பவன். அனந்த-நராயணன். நாரதி = உலகம் சுற்றுபவள்! ஒருவனை அளக்கமுடியாது. இன்னொருவனோ சுற்றிவந்து அளப்பவன். அப்படி அளந்தால். நொடிகள், வினாடிகள், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள்…………………………………!,

[7] ஆமாம், ஒரு நாளைக்கு, இரண்டு பாகங்கள் – இரவு, பகல். 24 (2 x 12 = 2 x 2 x 6) மணி நேரம்; 1440 (24 x 60) நிமிடங்கள்; 84,400 (24 x 60 x 60) நொடிகள்.

[8] இவைகள் எல்லாம் வேறு என்பது போன்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கணக்கு பற்றி பேசுவதால், தமிழர்களின் எண்கள் என்ன, அவர்கள் எவ்வாறு எண்ணினார்கள், அளந்தார்கள், இதையேல்லாம் கருணாநிதி சொல்வாரா?

[9] பாவம் 500க்கு மேற்பட்ட புலவர்கூடி, இப்படி ஒரு கணக்கு பண்ணினார்கள் என்றால் ஆச்சரியம் தான்!

[10] ஆமாம், இப்படி யாராவது கணக்குக் கேட்டுவிடுவார்களோ என்று பயம் வேறு! பாருங்களேன், வேடிக்கையை, யாரோ CAG கணக்குக் கேட்டு, அதற்கு பதில் சொல்லி, கணக்காக பிரச்சினை எம்ஜியாரிடம் போய் சேர்ந்து / முடிந்து விட்டது! போதாகுறைக்கு 17-01-2010 எம்ஜியாருன் பிறந்த நாள் வேறு!

[11] Habans Mukhia,

[12] C. K. Raju, The Eleven Pictures of Time, Sage Publications, New Delhi, 2003.

http://www.hinduonnet.com/thehindu/mp/2003/09/18/stories/2003091800260100.htm

K. V. Ramakrishna Rao, Mideaval European Chronologies affecting Indianhistory, New Delhi, 2010.

http://www.hinduwebsite.com/history/research/distortions.asp

[13] வேதபிரகாஷ், இந்தியாவில் காலக்கணக்கீட்டு முறையில் சுழற்சி மற்றும் நீண்டக்கிரம வழிகள் பின்பற்றப்பட்டன!, மேலும் விவரங்களுக்கு,

https://indianhistoriography.wordpress.com/2010/01/08/இந்தியாவில்-காலக்கணக்கீ/

[14] They were struggling to solve the “Longitude Problem”.

[15] C. K. Raju, opt.cit.

[16] Romila Thapar, “Where fusion cannot work – faith and history” (the Hindu, dated September 28, 2007).

…………………., Historical Memory without History, in Economic and Political weekly, VOL 42 No. 39 September 29 – October 05, 2007, pp.3903-3905.

K. N. Panikkar, Myth, history and politics, Frontline, October 5, 2007, pp.21-24.

[17] www.scribd.com/doc/6898254/RamakrishnaRaos-letter-to-Hindutxt

http://vedaprakash.indiainteracts.in/2007/10/20/historians-mythistory-historical-myths-and-historiography-in-india/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 பதில்கள் to “கருணாநிதியின் புத்தாண்டும், சரித்திர புரட்டலும்”

 1. குப்புசாமி Says:

  1969 வருடம் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி அன்று தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை காலமானார். 9-ம் தேதி இன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி முதன் முறையாக முதல்வராக ஆனார். அந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு கவியரங்கத்திற்கு தலைமை வகித்த முதல்வர் தனக்கே உரிய சிலேடையில் சொன்னது, ” சென்ற வருடம் அண்ணா முதல்வராக இருந்தார். அவர் சென்று விட்டதால் நான் முதல்வராக ஆக்கப்பட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு (1968 ஏப்ரல் 14 to 1969 ஏப்ரல் 13) சௌமிய ஆண்டு. அது போய் சாதாரண ஆண்டு வந்திருக்கிறது. அந்த சௌமியன் போய் இந்த சாதாரணன் வந்திருக்கிறேன்”. இந்த வரிகள் இங்கேயும் பொருந்தும்.

  கலைஞர் டிவியில் ஞாயிறன்று (october, 18 2009)காண்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கத்தில் ஜெகத்ரட்சகன் வைணவராக தன்னை இருத்திக்கொண்டு பல ஆழ்வார் பாடல்களை மேற்கோள்காட்டி கருணாநிதியை கடவுளாக நினைத்து பேசியதற்கு பயங்கர கைதட்டல். ஆ.ராசா அண்ணா சௌமிய வருஷத்தில் பிறந்ததாகவும், கருணாநிதி சாதாரண வருஷத்தில் பிறந்ததாகவும் – அண்ணா மறைவின் / பதவியேற்பின் போது கருணாநிதி எழுதியது சௌமியன் போய் சாதாரணன் வந்துள்ளேன் என பொருள் படும்படி ஏதோ பேசினார். 60 வருடப்பெயர்களை ஒத்துக்கொள்ளாமல், தமிழ் வருடப் பிறப்பையே மாற்றி அமைத்த கருணாநிதி, இந்த சௌமிய, சாதாரண விஷயங்களை பற்றி (எப்போதோ) எழுதியதை தற்போது அமைச்சர் ஒருவர் ஒது மேடையில் பேசுவதை ரசித்து சிரிக்கிறார்.

 2. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி Says:

  […] [3]https://indianhistoriography.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%… […]

 3. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி Says:

  […] [3]https://indianhistoriography.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: